Home Top Ad

ராக்ஸ்டார் ரமணியம்மா இவரை தற்போது தெரியாதவர்கள் என்று யாருமே இல்லை. அந்த அளவிற்கு பட்டித்தொட்டியெல்லாம் தன் குரலால் பட்டையை கிளப்பியவர். ...

அதை மட்டும் விடமாட்டேன், நீண்ட நாட்களுக்கு பிறகு மௌனம் கலைத்த ராக்ஸ்டார் ரமணியம்மா- உருக்கமான பதில்

ராக்ஸ்டார் ரமணியம்மா இவரை தற்போது தெரியாதவர்கள் என்று யாருமே இல்லை. அந்த அளவிற்கு பட்டித்தொட்டியெல்லாம் தன் குரலால் பட்டையை கிளப்பியவர்.

இவர் கலந்துக்கொண்ட போட்டியில் இரண்டாம் பரிசை வென்றார், தற்போது பல இசையமைப்பாளார்கள் இவரை பாட வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரமணியம்மா முதன் முதலாக போட்டிக்கு பிறகு ஒரு உருக்கமான பேட்டியை கொடுத்துள்ளார்.

இதில் ‘எனக்கு தமிழக மக்கள் கொடுத்த அன்பே போதும், இந்த புகழுக்கு மேல் எனக்கு என்ன வேண்டும், இதுவே போதும்.

வீட்டு வேலை செய்து தான் இந்த இடத்திற்கு வந்தேன், சினிமாவில் பிஸியானாலும் அந்த வேலையை ஒரு போதும் விடமாட்டேன்’ என உருக்கமாக பேசியுள்ளார்.

0 coment�rios: