Home Top Ad

ஸ்மார்ட் போனை ஒரு கையால் பிடிப்பது நீங்கள் உங்கள் ஸ்மார்ட் போனில் எதாவது செய்தி படிக்கும் போதோ, டைப் செய்யும் போதோ, ஸ்கீரினை நகர்த்தும் ப...



ஸ்மார்ட் போனை ஒரு கையால் பிடிப்பது

நீங்கள் உங்கள் ஸ்மார்ட் போனில் எதாவது செய்தி படிக்கும் போதோ, டைப் செய்யும் போதோ, ஸ்கீரினை நகர்த்தும் போதோ ஒரு கையை மட்டும் பயன்படுத்துபவராக இருந்தால் நீங்கள் மிகவும் நம்பிக்கையான நபராக இருப்பீர்களாம். தனியாளாக இருந்து அனைத்தையும் சமாளித்து விரும்பிய முடிவுகளை எடுத்து அதில் வெற்றியும் அடைவீர்களாம்.

அது மட்டுமல்லாமல் ஒரு நபருடனான உறவை தீர்மானிக்க அந்த நபர் நம் வாழ்க்கையில் தேவையா இல்லையா என்பதை தீர்மானிக்கவும் போதுமான நேரத்தை செலவழிப்பீர்கள். அதனால் தான் என்னவோ மற்றவருக்கு நீங்கள் தனிமைப்படுத்தப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட நபராக தெரிவீர்கள்.

ஒரு கையில் பிடித்துக் கொண்டு மறு கை பெருவிரலால் ஆப்ரேட் செய்தல்

இந்த மாதிரி ஸ்மார்ட் போனை கையாள்பவர்கள் புத்திசாலியாக இருப்பார்களாம் . உங்கள் உள்ளுணர்வு சரியானதாகவும் மிகுந்த புத்திசாலித்தனத்தை கொண்டும் காணப்படுவீர்கள். எந்தவொரு காரியத்திலும் முதல் அடி எடுத்து வைப்பதற்கு முன் பல அடி முன்னால் சென்று யோசிப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் நடக்கும் அனைத்தையும் முன்னரே புரிந்து கொள்வீர்கள். இதனால் உங்களை ஏமாற்றுவது மிகவும் கடினம்.

இருப்பினும் நீங்கள் காதல் விஷயங்களில் கடினமாக நடந்து கொள்ளும் நபராக இருப்பீர்கள். உறவில் நீங்கள் சிந்திக்காமல் எடுக்கின்ற ஒரு சில முடிவுகள் உங்கள் உறவை பாதிக்க கூடும். காதல் என்று வரும் போது நிறைய சட்ட திட்டங்களை பேசும் நபராக மாறி விடுவீர்கள்.

இரண்டு கைகளிலும் பிடித்துக் கொண்டு ஆப்ரேட் செய்வது

ஸ்மார்ட் போனை இரண்டு கைகளிலும் பிடித்து கொண்டு கையாள்பவரா நீங்கள் அப்போ உங்கள் லவ் ரெம்ப பாஸ்ட்டாக இருக்கும். நீங்கள் விரைவான திறமையான முடிவுகளை எடுக்கும் நபராக இருப்பீர்கள். வேகமாக மாறும் சூழலுக்கு ஏற்ப மாறி திறம்பட செயல்படுவீர்கள்.

ஆனால் காதல் என்று வரும் போது உங்கள் வேகம் போதாது. உண்மையைச் சொல்லப் போனால் நீங்கள் காதலில் எதிர் தான். உங்கள் பயமே அன்பானவருடான நெருக்கத்தை இழக்க வைக்கும்.

ஒரு கையில் பிடித்துக் கொண்டு இரண்டாவது கையின் ஆள்காட்டி விரலால் கையாள்வது

இந்த மாதரி ஸ்டைல போனை கையாளும் நபர்கள் க்ரீயேட்டிவ் திறன் கொண்டவராக இருப்பார்களாம். நிறைய ஐடியாக்களை உங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தி அதை திறம்பட முடித்தும் காட்டுவீர்கள். உங்களுடைய எண்ணங்களை ஒன்று திரட்டி உங்களுக்கென்ற உலகில் தனியாக வாழ்வீர்கள். ஓவியம் தீட்டிதல் அல்லது புத்தகம் எழுதுதல் போன்றவை உங்களுக்கு வெற்றி தரும்.

காதல் என்று வரும் போது உங்கள் படைப்பாற்றல் அப்படியே கூச்ச சுபாவமாக மாறி விடும். இதனாலேயே நீங்கள் காதல் உறவில் செல்ல திணறுவீர்கள். ஆனால் உங்களை யாரும் புரிந்து கொண்டால் அவருடனான உறவு நன்றாகவே இருக்கும். கண்டிப்பாக உங்கள் ஆளுமை திறனை கண்டு அவர்கள் ஆச்சரியப்படுவார்கள்.

என்னங்க நீங்க எந்த ஸ்டைல போன பிடிக்கிறீங்க? நீங்களும் எப்படிப்பட்ட நபர்னு தெரிஞ்சுகிட்டீங்களா.


இதை ஆராயும் விதமாக ஸ்மார்ட் போனைக் கொண்டு ஒரு சுவாரஸ்யமான சோதனையை மேற்கொண்டனர். சரி வாங்க அதைப் பற்றி கீழ்க்காணும் படங்களின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
கிரக நிலை ஜோதிடம், கை ரேகை ஜோதிடம் மாதிரி இதுவும் ஸ்மார்ட் போன் ஜோதிடம் என்றே கூறலாம். ஆமாங்க 2020 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பு படி கிட்டத்தட்ட 3 பில்லியன் மக்கள் ஸ்மார்ட் போனை பயன்படுத்துவார்கள் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதை நீங்கள் தொழில்நுட்ப வளர்ச்சியாக ஒருபக்கம் பார்த்தாலும் மனநிலை சார்ந்ததாக பார்க்க வேண்டும் என்று மன தத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் நாம் ஸ்மார்ட் போனை கையாளும் விதம், பயன்படுத்தும் முறைகள் போன்றவைகள் நம் குணத்தை வெளிப்படுத்துகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தாண்டும் தமிழ் சினிமாவில் மொத்தம் 171 நேரடி தமிழ் படங்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் பாலிவுட், டோலிவுட்டுக்கு அடுத்தப்படியாக மிகப்பெரிய...

இந்தாண்டும் தமிழ் சினிமாவில் மொத்தம் 171 நேரடி தமிழ் படங்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் பாலிவுட், டோலிவுட்டுக்கு அடுத்தப்படியாக மிகப்பெரிய சினிமாத்துறை கோலிவுட் தான். உலகம் முழுவதிலுமே தமிழ் சினிமாவுக்கு என தனி மவுசு உண்டு.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை எப்போதும் பெரிய பட்ஜெட் படங்களைவிட , சிறிய பட்ஜெட் படங்கள் தான் அதிகளவில் வெளியாகும். இந்த வருடமும் அதே நிலைதான்.

சினிமா தொழில் டிஜிட்டல் மயமானப்பின்னர், கடந்த சில வருடங்களாக ஆண்டுக்கு 200க்கும் அதிகமான திரைப்படங்கள் வெளியாகின. ஆனால் இந்த ஆண்டு 171 படங்கள் மட்டுமே வெளிவந்துள்ளன.

அவை என்னப்படங்கள் என பார்ப்போம்...

ஜனவரி மாதம்

ஜனவரி 5: காவாலி, டிசம்பர் 13, வாநாய்கள் ஜாக்கிரதை, பார்க்க தோனுதே, சாவி, விதி மதி, உல்டா
ஜனவரி 12: குலேபகாவலி, ஸ்கெட்ச், தானா சேர்ந்த கூட்டம்
ஜனவரி 19: வீரத் தேவன்
ஜனவரி 26: நிமிர், மன்னர் வகையறா, சரணாலயம்

பிப்ரவரி மாதம்

பிப்ரவரி 2: மதுர வீரன், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், படை வீரன், விசிறி, ஏமாலி
பிப்ரவரி 9: கலகலப்பு 2, நரிவேட்டை, சவரக்கத்தி, சொல்லிவிடவா
பிப்ரவரி 16: மனுசனா நீ, மேல்நாட்டு மருமகன், நாகேஷ் திரையரங்கம், நாச்சியார், வீரா
பிப்ரவரி 23: 6 அத்தியாயம், கூட்டாளி, காத்தாடி, கேணி, மெர்லின், ஏன்டா தலையில எண்ண வெக்கல, தமிழனானேன்

மார்ச் மாதம்

மார்ச் 2: தாராவி
மார்ச் 20: மெர்க்குரி, முந்தல், பிப்ரவரி 27: தியா, பாடம், பக்கா

ஏப்ரல் ஸ்டிரைக்

ஏப்ரல் மாதத்தில் ஒட்டுமொத்த திரைத்துறையும் ஸ்டிரைக்கில் இருந்ததால் எந்த படமும் ரிலீசாகவில்லை. அதேபோல், படப்பிடிப்பும் நடைபெறவில்லை.

மே மாதம்

மே 4: அலைபேசி, இருட்டு அறையில் முரட்டு குத்து, காத்திருப்போர் பட்டியல்
மே 11: இரவுக்கு ஆயிரம் கண்கள், இரும்புத்திரை
மே 17: பாஸ்கர் ஒரு ராஸ்கல்
மே 18: காளி, காதலர்கள் வாலிபர் சங்கம், செயல், பால்காரி
மே 25: அபியும் அனுவும், ஒரு குப்பைக் கதை, காலக் கூத்து, பேய் இருக்கா இல்லையா, புதிய ப்ரூஸ்லீ, செம

ஜூன் மாதம்

ஜூன் 1: ஆண்டனி, மோகனா, பஞ்சுமிட்டாய், வயக்காட்டு மாப்பிள்ளை, எக்ஸ் வீடியோஸ்
ஜூன் 7: காலா , ஜுன் 8: சமூக வலைப்பின்னல்
ஜூன் 14: கோலி சோடா 2
ஜூன் 15: கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாய்ங்ய, கன்னக்கோல், நானுடன் நீ
ஜூன் 22: ஆந்திரா மெஸ், என்ன தவம் செய்தேன், கார்கில், ட்ராபிக் ராமசாமி, டிக் டிக் டிக்
ஜூன் 29: அசுரவதம், சேம போத ஆகாதே, எதுக்குடி காதலிச்ச

ஜூலை மாதம்

ஜூலை 6: இட்லி, காசு மேல காசு, மிஸ்டர் சந்திரமௌலி, ரோஜா மாளிகை
ஜூலை 12: தமிழ்ப் படம் 2
ஜூலை 13: கடைக்குட்டி சிங்கம் படம், நண்பர்கள்
ஜூலை 20: போத, மாயா பவனம், ஒண்டிக் கட்ட, விண்வெளி பயணக் குறிப்புகள்
ஜூலை 27: பிரம்மபுத்ரா, ஜுங்கா, மோகினி

ஆகஸ்ட் மாதம்

ஆகஸ்ட் 3: அரவிடம், எங்க காட்டுல மழை, கஜினிகாந்த், கடல் குதிரைகள், கடிகார மனிதர்கள், காட்டுப்பயன் சார் இந்த காளி, மணியார் குடும்பம், நாடோடி கனவு, போயா வேலையப் பாத்துக்கிட்டு, உப்பு புளி காரம்
ஆகஸ்ட் 10: அழகு மகன், காதல் எனக்கு பிடிக்கும், பியார் பிரேமா காதல், விஸ்வரூபம் 2
ஆகஸ்ட் 17: கோலமாவு கோகிலா, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, ஓடு ராஜா ஓடு, ஓ காதலனே
ஆகஸ்ட் 24: எச் சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம், களரி, லக்ஷ்மி, மேற்குத் தொடர்ச்சி மலை
ஆகஸ்ட் 30: இமைக்கா நொடிகள்
ஆகஸ்ட் 31: 60 வயது மாநிறம், ஆருத்ரா, அண்ணனுக்கு ஜே

செப்டம்பர் மாதம்

செப்டம்பர் 7: அவளுக்கென்ன அழகிய முகம், படித்தவுடன் கிழித்து விடவும், ராஜாவின் பார்வை ராணியின் பக்கம், டார்ச்லைட், தொட்ரா, வஞ்சகர் உலகம்

செப்டம்பர் 13: சீமராஜா, யு டர்ன்
செப்டம்பர் 21: ஏகாந்தம், மேடை, ராஜா ரங்குஸ்கி, சாமி 2
செப்டம்பர் 27: செக்கச் சிவந்த வானம்,
செப்டம்பர் 28: பரியேறும் பெருமாள், ஆடவர்

அக்டோபர் மாதம்

அக்டோபர் 4: விஜய் சேதுபதி - திரிஷா நடித்த '96'
அக்டோபர் 5: ராட்சசன், யாகன், நோட்டா
அக்டோபர் 12: ஆண் தேவதை, அடங்காதப் பசங்க, அமாவாசை, களவாணி சிறுக்கி, கூத்தன், மனுசங்கடா, மூணாவது கண்
அக்டோபர் 17: வடசென்னை
அக்டோபர் 18: சண்டக்கோழி 2, எழுமின்
அக்டோபர் 26: ஜீனியஸ், ஜருகண்டி

நவம்பர் மாதம்

நவம்பர் 2: தப்பு தாளங்கள், வன்முறைப் பகுதி, சந்தோஷத்தில் கலவரம்
நவம்பர் 6: பில்லா பாண்டி, களவாணி மாப்பிள்ளை, சர்கார்
நவம்பர் 16: காற்றின் மொழி, திமிரு புடிச்சவன், உத்தரவு மகாராஜா
நவம்பர் 23: கிருஷ்ணன், கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும், பேதியாக்கும் சகவாசம், செய், செம்மறி ஆடு, வண்டி
நவம்பர் 29: 2.0

டிசம்பர் மாதம்

டிசம்பர் 7: வினை அறியார், டோனி கபடி குழு, சீமாத்துரை, இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு
டிசம்பர் 14: பயங்கரமான ஆளு, திருமல , பிரபா, ஜானி, துப்பாக்கி முனை
டிசம்பர் 20: சீதக்காதி
டிசம்பர் 21: கனா,அடங்க மறு, மாரி 2, சிலுக்குவார்பட்டி சிங்கம்
டிசம்பர் 28: காட்சிப் பிழை, பிரான்மலை

என மொத்தம் 171 படங்கள் இந்த ஆண்டு ரிலீசாகியுள்ளன.

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கலாச்சாரத்தையும் பன்பாடுகளையும் அந்த நாட்டின் முன்னோர்கள் தங்களது பின் சந்ததியினருக்கு கற்று கொடுத்து சென்றிருப்...

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கலாச்சாரத்தையும் பன்பாடுகளையும் அந்த நாட்டின் முன்னோர்கள் தங்களது பின் சந்ததியினருக்கு கற்று கொடுத்து சென்றிருப்பார்கள்.

அவர்களும், உணவு பழக்கம் முதல் உடை அணியும் முறை வரையிலும் அனைத்தையும் முன்னோர் கற்றுக் கொடுத்த கலாச்சாரம், பண்பாடுகளையே பின்பற்றி வருவார்கள்.

இதுப் போல தான் மருத்துவ முறையிலும், ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு தனித்துவம் இருக்கிறது.

அந்த வகையில், நம் உடலில் ஏற்பட்டுள்ள எல்லா வித வலிகளையும் சட்டென போக்கும் ஆற்றல் சீனர்களின் புது வித ஐஸ்கட்டி மருத்துவத்தில் உள்ளதாம்.

இந்த ஐஸ்கட்டி மருத்துவத்திற்கு பெயர் Feng Fu. ஆம், இது ஒரு வித்தியாசமான மருத்துவமுறையாக உலக அளவில் கருதப்பட்டு வருகிறது.

Feng fu என்பது குறிப்பாக கழுத்து மற்றும் மூட்டு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வலிகளுக்கான மருத்துவ முறையின் பெயராம். பெரிய அளவில் செலவு எதுவும் தேவையில்லை. வெறும் ஐஸ்கட்டிகள் மற்றும் சில ஜிப்லாக் பைகள் போதும் எனக் கூறப்படுகிறது.

இந்த மருத்துவமுறையானது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை இருக்கும் அனைத்து வலிகளையும் குணப்படுத்தி விடுமாம்.

கழுத்து வலி:

தற்போதெல்லாம், ஒரே இடத்தில் அதிக நேரம் உட்காருவதாலோ, அல்லது குனிந்து கொண்டு லேப்டாப் உபயோகிப்பதாலோ தண்டுவடம் அதிகளவில் பாதிப்படைகிரது.

இதை, குணப்படுத்துவதற்கு, ஒரு ஜிப்லாக்(ஜிப் கொண்ட பாலிதீன் பை) பையில் ஐஸ்கட்டிகளை நிரப்பி கொண்டு கழுத்து பகுதிக்கும் மண்டையின் எலும்பிற்கு சிறிது கீழ் வட்டத்தில் ஒரு 20 நிமிடம் நன்கு ஒத்தடம் வந்தால் கழுத்து வலி பறந்து போய் விடும்.

மேலும், இதனை தூங்குவதறகு முன்பும் செய்யலாம்.

மாதவிடாய் வலி:

பெண்களுக்கு மாதம் மூன்று நாட்கள் ஏற்படும் இந்த மாதவிடாய் பிரச்சனை அந்த மூன்று நாட்களும் அவர்களை நிம்மதியாக இருக்க விடாமல் ரணமாய்க் கொல்லும்.

இவ்வாறான பெரிய வலியையும் சரி செய்து விடுமாம். இந்த ஐஸ்கட்டி வைத்தியம்.

மேலே, கூறியவாறு ஒரு ஜிப்லாக் பையில் ஐஸ்கட்டிகளை நிரப்பிக் கொண்டு வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் போதும் உடனே சரியாகி விடுமாமிந்த மாதவிடாய் வலி.

தூக்கமின்மை சரியாக:

தூக்கமில்லாமல் அவதிப்படுவோருக்கு ஒரு எளிய வழி முறை இருக்கிறது. Feng Fu புள்ளி என்று சொல்லப்படும் இடத்தில் ஐஸ்கட்டியை வைத்து கொண்டு மெல்ல ஒத்தடம் கொடுத்து எடுத்தால் நன்றாக தூக்கம் வருமாம்.

மேலும், மூளை, தண்டுவடம், ரத்த ஓட்டம் ஆகியவற்றை இலகுவாக வைத்து மனம் நிம்மதியும் அடையுமாம்.

மூட்டு வலி குனமாக:

வயதாகமலே வரும் நோய்களில் மூட்டு வலியும் ஒன்று. மூட்டு வலியால் இன்று பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் அவதிப்படுகின்றனர்.

இந்த மூட்டு வலிகளை சரி செய்ய Feng Fu புள்ளியில் ஐஸ்கட்டிகளை வைத்து எடுத்தால் விரைவில் குணமடையலாம்.

தலைவலிக்கு:

தலைவலி ஒருவரை நிம்மதியிழக்க செய்யும்ன் ஒரு விடயம் என்றால் அது இந்த தலைவலி தான். தலைவலி வந்து விட்டால் ஒரு வேளையும் ஓடாது. அன்றைய நாளே வெறுமையாக தான் இருக்கும்.

ஆனால், இந்த சீனர்களின் ஐஸ்கட்டி வைத்தியம் தலைவலியை குணப்படுத்த பெரிதும் உதவும். மற்ற மருத்துவங்களை காட்டிலும் அருமையான தீர்வை நமக்கு தரும்.

இந்த Feng Fu முறையை பின்பற்றி கழுத்து பகுதிக்கும் மண்டையின் எலும்பிற்கு சிறிது கீழ் வட்டத்தில் ஒத்தடம் கொடுத்து வந்தாலே இவை சட்டென சரியாகும்.

தைராய்டு பிரச்சினைக்கு

இன்று அதிக படியான நோய்களில் இந்த தைராய்டும் முக்கிய நோயாக உள்ளது.

இதனை Feng Fu புள்ளி என சொல்லப்படும் கழுத்து பகுதியில் ஐஸ்கட்டியை கொண்டு ஒத்தடம் கொடுத்து வந்தால், விரைவாக நலம் பெறலாம். மேலும், சீரான ரத்த ஓட்டத்தையும் இது ஏற்படுத்தும்.

இந்த Feng fu முறையை எப்போது செய்யலாம்..?

இந்த Feng Fu முறையை தினமும் இரு வேளையில் செய்து வரலாம்.

காலையில் வெறும் வயிற்றிலும் இரவில் தூங்குவதற்கு முன்பும் இதனை செய்யலாம். குறிப்பாக, ஒத்தடத்தை 30 வினாடிகள் விட்டு விட்டு கொடுக்கவும்.

இது உடலை ஆரோக்கியமாக வைக்க பெரிதும் உதவும்.

காதலை சொல்லும் எத்தனையோ படங்கள் வந்து போகின்றன. ஆனால் அதில் சில படங்கள் தான் மக்கள் மனதில் இடம் பெறுகின்றன. ரசிகர்களை ஈர்த்து விடுகின்றன. அ...


காதலை சொல்லும் எத்தனையோ படங்கள் வந்து போகின்றன. ஆனால் அதில் சில படங்கள் தான் மக்கள் மனதில் இடம் பெறுகின்றன. ரசிகர்களை ஈர்த்து விடுகின்றன. அந்த வகையில் தற்போது விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் 96 படம் வெளிவந்துள்ளது. இப்படம் சொல்லும் காதல் ஆழம் தானா என 96க்குள் போய் பார்ப்போம்.

கதைக்களம்

படத்தில் ஹீரோவாக வரும் விஜய் சேதுபதி ஒரு சாதாரண குடும்ப பின்னணி கொண்டவர். ஹீரோயின் திரிஷா. இருவரும் பள்ளிக்கூடத்தில் ஒன்றாக படித்தவர்கள். இவர்களின் தோழர்களாக ஆடுகளம் முருகதாஸும், தேவதர்ஷினியும். எப்போதும் கூட்டணியாக தான் இருப்பார்கள் இவர்கள்.

விஜய் சேதுபதி, திரிஷா ஆகிய இவர்களுக்குள் எப்போதும் இணை பிரியாத பாசம். கடைசியில் அது காதலாக துளிர்விடுகிறது. சொல்லத்துடிக்கும் நேரத்தில் சொல்ல முடியாமல் ஒரு நிகழ்வு அரங்கேறுகிறது.

ஒரு கட்டத்தில் இருவரும் சந்திக்க முற்படுகையில் என்னென்னவோ நடந்து போகிறது. பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தார்களா? காதலை சொன்னார்களா? பிரிவின் காரணம் என்ன என்பதை பின்னோக்கி நம்மை அழைத்துச்சென்று சொல்வதே இந்த 96.

படத்தை பற்றிய அலசல்

விஜய் சேதுபதி தான் நடிப்பில் எப்போதும் மாஸ் காட்டுவாரே. கதைகளையும் நன்றாக தேர்ந்தேடுப்பாரே என சொல்வோருக்கு இப்படம் ஒன் மோர் கிரெடிட் என சொல்லலாம். இப்படத்தில் அவர் ஒரு புகைப்படக்கலைஞர். அதிலும் நுட்பத்துடன் கலையையும் ரசிக்கும் வகையில் அவர் செய்கையுடன், சொல்லும் டையலாக்கும் நம்மை அந்த கலைஞராக்கிவிடும்.

திரிஷாவுக்கு காதல் சப்ஜெக்ட் சோ க்யூட் என சொன்னால் அதுவும் இங்கேயும் சாத்தியமே. விஜய் சேதுபதியுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார். வழக்கம் போல மரத்தை சுற்றி டூயட் ஆடாமல் இம்முறை ஒரு புதிய முயற்சி. மீண்டும் அவர் தனக்கான இடத்தை ஸ்கோர் செய்துவிட்டார்.

ஹீரோவின் இளம் பருவ தோற்றமாக பிரபல நடிகர் எம்.எஸ். பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் நடித்துள்ளார். இவருக்கான காட்சிகள் போதுமானது என்றாலும் மனதிற்கு நிறைவானதாக நடித்திருக்கிறார். அடுத்தடுத்து வாய்ப்புகள் வரும் ஃப்ரோ.

அதே போல திரிஷாவாக கௌரி என்ற பெண் நடித்துள்ளார். இவரை இப்போது தான் பார்க்கிறோம் என்றாலும் அனுபவம் வாய்ந்தவர் போல நடித்திருக்கிறார். இவர்களின் வெகுளியான அன்பும், காதலும் நம்மை அந்த வருடத்திற்கே அழைத்து சென்றுவிடும். மீண்டும் ஸ்கூல் யூனிஃபார்ம் போட சொல்லும்.

இவர்களின் நட்பு வட்டாரமாக வரும் ஆடுகளம் முருகதாஸும், தேவ தர்ஷினியும் படத்திற்கு போதுமான காமெடி தருகிறார்கள். அதே வேளையில் விஜய் சேதுபதியின் ரியாக்‌ஷன் கூட சில இடங்களில் நம்மை சிரிக்க வைத்து விடுகிறது. மீண்டும் பிரபல நடிகர் ஜனகராஜை திரையில் பார்த்தது பலருக்கும் மகிழ்ச்சி. ஆனால் வயதாகிவிட்டதல்லவா. அந்த இளமையான குரல் கொஞ்சம் தளர்ந்து விட்டது வருத்தம் தான்.

படத்தின் இயக்குனர் பிரேம் குமார் சிம்பிளான கதையாக இருந்தாலும் மிகவும் அழகாக காண்பித்திருக்கிறார். காதலின் இயற்கை கதையோடு ஆழமாக பயணமாகிறது. ஒரு வசனத்தை மனப்பாடம் செய்து பேசலாம். ஆனால் கடந்த காலத்தை அதிலும் குறிப்பிட்ட அந்த வருடங்களை நம் உணர்வுகளால் கொண்டு வருவது சாத்தியம் என சொல்லியிருக்கிறீர்கள். சலாம் சார்.

ஒளிப்பதிவு சரியான நகர்வு. திட்டமிட்டு காட்சிகளை நகர்த்தி நம்மையும் படத்துடன் பயணிக்க வைத்திருக்கிறார். இசைக்கு கோவிந்த மேனன். அந்த ஒரே ஒரு Lead போதும் சார். இன்னும் பலமுறை கேட்க வேண்டும் போலிருக்கிறது.

சின்மயி குரல் சமந்தாவுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை மாற்றி திரிஷாவுக்கும் பொருந்தும் என காண்பித்து விட்டார். கார்த்திக் நேதா, உமா தேவியின் பாடல் வரிகளில் பாடகர் பிரதீப், சின்மயி பாடிய பாடல்கள் இனிமை.

கிளாப்ஸ்

விஜய் சேதுபதி, திரிஷாவின் ரியாக்‌ஷன் ஃபீல் குட் ஃபிளாஷ் பேக் மெம்மரிஸ்.

இயக்குனர் கதை சொன்ன விதம், காட்சிகளை கோர்த்தது பொருத்தம்.

பாடல்களும், பின்னணியும் இசையும் நம்மை உணர்ச்சி வசமாக்குவது உறுதி.

பல்ப்ஸ்

படம் முழுக்க ஹீரோ ஹீரோயினை கொஞ்சம் வேறு காஸ்ட்டுயூமிலும் காட்டியிருக்கலாமே.

மொத்ததில் 96 அனைவரையும் மீண்டும் காதலை தேடவைக்கும். உங்களுக்கு எப்படியோ....

தமிழ் திரையுலகில் பல திறமைகளை கொண்டுள்ள நடிகர்களில் தனுஷும் ஒருவர். கோலிவுட்டை தாண்டி ஹாலிவுட்டில் எல்லாம் சென்று நடித்து வந்தார். ஆனால் தற...

தமிழ் திரையுலகில் பல திறமைகளை கொண்டுள்ள நடிகர்களில் தனுஷும் ஒருவர். கோலிவுட்டை தாண்டி ஹாலிவுட்டில் எல்லாம் சென்று நடித்து வந்தார்.

ஆனால் தற்சமயம் இவருக்கு கஷ்டக்காலம் போல. இவர் பல படங்கள் தயாரித்து இருந்தாலும் ரஜினி நடித்த காலா படம் போல எந்த படம் நஷ்டத்தை ஏற்படுத்தவில்லை.

அதாவது இந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தரர்கள் இவரின் கழுத்தை நெரிக்கும் அளவுக்கு கொண்டு சென்றது. பிறகு இதில் கலைப்புலி எஸ்.தாணு தான் தலையிட்டு பிரச்சனையை தீர்த்து வைத்தார்.

சும்மா தீர்த்து வைப்பாரா...தனது நிறுவனத்துக்காக தனுஷ் 3 படங்களில் நடிக்க வேண்டும் என்று பிசினஸ் பேசி தான் தீர்த்து வைத்துள்ளார். முதலாவதாக வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்தில் நடித்து முடித்தார்.

இதன் தொடர்ச்சியாக அடுத்து முண்டாசுப்பட்டி ராம்குமாரின் இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம். அடுத்த வருடம் பாதியில் தான் இப்படம் துவங்கவுள்ளதால், அடுத்த வருடம் முழுவதும் தனுஷ் தாணுக்காக தான் நடித்தாக வேண்டும்.

மணிரத்னம்... தமிழ் சினிமாவில் மிக முக்கியமான பெயர். காட்சி மொழியில் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுவந்தவர். எத்தனை சர்ச்சைகள், ...

மணிரத்னம்... தமிழ் சினிமாவில் மிக முக்கியமான பெயர். காட்சி மொழியில் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுவந்தவர். எத்தனை சர்ச்சைகள், விமர்சனங்கள், புகார்கள் எடுத்துவைத்தாலும் அவரது பங்களிப்பு மறுக்க முடியாதது.

வயது 60க்கு மேல், திரையுலகில் வயது 20க்கும் மேல், ஆனால் இன்னும் புதுமை விரும்பும் பெரும்பாலான இளைஞர்களின் சாய்ஸும் மணிரத்னம், கிரேஸும் மணிரத்னம்தான். ஒளிப்பதிவும் இசையும் இவரது படங்களில் புதுப்புது உயரங்களைத் தொட்டன. இவரது படங்களில் பாடல்களின் அழகே தனி. புதுப்புது ஒலிகளையும் பரிமாணங்களையும், தன் படங்களின் மூலம் தமிழ்த் திரையிசைக்குக் கொடுத்தவர் மணிரத்னம். இவர் இதுவரை இரண்டு முக்கிய இசையமைப்பாளர்களுடன் பயணித்திருக்கிறார்.

1983ஆம் ஆண்டில் முதன் முதலில் இவர் இயக்கிய கன்னட படமான 'பல்லவி அனுபல்லவி' தொடங்கி 1991இல் 'தளபதி' வரை இவரது படங்களுக்கு இளையராஜாதான் இசை. இளையராஜா, மணிரத்னம் இருவரின் பிறந்த தினமும் ஜூன் 2 என்பது ஸ்பெஷல். இவர்களுக்குள் பிரச்சனை, ஈகோ ப்ராபளம் என்றெல்லாம் கூறப்பட்டாலும் இன்றும் 'ராஜா சார்' என்று மரியாதையாகவே குறிப்பிடுகிறார் மணிரத்னம். 1992இல் தன் 'ரோஜா' மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் என்னும் இசைப்புயலை தமிழ் திரையுலகின் பக்கம் திருப்பிவிட்டவர் மணிரத்னம். இந்த இருவருமே மணிரத்னம் உடன் இணையும்போது வெளிவந்த பாடல்கள் எப்பொழுதும் மறக்க முடியாதவை. 'மௌனராகம்' லவ் தீம் 'ம்யூசிக்கல்லி' காலத்திலும் ட்ரெண்ட்தான். அதுபோல 'பம்பாயி'ன் உயிரே உயிரே இன்றைய காதலர்களின் சோகத்திலும் இருக்கிறது.

இந்த இருவருடனும் தான் பணிபுரிந்த அனுபவங்களை தான் முன்பு அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்திருந்தார் மணிரத்னம். அவர் கூறியது...

"நான் இந்த இருவரிடமுமே 'ஒரு லவ் சாங் வேணும்'னோ 'ஒரு டான்ஸ் சாங்' வேணும்னோ சொல்லமாட்டேன். அதுவும் இளையராஜாகிட்ட அந்த மாதிரி சொல்றதேயில்லை. படத்தின் போக்கு, அந்த சிச்சுவேஷன், அதை சுற்றிய விஷயங்கள்தான் சொல்லுவேன். இதை சொல்லிக்கிட்டு இருக்கும்போதே அவர் தன் ஆர்மோனியத்தில ட்யூன் போட ஆரம்பிச்சுருவார். அவர்கிட்ட நாம ரொம்ப கவனமா இருக்கணும். ட்யூன் அவருக்குள்ள இருந்து பொங்கி வரும். எது நமக்கு சரியாக இருக்கும்னு கவனிச்சு வாங்கிக்கணும். பத்து நிமிஷத்துல ட்யூன் போட்டுருவார். அவரோட டீம் அதை கவனிச்சு நோட்ஸ் எடுத்து, அப்படியே வாசிக்க ஆரம்பிச்சுருவாங்க. அது மிகப்பெரிய அனுபவம். அந்த வேகத்துக்கு நாமும் போகணும். அவர்கிட்ட ஒரு மீட்டிங்குக்குப் போனால் போதும், வெளியே வரும்போது முழு பாடலோட வரலாம். அவர் எனக்குக் கொடுத்த பாடல்களிலும் இசையிலும் இதுவரை எந்தக் குறையுமே இருந்ததில்லை.

ஆனா, ஏ.ஆர்.ரஹ்மான் அப்படியே வேற மாதிரி. மெதுவா பண்ணுவார். நெறய பேசுவோம், நல்லா டைம் எடுத்துக்குவோம். புதுசு புதுசா முயற்சி பண்ணுவோம். ஷூட்டிங் போறதுக்கு தேவையான அளவுக்கு பாட்டை ரெடி பண்ணித் தருவார். ஷூட்டிங் போயிட்டு வந்து பார்த்தா, பாட்டு இன்னும் வேற லெவெலில் இருக்கும். முடிந்த அளவு மெருகேற்றிக்கொண்டே இருப்பார். சில நேரம், காட்சிகள் அழகா பண்ணிட்டா, அதற்கு ஏற்ப இன்னும் அழகு சேர்ப்பார். இப்படி, ஏ.ஆர்.ரஹ்மானும் இளையராஜாவும் வேலை செய்யும் ஸ்டைல் முற்றிலும் வேறு வேறு.

பின்னணி இசை அமைக்கும்போதும் இளையராஜா, ஒவ்வொரு ரீலாக படத்தின் ஆரம்பத்தில் தொடங்கி க்ளைமாக்ஸ் வரை வரிசையாகப் போவார். ஒரு ஒழுங்கைக் கடைபிடிப்பார். ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணிபுரியும்போது, நாங்க இடையில் ஏதோ ஒரு ஸீன் எடுப்போம், அதுக்கு ம்யூசிக் ரெடி பண்ணுவோம், திரும்ப வேறொரு ஸீன் எடுப்போம். அதுல வேலை செய்வோம். இப்படி ரஹ்மான் கூட ஒர்க் பண்றது ஃப்ரீயா வேற ஸ்டைலில் இருக்கும்".

அந்நாட்களில் வீட்டு சுவர்களில் ஏன் வறட்டி காய வைக்க வேண்டும்? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது? வெறும் சமையல் எரிவாயுக்காக பயன்படுத்தினரா? இல்...

அந்நாட்களில் வீட்டு சுவர்களில் ஏன் வறட்டி காய வைக்க வேண்டும்? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது? வெறும் சமையல் எரிவாயுக்காக பயன்படுத்தினரா? இல்லை அதற்குள் வேறு காரணம் இருக்குமா?

ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வீட்டுச்சுவரின் வெளிப்புறத்தில் வறட்டி காய வைக்கும் பழக்கும் தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் காணப்பட்டதை நாம் அறிவோம். ஆம், வேறு காரணம் உண்டு அவை என்னவென்பதை தெரியவேண்டுமா? இதோ

அதற்கு முக்கிய காரணம், வறட்டிகளால் சூழப்பட்ட சுவர்கள் வெளியில் எந்த தட்பவெப்ப நிலை இருந்தாலும் அவை சரியாக 28.35°C வெப்பநிலையை வீட்டிற்குள் வழங்கும். இந்த விஞ்ஞான உண்மை உங்களை திகைக்க வைக்கலாம்.!
கிருமி நாசினி

அப்போதெல்லாம் தடுப்பூசியோ மருந்து மாத்திரையோ தமிழகத்தில் இல்லை. காரணம் பசு வறட்டியில் உள்ளது. நாட்டு மாடுகளின் A2 சாணம் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி என்பது அறிவியல்.

18 மாதங்கள் நிரம்பிய ஒவ்வொரு பசுவின் சாணமும் ஆயிரம் தடுப்பூசிக்கு சமம். அப்படியான சாணத்தை தனித்தனியாக ஒவ்வொருவர் முகத்திலும் தனித்தனியாக அடிக்க முடியாது என்பதால் வீட்டுச்சுவற்றில் அடித்து வந்தனர். இதன் மூலம் முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட ஒரு Safe Zone-ல் நம் தாத்தா பாட்டி காலம் வரை வாழ்ந்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

அதுபோல, வழி மண்டலத்தில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் மற்றும் காஸ்மிக் கதிர்கள் இந்த நன்கு காய்ந்த வறட்டியில் படும்போது, மின்காந்த சக்தி உந்தப்பட்டு அந்த வீடே அணுக்கதிர்கள் கூட துளைக்க முடியாத ஒரு எஃகு அரணாக மாறிப்போகும். ஆனால் இதன் பலன் 15 நாட்களுக்கு மட்டுமே. இதனாலேயே சோழர்களின் கோட்டையை ஆங்கிலேயர்களால் வீழ்த்த முடியவில்லை என்பது தனிக்கதை.
சக்கர நோய்

மேலு‌ம், இம்மாதிரியான வறட்டி தட்டும் பழக்கம் கைகள் மூலமாக உடலில் ஏற்படும் கெட்ட கொழுப்புகளை அகற்றி சர்க்கரை நோயை கட்டுக்குள் இருக்க வைத்தது. சுற்றிலும் வறட்டிகளை கொண்ட வீடுகளில் 48 நாட்கள் புழங்கி வந்தால் அலர்ஜி, கேன்சர், இருதய கோளாறு போன்றவை சரியாகும் என சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலைநாட்டினர் அவற்றின் மகிமையைப் புரிந்துக்கொண்டு தான் தற்போது வறட்டியை அதிக அளவில் தங்கள் வீடுகளில் சேமித்து வைக்கின்றனர். வறட்டி தயாரிக்கும் முறைக்கு காப்புரிமையும் பெற்றுள்ளனர். ஆனால் நாமோ, பகுத்தறிவு என்று நமது முன்னோரின் சம்பிரதாயங்களில் இருக்கும் விஞ்ஞான அறிவைப் புரிந்துகொள்ளாமல் கேலிசெய்து கேவலப்படுத்துகிறோம் .

நம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை..!

இப்போது நாம் பேசும் பகுத்தறிவு அவர்களின் கால் தூசுக்கு ஈடாகாது..!