Home Top Ad

தன் மகளை சில விசயங்களுக்காக அடிக்கடி கடிந்து கொள்வதால் அவள் அப்பாவிடம் கேட்டாள்… ஏம்பா என்னை இப்படி கண்டிப்புடன் நடத்துகிறீர்கள்…??? என்னை ...

தன் மகளை சில விசயங்களுக்காக அடிக்கடி கடிந்து கொள்வதால் அவள் அப்பாவிடம் கேட்டாள்… ஏம்பா என்னை இப்படி கண்டிப்புடன் நடத்துகிறீர்கள்…??? என்னை கொஞ்சம் சுதந்திரமாக விடலாமே என்று..

ஆனால் அதை அப்பா சற்று கஷ்டமாகவே உணர்ந்தார்… இதை எப்படி இவளுக்கு சொல்லிக்கொடுப்பது என யோசித்தார்..

ஒரு நாள் மகள் தன் தகப்பனிடம் வந்து கேட்டாள்.. அப்பா நான் பட்டம் விட்டு விளையாடபோகிறேன், நீங்களும் வாங்க.., என அழைத்துக்கொண்டு வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றாள்..

பட்டத்தை நூலில் கட்டி பறக்கவிட்டு மகிழ்ந்தாள்… அப்படி மகிழ்திருக்கும் வேளையில் அப்பா கேட்டார்… பட்டம் மேலே பறக்க, பறக்க அழகாய் இருக்கிறது…. ஆனால் அதன் விருப்பம்போல பறக்க முடியவில்லை.. அதற்கு தடையாய் இருப்பது என்னம்மா?? என கேட்டார்..

மகள் பட்டென பதில் சொன்னாள் இந்த நூல் தான் அப்பா அதை தன் இஷ்டத்திற்கு விடாமல் கட்டி வைத்திருக்கிறது என்று சொன்னாள்..

அப்படியா என கேட்டுவிட்டு அந்த நூலை அப்படியே அறுத்து விட்டார்… பட்டமும் தன் இஷ்டபடி பறந்தது. ஆனால் சற்று நேரத்திலேயே கிழிந்த காகிதமாய் கீழே விழுந்தது…

அப்பா சொன்னார்.. மகளே.. இந்த பட்டத்தை தன் இஷ்டபடி பறக்கவிடாமல் தடுக்கவில்லை… நேரான வழியில் இந்த பட்டம் பறந்து உயரங்களை கீழடக்க இந்த நூல் உதவியாய் இருக்கிறது…

இதேபோலத்தான் மகளே உன் அப்பாவாகிய நானும் ஒரு நூல்தான்… நீதான் அந்த பட்டம்… நீ என்னுடைய பேச்சை கேட்டு அதன்படி நடப்பாயெனில் என் பாதுகாவலுடன் உயர பறக்கலாம்… உன் இஷ்டப்படி வாழ நினைத்தால் அந்த பட்டம் கிழிந்து காகிதம் ஆனதுபோல உன் வாழ்க்கையும் சீரழிந்துவிடும்…

இப்போது புரிந்திருப்பாய் ஏன் உன்னை கண்டித்தேன் என்பதனை… நூலாகிய என்னை அறுத்துவிடாதே என்று சொல்லும்போதே மகள் தன் அப்பாவை கட்டி அணைத்துக் கொண்டாள்…!!!

ஆம் அன்பான பிள்ளைகளே… உங்களுக்கு இனிமையாய் தோன்றுகின்ற வழிகள் ஏராளம் இருக்கலாம்.. ஆனால் அவற்றின் முடிவு பயங்கரமானது…

எனவே பெற்றோருக்கு கீழ் படிந்து வாழ கற்றுக் கொள்ளுங்கள் உங்கள் இனிய வாழ்வு உங்களை வரவேற்கும்…!!!

அப்பா அம்மாவின் அன்பும், கண்டிப்பும் இருந்தால் மகள், மகனின் வாழ்வு இனிமையாக அமையும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தான் பங்கேற்பது குறித்து நடிகை கஸ்தூரி விளக்கமளித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 17-ஆம் தேதி முதல் பிக்பா...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தான் பங்கேற்பது குறித்து நடிகை கஸ்தூரி விளக்கமளித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 17-ஆம் தேதி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.  இந்த நிகழ்ச்சியில் பொன்னம்பலம், யாஷிகா, மஹத் உள்ளிட்ட 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். கடந்த முறை போன்றே இம்முறையும் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 50 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் இதுவரை நித்யா, ரம்யா, ஷாரிக், மமதி, அனந்த் வைத்தியநாதன் ஆகிய 5 பேர் வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியானது . இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருக்கும் நடிகை கஸ்தூரி, தான் அமெரிக்காவில் இருப்பதாகவும் , புற்றுநோய் குறித்த ஆய்வில் ஈடுபட்டு இருப்பதாகவும், சுவாரஸ்யத்திற்காக இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

பிரபல சின்னத்திரை நட்சத்திர தொகுப்பாளினி டிடி என்று செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. காபி வித் டிடி மூலம் புகழ்பெற்றவர். பிரமாண்ட நட்...

பிரபல சின்னத்திரை நட்சத்திர தொகுப்பாளினி டிடி என்று செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. காபி வித் டிடி மூலம் புகழ்பெற்றவர்.

பிரமாண்ட நட்சத்திர கலை விழாக்கள், விருது வழங்கும் விழாக்களை தொகுத்து வழங்கியவர். முன்னணி திரை நட்சத்திரங்களுக்கு தோழியாக இருப்பவர்.

சமீபகாலமாக திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இந்நிலையில் இவரது ரகசிய காதலன் என்று ஒரு தகவல் இணையத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


அந்த ரகசிய காதலன் யார் என்றால் பகல்நிலவு தொடரில் நடித்து வருகிற மிதுன்ராஜ் தானாம்.

ஆனால் அதை மறுத்துள்ள மிதுன், ‘நான் அவரை அக்கா என்று தான் கூப்பிடுவேன், அவருடன் நான் எடுத்து கொண்ட ஒரு செல்ஃபியை ஃபேஸ்புக்கில் போட்டேன். அதை எடுத்து ஒரு யூடியுப் சேனல் இவ்வாறு பரவ விட்டுள்ளது’ என தனது பேட்டியில் விளக்கியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 7 ஆம் தேதி மரணம் அடைந்தார். அவர் ஏற்கனவே, வயது காரணமாகவும், உடல்நலக் குறைவு காரணமாக கடந...

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 7 ஆம் தேதி மரணம் அடைந்தார். அவர் ஏற்கனவே, வயது காரணமாகவும், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் வீடிலேயே இருந்தார்.

அவ்வப்போது வீட்டிற்கு வெளியே வந்து தனது தொண்டர்களை பார்த்து கையசைப்பார். அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் சில நேரங்களில் வெளியாகும். ஓய்வில்லாமல் உழைத்த ஒருவர் ஒன்றரை ஆண்டுகள் வீட்டில் இருந்தபோது அவருக்கு பொழுதுபோக்காக இருந்த ஒருவன் இந்த மகிழன்.

மகிழன் கருணாநிதியின் கொள்ளுப்பேரன். அதாவது நடிகர் அருள்நிதியின் மகன். உடல் நலக்குறைவுக்கு சிகிச்சை எடுத்து வந்தபோதும் மகிழனுடன் எப்படியும் ஒரு மணி நேரமாவது செலவிடுவாராம் கருணாநிதி.

சமீபத்தில், கருணாநிதியின் சமாதிக்கு அவரது குடும்பத்தார் சென்று அஞ்சலி செலுத்தினர். அப்பொழுது மகிழனை கூட்டி வந்தார். அவனை கீழே இறக்கிவிட்டதும் மகிழன் கருணாநிதியின் புகைப்படத்தை பார்த்து சிரித்தபடி அவரை அழைத்துள்ளான்.

கருணாநிதி இறந்தது தெரியாமல் எப்போதும் போல அவரை பார்த்ததும் அவன் மகிழ்ச்சிகொண்டு, அவரை அழைத்தது அங்கிருந்தவர்களை கண் கலங்க வைத்துவிட்டதாம். வீட்டில் இருக்கும் போது கருணாநிதி நிறைய சிரித்ததர்கு மகிழந்தான் காரணம் என கோபாலபுர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொழிலதிபர் விஜய் மல்லையாவின் லண்டன் மேன்சனில் தங்க கழிப்பறை இருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான விஜய் மல்லையா இந...

தொழிலதிபர் விஜய் மல்லையாவின் லண்டன் மேன்சனில் தங்க கழிப்பறை இருப்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான விஜய் மல்லையா இந்திய வங்கிகள் பலவற்றில் ரூ.9000 கோடிகள் அளவுக்கு கடன் வாங்கிவிட்டு பிரித்தானியாவுக்கு தப்பிசென்றார்.

இந்தியாவில் உள்ள மல்லையாவின் சொத்துக்களை அமலாக்க துறையினர் கைப்பற்றி வருகிறார்கள்.

இதோடு நீதிமன்றத்திலும் அவர் மீதான வழக்குகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் லண்டனில் உள்ள மல்லையாவின் மேன்சனில் தங்கத்தால் ஆன கழிப்பறை இருப்பது தெரியவந்துள்ளது.

பிரபல எழுத்தாளரான ஜேம்ஸ் கிராப்ட்ரீ மல்லையா மேன்சனுக்கு சென்ற நிலையில் இதை பார்த்துள்ளார், இந்த தகவலை அவரே வெளியிட்டுள்ளார்.

இந்த கழிப்பறையின் சரியான விலை குறித்த விபரம் வெளியாகவில்லை என்றாலும் இதன் விலை கோடிகளில் இருக்கும் என தெரியவந்துள்ளது

கருணாநிதி அவர்களுக்கு செல்லப் பிராணிகள் என்றால் அலாதி பிரியம், தினமும் தான் வளர்க்கும் நாய்களுடன் நேரம் செலவழிப்பார். அவர் அசைவ பிரியரும்...

கருணாநிதி அவர்களுக்கு செல்லப் பிராணிகள் என்றால் அலாதி பிரியம், தினமும் தான் வளர்க்கும் நாய்களுடன் நேரம் செலவழிப்பார்.

அவர் அசைவ பிரியரும் கூட, தினமும் அவரது உணவில் அசைவம் இருக்கும், தனது உணவையே நாய்களுக்கும் கொடுத்து உண்ணும் வழக்கம் உடையவர்.

ஆனால் திடீரென தான் பாசமாக வளர்த்த கருப்பு நாய் இறந்து விடவே, சைவத்துக்கு மாறினாராம்.

இதுகுறித்து கனிமொழி கூறுகையில், கருப்பு நாய் இறந்ததால் கலைஞர் சோகம் அடைந்தார், அதன் உடலை ஆலிவர் சாலையில் இருந்த வீட்டின் பின்புறம் புதைத்தோம்.

இதனால் கலைஞர் இரண்டு ஆண்டுகளாக அசைவம் சாப்பிடுவதையே நிறுத்தி விட்டார், ஆனால் மருத்துவ காரணங்களுக்காக அசைவம் சாப்பிட மருத்துவர்கள் அறிவுரை வழங்கினார்கள் என தெரிவித்துள்ளார்.

எதிரியைத் தேடிப் போய் திருப்பி அடிக்கும் இந்திய உளவுத்துறை அதிகாரியின் கதையே ’விஸ்வரூபம் 2’. அமெரிக்காவிலிருந்து தப்பித்துச் செல்லும் தீவ...

எதிரியைத் தேடிப் போய் திருப்பி அடிக்கும் இந்திய உளவுத்துறை அதிகாரியின் கதையே ’விஸ்வரூபம் 2’.

அமெரிக்காவிலிருந்து தப்பித்துச் செல்லும் தீவிரவாதிகள் குழுத் தலைவன் ராகுல் போஸைத் தேடும் பயணத்தை மேற்கொள்கிறார் கமல். உடன் சேகர் கபூர், ஆண்ட்ரியா, பூஜாகுமார் ஆகியோர் பயணிக்கின்றனர். லண்டனில் கமல் அண்ட் கோவைப் பழிதீர்க்க ராகுல் போஸ் சதித் தீட்டம் தீட்ட, அதை வெற்றிகரமாக முறியடிக்கிறார் கமல். 1500 டன் எடை கொண்ட வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்யும் சவாலை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயமும் அவருக்கு ஏற்படுகிறது. டபுள் கேம் ஆடும் உயர் அதிகாரி ஒருவரால் தன் உயிருக்கே ஆபத்து நேர்கிறது. ராகுல் போஸாலும் பேராபத்து தொடர்கிறது. இவற்றை கமல் எப்படி சந்திக்கிறார், அதனால் ஏற்படும் இழப்புகள் என்ன என்பதற்கு ’விஸ்வரூபம் 2’ விடை சொல்கிறது.

இயக்குநராகவும், நடிகராகவும் கமல் தன்னை மிகச் சரியாக நிறுவியிருக்கும் படம் என்று சொல்லலாம். நளினம் மிகுந்த கதக் நடன ஆசிரியராக இருக்கும் விஸ்வநாத்தின் நதிமூலம், ரிஷிமூலம் இதில் சரியாக வெளிப்படுகிறது. ராணுவ அதிகாரியாக இருந்து தீவிரவாதியாகக் கட்டமைக்கப்பட்டு சாவின் விளிம்பு வரை சென்று மீண்டு வந்து இந்திய உளவுத்துறை அதிகாரியாகும் பரிமாணம் அடையும் காட்சிகள் திரைக்கதை நகர்த்தலுக்கு வினையூக்கியாக வேகமுகம் காட்டுகிறது.

கமல் அசரடிக்கிறார். வார்த்தைக்கு வார்த்தை பதிலடி கொடுத்து நகைச்சுவைத் தரன்மையிலும் தெறிக்க விடுகிறார். நாட்டின் மீதான பற்று, சக பணியாளர் மீதான அன்பு, மனைவி மீதான அக்கறை, தொழில் மீதான பக்தி என்று எல்லா முகங்களிலும் மிகச் சரியாகப் பொருந்துகிறார். எதிரிக்கும் நல்லது செய்கிற அந்தப் பண்பிலும் கமலின் கதாபாத்திரம் உயர்ந்து நிற்கிறது.

கமல் மீதான காதலில் கிறங்குவதிலும், கணவனுக்காக ரிஸ்க் எடுத்து 1500 எடை கொண்ட வெடிகுண்டின் தன்மையைப் பரிசோதிப்பதிலும் பூஜாகுமார் கவனிக்க வைக்கிறார். பூஜாகுமார் மீதான பொறாமையை லேசுபாசாக வெளிப்படுத்துவது, கமல் மீதான அன்பை திடமாக உணர்த்துவது, ஆக்‌ஷன் காட்சிகளில் அசத்துவது என ஆண்ட்ரியா ஆச்சர்யப்படுத்துகிறார்.

கமலின் மிகச் சிறந்த வழிகாட்டியாக தன்னை வடிவமைத்துக்கொண்ட சேகர் கபூர் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குண்டுகள் பாய்ந்த நிலையில் கமலுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் அக்காட்சி செம்ம.

நின்று நிதானித்து ஸ்கோர் செய்கிறார் ராகுல் போஸ். எதற்கும் அலட்டிக்கொள்ளாமல் கச்சிதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். சூழ்ச்சியில் சிக்கவைத்து நாடகமாடும் ஆனந்த மகாதேவனும், கமலின் அம்மாவாக அழுத்தமான நடிப்பைத் தந்த வகீதா ரஹ்மானும் கவன ஈர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

ஷாம்தத் சைனுதீன் லண்டன், ஆப்கானிஸ்தான், டெல்லியின் பரப்பைக் கண்களுக்குள் கடத்துகிறார். லால்குடி என்.இளையராஜாவின் ஆப்கானிஸ்தான் தீவிரவாதக் கும்பல் குறித்த செட், தண்ணீருக்குள் நிகழும் சண்டைக்காட்சி ஆகியவை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜிப்ரானின் இசையில் நானாகிய நதிமூலமே ரசிக்க வைக்கிறது. நான் யாரென்று தெரிகிறதா பாடலை உல்டாவாக்கிய ஞாபகம் வருகிறதா பாடல் மெதுவான பீட்டாக இருப்பதால் வெறுமனே கடந்துபோகிறது. பின்னணி இசையில் ஜிப்ரானின் உழைப்பு பளிச்சிடுகிறது. இந்தக் காட்சி தேவையே இல்லை என்று சொல்லாத அளவுக்கு நறுக்கென்று காட்சிகளைக் கோத்த விதத்தில் மகேஷ் நாராயணனும், விஜய் சங்கரும் வியக்க வைக்கிறார்கள்.

முதல் பாகத்தை நினைவூட்டுவதற்காக இரண்டாம் பாகத்தில் கூறியது கூறல் இருக்கும். ஆனால், இப்படத்தில் அப்படி எந்த அம்சமும் இல்லை. திரைக்கதை எந்தக் குழப்பமும் இல்லாமல் நேர்த்தியாகச் செல்கிறது. ஆனால், படத்தில் சவால்கள் குறைவாக உள்ளதால் அதை எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தமும் நாயகனுக்கு குறைவாகவே உள்ளது. இதனால் இரண்டாம் பாதி பெரிதாக ஈர்க்கவில்லை. அதை முட்டுக்கொடுப்பதற்காக கமல் அம்மா போர்ஷன் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், அது போதுமானதாக இல்லை. நாயகன் எந்த சாகசத்தையும் செய்யாமல், புத்திசாலித்தனத்தையும் வெளிப்படுத்தாமல் எதிரிகளை சாதாரணமாகவே அணுகுவது எடுபடவில்லை. 64 வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்வது காட்சியாக இல்லாமல் வசனமாக நகர்வதால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. அதுவும் அந்த கிளைமாக்ஸ் பலவீனம்.

இவற்றைத் தவிர்த்துப் பார்த்தால், தீவிரவாதம், வன்முறை ஆகியவற்றை எதிர்த்துக் களமாடுவதோடு நில்லாமல், அஹிம்சை, அன்பை மட்டும் முன்னிறுத்தும் கமலின் நோக்கம் ராகுல் போஸ் வாரிசுகள் வழியாக இப்படத்தில் சரியாக நிறைவேறி இருக்கிறது.