பெண்களின் முக்கிய பிரச்சனைக்கு தீர்வு கொடுக்கும்... சீனர்களின் ஐஸ்கட்டி வைத்தியம்!

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கலாச்சாரத்தையும் பன்பாடுகளையும் அந்த நாட்டின் முன்னோர்கள் தங்களது பின் சந்ததியினருக்கு கற்று கொடுத்து சென்றிருப்...

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கலாச்சாரத்தையும் பன்பாடுகளையும் அந்த நாட்டின் முன்னோர்கள் தங்களது பின் சந்ததியினருக்கு கற்று கொடுத்து சென்றிருப்பார்கள்.

அவர்களும், உணவு பழக்கம் முதல் உடை அணியும் முறை வரையிலும் அனைத்தையும் முன்னோர் கற்றுக் கொடுத்த கலாச்சாரம், பண்பாடுகளையே பின்பற்றி வருவார்கள்.

இதுப் போல தான் மருத்துவ முறையிலும், ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு தனித்துவம் இருக்கிறது.

அந்த வகையில், நம் உடலில் ஏற்பட்டுள்ள எல்லா வித வலிகளையும் சட்டென போக்கும் ஆற்றல் சீனர்களின் புது வித ஐஸ்கட்டி மருத்துவத்தில் உள்ளதாம்.

இந்த ஐஸ்கட்டி மருத்துவத்திற்கு பெயர் Feng Fu. ஆம், இது ஒரு வித்தியாசமான மருத்துவமுறையாக உலக அளவில் கருதப்பட்டு வருகிறது.

Feng fu என்பது குறிப்பாக கழுத்து மற்றும் மூட்டு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வலிகளுக்கான மருத்துவ முறையின் பெயராம். பெரிய அளவில் செலவு எதுவும் தேவையில்லை. வெறும் ஐஸ்கட்டிகள் மற்றும் சில ஜிப்லாக் பைகள் போதும் எனக் கூறப்படுகிறது.

இந்த மருத்துவமுறையானது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை இருக்கும் அனைத்து வலிகளையும் குணப்படுத்தி விடுமாம்.

கழுத்து வலி:

தற்போதெல்லாம், ஒரே இடத்தில் அதிக நேரம் உட்காருவதாலோ, அல்லது குனிந்து கொண்டு லேப்டாப் உபயோகிப்பதாலோ தண்டுவடம் அதிகளவில் பாதிப்படைகிரது.

இதை, குணப்படுத்துவதற்கு, ஒரு ஜிப்லாக்(ஜிப் கொண்ட பாலிதீன் பை) பையில் ஐஸ்கட்டிகளை நிரப்பி கொண்டு கழுத்து பகுதிக்கும் மண்டையின் எலும்பிற்கு சிறிது கீழ் வட்டத்தில் ஒரு 20 நிமிடம் நன்கு ஒத்தடம் வந்தால் கழுத்து வலி பறந்து போய் விடும்.

மேலும், இதனை தூங்குவதறகு முன்பும் செய்யலாம்.

மாதவிடாய் வலி:

பெண்களுக்கு மாதம் மூன்று நாட்கள் ஏற்படும் இந்த மாதவிடாய் பிரச்சனை அந்த மூன்று நாட்களும் அவர்களை நிம்மதியாக இருக்க விடாமல் ரணமாய்க் கொல்லும்.

இவ்வாறான பெரிய வலியையும் சரி செய்து விடுமாம். இந்த ஐஸ்கட்டி வைத்தியம்.

மேலே, கூறியவாறு ஒரு ஜிப்லாக் பையில் ஐஸ்கட்டிகளை நிரப்பிக் கொண்டு வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் போதும் உடனே சரியாகி விடுமாமிந்த மாதவிடாய் வலி.

தூக்கமின்மை சரியாக:

தூக்கமில்லாமல் அவதிப்படுவோருக்கு ஒரு எளிய வழி முறை இருக்கிறது. Feng Fu புள்ளி என்று சொல்லப்படும் இடத்தில் ஐஸ்கட்டியை வைத்து கொண்டு மெல்ல ஒத்தடம் கொடுத்து எடுத்தால் நன்றாக தூக்கம் வருமாம்.

மேலும், மூளை, தண்டுவடம், ரத்த ஓட்டம் ஆகியவற்றை இலகுவாக வைத்து மனம் நிம்மதியும் அடையுமாம்.

மூட்டு வலி குனமாக:

வயதாகமலே வரும் நோய்களில் மூட்டு வலியும் ஒன்று. மூட்டு வலியால் இன்று பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் அவதிப்படுகின்றனர்.

இந்த மூட்டு வலிகளை சரி செய்ய Feng Fu புள்ளியில் ஐஸ்கட்டிகளை வைத்து எடுத்தால் விரைவில் குணமடையலாம்.

தலைவலிக்கு:

தலைவலி ஒருவரை நிம்மதியிழக்க செய்யும்ன் ஒரு விடயம் என்றால் அது இந்த தலைவலி தான். தலைவலி வந்து விட்டால் ஒரு வேளையும் ஓடாது. அன்றைய நாளே வெறுமையாக தான் இருக்கும்.

ஆனால், இந்த சீனர்களின் ஐஸ்கட்டி வைத்தியம் தலைவலியை குணப்படுத்த பெரிதும் உதவும். மற்ற மருத்துவங்களை காட்டிலும் அருமையான தீர்வை நமக்கு தரும்.

இந்த Feng Fu முறையை பின்பற்றி கழுத்து பகுதிக்கும் மண்டையின் எலும்பிற்கு சிறிது கீழ் வட்டத்தில் ஒத்தடம் கொடுத்து வந்தாலே இவை சட்டென சரியாகும்.

தைராய்டு பிரச்சினைக்கு

இன்று அதிக படியான நோய்களில் இந்த தைராய்டும் முக்கிய நோயாக உள்ளது.

இதனை Feng Fu புள்ளி என சொல்லப்படும் கழுத்து பகுதியில் ஐஸ்கட்டியை கொண்டு ஒத்தடம் கொடுத்து வந்தால், விரைவாக நலம் பெறலாம். மேலும், சீரான ரத்த ஓட்டத்தையும் இது ஏற்படுத்தும்.

இந்த Feng fu முறையை எப்போது செய்யலாம்..?

இந்த Feng Fu முறையை தினமும் இரு வேளையில் செய்து வரலாம்.

காலையில் வெறும் வயிற்றிலும் இரவில் தூங்குவதற்கு முன்பும் இதனை செய்யலாம். குறிப்பாக, ஒத்தடத்தை 30 வினாடிகள் விட்டு விட்டு கொடுக்கவும்.

இது உடலை ஆரோக்கியமாக வைக்க பெரிதும் உதவும்.

மேலும் பல...

0 comments

Blog Archive