மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வருடம் திரைக்கு வந்த படம் விக்ரம் வேதா. இப்படம் செம்ம ஹிட் அடித்தது. விஜய் சேதுபதி, மாதவன் இவர்கள் ...
மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வருடம் திரைக்கு வந்த படம் விக்ரம் வேதா. இப்படம் செம்ம ஹிட் அடித்தது.
விஜய் சேதுபதி, மாதவன் இவர்கள் இருவர் திரைப்பயணத்தில் அதிகம் வசூல் செய்த படம் விக்ரம் வேதா தான்.
இந்நிலையில் மாதவன் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தில் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த ஷரதா ஸ்ரீநாத்தே நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
விக்ரம் வேதாவில் இவர்கள் கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு பிடித்து போனதால், அடுத்தப்படத்திலும் இவர்களே நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்களாம்.
காலா படம் பல சர்ச்சைகளை கடந்து தான் வெளிவந்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பில் இருந்தது. ஆனால், படம் ரிலிஸாவதற்கு முன் ர...
காலா படம் பல சர்ச்சைகளை கடந்து தான் வெளிவந்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பில் இருந்தது.
ஆனால், படம் ரிலிஸாவதற்கு முன் ரஜினி பேசிய பேச்சு ஒன்று அனைவரிடத்திலும் செம்ம கோபத்தை ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து இப்படத்திற்கு பெரிய எதிர்ப்பு உருவாகியது, அப்படியிருந்தும் காலா படத்தின் மூலம் தனுஷிற்கு ரூ 60 கோடி வரை லாபம் கிடைத்துள்ளதாம்.
அதுமட்டுமின்றி இப்படம் எவ்வளவு குறைவாக வசூல் செய்தாலும், எங்களுக்கு ஓரளவிற்கு லாபம் கிடைத்துவிடும், தனுஷ் அப்படித்தான் பிஸினஸ் செய்துள்ளார் என முன்னணி திரையரங்க உரிமையாளர் ஒருவரும் தெரிவித்துள்ளார்.
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் தற்போது மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கிறது. யாரெல்லாம் வரபோகிறார்கள் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்திய...
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் தற்போது மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கிறது. யாரெல்லாம் வரபோகிறார்கள் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் இருக்கிறது.
இதில் பலரின் பெயர்கள் கொண்ட பட்டியல் அண்மையில் சமூக வலைதளங்களை கலக்கி எடுத்தது. ஆனால் ரகசியமாக இருக்கும் இந்த தகவல் விரைவில் தெரிந்துவிடும்.
இதில் நடிகை மும்தாஜின் பெயரும் இருந்தது. இந்நிலையில் அவர் கலந்துகொள்ள இருப்பது அவரின் நட்பு வட்டாரங்கள் மூலம் உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்தாஜ்க்கு ஏற்கனவே முதல் சீசனுக்கு அழைப்பு வந்ததாம். ஆனால் அவர் தான் அதை தவர்த்துவிட்டாராம். ஆனாலும் அவர் அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்துவந்தாராம்.
ஓவியா, பரணிக்கு கிடைத்த புகழால் இந்த முறை தான் கலந்துகொள்ள சம்மதித்து விட்டாராம்.
கடந்த ஜுன் 3 ம் தேதி தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமாக நடந்து ஒரு விருதுவிழா விஜய் அவார்ட்ஸ். இதில் நயன்தாரா, தனுஷ், விஜய் சேதுபதி என பல முன்ன...
கடந்த ஜுன் 3 ம் தேதி தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமாக நடந்து ஒரு விருதுவிழா விஜய் அவார்ட்ஸ். இதில் நயன்தாரா, தனுஷ், விஜய் சேதுபதி என பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
விருது வாங்கிய நயன்தாராவிடம் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் ஏடாகூடமாக கேள்வி கேட்கும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அவர் நயன்தாராவிடம், மீசை வைத்த பையன் பிடிக்குமா, இல்லை தாடி வைத்த பையன் பிடிக்குமா. கோர்ட் ஷுட் அணிபவர் பிடிக்குமா இல்லை வேஷ்டி சட்டை அணிபவர் பிடிக்குமா என்று கேட்கிறார்.
அதற்கு நயன்தாரா சிரித்தபடியே அந்த வீடியோவில் நிற்கிறார். இந்த கேள்விகளுக்கு நயன்தாரா என்ன பதில் கூறியிருப்பார் என்பதை பொறுத்திருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை பார்ப்போம்.
காலா தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே எதிர்ப்பார்த்து காத்திருந்த படம். ஒரு யானைக்கு சாப்பாடு வைப்பது என்பது கொஞ்சம் கடினம் தான், அ...
காலா தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே எதிர்ப்பார்த்து காத்திருந்த படம். ஒரு யானைக்கு சாப்பாடு வைப்பது என்பது கொஞ்சம் கடினம் தான், அந்த வகையில் கபாலியில் ஒரு இயக்குனராக ரஞ்சித் ரஜினி என்ற யானைக்கு சாப்பாடு வைத்து திருப்திப்படுத்தினாலும், ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமே. அந்த ஏமாற்றத்தை காலாவில் போக்கினாரா? பார்ப்போம்.
கதைக்களம்
நெல்லையில் இருந்து மும்பை தாராவி சென்று அங்கு தன் கண்ட் ரோலில் தாராவியை வைத்து மக்களுக்கு நல்லது செய்து வருகின்றார் காலா சேட்டு.
அப்படியிருக்க தாராவியையே சுத்தமாக்குகிறேன் என்று நானே பட்னேக்கர் உள்ளே வந்து தாராவி மக்களை விரட்டியடிக்க பார்க்கின்றார்.
அதற்காக ரஜினிக்கு எதிராகவும் அவரை நம்பியிருக்கும் மக்களுக்கு எதிராகவும் பல சதி திட்டங்களை நானா பட்னேக்கர் தீட்ட அதை காலா எப்படி முறியடிக்கின்றார் என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
சூப்பர்ஸ்டார் இஸ் பேக் என்று தான் சொல்ல வேண்டும், 67 வயதிலும் அப்படி ஒரு சுறுசுறுப்பு. மனைவியிடம் குறும்பு, ரொமான்ஸ், முன்னாள் காதலியிடம் ஏக்கம், கியாரே செட்டிங்கா என்று அதிர விட்டு மழையில் அடுத்த காட்சியில் இறங்கி அடிப்பது என என்றும் ஒரே சூப்பர்ஸ்டார் என நிரூபித்துவிட்டார்.
ரஜினி படம் என்றால் அவரை சுற்றி மட்டும் கதை இல்லாமல் தாராவி அதை சுற்றி இருக்கும் மக்கள், காலாவின் குடும்பம் என அனைவருக்குமே படத்தில்.முக்கிய பங்கு உள்ளது.
படத்தின் அடிப்படையே நிலம் தான், அதை சுற்றி கதை நகர்கின்றது. அந்த விதத்தில் ரஞ்சித் நிலத்தின் முக்கியதுவத்தை வசனங்கள் மூலம் மக்கள் மனதில் பதிய வைத்துள்ளார்.
ஒரு சிறு குழந்தை காலில் விழ வர, யார் காலிலும் விழக்கூடாது என ரஜினி அட்வைஸ் சொல்வது. காலில் விழுவது சமத்துவம் இல்லை, கைக்கொடுத்து வரவேற்க வேண்டும், அதுதான் ஈகுவாலிட்டி என பாடமே எடுத்துள்ளார்.
அதிலும் முதன் முறையாக இராவணன் ஜெயிக்கிறான், அதை கதை சொல்லி கிளைமேக்ஸாக கொண்டு போன விதம் சூப்பர்.
அதேநேரத்தில் காலா தாராவியையே ஆள்கின்றார் என்பது கார்ட்டூனாக கதை சொல்கின்றனர், அதில் கொஞ்சம் அழுத்தம் இருந்திருக்கலாம். மேலும் ஆளும் கட்சியை ரஜினியை வைத்தே ரஞ்சித் ஆட்டிவைத்தது சாமர்த்தியம் என்றாலும், ரஜினி போராடுவோம் என்று சொல்லும் போது கொஞ்சம் சிரிப்பு வருவதை தடுக்க முடியவில்லை.
ரஜினி சொன்னது போல் ரகுவரனுக்கு பிறகு சரியான வில்லனாக டப் கொடுத்துள்ளார் நானா பட்னேக்கர்.
படத்தின் மிகப்பெரும் பலம் ஒளிப்பதிவு, இசை தான். அதிலும் பின்னணியில் கபாலியில் விட்டதை சந்தோஷ் பிடித்துவிட்டார்.
க்ளாப்ஸ்
ரஞ்சித்தின் திரைக்கதை, நடிகர், நடிகைகளின் பங்களிப்பு, அதிலும் ஈஸ்வரி எல்லாம் சிக்ஸர் அடிக்கின்றார்.
படத்தின் வசனம் மற்றும் டெக்னிக்கல் விஷயங்கள்.
அதிலும் சவுண்ட் இன்ஜினியரிங் அத்தனை யதார்த்தம்.
இடைவேளை மற்றும் கிளைமேக்ஸ்.
நானா பட்னேக்கர்-ரஜினி காட்சி
பல்ப்ஸ்
காலா ஹுமா குரேஷி காதல் கொஞ்சம் கபாலியை நியாபக்கப்படுத்துகின்றது.
இரண்டாம் பாதி முழுவதுமே வன்முறை தான் எங்கும் எதிலும், ஆனால் கதைக்கு தேவையே.
மொத்தத்தில் கபாலியில் விட்டதை ரஞ்சித் காலாவில் பிடித்து சூப்பர் ஸ்டாரை கால் மேல் கால் போட வைக்கின்றார் ஸ்டைலாக கெத்தாக.
மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் வருமானத்தை வாரி வழங்குகிறது தஞ்சை பெரிய கோயில். ஆனால், இது முறையான பராமரிப்பும் பாதுகாப்பும் இன்றி பல வகைகளிலு...
மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் வருமானத்தை வாரி வழங்குகிறது தஞ்சை பெரிய கோயில். ஆனால், இது முறையான பராமரிப்பும் பாதுகாப்பும் இன்றி பல வகைகளிலும் சீரழிந்துகொண்டிருப்பதாகப் பல தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சை பெரிய கோயில் உரிமை மீட்புக்குழுவைச் சேர்ந்த பழ.ராஜேந்திரன், ‘உலகப் புகழ்பெற்ற கோயிலாகத் தஞ்சை பெரிய கோயில் போற்றப்படுகிறது. ஆனால், இக்கோயிலின் நிர்வாகம், இதன் பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் கொஞ்சம்கூட அக்கறை செலுத்துவதில்லை. இக்கோயிலில் உள்ள இடிதாங்கி பழுதாகிக் கிடக்கிறது. இதனால்தான் லேசான இடியைக்கூட எதிர்கொள்ள முடியாமல், இக்கோயிலின் இரண்டாவது நுழைவாயிலான கேரளாந்தகன் நுழைவாயில் கோபுரம் சேதமடைந்தது. இடிதாங்கி நல்ல நிலையில் இருக்கிறதா என அவ்வப்போது சோதனை செய்திருக்க வேண்டும். ஆங்காங்கே இன்னும் கூடுதலான எண்ணிக்கையில் இடிதாங்கி வைக்க முடியுமா என ஆய்வு செய்ய வேண்டும். சாதாரண இடிக்கே இந்த சேதம் ஏற்பட்டுள்ளதென்றால் பெரிய அளவிலான இடி ஏற்பட்டால் கோயில் கருவறையின் பிரதான கோபுரத்தின் எதிர்காலம் குறித்து கவலை ஏற்படுகிறது.
கோயிலுக்குள் உள்ள கண்காணிப்புக் கேமராக்களும் ஒழுங்காகச் செயல்படவில்லை. ஏற்கெனவே இங்கிருந்து 60-க்கும் மேற்பட்ட சிலைகள் திருடப்பட்டுள்ளன. மீண்டும் திருட்டு சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. சமூக விரோதிகளால் கோயிலுக்கு வேறு ஆபத்துகள் நிகழக்கூடும். கோயிலின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாகக் கண்காணிப்புக் கேமராக்கள் வைக்க வேண்டும். தற்போது இக்கோயில் தஞ்சை அரண்மனை தேவஸ்தான கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ்தான் அரண்மனை தேவஸ்தானம் உள்ளது. பெரிய கோயில் உண்டியலில் ஒவ்வொரு மாதமும் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் வருகிறது. இதுமட்டுமல்லாமல் இக்கோயிலுக்குச் சொந்தமான கடைகள், விவசாய நிலங்கள் மூலமாகப் பல லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது. ஆனால், இவற்றில் ஒரு சிறு பகுதிகூட, கோயிலின் பராமரிப்புக்கோ பாதுகாப்புக்கோ செலவிடப்படுவதில்லை. ஊழல் முறைகேடுகள் மலிந்துள்ளன. இங்கிருந்த யானைக்கு ஒழுங்காக உணவு கொடுக்காமல் பட்டினிப் போட்டு பொய் கணக்கு எழுதப்பட்டதாக இங்கு பணியாற்றும் ஊழியர்கள் சொல்கிறார்கள். அந்த யானை உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தே போய்விட்டது” என்றார்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் தென்னன் மெய்ம்மன், ``கருவறையின் வெளிப்புறம் உள்ள தட்டு ஓடுகளைப் பல அடி ஆழத்துக்கு பெயர்த்து எடுத்து, புதிய தட்டு ஓடு பதிப்பதற்கான முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இது மிகவும் ஆபத்தான செயல். இது கருவறை கோபுரத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிவிடும். இதன் எடை ஒன்றரை லட்சம் டன். கருங்கற்களால் இவை அடுக்கப்பட்டுள்ளன. கருவறை கோபுரத்தின் உறுதித்தன்மை என்பது, தரைத்தளத்தையும் சார்ந்துள்ளது. தரைத்தளத்துக்கு கீழே 350 அடி ஆழம் வரை மணல் மட்டுமே உள்ளது. இதன் மீது 6 அடி உயரத்துக்கு செங்கல் பொடி உள்ளது. இதற்கும் மேல் ஒன்றரை அடி உயரத்துக்கு சுண்ணாம்புக் கட்டு உள்ளது. இவை பல அடி ஆழத்துக்கு பெயர்த்து எடுக்கப்பட்டு தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் வெளியற்றப்படுகின்றன.
புதிதாகப் போடப்படும் தட்டு ஓடுகள் பாதுகாப்பானவையாக இருக்காது. மழைநீர் கசிந்து தரையின் அடியில் உள்ள மணலை சேறாக்கிவிடும். இதனால் தரை தளம் உறுதித்தன்மையை இழந்துவிடும். கருவறை கோபுரத்தில் அசைவுகள் ஏற்படுவதற்கான ஆபத்துகள் அதிகம். ஏற்கெனவே உள்ள தட்டு ஓடுகள் பழுதானால், இதைப் பெயர்த்து எடுக்காமல், இதன் மீதுதான் புதிதாகத் தட்டு ஓடுகள் பதிக்க வேண்டும். பெரிய கோயிலின் பாதுகாப்பு நலன் கருதி தற்போது நடைபெற்று வரும் முறையற்ற பணிகளைத் தமிழக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். கோயில் நிர்வாகம்
10 ஆண்டுகளுக்கு முன்பு, இங்கு போர்வெல் அமைக்கும் முயற்சியில் இறங்கியது. தண்ணீர் எடுக்கப்பட்டால் சேறு கிளம்பி அடித்தளம் ஆட்டம் காணும். இதனால் கருவறை கோபுரத்துக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் நீதிமன்றம் மூலம் தடைவிதிக்கப்பட்டது. அந்தப் போர்வெல் இன்று வரையிலும் முழுமையாக மூடப்படவில்லை. இது ஏன் எனத் தெரியவில்லை. கோயில் நிர்வாகம் எப்போதுமே பொறுப்புடன் நடந்துகொண்டதில்லை. பெரியகோயிலின் மீது உண்மையான அக்கறை கொண்ட வல்லுநர்கள் அடங்கிய ஒரு குழுவை உருவாக்கி, அவர்களின் ஆலோசனையின்படிதான் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என உச்சக்கட்ட வளர்ச்சி அடைந்துள்ளார். அவருக்கு நேற்று நடந்த விஜய் விருது விழா...
நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என உச்சக்கட்ட வளர்ச்சி அடைந்துள்ளார். அவருக்கு நேற்று நடந்த விஜய் விருது விழாவில் Best Entertainer விருது வழங்கப்பட்டது.
அது பற்றி பேசிய அவர் "ரசிகர்களின் ஆதரவால் சுமார் மூஞ்சியுடன் நான் இவ்வளவு பெரிய இடத்திற்கு வந்துள்ளேன். என்னை விட திறமையாக, அதிக அழகான நடிகர்கள் உள்ளார்கள்" என கூறினார்.
2014ல் நடந்த விஜய் விருது விழாவில் தலைவா படத்திற்காக விஜய் விருது வாங்க வந்திருந்தார். அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என ஒரு கலவரமே நடந்துகொண்டிருந்த நேரம் அது. அது பற்றி அவரிடம் கேட்டபோது "நான் எப்போதும் பழையதை மறக்கமாட்டேன். எனக்கு அடுத்த சூப்பர்ஸ்டார் பட்டம் மீது எப்போதும் ஆசையில்லை. என்னை விட திறமையான நடிகர்கள், அதிக அழகான நடிகர்கள் இங்கே உள்ளார்கள்" என பேசினார்.
விஜய் பேசியதை 4 வருடங்கள் கழித்து அப்படியே தனுஷ் இன்று விஜய் விருது விழாவில் பேசியுள்ளார்.
Follow Us