Home Top Ad

ராஜஸ்தான் தலைமைச் செயலகத்தில் அமானுஷ்யமான சம்பவங்கள் நடப்பதாக அந்த மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் பீதி கிளப்பியுள்ளனர்.   ராஜஸ்தான் மாநிலத்...

ஒருகாலத்தில் இடுகாடு; தற்போது தலைமைச் செயலகம்' - பேய் பீதியில் ராஜஸ்தான் எம்.எல்.ஏ-க்கள்

ராஜஸ்தான் தலைமைச் செயலகத்தில் அமானுஷ்யமான சம்பவங்கள் நடப்பதாக அந்த மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் பீதி கிளப்பியுள்ளனர்.  

ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான அரசு ஆட்சியில் உள்ளது. வசுந்தரா ராஜே முதல்வராக உள்ளார். இந்தாண்டு அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதால் பா.ஜ.க அரசு மும்முரமாகத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே அந்த மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் `பேய்’ பயத்தில் உறைந்துள்ளனர். 

இதுகுறித்து அவர்கள் முன்வைக்கும் காரணங்கள் பின்வருமாறு... ராஜஸ்தான் சட்டப்பேரவையின் கூட்டங்களில் 200 சட்டமன்ற உறுப்பினர்களும் வருகை தந்து நீண்ட நாள்கள் ஆகிவிட்டன. எம்.எல்.ஏ இறப்பு, எம்.எல்.ஏ-க்கள் மீது போலீஸ் வழக்கு என அபசகுணமான காரணங்களால் சட்டப்பேரவையில் முழு வருகைப்பதிவு இருப்பதே கிடையாது.

ராஜஸ்தான் மண்டேல்கர் தொகுதி எம்.எல்.ஏ கீர்த்தி குமாரி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்தார். நத்வாரா எம்.எம்.ஏ கல்யாண் சிங் உடல்நலக்குறைவால் கடந்த வாரம் உயிரிழந்தார். இதுபோல் எம்.எம்.ஏ-க்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது அவர்களிடையே பயத்தை அதிகரித்துள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களில் மூன்று பேர் கொலை மற்றும் பாலியல் வழக்குகளில் சிறைக்குச் சென்றுவிட்டனர். இதனால் ராஜஸ்தான் தலைமைச் செயலகத்தில் தீய சக்திகள் நடமாடுவதாகவும் யாகம் நடத்தி பேய்களைத் துரத்த வேண்டும் என்றும் எம்.எல்.ஏ-க்கள் முதல்வர் வசுந்தரா ராஜேவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனராம்.

இதுபற்றி நகவூர் தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ ஹபிபூர் ரஹ்மான் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில்,  `ராஜஸ்தானின் தலைமைச் செயலகம் அமைந்துள்ள இடம் ஒருகாலத்தில் இடுகாடாக இருந்தது. எனவே, அங்கு பேய் நடமாட்டம் இருக்க வாய்ப்புள்ளது. தலைமைச் செயலகத்தில் இருந்து தீய சக்திகள் விரட்டப்பட வேண்டும். முதல்வர் வசுந்தரா ராஜே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

0 coment�rios: