Home Top Ad

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்கும் புரமோ வெளியாகியுள்ளது. அதில் கமல் பேசும் பேச்சு அப்படியே அரசியல் களத்த...

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்கும் புரமோ வெளியாகியுள்ளது. அதில் கமல் பேசும் பேச்சு அப்படியே அரசியல் களத்தை அளப்பதாக உள்ளது.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசன் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ஹவுஸ்மேட்ஸ்களை சந்தித்து வருகிறார். கமல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது கிடைக்கும் கேப்பில் எல்லாம் அரசியல் பேசி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தனது அரசியலுக்கு நன்றாகவே பயன்படுத்தி வருகிறார் கமல்ஹாசன். அதுவும் அவர், மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய பின்னர் சொல்லவே வேண்டாம், கிடைக்கும் வாய்ப்பில் உலக அரசியல் வரை பேசி சிக்ஸர் அடித்து வருகிறார் மனுஷர்.

அணி மாறுவது சகஜம்

இந்நிலையில் இன்றைய புரமோவிலும் பிச்சு உதறியிருக்கிறார் கமல்ஹாசன். அவர் புரமோவில் பேசியிருப்பதாவது, மாத்தி மாத்தி பேசுறது, அணி மாறுவது இதெல்லாம் இப்போ இந்த வீட்டுக்கு சகஜமாயிடுச்சு.

நினைத்தாலே இனிக்கும்

ஆனா இதுல எனக்கு பிடிச்ச விஷயம் என்னன்னா இது எல்லாமே பதவி மோகத்துக்காக இல்ல. ஒரு விதமான மோகம், தமிழ்ல சொல்லனும்னா ஃபீலிங்ஸ் என்ற அவர் நினைத்தாலே இனிக்கும் என பேன்ட் பாக்கெட்டில் இருந்து சாக்லேட்டை எடுத்து காட்டுகிறார்.

எந்த மாநில அரசியல்?

சாக்லேட் விவகாரம் பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்றாலும், அதற்கு முன்னதாக பேசியது எல்லாமே முழுக்க முழுக்க அரசியல்தான். ஆனால் அதுதமிழக அரசியலா அல்லது கர்நாடக அரசியலா என்ற குழப்பம் உள்ளது.

அணி மாறுவது

குறிப்பாக மாத்தி மாத்தி பேசுறது, அணி மாறுவது இதெல்லாம் இப்போ இந்த வீட்டுக்கு சகஜமாயிடுச்சு என்று கூறியது. தமிழக அரசியலிலும் அணிமாற்றம் நடக்கிறது, தலைவர்களும் மாறி மாறி பேசி வருகின்றனர். இதேபோல் கர்நாடக அரசியலிலும் பல குழப்பங்கள் அரங்கேறி வருகிறது.

நமக்கு மட்டும் தானா?

கமல் பேசியது இவற்றை குறி வைத்தா அல்லது உண்மையிலேயே பிக்பாஸ் பற்றிதானா என்று யோசிக்க தோன்றுகிறது. கமல் அரசியலுக்கு வந்த பிறகு அவர் பேசும் ஒவ்வோரு பேச்சும் அரசியலாகவே தெரிகிறது.. இது நமக்கு மட்டும் தானா..!?

பிரபல திரைப்பட விநியோகஸ்தர் சிந்தாமணி முருகேசன் சென்னையில் இன்று காலமானார். ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி படத்தின் மூலம் விநியோகஸ்தரா...

பிரபல திரைப்பட விநியோகஸ்தர் சிந்தாமணி முருகேசன் சென்னையில் இன்று காலமானார்.

ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி படத்தின் மூலம் விநியோகஸ்தராக திரையுலகில் நுழைந்தவர் சிந்தாமணி முருகேசன். விநியோகஸ்தர்கள் என்பவர் யார் ? அவர்களுடைய பவர் என்ன என்பதை திரைத்துறையினருக்கு காட்டியவர் அவர்.

ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து பல படங்களை அவர் விநியோகித்தார். சென்னை, செங்கல்பட்டு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கு 16 முறை தலைவராக பொறுப்பு வகித்தவர்.

சிந்தாமணி முருகேசன் பற்றிய பல தகவல்கள் மிகவும் சுவாரஸ்யமானவை. ஒரு காலத்தில் நடிகர்களையும், தயாரிப்பாளர்களையும் அலறவிட்டவர். அதில் மிக முக்கியமானது ரஜினிக்கு ரெட் கார்டு போட்டது.

உழைப்பாளி படத்துக்கு சம்பளத்துக்கு பதிலாக ஒரு ஏரியாவின் விநியோக உரிமையை ரஜினி கேட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த படத்திற்கு ரெட் கார்டு போட்டார் முருகேசன். அந்த சமயத்தில் இது தான் நாளிதழ்களின் தலைப்பு செய்தி.

கமல் உள்ளிட்டோர் அறிக்கைப் போர் நடத்தியும் கொஞ்சமும் இறங்கி வரவில்லை சிந்தாமணி முருகேசன். கடைசியாக வேறு வழியே இல்லாமல், ரஜினியே விநியோகஸ்தர் சங்க அலுவலகத்துக்கு நேரில் சென்று சமாதானம் பேசினார். அதன் பிறகு உழைப்பாளி படம் மீதான தடையை நீக்கினார் அவர்.

இப்படிப்பட்ட சிந்தாமணி முருகேசன் இன்று காலமாகிவிட்டார். 80 வயதான அவர் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்தார். வயோதிகத்தின் காரணமாக, உடல்நலக்குறைவு ஏற்பட்டு இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. மாலையில் ஈமச்சடங்குகள் நடைபெற்று, சிந்தாமணி முருகேசனின் உடல் தகனம் செய்யப்பட்டது

ஹாலிவுட் சினிமாவில் வால்ட் டிஸ்னியின் பங்கு மிக முக்கியமானது. பல படங்களை அவர்கள் எடுத்திருந்தாலும் கார்டூன் வகையை சார்ந்த அவர்களின் படங்களு...

ஹாலிவுட் சினிமாவில் வால்ட் டிஸ்னியின் பங்கு மிக முக்கியமானது. பல படங்களை அவர்கள் எடுத்திருந்தாலும் கார்டூன் வகையை சார்ந்த அவர்களின் படங்களுக்கு என்றும் ஒரு தனி வரவேற்பு இருக்கும். அந்த வகையில் ஏற்கனவே நம்மில் பலரும் பார்த்திருந்த தி லயன் கிங் தற்போது புதுப்பொலிவுடன் வந்திருக்கிறது. இனி சிங்க ராஜாவை பார்க்க காட்டிற்குள் செல்வோமா...

கதைக்களம்

பெரிய வனத்திற்கு ராஜாவாக முஃபாஸா என்னு சிங்கம் இருக்கின்றது. அதன் வாரிசாக குட்டி சிங்கம் சிம்பா. சிம்பாவுக்கு தோழியாக லாலா. தனக்கு பின் தன் மகன் தான் காட்டின் இளவரசன் ஆகவேண்டும் என கனவு சிங்க ராஜாவுக்கு. இதற்காக மகனுக்கு சில சூட்சமங்களை சொல்லி புரிவைக்கிறார்.

இவரின் அரசாட்சியின் கீழ் காட்டு மிருகங்கள், பறவைகள் என அனைத்தும் சில இயற்கை விதிமுறைக்குட்பட்டு சிறப்பாக வாழ்கின்றன. ஆனால் மயான பூமி என்ற ஒன்றில் பெரும் அச்சுறுத்தல் ஒன்று இருக்கின்றது.

சந்தோசமாக போய்க்கொண்டிருக்கையில் திடீரென சிம்பாவுக்கு பெரும் ஆபத்தில் மாட்டிக்கொள்கிறது. அதனை காப்பாற்ற முஃபாஸா வர பெரும் சூழ்ச்சியில் சிக்கிக்கொள்கிறது.

இறுதியில் முஃபாஸா இறந்துவிட, தன் அப்பாவின் சாவுக்கு தான் காரணம் என்ற மனவேதனையில் திக்கு தெரியாத இடத்திற்கு செல்கிறது. காட்டில் திடீர் ஆட்சி மாற்றம், முஃபாஸாவின் மரணத்திற்கு காரணம் யார், சிம்பா என்ன ஆனது?? முஃபாஸா கனவு நிறைவேறியதா?? என்பதே இந்த தி லயன் கிங்.

படத்தை பற்றிய அலசல்

தி லயன் கிங் முன்பே நாம் சிறு வயதில் பார்த்திருப்போம். ஆனால் சினிமாவில் இப்போது தொழில் நுட்பம் நவீனமாக வளர்ந்து விட்டது. அதில் முழுக்க முழுக்க அனிமேஷன் தொழில்நுட்பத்தில் தற்போது வெளியாகிறது என்ற செய்தியே படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டிவிட்டது எனலாம்.

2019 ல் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நான்கு மொழிகளில் மீண்டும் வெளியாகியுள்ளது. பெரியவர்கள் கூட இந்த படத்தை காணும் ஆர்வத்தில் தியேட்டர்களுக்கு வந்திருப்பது தெரிகிறது.

தி லயன் கிங் பல முக்கிய நடிகர்களின் குரல் தாங்கி வந்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியே. அதிலும் குறிப்பாக பறவையின் குரலாக காமெடி நடிகர் மனோபாலா வந்திருப்பது இண்ட்ரஸ்டிங்.

ஆபத்தில் மாட்டிக்கொண்ட குட்டி சிம்பாவை காப்பாற்றும் குரலாக வந்த காமெடி நடிகர்கள் ரோபோ சங்கர், சிங்கம் புலி ஆகியோரின் எண்ட்ரி காட்சிகளுக்கு சூப்பரான ஓப்பனிங்.

வளர்ந்த சிம்பாவின் குரலாக வந்த சிம்பாவுக்கு நடிகர் சித்தார்த் டப்பிங் பேசியுள்ளார். படத்தில் உலகில் எதுவும் நமக்கு சொந்தமல்ல ஆனால் இயற்கையை பாதுகாப்பது நம் கடமை என மெசெஜ் முக்கியமானது.

படத்திற்கான பின்னணி இசை, காட்சிகள் நகர்வு, கதை கோர்ப்பு என திட்டமிட்டு அழகான படைப்பாக கொடுத்திருப்பது நன்று.

கிளாப்ஸ்

மனோ பாலா, ரோபோ சங்கர், சிங்கம் புலி ஆகியோரின் காமெடிகள்.

தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றபடியான கதை ஸ்கிரிப்ட்.

அலட்டல் இல்லாத இயல்பான வசனங்கள்..

பல்ப்ஸ்

இவ்வளவு செய்தவர்கள் இடைவேளை விசயத்தில் கோட்டை விட்டது ஏனோ?? மைண்ட் டிஸ்டர்பிங்.

மொத்தத்தில் தி லயன் கிங் கலர்ஃபுல்லான காட்டு பயணம். டிஸ்கவரி சானலையே தூக்கி சாப்பிட்டிடும் போலயே...

ஒரு நபர் மற்றவரின் ஆடைகளை பகிர்ந்து கொள்வது என்பது சுகாதாரமில்லாத ஒரு செயலாகும். பொதுவாக மக்கள் தங்கள் சால்வை, போர்வை, ஜாக்கெட் போன்றவற்றை ...

ஒரு நபர் மற்றவரின் ஆடைகளை பகிர்ந்து கொள்வது என்பது சுகாதாரமில்லாத ஒரு செயலாகும். பொதுவாக மக்கள் தங்கள் சால்வை, போர்வை, ஜாக்கெட் போன்றவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை நாம் கண்டிருக்கலாம். ஆனால் இது ஒரு சரியான விஷயம் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதிலும் குறிப்பாக உள்ளாடைகளை பகிர்ந்து கொள்வது என்பது முற்றிலும் தவிர்க்க வேண்டிய ஒரு விஷயமாகும். இதன் காரணமாக பல்வேறு தீவிர உடல் உபாதைகள், பால்வினை நோய் போன்றவை ஏற்படும் வாய்ப்பு உண்டாகலாம்.

சீனப்பெண்

சீனாவைச் சேர்ந்த ஒரு 12 வயது பெண்ணின் வழக்கும் இதனுடன் தொடர்பு கொண்டது. அந்த பெண் சில நாட்கள் முன்பு தொடர்ச்சியாக வாந்தி எடுத்து, கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தாள். கூடவே அவளுக்கு தீவிர வயிற்று வலியும் இருந்து வந்தது. கிட்டத்தட்ட 15 நாட்களாக அவள் இத்தகைய பாதிப்பை கொண்டவளாக இருந்திருக்கிறாள் என்று அறிக்கை குறிப்பிடுகிறது. அவளுடைய உடல்நிலை மேலும் மோசமாக ஆனதால், அவளின் பெற்றோர் அவளை ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மருத்துவ சோதனை

மருத்துவர்கள் அவளை பரிசோதனை செய்து அவளுக்கு கூபக அழற்சி நோய் (pelvic inflammatory disease) பாதிப்பு இருப்பதாக கூறினர். இதன் விளைவாக அவளுடைய கருமுட்டைக் குழாய் நீரால் அடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும் அவளுடைய கரு முட்டைக் குழாய் பெரிதும் சேதமடைந்திருப்பதாக மருத்துவர்கள் கூறினர். ஆனால் இந்த சிறிய வயதில் இந்த பெண்ணுக்கு எப்படி இந்த பாதிப்பு ஏற்பட முடியும் என்று மருத்துவர்கள் குழம்பினர்.

பாதுகாப்பற்ற உறவு

பொதுவாக பாதுகாப்பற்ற உறவு மற்றும் பல்வேறு நபருடன் உறவு கொள்வது போன்றவை இந்த பாதிப்பிற்கான முக்கிய காரணிகள் ஆகும். ஆனால் இந்த பெண்ணிற்கு அப்படிப்பட்ட காரணங்கள் எதுவும் இல்லை. இந்த பெண் பூப்பெய்தி முதல் மாதவிடாய் ஏற்பட்டு இரண்டு வருடங்கள் மட்டுமே ஆகிறது.

அவள் எந்த ஒரு சானிட்டரி பேட் அல்லது டாம்பூன் போன்றவற்றை பயன்படுத்தவில்லை என்று தெரிவித்தாள். அவளுடைய வாழ்க்கை முறை பற்றி ஆழமாக தகவல் அறியும்போது அந்த பாதிப்பிற்கான காரணம் தெரிய வந்தது.

என்ன ஆச்சு இந்த பொண்ணுக்கு?

அந்தப் பெண் தன்னுடைய தாயின் உள்ளாடைகளை அணிந்து வந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எப்போதும் அவருடைய உள்ளாடைகள் அவருடைய தாயின் உள்ளாடைகளுடன் சேர்த்து ஒரே அலமாரியில் வைக்கப்படுவதால் இருவரும் அவ்வப்போது மாற்றி மாற்றி அவர்கள் உள்ளாடைகளைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். இதில் இன்னொரு மோசமான சம்பவம் என்னவென்றால் அந்தப் பெண்ணின் தாயார் சில நாட்களுக்கு முன் யோனி அழற்சியால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.

அதனால் அந்தத் தாயின் உள்ளாடைகளை இந்த பெண் அணிந்தது இந்த பாதிப்பின் முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் விளக்கினர். பின்னர் அந்தப் பெண்ணுக்கு லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை மேற்கொள்ளபட்டு, அவருடைய வலது கருக்குழாய் மற்றும் வலது கருவகம் போன்றவை நீக்கப்பட்டது. மருத்துவர்கள் கரு முட்டைக் குழாயை பாதுகாக்க முயற்சித்தாலும் அது முற்றிலும் பாதிக்கப்பட்டதால் அதனை நீக்க வேண்டிய நிலை உருவானது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தமிழ் சினிமாவின் பீஷ்மர், இயக்குநர் சிகரம் என அழைக்கப்படும் இயக்குநர் பாலச்சந்தரின் பிறந்தநாள் இன்று. தமிழில் ஏராளமான வெற்றி படங்களை கொடுத்...

தமிழ் சினிமாவின் பீஷ்மர், இயக்குநர் சிகரம் என அழைக்கப்படும் இயக்குநர் பாலச்சந்தரின் பிறந்தநாள் இன்று.

தமிழில் ஏராளமான வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் பாலச்சந்தர். கைலாசம் பாலச்சந்தரான இவர் கே பாலச்சந்தர் என அழைக்கப்பட்டார்.

தஞ்சை மாவட்டம் நன்னிலத்தை அடுத்த நல்லமாங்குடியில் 1930ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி கைலாசம்- காமாட்சியம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார் பாலச்சந்தர். மேடை நாடகத்துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தார் பாலச்சந்தர்.

ரஜினியை அறிமுகப்படுத்தியவர்

1965ம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் பாலச்சந்தர். ரஜினிகாந்த்தை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர், கமல்ஹாசனை கதாநாயகனாக்கியவர் இந்த பாலச்சந்தர்தான்.

பிடித்த நடிகை சரிதா

இயக்குநர் பாலச்சந்தர் தமது படங்களில் அதிகமாகப் பயன்படுத்திய நடிகர்கள் ஜெமினி கணேசன், நாகேஷ், மேஜர் சுந்தரராஜன், கமலஹாசன் முத்துராமன் ஆகியோர். நாகேஷ் பாலச்சந்தருக்கு மிகவும் பிடித்த ஒரு நடிகராவார். நடிகைகளில் சௌகார் ஜானகி, ஜெயந்தி, சுஜாதா, சரிதா ஆகியோர் பாலச்சந்தருக்கு மிகவும் பிடித்தவர்கள் ஆவார்.

ஏராளமான படங்கள்

குடும்ப உறவு முறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் படங்களை எடுத்தவர் பாலச்சந்தர். அவர் கைவண்ணத்தில் உருவான படங்களில் மேஜர் சந்திரகாந்த், பூவா தலையா, இருகோடுகள், பாமா விஜயம், எதிர் நீச்சல், சிந்து பைரவி, வறுமையின் நிறம் சிவப்பு, அவள் ஒரு தொடர்கதை, அபூர்வராகங்கள், உன்னால் முடியும் தம்பி உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கியுள்ளார் பாலச்சந்தர்.

கையளவு மனசு சீரியல்

பாலச்சந்தரின் படங்கள் ஒவ்வொன்றும் காலங்கள் கடந்தாலும் அவரின் பெயரை சொல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. 1990களுக்குப் பிறகு கையளவு மனசு போன்ற தொலைக்காட்சித் தொடர்களை இயக்கினார். அந்த தொடர்களும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.

பத்மஸ்ரீ விருது

ஏக் தூஜே கே லியே, ஜரா சி ஜிந்தகி, ஏக் நயீ பஹேலி உள்ளிட்ட இந்தி படங்களையும் இயக்கியுள்ளார் பாலச்சந்தர். 1987 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் 2010ஆம் ஆண்டு தாதா சாகெப் பால்கே விருதையும் வழங்கி மத்திய அரசு பாலச்சந்ரை கவுரப்படுத்தியது.

இன்று பிறந்த நாள்

வயது முதிர்வால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இயக்குநர் சிகரம் பாலசந்தர் 2014ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி காலாமானார். அவரது 88வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திரைத்துறை பிரபலங்கள் டிவிட்டரில் தங்களின் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

    Remembering the "Iyakkunar Sikaram" K. BALACHANDER on his birth anniversary🎥
    One of the most verstile directors in India. Fond memories of Interacting with him during 'Muriyadi' which he produced and I played the lead in !!#legend#lifelessons pic.twitter.com/sNIyrx9YSo
    — Ganesh Venkatram (@talk2ganesh) July 9, 2019

பிறந்த நாள் வாழ்த்து

அவரது பிறந்த நாளில் "இயக்குநர் சிகரம்" கே. பாலச்சந்தர் நினைவு கூறுகிறேன்.. இந்தியாவில் மிகவும் திறமையான இயக்குநர்களில் ஒருவர். அவர் தயாரித்த 'முரியாடி' படத்தின்போது அவருடன் உரையாடியது மற்றும் அந்த படத்தில் நான் முன்னணி வகித்ததை நினைத்து பார்க்கிறேன் என நடிகர் கணேஷ் வெங்கட்ராம் டிவிட்டியுள்ளார். கே பாலச்சந்தருடன் இணைந்து எடுத்த போட்டோக்களையும் அவர் வெளியிட்டுள்ளர்.

    I miss #KB Sir.. miss talking to him..miss his calls after a debate or an interview..miss having coffee with him..miss going for walks with him..miss barging into his home only to hug him..I know he is there..somewhere..watching..guiding.. ❤️
    — KhushbuSundar ❤️❤️❤️ (@khushsundar) July 9, 2019

மிஸ் யூ கேபி சார்

இதேபோல் குஷ்பு பதிவிட்டுள்ள டிவிட்டில், ஐ மிஸ் யூ கேபி சார்.. அவருடன் பேசுவதை மிஸ் செய்கிறேன்.. இன்டர்வியூ மற்றும் விவாதங்களுக்கு பிறகு வரும் அவருடைய போன்கால்களை மிஸ் செய்கிறேன்.. அவருடன் காபி குடிப்பதை மிஸ் செய்கிறேன்.. அவருடன் நடப்பதை மிஸ் செய்கிறேன்.. அவரை கட்டியணைக்க மட்டுமே அவரது வீட்டிற்கு செல்வதை மிஸ் செய்கிறேன்... எனக்கு தெரியும் அவர் இருக்கிறார்.. எங்கேயோ.. பார்க்கிறார்.. வழிகாட்டுகிறார்.. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

இரவு தூங்கப்போகும் முன் டிவி பார்த்துக் கொண்டே சூடான காபியை ருசித்து கொண்டிருப்போம்.  காபி, டீ மற்றும் சாக்லேட் போன்ற பானங்கள் உங்களுக்கு ர...

இரவு தூங்கப்போகும் முன் டிவி பார்த்துக் கொண்டே சூடான காபியை ருசித்து கொண்டிருப்போம்.  காபி, டீ மற்றும் சாக்லேட் போன்ற பானங்கள் உங்களுக்கு ருசியாக இருக்கலாம்.  நம் இருக்கக்கூடிய பரபரப்பான வாழ்க்கை சூழலில் சரியான நேரத்திற்கு சாப்பிடுவதோ, தூங்குவதோ நாம் செய்வதில்லை.  இதன் விளைவாக கண்ட நேரத்திலும் நமக்கு பசி ஏற்படுகிறது.  அதற்காக நாம் காபி, டீ போன்றவற்றை குடிக்கிறோம்.  இதுபோன்ற பானங்களில் கஃபைன் அதிகமாக இருக்கிறது.  கஃபைன் நிறைந்த பானங்களை நீங்கள் தவிர்த்து விட்டால் தினமும் ஆழந்த உறக்கத்தை பெறலாம்.  இரவு நேரத்தில் நீங்கள் தவிர்க்க வேண்டிய சில பானங்களை பார்ப்போம்.

தவிர்க்க வேண்டியவை:

காபி

டீ

சாக்லேட் மில்க்‌ஷேக்

சோடா

குளிர் பானங்கள்

மதுபானம்

 கஃபைன் நிறைந்த உணவுகள் உங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.  இதனால் தூக்கம் தடைப்படும்.  மேலும் இருதயம் மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும்.  இரவு தூங்கப்போகும் முன் பால் குடிப்பதே சிறந்தது.  பாலில் ட்ரிப்டோஃபான் இருப்பதால் மூளை செயல்பாட்டை ஆற்றுப்படுத்தி நல்ல தூக்கத்தை உண்டாக்குகிறது.  ஆகையால், தினமும் இரவு தூங்கப்போகும் முன் பால் குடிக்கலாம்.

உருப்படாமல் இருக்கும் ஒரு அரசு பள்ளியை மாவட்டத்தின் சிறப்பான பள்ளியாக மாற்றும் ஒரு தலைமை ஆசிரியையின் கதை தான் ராட்சசி. ஆர்.புதூர் அரசு மேல்...

உருப்படாமல் இருக்கும் ஒரு அரசு பள்ளியை மாவட்டத்தின் சிறப்பான பள்ளியாக மாற்றும் ஒரு தலைமை ஆசிரியையின் கதை தான் ராட்சசி.

ஆர்.புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி தான் படத்தின் கதைக்களம். கவனிக்கப்படாத ஒரு அரசு பள்ளி எப்படி இருக்குமோ அதற்கு கொஞ்சமும் தப்பாமல் அப்படியே இருக்கிறது ஆர்.புதூர் பள்ளியும். மோசமான ஆசிரியர்கள், மோசமான கட்டமைப்பு, ஒழுக்கமில்லா மாணவர்கள், பொறுப்பில்லா பெற்றோர்கள் என அந்தப் பள்ளியே சீர்க்குலைந்து கிடக்கிறது.

இப்படிப்பட்ட அந்த பள்ளிக்கு தலைமை ஆசிரியராக வருகிறார் கீதா ராணி (ஜோதிகா). எடுத்ததுமே அதிரடி தான். மிரண்டு போகிறது பள்ளிக்கூடம். வேலை செய்யாத ஆசிரியர்களை வெளுத்து வாங்குகிறார். மாணவர்களை ஒழுங்காக்குகிறார். பெற்றோர்களை பொறுப்பாக்குகிறார். பள்ளியை மேம்படுத்துகிறார். கூடவே ஒன்பதாம் வகுப்பில் பெயிலான 82 மாணவர்களை பத்தாம் வகுப்புக்கு பாஸ் செய்கிறார்.

இதுபோல் நல்லது செய்தால் பகை வராமல் இருக்குமா?. தனியார் பள்ளி நடத்தும் ராஜலிங்கம் (ஹரீஷ் பிதாரி) கீதா ராணியின் முயற்சிகளுக்கு தடைக்கற்களை உருவாக்குகிறார். சக ஆசிரியர்கள் 'ராட்சசி'யை வேலையைவிட்டு காலி செய்ய பார்க்கிறார்கள். இந்த பிரச்சினைகளில் இருந்து தப்பி வந்து, அந்த பள்ளியை கீதா ராணி எப்படி முதன்மை பள்ளியாக மாற்றுகிறார் என்பதே ராட்சசி சொல்லும் உணர்வுப்பூர்வமான மீதிக்கதை. அப்படி இந்த ராட்சசி யார்? எதற்காக இந்த பள்ளிக்கு வந்தார்? என்பதற்கான விடையையும் தருகிறது பின் பாதிப்படம்.

நடிப்பு ராட்சசி ஜோதிகாவுக்கு கீதா ராணி மகுடம் சூட்டி அழகு பார்த்திருக்கிறார் இயக்குனர் கவுதம்ராஜ். ஜோவிடம் இருந்து தனக்கு தேவையானதை மட்டும் கேட்டுவாங்கி படத்தில் வைத்திருக்கிறார். எனவே, இதில் நாம் வித்தியாசமான ஜோவை பார்க்க முடிகிறது.

"டீச்சர்ஸ் கொஞ்சம் அதிகமா வேலை செஞ்சா போலீசுக்கு வேலை குறைஞ்சிடும்", "நீங்க எடுக்குற மார்க்கை வெச்சு இந்த உலகம் உங்களுக்கு மார்க் போட தயாராகிடுச்சு ", தீமை நடப்பதை வேடிக்கை பார்ப்பவர்களும் அதன் பகுதியாகிறார்கள். எதிர்த்து நிற்பவர்களே வரலாறாகிறார்கள்", உள்பட நிறைய சாட்டையடி வசனங்கள் படம் முழுவதும் நிரம்பிக்கிடக்கின்றன. கவுதம்ராஜும், பாரதிதம்பியும் இந்த சமூகத்தின் மீது வைத்திருக்கும் அக்கறை வசனங்களில் வெளிப்பட்டுள்ளது.

'நம்ம ஸ்கூல்லயும் இப்படி ஒரு டீச்சர் இருந்தாங்கள்ல' என ஞாபகப்படுத்துகிறது ஒவ்வொரு கேரக்டரும். பள்ளி பருவத்தில் டீச்சர் மீது ஈர்ப்புக்கொள்ளும் கதிர்கள் தான் எத்தனை எத்தனை. 'நான் உங்கள பொண்ணு பாக்க வரட்டுமா' என கேட்டு ஹைக்கூ கவிதையாய் இடையே வந்துபோகிறான் அந்தக் குட்டி பையன்.

அரசு பள்ளிகளின் இன்றைய நிலையை அப்படியே காட்டுகிறது படம். ஆனால் முதல் பாதி படம் முழுக்க அட்வைஸ் மழை பொழிந்திருக்கிறார்கள். பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு ஒரு ஸ்கூல் எச்எம் ஆர்டர் போடுவது போன்ற சினிமாத்தனமான காட்சிகள் படத்துடன் நம்மை ஒன்றவிடாமல் தடுக்கிறது. இரண்டாம் பாதியில், தனது உணர்வுப்பூர்வமான நடிப்பால் ரசிகர்கள் கட்டிப்போடுகிறார் ஜோதிகா. இருந்தாலும், இதே பின்னணியில் ஏற்கனவே வந்த படங்களை ராட்சசி ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கிறாள்.

'ஒரு ஊரில் அழகே உருவாய் ஒரு ராட்சசி இருந்தாலே' என உதடுகள் முணுமுணுக்கின்றன ஜோதிகாவை திரையில் பார்த்ததும். 'காக்க காக்க' மாயா டீச்சருக்கும், ராட்சசி கீதா ராணிக்கும் இடையே உள்ள காலகட்டம் தான் ஜோதிகாவின் நடிப்பில் தெரியும் முதிர்ச்சிக்கு காரணம். ஸ்டிரிக்ட் தலைமை ஆசிரியர், திறமையான ராணுவ அதிகாரி, அன்பான மகள், காதலின் வலியை மனதில் சுமந்து நிற்கும் ஒரு சாதாரண பெண் என பல பரிமாணங்களை ஒரே படத்தில் காட்டியிருக்கிறார் இந்த நடிப்பு ராட்சசி.

அப்பாவின் மறைவுக்கு பிறகான காட்சிகளில் அத்தனை அழுத்தமான நடிப்பு ஜோ. அவருடன் சேர்ந்து நமக்கும் கண்கள் வியர்க்குது. தன்னை சுற்றியே படம் நகர்கிறது என்பதை உணர்ந்து, நடிப்பு நெடியை எங்கும் தூக்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறார். இருந்தாலும், துறுதுறு ஜோதிகாவின் சீன்களை அதிகப்படித்தியிருந்தால் 'ஜோ' பேன்ஸ் ஹேப்பி எமோடிகான் போட்டிருப்பார்கள். க்ளைமாக்ஸ் காட்சியில் எதுக்கோ அடிபோட்றாப்ல தெரியுதே. ஏதோ நல்லது நடந்து சிஸ்டம் மாறினா சரி.

கொஞ்ச நேரமே வந்தாலும் நம் பழைய பாசமான ஆசிரியரை நினைவுப்படுத்திவிட்டு போகிறார் பூர்ணிமா பாக்யராஜ். ஹரீஷ் பிதாரியும், கவிதா பாரதியும் வில்லன் ரோலுக்கு கச்சிதம். பள்ளி இண்டர்வெல் பிரேக் போல், அவ்வப்போது வந்து சிரிப்புகாட்டிவிட்டு போகிறார் பிடி மாஸ்டர் சத்யன்.

பின்னணி இசையில் செலுத்திய கவனத்தை பாடல்களிலும் செலுத்தியிருக்கலாம் இசையமைப்பாளர் சியன் ரோல்டன். ஜோதிகாவின் அப்பா இறக்கும் காட்சியில் பின்னால் ஒலிக்கும் இசை கல் மனதையும் கரைத்துவிடுகிறது. ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்கு கொடுக்கும் அத்தனை பில்டப் பீட்சையும் ஜோவுக்காக ஒலிக்க விட்டிருக்கிறார்.

பிராமாண்ட அரசு பள்ளி, ஓட்டு வீடு, ராணுவ பயிற்சி பள்ளி என இடத்துக்கு தகுந்த மாதிரி பயணித்திருக்கிறது கோகுல் பினாயின் கேமரா. பிளோமின்ராஜின் எடிட்டிங்கில் குறையேதும் இல்லை.

பள்ளி பற்றிய படம்னாலே, மாவட்ட விளையாட்டு போட்டிகள், அதில் தனியார் பள்ளிக்கும் அரசு பள்ளிக்கும் இடையே மோதல், கோல்மால் செய்து தான் தனியார் பள்ளிகள் ஜெயிக்கும் என்பது போன்ற டெம்ப்ளேட் காட்சிகளை தவிர்த்திருக்கலாம். தனியார் பள்ளியாக இருந்தாலும், அரசு பள்ளியாக இருந்தாலும் அதில் படிப்பவர்கள் நம்பிள்ளைகள் தானே.

சுற்றி சுற்றி இங்கு சிஸ்டம் சரியில்லை என்பதைத் தான் அழுத்தமாக சொல்லுகிறது படம். ஆனால் ஒரேயொரு கீதா ராணியால் மட்டும் அந்த சிஸ்டத்தை மாற்ற முடியும் என காட்டியிருப்பது ஏற்புடையது தானா இயக்குனரே. படத்தில் சொல்வது போல் கவுரவத்துக்காக தானா நம் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கிறோம்?. அதையும் தாண்டி இங்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அரசு பள்ளியோ தனியார் பள்ளியோ, குறைந்த கல்விக்கட்டணத்தில் தரமான, சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும்.

இருந்தாலும் இதேபோல் இன்னும் நூறு படங்கள் வந்தாலும் இந்த 'ராட்சசி'யை ரசிக்கலாம்.