Home Top Ad

சினிமா ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சிதான். யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று நள்ளிரவில் மாரடைப்பால் மறைந்துவிட்டார் ஸ்ரீதேவி. இந்திய சி...

சினிமா ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சிதான். யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று நள்ளிரவில் மாரடைப்பால் மறைந்துவிட்டார் ஸ்ரீதேவி. இந்திய சினிமாவின் அடையாளம். தனது நடிப்பால், ஏராளமான ரசிகர்களை கட்டிப்போட்டவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்தியாவில் ஆரம்பித்த அவரது திரைக் கொடி இந்திய சினிமாவில் அசைக்க முடியாத ஒன்றாக பறந்தது. தென்னிந்தியாவில் இருந்து இந்திக்கு சென்று நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தவர்.

அங்கும் தன் திறமையால் புகழ்கொடி நாட்டிய ஸ்ரீதேவியின் மறக்க முடியாத 10 கேரக்டர்கள்:

1. மூன்று முடிச்சு ’செல்வி’:
குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஸ்ரீதேவி ஹீரோயினாக அறிமுகமான படம். ரஜினி, கமலுடன் போட்டிப் போட்டு நடிக்க வேண்டிய கட்டாயம். இந்தப் படத்தில் இடம்பெற்ற, ’வசந்த கால நதிகளிலே’ பாடல் என்றும் நிலைத்திருக்கும் ஒன்று. இதில் ஸ்ரீதேவியின் கேரக்டரான செல்வி பரபரப்பாகப் பேசப்பட்ட ஒன்று.

2. 16 வயதினிலே ’மயிலு’:
பாரதிராஜாவின் முதல் படம். கமல், ரஜினியுடன் ஸ்ரீதேவியின் நடிப்பும் பேசப்பட்டப் படம். இந்தப் படத்தின் மயிலு கேரக்டருக்கு மயங்காதவர்கள் இல்லை. ‘சப்பாணின்னா சப்புனு அறைஞ்சிரு’ என்று ஸ்ரீதேவி பேசும் வசனம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்ட ஒன்று.

3. சிகப்பு ரோஜாக்கள், ’சாரதா’:
நடிகர் சிவகுமார் மறுத்ததால் கமல்ஹாசன் நடித்த படம் இது. முதல் இரண்டு கிராமத்துப் படங்களை இயக்கிவிட்டு திரில்லருக்கு வந்த பாரதிராஜா இதிலும் சாதித்தார். இந்தப் படத்தில் ஸ்ரீதேவியின் சாரதா கேரக்டர் பிரபலமான ஒன்று.

4. ’ப்ரியா’வின் பிரியா:

எஸ்.பி,முத்துராமன் இயக்கிய படம். ரஜினி ஹீரோ. ப்ரியா என்கிற நடிகையின் வாழ்க்கையை சுற்றிப் பின்னப்பட்ட கதையில் அபாரமாக நடித்திருந்தார் ஸ்ரீதேவி. அவரது ப்ரியா கேரக்டர் ரசிகர்களால் அதிகம் வரவேற்கப்பட்ட ஒன்று.

5. ஜானி ’அர்ச்சனா’
மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்த படம். இந்தப் படத்தில் ஸ்ரீதேவி, அர்ச்சனா என்ற கேரக்டரில் பாடகியாக கலக்கி இருப்பார். ’என் வானிலே, ஓர் வெண்ணிலா’,  ‘காற்றில் எந்தன் கீதம்’, ‘ஒரு இனிய மனது, இசையை சுமந்து செல்லும்’ ஆகிய பாடல்கள் ஸ்ரீதேவிக்கு மேலும் புகழைத் தந்தன.

6. வறுமையின் நிறம் சிவப்பு, ’தேவி’:
கே.பாலசந்தரின் காலத்தால் அழிக்க முடியாத படங்களில் ஒன்று. இதில் தேவியாக நடித்திருந்த ஸ்ரீதேவி, நடிப்பால் அனைவரையும் கட்டிப்போட்டிருப்பார். ‘சிப்பி இருக்குது முத்தும் இருக்குது’ பாடல் இன்றும் பலரின் நினைவுகளில் தாளமிட்டுக் கொண்டிருக்கிறது. அதில் வரும் ஸ்ரீதேவியின் நடிப்பும்.

7. மூன்றாம் பிறை, ’பாக்யலட்சுமி’:
பாலுமகேந்திராவின் தேசிய விருது வாங்கிய படம். மனநலம் பாதித்தவராக மிரட்டிய ஸ்ரீதேவி, இன்றும் பலர் நெஞ்சங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். இந்தப் படத்துக்காக கமலுக்கு தேசிய விருது கிடைத்தது. ஸ்ரீதேவிக்குத்தான் கொடுத்திருக்க வேண்டும் என்ற விமர்சனம் அப்போது எழுந்தது.

8. வாழ்வே மாயம், தேவி:
ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் கமல், ஸ்ரீப்ரியா, ஜெய்சங்கர் உட்பட பலர் நடித்த படம். ஸ்ரீதேவி, தேவி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். காதல் படமான இதில், கங்கை அமரனின் இசையில் பாடல்கள் சூப்பர் ஹிட். ஒரு காதலியாக, கமலால் நிராகரிக்கப்படும்போது கோபமான பெண்ணாக, உண்மை தெரிந்து கலங்கும் கடைசி கட்டம் என ஸ்ரீதேவி மிரட்டியிருப்பார்.

9. நான் அடிமை இல்லை, ‘பிரியா’:
ரஜினியுடன் ஸ்ரீதேவி நடித்த படம். துவாரகநாத் தயாரித்து இயக்கிய, இந்த படத்தில் காதலி, மனைவி என அசத்தியிருப்பார் ஸ்ரீதேவி. விஜய் ஆனந்த் இசையில், ’ஒரு ஜீவன் தான்’ உட்பட பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். இந்தி சினிமாவில் கவனம் செலுத்தத் தொடங்கிய ஸ்ரீதேவி, அதற்கு முன் கடைசியாக (1986-ம் ஆண்டு) நடித்த தமிழ்ப் படம் இது. 

10. இங்கிலீஷ் விங்கிலிஷ், சஷி காட்போலே:
இந்தப் படத்தில் ஆங்கிலம் தெரியாத ஒரு மிடில் கிளாஸ் அம்மாவின் யதார்த்தமான நடிப்பை, அப்படியே அள்ளித் தந்திருந்தார் ஸ்ரீதேவி. அவரது பதற்றம், அமெரிக்காவில் தடுமாற்றம் என அவரது இயல்பான நடிப்பில் தங்களை உணர்ந்த பெண்கள் பலர்.

இந்திய சினிமாவின் முதல் லேடி சூப்பர்ஸ்டாராக விளங்கிய நடிகை ஸ்ரீதேவி சற்றுமுன் மரணமடைந்துள்ளார். இந்த தகவல் சினிமா துறையில் உள்ளவர்கள் மற்ற...


இந்திய சினிமாவின் முதல் லேடி சூப்பர்ஸ்டாராக விளங்கிய நடிகை ஸ்ரீதேவி சற்றுமுன் மரணமடைந்துள்ளார். இந்த தகவல் சினிமா துறையில் உள்ளவர்கள் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ஸ்ரீதேவி நடிகர் Mohit Marwah வின் திருமணத்திற்காக துபாய் சென்றுள்ளார், அங்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்துள்ளது. 54 வயதாகும் அவர் நேற்று இரவு 11 - 11.30 மணிக்கு இறந்துவிட்டார் என நெருங்கிய உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதேவியின் கணவர் மற்றும் இளைய மகள் அவரோடு சென்றுள்ளார். மூத்த மகள் ஜான்வி தற்போது சினிமாவில் நடித்துவருவதால் அவர் ஸ்ரீதேவியோடு செல்லவில்லை.

ஸ்ரீதேவியின் மரணம் பற்றிய தகவல் அறிந்து பிரபலங்கள் பலர் ஜான்விக்கு ஆறுதல் கூறுவதற்காக தற்போது அவரது வீட்டுக்கு விரைந்துள்ளனர்.

தொப்பை ஒருவருக்கு வர ஆரம்பித்தால், அதுவே பல நோய்களை அழையா விருந்தாளியாக உடலினுள் நுழையச் செய்யும். எனவே தொப்பையைக் கரைத்து, தட்டையான வயிற்ற...

தொப்பை ஒருவருக்கு வர ஆரம்பித்தால், அதுவே பல நோய்களை அழையா விருந்தாளியாக உடலினுள் நுழையச் செய்யும்.

எனவே தொப்பையைக் கரைத்து, தட்டையான வயிற்றைப் பெற உதவும் ஓர் அற்புத மருந்து குறித்து இங்கு கொடுக்கபட்டுள்ளது. அதைப் படித்து குடித்து சிக்கென்று மாறுங்கள்.
தேவையான பொருட்கள்

    சியா விதைகள் - 2 டீஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
    தேன் - 1 டீஸ்பூன்

சியா விதைகள் சியா விதைகளில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இதில் உள்ள புரோட்டீன் கொழுப்புக்களை எதிர்த்துப் போராடும்.

எலுமிச்சையில் வைட்டமின் சி ஏராளமான அளவில் உள்ளது. இது உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, கொழுப்புக்களின் தேக்கத்தைக் குறைக்கும்.

தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலுக்கு பாதுகாப்பை வழங்குவதோடு, தொப்பையைக் குறைக்கவும் உதவி புரியும்.
தயாரிக்கும் முறை

ஒரு பௌலில் சியா விதைகளைப் போட்டு, சிறிது நீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த விதைகளை மற்றொரு பௌலில் போட்டு, அத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்தால், தொப்பையைக் குறைக்கும் அற்புத மருந்து தயார்!
உட்கொள்ளும் முறை

தயாரித்து வைத்துள்ள இந்த கலவையை தினமும் காலையில் உணவு உட்கொண்ட பின் சாப்பிட வேண்டும். இப்படி ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டால், தொப்பை குறைந்திருப்பதைக் காணலாம்.

இந்தியாவில் வரும் ஜூலை மாதம் முதல் புதிய மொபைல் நம்பர்கள் 13 இலக்கு கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஜூலை 1, 2018 முதல்...

இந்தியாவில் வரும் ஜூலை மாதம் முதல் புதிய மொபைல் நம்பர்கள் 13 இலக்கு கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஜூலை 1, 2018 முதல் வழங்கப்படும் புதிய மொபைல் நம்பர்களில் 13 இலக்ககளை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இத்துடன் தற்சமயம் பயன்படுத்தப்பட்டு வரும் 10 இலக்க மொபைல் நம்பர்களும் 13 இலக்ககளாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய டெலிகாம் துறை சார்பில் இசட்.டி.இ. டெலிகாம் (ZTE Telecom) மற்றும் நோக்கியா சொல்யூஷன்ஸ் நெட்வொர்க்ஸ் (Nokia Solutions Networks) போன்ற நிறுவனங்களுக்கு அனுப்பி இருக்கும் அறிக்கையில், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஐடி மற்றும் இது தொடர்பான அனைத்து சிஸ்டம்களிலும் 13 இலக்க மொபைல் நம்பர்கள் ஜூலை 1, 2018க்குள் மாற்றம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தற்போது பயன்படுத்தப்படும் 10 இலக்க மொபைல் நம்பர்களை 13 இலக்ககளாக மாற்றம் செய்ய அக்டோபர் 1, 2018 முதல் டிசம்பர் 31, 2018க்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது.

சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், இதில் புதிய 10 இலக்க நம்பர்களை வழங்க முடிவு செய்து இறுதியில் 13 இலக்ககளுக்கு மாற்றுவது தவிர வேறு வழியில்லை என்ற முடிவு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் இந்தியாவில் 13 இலக்க மொபைல் நம்பர் மாற்றம் செய்யப்படும் போது, நீண்ட இலக்ககள் கொண்ட மொபைல் நம்பர் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடிக்கும். தற்சமயம் பகுதி குறியீடு சேர்க்காமல் 11 இலக்க மொபைல் நம்பர் பயன்படுத்தும் சீனா உலகின் நீண்ட மொபைல் நம்பர் கொண்ட நாடாக இருக்கிறது.

கமலின் மய்ய தளம்  வெளிநாட்டில் இருக்கும் ஒரு கிறிஸ்துவ மதபோதக அமைப்பின் கீழ் பதியப்பட்டிருப்பதாகவும், கமல் அந்த மதத்தின் ஆதரவாளர் என்றும் ஒ...

கமலின் மய்ய தளம்  வெளிநாட்டில் இருக்கும் ஒரு கிறிஸ்துவ மதபோதக அமைப்பின் கீழ் பதியப்பட்டிருப்பதாகவும், கமல் அந்த மதத்தின் ஆதரவாளர் என்றும் ஒரு செய்தி டிவிட்டரில்  பரவிக்கொண்டு இருக்கிறது. இதைச் செய்பவர் அ.தி.முக.வின் IT விங்கில் இருப்பதாக தன் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

டிவிட்டர் பதிவு

 அந்த மதபோதக அமைப்பின் சென்னை கிளை, கமல் அவர்களின் அலுவலகத்திற்கு அருகிலேயே இருப்பதால், இவர் கூறுவது சரி என்று பலர் நம்பி வருகின்றனர்.  ஆனால், அதில் கமலின் இணையதளம் maiyam.com என்று தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. கமலிற்கு 'Maiyam.com private limited' என்று ஒரு நிறுவனம் இருந்தாலும், அது சார்பாக 'maiyam.com' என்ற இணையதளம் பதியப்பட்டிருப்பதாக எந்தத் தகவலும் இல்லை. கமலின் 'மக்கள் நீதி மய்யம்' கட்சிக்காகப் பதியப்பட்ட ஒரே தளம் 'maiam.com' மட்டுமே. அது எந்த மதபோதக அமைப்பின் கீழும் வரவில்லை.

அது மட்டுமின்றி, இன்டர்நெட் டொமைன்களை பொறுத்துவரையில், ஓர் இணையதள முகவரி தற்போது யார் கையில் இருக்கிறதோ, அவரே அதன் உரிமையாளர் என்று காட்டப்படும். அதே இணையதள முகவரியை அதற்கு முன்னர் யார் யாரெல்லாம் வைத்திருந்தார்கள் என்று கண்டறிவது கடினம். அந்தக் கோட்பாட்டின் படி பார்த்தால், 'maiyam.com' என்பது முதலில் கமல் பெயரில் இருந்து பின்னர் அது 'maiam.com' ஆனதால் புதுப்பிக்கப்படாமல் விட்டிருக்கலாம். அதை இந்த மதபோதக அமைப்பு வாங்கியிருக்கலாம்.

maiam.com இணையதள உரிமையாளர் விவரம்

உதாரணமாக, நீங்கள் 'raju.com' என்று ஓர் இணையதள முகவரி வைத்திருக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அப்போது அதன் உரிமையாளர் யாரெனத் தேடினால் உங்கள் பெயர் வரும். ஆனால், அதற்கான காலம் முடிந்தபின், அதை நீங்கள் புதுப்பிக்கவில்லை என்றால் அது வேறு ஒருவர்க்கு விற்கப்படும். இப்போது அதன் உரிமையாளரைத் தேடினால், அது வேறொருவரின் பெயரை காட்டும். அதே முகவரியை நீங்கள் திரும்ப வாங்க வேண்டும் என்றால், அதை வாங்கியவருடன் பேரம் பேசி அதிக விலை தர வேண்டியிருக்கும். இப்படி காலாவதியான இணையதள முகவரிகளை வாங்கி, பின்னர் அதிக விலைக்கு நமக்கே விற்க ஒரு பெருங்கூட்டம் உண்டு. இணைய ஜாம்பவானான கூகுள் நிறுவனமே ஒருவரிடம் தனக்கு சொந்தமான இணையதள முகவரி ஒன்றை இழந்து பின்பு, அதிக விலை கொடுத்து மீட்டிருக்கிறது. அது போல ஒரு குளறுபடியாக இது இருக்கலாம்.

சில தளங்களின் உதவியுடன் எந்த ஒரு இணையதளத்தின் உரிமையாளர் யார் என்ற விபரங்களை எவர் வேண்டுமானாலும் தெரிந்துகொள்ளமுடியும். அந்த இணையதளம் யார் பெயரில் இருக்கிறது? அவருடைய முகவரி, இமெயில் ஐடி, மொபைல் எண், அவர் வேறு என்னென்ன தளங்களை பதிவு செய்திருக்கிறார் என்று ஒரு க்ளிக்கில் மொத்த ஜாதகத்தையும் கொட்டிவிடும். இதைப் பயன்படுத்திதான் அ.தி.மு.கவின் ஐடி விங்கைச் சேர்ந்த ஒருவர் கமலின் மையம் தளம் சில மத அமைப்புகளின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிவந்தார். ஆனால் கமல் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான Maiam.com க்கு பதிலாக maiyam.com என்று தவறான ஸ்பெல்லிங்கில் தேடியதால் மொத்தத் தகவலும் கமலின் தளம் பற்றிய தகவலாக இல்லாமல் maiyam.com பற்றிய விபரங்கள் பற்றியதாக அவருக்கு கிடைத்திருக்கிறது. maiyamம் கதையோ அப்படியிருக்க, maiamன் கதை வேறு மாதிரியாக இருக்கிறது.

சரி உண்மையில் maiam.com ன் ஜாதகம் என்ன சொல்கிறது? maiam.com என்ற இணையதளம் 1999 ல் இருந்து செயல்பட்டு வருகிறது. அப்போது இந்த இணையதளம் இத்தாலியைச் சேர்ந்த Maia Marrison என்ற ரியல் ஸ்டேட் ஏஜெண்ட் ஒருவருக்குச் சொந்தமானதாக இருந்தது. 2008 க்கு பிறகு அந்த சைட் ஆக்டிவாக இல்லை. இந்தத் தகவலின்படி 2018 ஜனவரியில் தான் அந்த இணையதளம் விற்கப்பட்டுள்ளது. அந்த இணையதளத்தில்தான் தற்போது கமல் கட்சியின் அதிகாரப்பூர்வ தளம் செயல்பட்டுவருகிறது. இந்த இணையதளம் மைலாப்பூர் அட்ரஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது.  அதோடு maiyam.com என்ற இணையதளம் செயல்பாட்டிலேயே இல்லை. வெறும் ஸ்பேம் சைட்டாகத்தான் இருக்கிறது.

 

பத்மநாபசுவாமிகோயில் பற்றிய பல செய்திகளை நீங்கள் கேள்வி பட்டிருக்கலாம். அதன் கட்டுமானம், வரலாறு பொக்கிஷம் என பெரும்பாலானவை நமக்கு தெரிந்தவைத...

பத்மநாபசுவாமிகோயில் பற்றிய பல செய்திகளை நீங்கள் கேள்வி பட்டிருக்கலாம். அதன் கட்டுமானம், வரலாறு பொக்கிஷம் என பெரும்பாலானவை நமக்கு தெரிந்தவைதான்.

பத்மநாபசுவாமி கோயில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பகவான் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஆலயமாகும். இது திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

குறித்த ஆலயத்தில் சேம்பர் பி என அழைக்கப்படும் மர்ம அறை மற்ற அறைகளைப் போலல்லாது பத்மநாபசுவாமியின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த மர்ம அறை திறக்கப்பட்டால் உலகம் அழியும் என பத்மநாபசுவாமியின் பக்தர்கள் திடகாத்திரமாக நம்புகின்றனர். இங்கு உயிருடன் நாகம் இருப்பதாகவும், இதனால்தான் திறக்க மறுப்பதாகவும் கூறுகின்றனர்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஆர்யா விரைவில் திருமணம் செய்யவுள்ளார். இதற்காக நவீன சுயம்வர நிகழ்ச்சியாக எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில்...

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஆர்யா விரைவில் திருமணம் செய்யவுள்ளார். இதற்காக நவீன சுயம்வர நிகழ்ச்சியாக எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் எல்லா தரப்பு பின்னணியிலுமிருந்து 16 பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் கனடாவிலிருந்து சூசனா என்ற ஒரு இலங்கை பெண் வந்துள்ளார். இவர் கதிர்வீச்சு சிகிச்சை நிபுணராக உள்ளாராம்.

இவர் ஆர்யாவிடம் பேசுகையில், உங்களிடம் ஒரு விஷயம் சொல்லனும். அதாவது நான் விவாகரத்தானவர், எனக்கு ஒரு மகன் இருக்கிறான் என்ற தகவலை கூறியுள்ளார்.

இதைக்கேட்ட ஆர்யா கொஞ்சம் ஷாக்காகியுள்ளார். இனி எந்த மாதிரியான முடிவு எடுப்பார் என அடுத்தடுத்த நாட்களில் தெரியவரும்.