Home Top Ad

கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு கூடிவிட்டது. நாட்கள் நெருங்கவிட்டது. இரண்டாம் சீசனை நோக்கி நக...

பிரம்மாண்டமாய் ஆரம்பமாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ

கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு கூடிவிட்டது. நாட்கள் நெருங்கவிட்டது. இரண்டாம் சீசனை நோக்கி நகரும் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

முதல் சீசனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆரவ், ஓவியா, சினேகன், ஜூலி, காயத்திரி என பலரும் ஒரு விதத்தில் ரசிகர்களின் கவனத்தை பெற்றார்கள். சிலர் கடுமையான விமர்சனங்களுக்கும் ஆளானார்கள்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சீசன் 2 ன் டீசர் வெளியானது. அதனை தொடர்ந்து அண்மையில் புரமோவும் வெளியானது. நல்லவர் யார் கெட்டவர் யார் என கமலின் கேள்வி கணைகள் தொடங்கிவிட்டது.

ஜூன் இரண்டாம் வாரம் 11 ம் தேதி, 19 ம் தேதி இந்நிகழ்ச்சி வரும் என சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் நிகழ்ச்சி வரும் ஜூன் 17 ல் தான் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

0 coment�rios: