Home Top Ad

வரவர தமிழன் சோம்பேறியாப் போனான் என்பதற்கு உதாரணம்தான், சர்பத் மற்றும் டீ கடைகளில் கூட வட மாநிலத்தானின் ஆக்ரமிப்பு. (நீ ஒழுங்கா வேல பார்த்தா...

முனியாண்டி விலாஸ்ல கூட வட மாநிலத்தவன்தான் வேல பார்க்குறான்!

வரவர தமிழன் சோம்பேறியாப் போனான் என்பதற்கு உதாரணம்தான், சர்பத் மற்றும் டீ கடைகளில் கூட வட மாநிலத்தானின் ஆக்ரமிப்பு. (நீ ஒழுங்கா வேல பார்த்தா அவன் ஏன்யா வர்றான்?) ஆனால் தமிழனின் சோம்பேறித்தனத்தையும், குடிக்கு அடிமை ஆகிவிட்டதை பற்றியும் கவலைப்பட வேண்டிய சூழ்நிலையில் தமிழ்நாடு இருப்பதை மறந்துவிட்டு, பழியை அவன் தலையில் போடுகிற வேலையை சிறப்பாக செய்தது ஒரு பட விழா.

யுரேகா இயக்கிய ‘காட்டுப்பய சார் இந்த காளி’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில்தான் இத்தகைய கார சாரம். சும்மாவே அரசியல் சூடு காணும் களமாகிவிட்ட மேடைகளில், பாரதிராஜா, கவுதமன் போன்றவர்கள் இருந்தால் அது எப்படியிருக்கும். அப்படியே கொதித்தது. முதலில் தீயை மூட்டியவரே யுரேகாதான்.

‘இப்பல்லாம் சரவணபவன்ல சாம்பார் ஊத்துறவன் கூட வட மாநிலத்தவனாதான் இருக்கான். எங்க திரும்பினாலும் அவனைதான் வேலைக்கு வச்சுருக்காங்க. அவன் பேசுற மொழிக்கு நாம மாற வேண்டியிருக்கு. இந்த அநியாயத்தை எங்க போய் சொல்லுவது? அது ஒருபக்கம்னா, வட்டிக்கு விடுற மார்வாடிங்க தமிழனின் கஷ்டத்துக்கு முன்னாடி வந்து நிற்க மாட்டேங்குறான். காவேரி பிரச்சனையில் நாம வீதிக்கு வந்து போராடும்போது, அவன் ஜம்முன்னு மேட்ச் பார்க்க உள்ள போறான். இதையெல்லாம் தட்டிக் கேட்கணும். அதிக வட்டி வாங்குறது. கடனை அடைக்கணும்னு நினைச்சா கூட அடைக்க விடாம அவனை பிழிஞ்சு எடுக்கறது. இதையெல்லாம் விடக் கூடாது’ என்று பொங்கினார்.

உண்மையில் இந்தப்படமே தமிழ்நாட்டில் பிழைக்க வந்த வட மாநிலத்தவர்கள் பற்றிய படம்தானாம். ஜெயவந்த் ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப்படத்தின் பாடல்களில் ஒரு பாடல் எச்.ராஜா கோஷ்டிகளை வயிறெரிய விடுவது நிச்சயம். காவி உடையுடன் சாமியார்கள் கஞ்சா அடித்தபடி ஆடும் அந்தப்பாடல், ஆன்ட்டி இண்டியன்களின் தேசிய கீதமாக இருக்கப் போவதும் சத்தியம்.

ஆமா… அங்கு வந்த பாரதிராஜா என்ன பேசினாராம்?

அவருக்கென்ன? ரஜினியை கழுவி ஊற்றிவிட்டு கிளம்பினார். ஆல் ஆர் ஆன்ட்டி ரஜினிஸ்…

0 coment�rios: