தீனா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் தான் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.மேலும் அஜித்திற்கு தல என்று பெயர் வர காரணமாகவும் இருந்த இவர் இதுவரை தமிழில் எடுத்த அனைத்து படங்களுமே ஹிட் என்றே கூறலாம்.
கள்ளக்குறிச்சியில் பிறந்த ஏ. ஆர்.முருகதாஸ் அதே ஊரை சார்ந்த ரம்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மேலும் இவரது மனைவி ரம்யா மிகுந்த தெய்வபக்தி கொண்டவராம். அதனால் இவர்கள் இருவரும் அடிக்கடி கோவில், குளம் என்று தான் செல்வார்களாம்.
தற்போது ஏ. ஆர். முருகதாஸிற்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் இருக்கின்றனர். பெரும்பாலும் பிரபலங்கள் சிலர் தங்களது குடும்ப நபர்களை வெளியுலகிற்கு அறிமுகம் செய்து கொள்வது இல்லை. ஆனால் முருகதாஸ் சற்று வித்தியாசமனவராக இருந்து வருகிறார்.
இவர் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாளும் பெரும்பாலும் தனது மனைவி மற்றும் தனது பிள்ளைகளுடனே தான் செல்வாராம். அவ்வளவு ஏன் தனது மகன் மற்றும் மகளை அடிக்கடி ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு கூட அழைத்து செல்வாராம். விஜய் நடித்த துப்பாக்கி படத்தின் போது கூட அவர்கள் இருவருமே விஜயயை ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்துப் பேசியுள்ளார்களாம்.
0 coment�rios: