Home Top Ad

“கிள்ளிக் கொடுக்க மாட்டான்... இவன் அள்ளி அள்ளிக் கொடுப்பான்” என்பது தமிழக மாஸ் ஹீரோக்களுக்கான டயலாக்தான். ஆனால், அதை டெலிகாம் நிறுவனங்களில்...

“கிள்ளிக் கொடுக்க மாட்டான்... இவன் அள்ளி அள்ளிக் கொடுப்பான்” என்பது தமிழக மாஸ் ஹீரோக்களுக்கான டயலாக்தான். ஆனால், அதை டெலிகாம் நிறுவனங்களில் ஜியோவுக்கும் சொல்லலாம்.  மாதம் ஒரு ஆஃபர்; வாரம் ஒரு டிஸ்கவுன்ட் எனத் தள்ளுபடித் தள்ளுவண்டி நடத்தும் ஜியோவின் அடுத்த ஆஃபரின் பெயர், “ஹாலிடே ஹங்காமா.”

இப்போதிருக்கும் பிளான் இதுதான். 84 நாள்களுக்குத் தினமும் 1.5ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் லோக்கல் மற்றும் எஸ்.டி.டி கால்கள் உண்டு. இந்த பிளானில், இப்போது 100 ரூபாய் தள்ளுபடிதருகிறது ஜியோ. அப்படியென்றால், 84 நாள்களுக்கு தடையின்றி மொபைல், கால், டேட்டா பயன்படுத்த வெறும் 299 ரூபாய் மட்டுமே. ஒரு நாளைக்குக் கணக்கிட்டால் ரூபாய் 3.55 மட்டுமே.

இந்த ஆஃபரை  My Jio app அல்லது  Phonepay மூலம் ரீசார்ஜ் செய்யும்போது கிடைக்கும். உடனடித் தள்ளுபடியாக 50 ரூபாயும், ரீசார்ஜ் செய்தபின் கேஷ்பேக்காக 50 ரூபாயும் கிடைக்கும்.

குறைந்த கால ஆஃபரான ஹாலிடே ஹங்காமா, ஜூன் 1 முதல் ஜூன் 15 வரை மட்டுமே என இப்போது சொல்லியிருக்கிறது ஜியோ. அதன்பின், இதே ஆஃபர் நீட்டிக்கப்படலாம் அல்லது இதேபோல வேறு ஒரு ஆஃபர் வரலாம் என்கிறது, ஜியோவின் வரலாறு. இருந்தாலும், ரிஸ்க் எடுக்காமல் இப்போதே இந்த ஆஃபரைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது.

தொகுப்பாளர்களில் இப்போது பல ரசிகர்களின் பேராதரவோடு முன்னணியில் இருப்பவர் மாகாபா ஆனந்த். இவருக்கு சமீபத்தில் கூட பிரபல தொலைக்காட்சி சிறந்த த...

தொகுப்பாளர்களில் இப்போது பல ரசிகர்களின் பேராதரவோடு முன்னணியில் இருப்பவர் மாகாபா ஆனந்த். இவருக்கு சமீபத்தில் கூட பிரபல தொலைக்காட்சி சிறந்த தொகுப்பாளர் என்ற விருதினை கொடுத்திருந்தனர்.

இப்போது என்னவென்றால் மாகாபா ஆனந்த் ஏன் எப்போதும் கண்ணாடி அணிந்து நிகழ்ச்சி செய்கிறார் என்ற பெரிய கேள்வி எழும்பியது. அதற்கு மாகாபா பேட்டியில், ஒரு விஷயமும் கிடையாது. நிகழ்ச்சி செய்யும் போது வெளிச்சம் அதிகமாக இருந்தால் என் கண் சிறிது நேரத்தில் அடிக்க ஆரம்பித்துவிடும்.

அதை தவிர்க்கவே நான் கண்ணாடிகளை அணிகிறேன் மற்றபடி எதுவும் இல்லை என கூறியுள்ளார்.

நம் வாழ்க்கையின் அங்கமாக மாறிவிட்ட செயலியான வாட்ஸ் அப் -பை உலகம் முழுக்க சுமார் 100 கோடி பேர் தினமும் பயன்படுத்தி வரும் சூழலில் இந்தியாவில்...

நம் வாழ்க்கையின் அங்கமாக மாறிவிட்ட செயலியான வாட்ஸ் அப் -பை உலகம் முழுக்க சுமார் 100 கோடி பேர் தினமும் பயன்படுத்தி வரும் சூழலில் இந்தியாவில் யுபிஐ சார்ந்த டிஜிட்டல் பண பரிமாற்றங்களை வழங்கும் சேவைகளுக்கான போட்டியும் நாளுக்கு நாள் அதிகரித்து வகிறது .அதையொட்டி ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியில் பேமென்ட்ஸ் வசதி வரும் நாட்களில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த செயலியில் பேமென்ட்ஸ் வசதி வழங்குவதற்கான பணிகளை செய்து முடிக்கப்பட்டு விட்ட நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்டவை சேவைகளை வழங்க காத்திருக்கின்றது. இதற்கான பணிகள் முறையான சிஸ்டம்கள் இல்லாததால் தாமதமாகி வருகிறது.அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் முதற்கட்டமாக பாரத ஸ்டேட் வங்கியின் சேவையை மட்டும் சப்போர்ட் செய்யும் படி பேமென்ட்ஸ் வசதியை வழங்க ஃபேஸ்புக் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மூன்று நிறுவனங்களுடன் இணைந்து இந்த வசதி வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.

இத்தனைக்கும் 2018 பிப்ரவரி மாதம் முதல் பீட்டா செயலியில் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், வாட்ஸ்அப் பேமென்ட்ஸ் அம்சத்தில் ரிக்வஸ்ட் மனி (request money) ஆப்ஷன் இன்வைட் முறையில் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. வாட்ஸ்அப் பயனர் எண்ணிக்கையை வைத்து பார்க்கும் போது பேமென்ட்ஸ் அம்சம் பேடிஎம் மற்றும் கூகுள் டெஸ் உள்ளிட்டவற்றுக்கு பலத்த போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் தற்சமயம் வரை வாட்ஸ்அப் செயலியை சுமார் 20 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இது பேடிஎம் சேவையை பயன்படுத்துவோரை விட சுமார் 20 மடங்கு அதிகம் ஆகும். முன்னதாக அலிபாபவின் பேடிஎம் வாட்ஸ்அப் யுபிஐ பேமென்ட் தளம் முறையான பாதுகாப்பு கொண்டிருக்கவில்லை என குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இளம் இயக்குனார் கார்த்திக் இறைவி, ஜிக...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இளம் இயக்குனார் கார்த்திக் இறைவி, ஜிகர்தண்டா ஆகிய படங்களை இயக்கியவர்.

ஏற்கனவே புதிய படத்தின் அதிகார்ப்பூர்வ தகவல்கள் வெளியாகிவிட்டது. விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார் என்ற தகவலும் உறுதியாகிவிட்டது. மேலும் சிம்ரன் இப்படத்தில் ஜோடியாக நடிக்கிறார் என சொல்லப்பட்டு வந்த நேரத்தில் அவர் இன்னொரு வில்லன் என சொல்லப்பட்டு வருகிறது.

இந்த புதிய படத்தின் ஷூட்டிங் டேராடூனில் ஜூன் 7 அல்லது 9 ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாம். இதற்காக படக்குழு அங்கு கூடியள்ளது. இப்படம் மதுரையை மையப்படுத்திய இரு நண்பர்களின் கதையாம். இதில் சூப்பர் ஸ்டாருக்கு இணையாக இன்னொரு நடிகர் நடிக்கவுள்ளாராம்.

அதோடு மதுரை சம்மந்தப்பட்ட காட்சிகளை டேராடூனிலேயே படமாக்கவுள்ளார்களாம். மீதமுள்ள நடிகர்கள், நடிகைகள் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தன் இப்போது இருந்திருந்தால் போதி மரம் கூட விறகாகியிருக்கலாம்! காலம் அவனையும் ‘கரப்ட்’ ஆக்கியிருக்கும் என்பதுதான் நிஜம். அப்படின்னா நாட்...

புத்தன் இப்போது இருந்திருந்தால் போதி மரம் கூட விறகாகியிருக்கலாம்! காலம் அவனையும் ‘கரப்ட்’ ஆக்கியிருக்கும் என்பதுதான் நிஜம். அப்படின்னா நாட்ல நல்லவனே இல்லையா? என்று பொங்குகிற பொதுஜனம், பின்வரும் செய்தியை படித்தால் சூடம் கொளுத்தி சத்தியம் பண்ணும், “இல்ல… இல்லவே இல்ல” என்று!

பல நூறு வாக்குறுதிகளோடு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட விஷால், அவற்றையெல்லாம் செய்து முடிக்க இன்னும் இரண்டாண்டு கால அவகாசம் கோரி வருவது தனிக்கதை. அதில் பாதியையாவது செய்து முடித்திருக்கிறாரா என்ற கேள்விக்கு பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் சங்க உறுப்பினர்கள். சங்கத்திற்குள் நடக்கும் சண்டை சச்சரவுகள் ஒரு பக்கம் இருக்கட்டும். அதைவிட முக்கியமான பஞ்சாயத்து இது.

தன்னை எதிர்த்து ஆரம்பகாலத்திலிருந்து குரல் கொடுத்து வரும் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சியின் படத்திற்கு சங்கு ஊதுகிற வேலையை முடுக்கி விட்டிருக்கிறாராம் விஷால். சங்க உறுப்பினர்கள் கூடி கூடி விவாதிக்கும் விஷயம் ஆகியிருக்கிறது இது. இதே சுரேஷ் காமாட்சி இயக்கியிருக்கும் ‘மிக மிக அவசரம்’ என்ற படம் கோடம்பாக்கத்திலிருக்கும் அத்தனை நல்ல படைப்பாளிகளையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. படம் பார்த்த அத்தனை பேரும் இன்னொரு அருவி அறம் இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

இப்படியொரு நல்ல படத்தை வாங்கி வெளியிட வேண்டும் என்கிற விருப்பமும் கூடவே எழும் அல்லவா? அப்படிதான் இப்படத்தை ஒரு தயாரிப்பு நிறுவனம் வாங்கி வெளியிட முன் வந்தது. முறையான ஒப்பந்தமும் போடப்பட்டது. அதற்கப்புறம் நடந்ததுதான் பெரும் அதிர்ச்சி. சில தினங்களுக்கு முன் சுரேஷ் காமாட்சிக்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் ஒரு கடிதம் அனுப்பினார் அந்த தயாரிப்பாளர். ‘மிக மிக அவசரம் படத்தை வெளியிட முடியாமைக்கு வருந்துகிறேன்’ என்பதுதான் கடிதத்தின் சாரம்சம். தனிப்பட்ட முறையில் சுரேஷ் காமாட்சிக்கு போன் அடித்தவர், இந்த படத்தை வெளியிடக்கூடாதுன்னு விஷால் தரப்புல கேட்டுக்கிட்டாங்க. அதனால்தான் மறுக்க வேண்டியதாப் போச்சு என்று கூறியிருக்கிறார்.

இந்த படத்தை வாங்கி வெளியிட முன் வந்த மேலும் இருவரையும் விஷால் தரப்பு தடுத்து வருகிறதாம். நான் சங்கத்தின் பொறுப்புல இருக்கிற வரைக்கும் மிக மிக அவசரம் வருதா பார்த்துடலாம் என்று விஷால் கூறி வருவதாகவும் சொல்கிறார்கள்.

ஒரு நல்ல படத்தை தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காக தடுப்பது தமிழ்சினிமாவுக்கு செய்கிற துரோகம். அதை விஷால் தன் மனமறிந்து செய்திருக்க மாட்டார் என்று இந்த நிமிஷம் வரைக்கும் நம்புகிறது கோடம்பாக்கம்.

உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளும் உணவு உடை கலாச்சாரம் பழக்கவழக்கம் என பல வேறுபாடுகளை கொண்டிருக்கின்றன. ஒரு நாட்டில் சரி என கருதப்படுவது, இன்னொர...

உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளும் உணவு உடை கலாச்சாரம் பழக்கவழக்கம் என பல வேறுபாடுகளை கொண்டிருக்கின்றன. ஒரு நாட்டில் சரி என கருதப்படுவது, இன்னொரு நாட்டில் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும். இது மாதிரியான விஷயங்கள் கொஞ்சம் தெரிந்திருந்தால் நமக்கு உபயோகப்படும் தானே.

ஃப்ரான்ஸ்

ஃப்ரான்ஸ் நாட்டில் யாரிடமும் அவர்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது? என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள். அது மரியாதை இல்லாத செயலாக அங்கு கருதப்படுகிறது.

உக்ரைன்

உக்ரைன் நாட்டில் உங்களுக்கு காதலி இருந்தால், அவருக்கு பூங்கொத்து கொடுக்கும் போது கொஞ்சம் கவனமாக இருங்கள். அங்கு இரட்டை படை எண்ணிக்கையில் பூக்கள் கொடுப்பது கல்லறையில் வைப்பதற்காக. இது தெரியாமல் நீங்கள் இரட்டைப்படை எண்ணில் பூங்கொத்து கொடுத்து, கடைசியில் அது உங்களுக்கே திரும்பிவிடபோகிறது ஜாக்கிரதை.

ஜப்பான்

உழைப்பிற்கு முக்கியத்துவம் தரும் ஜப்பான் நாட்டில், உணவகங்களில் வெயிட்டருக்கு டிப்ஸ் தருவது அவரின் உழைப்பை அவமானப்படுத்துவதாக கருதப்படுகிறது எனவே ஜப்பானில் சாப்பிட்டுவிட்டு டிப்ஸ் கொடுக்காதீர்கள்.

அமெரிக்கா

அமெரிக்காவில் சாப்பிட்ட பிறகு டிப்ஸ் வைக்காமல் சென்றால் அது மிகப்பெரிய அவமதிப்பாக கருதப்படுகிறது. அங்கு வெயிட்டரின் உபசரிப்பிற்கு ஏற்ப டிப்ஸ் வழங்கப்படும். நீங்கள் டிப்ஸ் தரவில்லை என்றால், அந்த வெயிட்டரின் உபசரிப்பு உங்களுக்கு பிடிக்கவில்லை என்று அர்த்தமாகிவிடும்

ஜெர்மனி

ஜெர்மனியில் யாருக்கும் பிறந்தநாள் வரும் முன்னதாக வாழ்த்துக்கள் கூறாதீர்கள். அவ்வாறு கூறுவது அபசகுணமாக கருதப்படுகிறது. ஒருவேளை அப்படி யாராவது வாழ்த்து கூறினால், பிறந்த நாள் வரும் வரை அந்த நபர் உயிருடன் இருக்க மாட்டார், என்ற மூட நம்பிக்கை அங்கு நிலவுகிறது.

இங்கிலாந்து

இங்கிலாந்தில் யாரிடமாவது போய் நம்மவர்களிடம் விசாரிப்பது போல எவ்வளவு சம்பளம்? என கேட்காதீர்கள். அப்படி விசாரித்தால் நீங்கள் கலாச்சாரமில்லாதவராக கருதப்படுவீர்கள்.

சீனா

சீனாவில் உங்களுக்கு நண்பர்கள் இருந்தால் அவர்களுக்கு குடையோ, கடிகாரமோ பரிசளிக்காதீர்கள். அங்கு கெட்ட சகுனத்தை கொண்டுவரும் பொருட்களாக அவை கருதப்படுகின்றன.

காமெடியில் தனிக் காட்டு ராஜாவாக வலம் வந்து சிறுவர்களையும் பெரியவர்களையும் சிரிக்க வைத்த வடிவேலு வுக்கு புதிய சிக்கல் வந்துள்ளது. இவர் நடித்...

காமெடியில் தனிக் காட்டு ராஜாவாக வலம் வந்து சிறுவர்களையும் பெரியவர்களையும் சிரிக்க வைத்த வடிவேலு வுக்கு புதிய சிக்கல் வந்துள்ளது. இவர் நடித்து 2006-ல் வெளிவந்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் நல்ல வசூல் பார்த்ததால் அதன் இரண்டாம் பாகத்தை ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற பெயரில் இயக்குனர் ஷங்கர் தயாரிக்க முன்வந்தார்.

இதற்காக வடிவேலுக்கு குறிப்பிட்ட தொகையை சம்பள முன்பணமாக கொடுத்து ஒப்பந்தம் செய்தனர். இந்த படத்தையும் முதல் பாகத்தை இயக்கிய சிம்புதேவனே டைரக்டு செய்ய முடிவானது. சென்னையில் பல கோடி செலவில் அரண்மனை அரங்குகள் அமைத்து படப்பிடிப்பையும் தொடங்கினர். சில நாட்கள் அதில் நடித்த வடிவேலு தொடர்ந்து நடிக்க முடியாது என்று விலகி விட்டார்.

இதனால் படப்பிடிப்பு நின்று போனது. அரங்குகளையும் பிரித்து விட்டனர். இந்த பிரச்சினை தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு போனது. வடிவேலுவிடம் பேசி படப்பிடிப்புக்கு அனுப்பி வைக்கும்படி ஷங்கர் மனு அளித்து இருந்தார். நடிகர் சங்கம் மூலம் வடிவேலுக்கு நோட்டீசு அனுப்பி விளக்கம் கேட்கபட்டது. படத்தில் நடிக்கும்படியும் வற்புறுத்தப்பட்டது.

படப்பிடிப்பை தாமதமாக தொடங்கி தனக்கு பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்தியதால் அந்த படத்தில் நடிக்க முடியாது என்று பிடிவாதமாக மறுத்தார் வடிவேல். தொடர்ந்து பேசியும் பிரச்சினைக்கு தீர்வு வரவில்லை. படத்துக்கு செலவழித்த ரூ.9 கோடியை வடிவேலு தனக்கு நஷ்ட ஈடாக அளிக்க வேண்டும் என்று படக்குழு சார்பில் இன்னொரு புகார் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு வடிவேலு இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க வேண்டும் என்று கெடு விதித்து ஒரு வாரம் அவகாசம் வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு மறுத்தால் வடிவேல் படங்களில் நடிக்க தடை விதிக்கப்படும் என்று தயாரிப்பாளர்கள் சங்க வட்டாரத்தில் கூறப்படுகிறது.