Home Top Ad

*மலர்களை ரசிக்க மட்டும் தெரிந்த நமக்கு அதன் மருத்துவ குணங்கள்* * தெரிவதில்லை தெரிந்தாலும் அதை எப்படி உபயோகிப்பது என்ற சந்தேகத்திலேயே* *அ...

*மலர்களை ரசிக்க மட்டும் தெரிந்த நமக்கு அதன் மருத்துவ குணங்கள்* *

தெரிவதில்லை
தெரிந்தாலும் அதை எப்படி உபயோகிப்பது என்ற சந்தேகத்திலேயே* *அதனை பயன்படுத்தாமல் விட்டுவிடுகிறோம்.* *அப்படிப்பட்ட மலர்களின் குணங்களும் பயன்களும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.*

*ஆவாரம் பூ*

ரத்தத்துக்கு மிகவும் பயன் தரும் ஆவாரம் பூவை உலர்த்தி வேளை ஒன்றுக்கு 15 கிராம் நீரில் போட்டு கசாயமாக்கி பால், சர்க்கரை கலந்து காப்பியாக பருகிவர உடல் சூடு, நீரிழிவு, நீர்கடுப்பு போன்ற நோய் தீரும். ஆவாரம்பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் கூட்டி, உடலில் தேய்த்து குளிக்க கற்றாழை நாற்றம் நீங்கும். தோல் வியாதிகளும் குணமாகும்.

*அத்திப்பூ*

அத்திப்பூவை சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக்கி பாலில் காய்ச்சி சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வர சில நாட்களிலேயே உடல் சூடு, பித்த சூடு நீங்கும்.

*நெல்லிப்பூ*

உடலுக்கு குளிர்ச்சி, இதனுடன் விழுதி இலை, வாத நாராயணா இலை சேர்த்து கசாயம் வைத்து இரவில் சாப்பிட காலையில் சுகபேதி உண்டாகும். மலச் சிக்கலுக்கும் இது உகந்தது.

*செம்பருத்திப்பூ*

இருதய பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் அடிக்கடி மார்பு வலியால் அவதிப்படுபவர்கள் இந்தப் பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி காலையும், மாலையும் குடித்து வந்தால் இருதயம் பலமடையும்.

*ரோஜாப்பூ*

இந்த மலரின் மணம் மனதிற்கு மட்டுமின்றி, இருதயத்திற்கும் வலிமை தரக்கூடியது. பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி நீங்கும். இரத்த விருத்திக்கும் துணை செய்யும் மலர் இது.

*வேப்பம்பூ*

சிறந்த கிருமி நாசினி இது. இந்தப் பூ வீட்டில் இருந்தால் சின்னஞ்சிறு கிருமிகள் ஓடிவிடும். உடல் குளிர்ச்சிக்கு ஏற்றது இது.

*முருங்கைப்பூ*

ஆண்களுக்கு ஆண்மையை அதிகரித்து தாது பெருக்கம் செய்யும் தன்மையுடையது. வயிற்றில் உள்ள கிருமியை ஒழிக்க கூடியது.

*மல்லிகைப்பூ*

கண் பார்வையை கூர்மையாக்கும் சக்தி இதற்கு உண்டு. காம உணர்ச்சிகளை தூண்டும் தன்மை உண்டு. கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

*குங்குமப்பூ*

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஒருவேளைக்கு 5 முதல் 10 இதழ்களை இரவு பசும் பாலில் போட்டு காய்ச்சி குடித்துவர சீதள சம்பந்தமான நோய்கள் நீங்கும். பிறக்கின்ற குழந்தை நல்ல திடகாத்திரமாக இருக்கவும் குங்குமப்பூ உபயோகப்படுகிறது.

கார்த்தி நடிப்பில் கடைக்குட்டி சிங்கம் படம் செம்ம வரவேற்பை பெற்றது. இப்படம் வெளிவந்து 3 வாரம் ஆகிய நிலையிலும் பல இடங்களில் ஹவுஸ்புல் காட்சி...

கார்த்தி நடிப்பில் கடைக்குட்டி சிங்கம் படம் செம்ம வரவேற்பை பெற்றது. இப்படம் வெளிவந்து 3 வாரம் ஆகிய நிலையிலும் பல இடங்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக வெற்றி நடைப்போடுகின்றது.

இந்நிலையில் கடைக்குட்டி சிங்கம் உலகம் முழுவதும் ரூ 63 கோடி வசூல் செய்து விட்டதாம், கார்த்தியின் திரைப்பயணத்தில் பெஸ்ட் இது தான்.

மேலும், இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ 45 கோடியை எட்டிவிட்டதாம், இந்த வருடத்தில் அதிக லாபம் கொடுத்தது கடைக்குட்டி சிங்கம் தானாம்.

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம். இவர் கையில் தற்போது குறைந்தது அரை டஜன் படங்கள் இருக்கும். அந்த அளவிற்கு பல படங்களில...

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம். இவர் கையில் தற்போது குறைந்தது அரை டஜன் படங்கள் இருக்கும்.

அந்த அளவிற்கு பல படங்களில் கமிட் ஆகி வரும் இவர் சமீபத்தில் யுவன் தயாரித்த பியார் பிரேமா காதல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியை ’நீங்க தற்போது ஒரு ப்ரோபோஸ் செய்ய வேண்டும்!’ என்று தொகுப்பாளர் கேட்க, விஜய் சேதுபதி சில நொடி சங்கடமானார்.

அதை தொடர்ந்து உடனே ‘இதற்கெல்லாம் என் தலைவன் சிம்பு தான் சரியான ஆள், அவர் செய்வார்’ என்று கூறி எஸ்கேப் ஆகிவிட்டார்.

தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்லாமல் உலகிற்கே நாயகனாக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். இவரது அந்த காலத்து படங்களுக்கு தனி சிறப்பே இருந்தது. ஆனால் தற...

தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்லாமல் உலகிற்கே நாயகனாக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். இவரது அந்த காலத்து படங்களுக்கு தனி சிறப்பே இருந்தது. ஆனால் தற்போது அரசியலில் குதித்து உள்ளதால் அவரது படங்கள் கொஞ்சம் இடைவெளி விட்டே வருகிறது.

மேலும் இதற்கிடையில் பிரபல நிகழ்ச்சி பிக்பாஸையும் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி தேவையில்லாதது இதை ஏன் கமல் தொகுத்து வழங்குகிறார் என பல தரப்பினரிடமிருந்து கேள்விகள் வந்தன.

அதற்கு தற்போது பதில் அளித்துள்ளார் கமல். அதில், ‘நான் அரசியலில் நிலைத்து நிற்க வேண்டுமானல் எனக்கு காசு தேவை அதை கொடுக்கும் வேலையாக தான் நான் பிக்பாஸை பார்க்கிறேன், அரசியல் என்பது எனது கடமை’ என தன் பக்க நியாத்தை சொல்லியுள்ளார்.

வீரம் ப்ளஸ் முட்டாள்தனம் ஈக்குவல் டூ மோடுமுட்டி! ஒரு மோடு முட்டியை பொள்ளாச்சியிலிருந்து மூட்டை கட்டிக் கொண்டு வந்து சென்னையிலும், பாரீசிலும...

வீரம் ப்ளஸ் முட்டாள்தனம் ஈக்குவல் டூ மோடுமுட்டி! ஒரு மோடு முட்டியை பொள்ளாச்சியிலிருந்து மூட்டை கட்டிக் கொண்டு வந்து சென்னையிலும், பாரீசிலும் விட்டால் என்னாகும்? அப்படியே அந்த கற்பனையில் லைட்டா காதலையும் புழிஞ்சா, கண் மயக்கும், மனம் மயக்கும் ஜுங்கா ரெடி! அட… ஜுங்கான்னா என்னப்பா? படத்தை பாருங்கப்பா… பங்கம் பண்ணியிருக்கானுங்க! (மரியாதை…மரியாதை)

பூர்வீக சொத்தே ஒரு தியேட்டர்தான். அதுவும் சென்னையில். அது தெரியாமல் கண்டக்டர் வேலையை குப்பையாக கொட்டிக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கு அதாவது மிஸ்டர் ஜுங்காவுக்கு தெரிய வர… கிளம்புடா சென்னைக்கு. மீளுடா தியேட்டரை என்ற ஆவேசத்தோடு வந்திறங்குகிறார். வந்தால், ரெண்டாயிரத்து சொச்சம் கோடிக்கு அதிபதியான சுரேஷ்மேனனிடம் இருக்கிறது தியேட்டர். ஒரு கோடியை கொடுத்துட்டு தியேட்டரை மீட்கலாம் என்று சின்ன சின்ன தாதாயிசம் பண்ணுகிறார் சேது. (பூர்வீக தொழிலாச்சே?) கிடைக்கிற பணத்தை அப்படியே சேர்த்துக் கொண்டுபோய் அவரிடம் கொடுத்தால், ‘தியேட்டரா? ஒனக்கா? போடா போ’ என்கிறார் அவர். அப்புறம்? வீறு கொண்டு எழும் வி.சே, தாறுமாறாக பிளான் போட்டு தியேட்டரை மீட்பதே க்ளைமாக்ஸ்.

ஆளே மாறியிருக்கிறார் சேது. கொசு குறுக்கே போனால் கூட, டைனோசரே மிரள்கிற அளவுக்கு கத்தி குமிக்கிறார். பாடி லாங்குவேஜ், டயலாக் டெலிவரி, காஸ்ட்யூம், காலர், பட்டன் என்று சகலத்திலும் புது விஜய்சேதுபதி. அவரது ரசிகர்கள் மட்டுமல்ல… அத்தனை பேரும் அள்ளிப்பூசிக் கொள்கிற அளவுக்கு ஜோர் பண்ணுகிறார். ஆனால் முகத்துல போட்ட ஓவர் பவுடரும், கொஞ்சம் தடித்த தோலும் ‘எத்தனாவது பர்த் டே?’ன்னு கேட்க வைக்குது. கவனம் தலைவா… ஆமாம்… லவ் வந்து டூயட் ஆடுற நேரத்திலும் கூட, சாயிஷாவை விட்டு தள்ளியே நிக்குறீங்களே, என்னாத்துக்கு?

அடுத்து யோகிபாபு! உடம்பு வெயிட் மண்டைக்கு டிரான்ஸ்பர் ஆகியிருக்கலாம். நான் சொல்றதுதான் டைமிங். போட்றதுதான் வெடிச்சிரிப்புன்னு நினைத்து பேசுகிறார். பல இடங்களில் சிரிக்க முடிந்தாலும், சில இடங்களில் நாங்க சிரிக்கலேப்பா… என்று இறுக விடுகிறார். கஞ்சனிடம் சிக்கிக் கொண்டு பசி பொறுக்க முடியாமல் அலையும் நேரத்தில் பொங்க விடுவது சிறப்பு.

நம்ம சாயிஷான்னு நாடு கொண்டாடுற நேரம் வந்தாச்சு. தலைநகர் பாரீசில், தளுதளுப்பாக திரியும் அவருக்கு காஸ்ட்யூம் டிசைனர் யாரோ? நல்லாயிருப்ப கண்ணு. எங்கெல்லாம் டிரஸ் தேவை. எங்கெல்லாம் தேவையில்லேன்னு நல்லா புரிஞ்சு வச்சுருக்க! பாரீசின் மைனஸ் குளிரில் அவர் ஆடும் துடுக் துடுக் டான்ஸ், நமக்கு குளிரடிக்கவும் அவருக்கு குளிர் போக்கவும் உதவியிருக்கிறது.

முதல் பாதியை மடோனாவுக்காக ஒதுக்கியிருக்கிறார் இயக்குனர் கோகுல். தமிழை தெலுங்கில் போட்டு குலுக்கிப் பேசும் அந்த ஸ்டைல் யப்பா… செம!

எப்பவும் இஞ்சி தின்ற எபெக்டிலேயே வருகிறார் வில்லன் சுரேஷ் மேனன். வந்திருக்கார்… அதற்கப்புறம் சொல்ல என்ன இருக்கு?

படத்தின் ஐகான், சரண்யா பொன்வண்ணனும் அந்த விஜயா பாட்டியும்தான். தொண்டை தண்ணி வறளும்படி கத்த ஆரம்பிக்கும் சரண்யாவின் டயலாக் மாடுலேஷன் அப்படியே அள்ளூகிறது. பேரன் குறித்து எந்நேரமும் புளகாங்கிதப்படும் விஜயா பாட்டி, அவன் சொதப்பினான் என்று தெரிந்து பம்முவதும் பின்பு ஏறி அடிப்பதும் தியேட்டரே துவம்சமாகிற அளவுக்கு குட்… வெரி குட்!

இசையமைப்பாளர் சித்தார் விபின் இப்படத்தில் நடிக்காதது பெரும் குறை. வாய்ப்பு தராத அந்த கோபத்தை பாடல்களில் காட்டிவிட்டார். நல்லவேளை… அந்த பாரீஸ் டூயட் கைகொடுக்கிறது.

ஒளிப்பதிவாளர் டட்லி ஒரு லிப்ட் போல எல்லாரையும் தூக்கிக் கொண்டுபோய் பாரீசில் இறக்கியிருக்கிறார். கண்ணை அள்ளுது தல…

பிளாக் காமெடி என்ற வஸ்துவை ஜனங்களுக்கு அறிமுகப்படுத்திய புண்ணியவான் எவனோ… அவன் நாசமா போக. வெந்தும் வேகாமலும் கிடைக்கிற அரைவேக்காட்டு சிரிப்பு எவனுக்கு வேணும்? வின்னர் வடிவேலுகளும், வீடு கொள்ளா சிரிப்புமாக இருந்த காலம் போயே போச்.

இயக்குனர் கோகுல் நினைத்தால் பழக்கடையே சாத்தியம். ஆனால் ஜுங்கா, அவுன்சில் அளந்து அண்ணாந்து குடிக்க வைக்கும் புளியங்கா ஜுஸ்!

கல்யாண வயசு தான் வந்திடுச்சு டீ என்று கோலமாவு கோகிலா படத்தில் யோகி பாபு பாடியது அவர்கள் வீட்டில் கேட்டுவிட்டது போல் தெரிகிறது. முன்னணி நட...

கல்யாண வயசு தான் வந்திடுச்சு டீ என்று கோலமாவு கோகிலா படத்தில் யோகி பாபு பாடியது அவர்கள் வீட்டில் கேட்டுவிட்டது போல் தெரிகிறது.

முன்னணி நடிகர்கள் படங்கள் முதல் சிறிய நடிகர்களின் படங்களை கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் யோகி பாபு. அதுவும் கோலமாவு கோகிலா படத்தில் வந்த யோகி நடித்த கல்யாண வயசு வந்திடுச்சு டீ பாடல் இளைஞர்களிடம் மிகவும் பிரபலம் ஆகிவிட்டது.

தற்போது யோகி பாபு ஒரு ஜாலியான பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில் திருமணம் எப்போது யாரையாவது காதலிக்கிறீர்களா என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர், நான் யாரையும் காதலிக்கவில்லை, ஆனால் வீட்டில் பெண் பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

விஜய் சேதுபதி என்றாலே எல்லாருடைய மனதிலும் நினைவிற்கு வருவது அவரது இயல்பான நடிப்பு தான். அந்த அளவிற்கு தான் நடித்த படங்கள் அனைத்திலும் ஒரு ச...

விஜய் சேதுபதி என்றாலே எல்லாருடைய மனதிலும் நினைவிற்கு வருவது அவரது இயல்பான நடிப்பு தான். அந்த அளவிற்கு தான் நடித்த படங்கள் அனைத்திலும் ஒரு சிறு பகுதியிலாவது தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

அந்த அடையாளத்தின் மூலமே தற்போது அவர் முன்னணி நடிகர் பட்டியலில் உள்ளார். அத்தகையவரின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் ஜுங்கா. இதற்கு முன் இவரது நடிப்பில் வெளியாகி கவனிக்கத்தக்க படமாக அமைந்த இதற்குதான் ஆசைப்பட்டாயா பாலகுமாராவை இயக்கிய கோகுல் தான் இப்படத்தையும் இயக்கவுள்ளார்.

படத்தில் நடிப்பது மட்டுமில்லாமல் நடிகர் அருண் பாண்டியனுடன் சேர்ந்து இப்படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார் விஜய்சேதுபதி. படத்தில் இவருக்கு ஜோடியாக தற்போதைய டிரெண்டிங் நடிகை சாயிஷா நடித்துள்ளார். மடோனா செபாஸ்டினும் வருகிறார்.

படத்தின் காமெடிக்காக யோகிபாபுவை சேர்த்தாலும் எப்படியோ அவர் மட்டும் காமெடி பண்ண போவதில்லை கூட விஜய்சேதுபதியும் சிரிக்க வைக்க போகிறார் என்பதை படத்தின் டிரைலரை பார்த்த அனைவருக்கும் தெரியும். என்னதான் படம் முழுக்க வெளிநாட்டில் காட்சிப்படுத்தி இருந்தாலும் கஞ்சதனமான ரௌடியாகவே விஜய்சேதுபதி வருகிறாராம்.

மேலும் படத்தின் இசைவேலையை சித்தார்த் விபின் நன்றாக செய்துள்ளார் என்றே தெரிகிறது. ஏனெனில் இதுவரை வெளியாகியுள்ள அனைத்து பாடல்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெளிநாடாக இருந்தாலும் சென்னை லோக்கல் லெவலுக்கு இறங்கி குத்து போடும் அளவுக்கு கானா பிரபலங்களை எல்லாம் பாட வைத்துள்ளார்.

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் படங்களில் ஒன்றாக உள்ள இந்த படம் வரும் வெள்ளிகிழமை 27ஆம் தேதி ரிலிஸாக உள்ளது.