Home Top Ad

பேரணி… பேரணியை விட்டால் மறியல்… மறியலை விட்டால் மனித சங்கிலி… நடுவில் அவ்வப்போது கிளர்ச்சி, பஸ் உடைப்பு என்று தமிழ்நாடு முழுக்க ஒரே மாதிரிய...

யாரும் யோசிக்காத கோணத்தில் செல்லும் கமல்!

பேரணி… பேரணியை விட்டால் மறியல்… மறியலை விட்டால் மனித சங்கிலி… நடுவில் அவ்வப்போது கிளர்ச்சி, பஸ் உடைப்பு என்று தமிழ்நாடு முழுக்க ஒரே மாதிரியான நிகழ்வுகள் நடந்து வருகிறது.

‘சிஸ்டம் சரியில்லை’ என்று ஒருவர் பொத்தாம் பொதுவாக பேசிவிட்டு சென்றுவிட, சிஸ்டத்தை எங்கிருந்து சரி செய்ய வேண்டும் என்பதை ஒரு டெமோவாகவே காட்டிவிட்டார் கமல்.

யூ ட்யூபில் வெளியான அந்த நேரடி நிகழ்வை பார்த்தவர்களால், ஒரு நிமிஷமாவது அசந்து போகாமலிருக்க முடியாது. கிராம பஞ்சாயத்துக்கு இருக்கிற அதிகாரம், அது நினைத்தால் நடத்திக் காட்டிவிட முடியும் என்கிற துணிச்சல், அந்த பஞ்சாயத்தின் கைகளுக்குள் பத்திரமாக இருக்க வேண்டிய உரிமைகள் குறித்தெல்லாம் அசல் கிராம மக்களை வைத்து நடத்தியே காட்டிவிட்டார் கமல். இந்த நிகழ்ச்சிக்கு அவர் வைத்த பெயர் மாதிரி கிராம சபை.

இந்த கிராம பஞ்சாயத்து சபையை அவர் கூட்டிய நாள், கிராம பஞ்சாயத்து ராஜ் தினம் என்பதுதான் இன்னும் கூடுதல் சிறப்பு. வருகிற மே 1 ந் தேதி தமிழகத்தின் ஏதோவொரு கிராமத்திற்கு சென்று, அங்கு நடக்கும் பஞ்சாயத்தில் கலந்து கொள்ளவும் திட்டமிட்டிருக்கிறார் கமல்ஹாசன்.

ஒரு கிராம பஞ்சாயத்து நினைத்தால், எவ்வளவு பெரிய நச்சுக்கழிவு ஆலைகளையும் கூட ஊருக்குள் வர விடாமல் தடுத்துவிட முடியும் என்பதையும் அங்கே விவாதித்தார்கள். இந்த அருமையான, முன் மாதிரியான நிகழ்வில், சட்ட பஞ்சாயத்து இயக்கம் போன்ற நாட்டுக்கு பயனுள்ள இயக்கங்களும், இன்னும் பல குழுக்களும் கலந்து கொண்டதும் கூட எக்ஸ்ட்ரா சிறப்பு.

கோட்டையின் பாரத்தை கொஞ்சம் குறைப்போம் என்கிற முழக்கத்துடன் வைக்கப்பட்டிருக்கும் இந்த திட்டம், கமலின் அரசியல் பயணத்தில் பெரும் நம்பிக்கையை விதைக்கும் என்பதில் சந்தேகமே இருக்கப் போவதில்லை. அவருக்கு பின்னால் இந்துத்வாவின் சக்தி இருக்கக் கூடுமோ என்கிற சந்தேகம் இன்னொரு புறம் விதைக்கப்பட்டு வந்தாலும், கமலின் சின்ன சின்ன முன்னெடுப்புகள், சேச்சே… அப்படியெல்லாம் இருக்காது என்கிற நம்பிக்கையையும் கொடுக்கிறது.

அந்த நம்பிக்கை ஓட்டாக மாறினால், கமல் தமிழ்நாட்டின் அசைக்க முடியாத சக்தியாக இருப்பார்.

0 coment�rios: