Home Top Ad

நடிகர் விஜய்யின் ஐடி கார்டு ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த...

இணையத்தை கலக்கும் விஜய் ஐ.டி கார்டு!

நடிகர் விஜய்யின் ஐடி கார்டு ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பிகில். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில், விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் மூன்று போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்நிலையில், படத்தில் விஜய்க்கு கொடுக்கப்பட்ட ஐடி கார்டு இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் விஜய் புகைப்படத்துடன் மைக்கேல் என்ற பெயரும், தலைமை பயிற்சியாளர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை ரசிகர்கள் பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

0 coment�rios: