2014ல் விஜய் பேசியதை அப்படியே இன்று மேடையில் சொன்ன தனுஷ்

நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என உச்சக்கட்ட வளர்ச்சி அடைந்துள்ளார். அவருக்கு நேற்று நடந்த விஜய் விருது விழா...

நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என உச்சக்கட்ட வளர்ச்சி அடைந்துள்ளார். அவருக்கு நேற்று நடந்த விஜய் விருது விழாவில் Best Entertainer விருது வழங்கப்பட்டது.

அது பற்றி பேசிய அவர் "ரசிகர்களின் ஆதரவால் சுமார் மூஞ்சியுடன் நான் இவ்வளவு பெரிய இடத்திற்கு வந்துள்ளேன். என்னை விட திறமையாக, அதிக அழகான நடிகர்கள் உள்ளார்கள்" என கூறினார்.

2014ல் நடந்த விஜய் விருது விழாவில் தலைவா படத்திற்காக விஜய் விருது வாங்க வந்திருந்தார். அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என ஒரு கலவரமே நடந்துகொண்டிருந்த நேரம் அது. அது பற்றி அவரிடம் கேட்டபோது "நான் எப்போதும் பழையதை மறக்கமாட்டேன். எனக்கு அடுத்த சூப்பர்ஸ்டார் பட்டம் மீது எப்போதும் ஆசையில்லை. என்னை விட திறமையான நடிகர்கள், அதிக அழகான நடிகர்கள் இங்கே உள்ளார்கள்" என பேசினார்.

விஜய் பேசியதை 4 வருடங்கள் கழித்து அப்படியே தனுஷ் இன்று விஜய் விருது விழாவில் பேசியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Blog Archive