Home Top Ad

"கலைமாமணி" "நகைச்சுவை தென்றல்" திண்டுக்கல் ஐ. லியோனியின் "நகைச்சுவை குதிரையில் என் சிந்தனை பயணம்"நூல் வெளியீட...

"கலைமாமணி" "நகைச்சுவை தென்றல்" திண்டுக்கல் ஐ. லியோனியின் "நகைச்சுவை குதிரையில் என் சிந்தனை பயணம்"நூல் வெளியீட்டு விழா! திரைப்பட நடிகரும், பட்டிமன்றநடுவரும், மேடைபேச்சாளருமான திண்டுக்கல் ஐ. லியோனி ஒரு புத்தகம் எழுதி உள்ளார்.

1992ஆம் ஆண்டு வத்தலக்குண்டு அருகே உள்ள காளி அம்மன் கோவில் மேடையில் முதன் முதலில் நகைச்சுவை பேச்சாளராக அறிமுகமானார்.பின்னர் 1996 ஆம் ஆண்டு முதல் தொலைக்காட்சிகளிலும், வெளிநாடுகளிலும் சுமார் 5000 க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட பட்டிமன்றங்களை நடத்தி இருக்கிறார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக கலைஞர் தொலைக்காட்சிஇவரை நடுவராக்கி "நல்லா பேசுங்க நல்லதையே பேசுங்க" என்ற பேச்சரங்க நிகழ்ச்சியை 250 வாரங்களாக ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு ஒளிபரப்பி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் இவர் பேசிய நகைச்சுவை ததும்பிய கருத்துக்களை தொகுத்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள "அசசி" பதிப்பகத்தார் புத்தகமாக கொண்டு வந்துள்ளனர். இந்த புத்தகத்திற்கு திமுக. செயல் தலைவரும், சட்ட மன்ற எதிர்க்கட்சி தலைவருமான மாண்புமிகு மு. க. ஸ்டாலின், பேராசிரியர் சுப. வீரபாண்டியன், வித்தக கவிஞர் பா. விஜய், உணர்ச்சிக்கவிஞர் யுகபாரதி ஆகியோர் அணிந்துரை வழங்கி உள்ளனர்.

லியோனி எழுதிய அந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் தேனாம்பேட்டையில் உள்ள அன்பகம் அரங்கத்தில்திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் புத்தகத்தை வெளியிட திரைப்பட இயக்குநர் சீனுராமசாமி பெற்றுக் கொண்டார். சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன், கவிஞர்கள் பா. விஜய், யுகபாரதி குமரிஆதவன் வாழ்த்தி பேசினார்கள்.

திண்டுக்கல் ஐ. லியோனி தனது ஏற்புரையில்,  "கங்கா கவுரி படத்துல அருண்குமார், வடிவேல் இருவருக்கும் தந்தை யாக நடித்தேன். ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்தனர். பின்னர் நான் பட்டிமன்றம், மேடைபேச்சு, தொலைக்காட்சி ஆகியவைகளில் பிஸியாக இருந்ததால் சினிமாவில் கவனம் செலுத்த முடியவில்லை.

ரஜினி நடிச்ச" சிவாஜி " படத்துல பட்டிமன்ற பேச்சாளர் ராஜா நடிச்ச கேரக்டர் ல நடிக்க என்னைதான் முதல்ல கேட்டாங்க. அப்ப நேரம் இல்ல.  நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேல் என்னிடம், நாம மறுபடியும் ஒருபடத்தில் சேர்ந்து நடிக்கலாம் என்று கூறினார். அப்புறம் டைரக்டர் சீனுராமசாமியும் அவரோட படத்துல நடிக்க கேட்டு இருக்கிறார். மறுபடியும் நான் சினிமாவுல நடிக்க அடுத்த ரவுண்டுக்கு தயாராயிட்டேன்.

தொடர்ந்து சினிமா, அரசியல்னு ட்ராவல் பண்ண ரெடியாயிட்டேன். " இவ்வாறு பேசினார். 

கடைசி நிமிஷம் வரைக்கும் ரப்பராக இழுத்துவிட்டு, காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் புளியேப்பம் விடும் போலிருக்கிறது மத்திய அரசு. ஆட்டுவிக்கி...

கடைசி நிமிஷம் வரைக்கும் ரப்பராக இழுத்துவிட்டு, காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் புளியேப்பம் விடும் போலிருக்கிறது மத்திய அரசு. ஆட்டுவிக்கிறவன் அவன். ஆடுகிறவன் நான்… என்கிற நிலையிலிருக்கும் மாநில அரசு, என்னதான் ஒப்புக்கு சப்பாணியாக இருந்தாலும் ஒரு முடிவெடுக்க வேண்டுமே?

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இந்த நிலையில்தான் பிரஸ்சை சந்தித்தார் கமல்ஹாசன். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கிற விஷயத்தில் மத்திய அரசு நடந்து கொள்ளும் முறையை கண்டித்தவர், அப்படியே மாநில அரசுக்கும் குட்டு வைத்தார். இருந்தாலும் முதல்வர் பழனிச்சாமியை நேரில் சந்தித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க சொல்ல விரும்புகிறாராம். முறைப்படி முதல்வர் அலுவலகத்தில் முன் அனுமதி கோரப்பட்டிருப்பதாக கூறினார்.

ஆனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கமல்ஹாசனையும் ரஜினிகாந்தையும் விமர்சித்து வரும் எடப்பாடி பழனிச்சாமியும், அவரது அமைச்சர் பெருமக்களும், இந்த சந்திப்பை விரும்புவார்களா? முன் அனுமதி கொடுக்கப்படுமா? என்பது டவுட்டுதான். அரசியலில் துளி கூட பெயர் எடுத்துவிடக் கூடாது என்று முனைப்பு காட்டும் இவர்கள், இந்த சந்திப்பினால் கமல்ஹாசனுக்கு நல்ல பெயர் சென்றுவிடக் கூடாது என்று நினைப்பார்கள் அல்லவா?

இது ஒருபுறம் இருக்க, தூத்துத்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வரும் 1 ந் தேதி ஞாயிற்றுக் கிழமை கமல் அங்கு செல்கிறார்.

நடிகர் ஆர்யாவுக்கு தற்போது பெண்பார்க்கும் படலம் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக புதியதாக வந்துள்ள தமிழ் தொலைக்காட்சி ஒன்று மும்பரமாக இறங்...

நடிகர் ஆர்யாவுக்கு தற்போது பெண்பார்க்கும் படலம் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக புதியதாக வந்துள்ள தமிழ் தொலைக்காட்சி ஒன்று மும்பரமாக இறங்கியுள்ளது.

இதனையடுத்து, முதல் முயற்சியாக ஆர்யா தன் வருங்கால மனைவியை தேடும் விதத்தில் “எங்க வீட்டு மாப்பிள்ளை” என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று வருகிறார்.

அதில் துவக்கத்தில் 16 போட்டியாளர்கள் இருந்த நிலையில் தற்போது பலரும் வெளியேற்றப்பட்டு வெறும் 7 பெண்கள் மட்டுமே போட்டியில் உள்ளனர்.

இந்நிலையில், நாளை மேலும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படவுள்ளார். இருவரில் ஒருவர் விட்டு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்படுகின்றது. இதன்போது, ஆர்யாவின் முகமும் திடீர் என்று அதிர்ச்சியடைவது போல காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் அகாதா வெற்றி பெற்றிருந்தார். இதனை பார்த்த மிகுதி ஏழு பெண்களும் சோகத்தில் மூழ்கி விட்டனர்.

இதேவேளை, இவர் ஆர்யாவை திருமணம் செய்துகொள்வதற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்றும் , கேமரா முன்பு எப்போதும் போலியாக நடிக்கிறார் எனவும் மற்ற பெண்கள் இவர் மீது குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. 

சினிமாவில் திறமை மற்றும் கடின உழைப்பால் ஜெயித்து விடலாம் என்பதற்கு நிறைய நடிகர்கள் உதாரணம். மக்களுக்கு இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றா...

சினிமாவில் திறமை மற்றும் கடின உழைப்பால் ஜெயித்து விடலாம் என்பதற்கு நிறைய நடிகர்கள் உதாரணம். மக்களுக்கு இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் நடிகர் சிவகார்த்திகேயனை கூறலாம்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலக்கி ஒவ்வொரு படியாக அந்த துறையில் முன்னேறி மக்களின் பார்வைக்கு வந்தவர். இப்போது சினிமாவிலும் ரசிகர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கிறார். படங்களில் தண்ணி அடிப்பது, சிகரெட் பிடிப்பது, பெண்களை கிண்டல் செய்வது போன்ற விஷயங்களை தவிர்த்து வருகிறார்.

அண்மையில் சினிமா பயணம் குறித்து பேட்டி கொடுத்தவரிடம் அரசியலில் ரஜினி, கமல் இதில் யாருக்கு ஆதரவு என கேட்டுள்ளனர். அதற்கு சிவகார்த்திகேயன், இருவரும் அவர்களின் நிலைப்பாடு என்ன என்பதை இன்னும் சொல்லவில்லை. நான் ஓட்டு போடுவதை என் வீட்டில் கூட சொல்ல மாட்டேன். ஓட்டு போடுவது என்பது மிகப்பெரிய பொறுப்பு. அது யாருக்கு என்பது எனக்கு மட்டுமே தெரிஞ்ச உண்மை, ரகசியம் என்று கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் தொடர் வெற்றியால் உச்சத்தை நோக்கி செல்கின்றார். இவர் நடிப்பில் எந்த படம் வந்தாலும் அதை பார்க்க பலரும் ஆவலுடன் இருக்கின்றனர்...

சிவகார்த்திகேயன் தொடர் வெற்றியால் உச்சத்தை நோக்கி செல்கின்றார். இவர் நடிப்பில் எந்த படம் வந்தாலும் அதை பார்க்க பலரும் ஆவலுடன் இருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் ‘இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமான், ஹீரோயினாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கவுள்ளார், சிவகார்த்திகேயன் சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் கேள்வி-பதில் கூட்டத்தில் கலந்துக்கொண்டார்.

அதில் நயன்தாரா பற்றி கேட்க ‘ஒரு காலத்தில் அவரை நேரில் பார்க்க முடியுமா? என்று ஏங்கியுள்ளேன், சின்னத்திரையில் இருக்கும் போது அவரை பார்க்கும் வாய்ப்பு வந்தது.

அவர் எப்போது வருவார் என நானும் காத்திருந்தேன், ஆனால், அப்போது அந்த பையன் அவருடன் இல்லை(விக்னேஷ் சிவனை குறிப்பிடுகின்றார்)’ என்று சொல்ல அனைவருமே சிரித்துவிட்டனர்.

டெல்லி உயர் நீதிமன்றம் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கியதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஆர்.கே.நகர் தொகு...

டெல்லி உயர் நீதிமன்றம் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கியதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றார் டிடிவி தினகரன். எனவே செண்டிமெண்டாக தனக்கு குக்கர் சின்னத்தையே அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்த அனுமதிக்குமாறு தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

அந்த வழக்கில், டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு கடந்த 9ம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது தினகரன் தரப்பிற்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்பட்டது. எனவே, உள்ளாட்சி தேர்தலில் தினகரன் அணியினர் குக்கர் சின்னத்திலேயே போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும், தினகரனின் வழக்கில் 2 நீதிபதிகள் அமர்வு முடிவு எடுக்க வேண்டும் எனவும், இரட்டை இலை வழக்கை 3 வாரத்திற்குள் டெல்லி உயர் நீதிமன்றம் விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

எனவே, வழக்கின் இறுதி தீர்ப்பு வெளியாகும் வரை குக்கர் சின்னத்தை தினகரன் தரப்பு பயன்படுத்தக் கூடாது. இது தினகரனுக்கு கிடைத்த பின்னடைவாக கருதப்படுகிறது.

பொதுமக்களின் பிரச்சனைகளுக்காக திமுக உள்பட எந்த கட்சியுடனும் இணைந்து போராட்டம் நடத்த தயார் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் இன்று தஞ்சையில் அறிவித்துள்ளார்.

    இதனையடுத்து வரும் தேர்தலிலும் திமுகவுடன் தினகரன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

நடிகர் ஆர்யா தனது திருமணத்துக்காக பெண் தேடி வருகிறார். அதற்காக ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். தற்போது ப...

நடிகர் ஆர்யா தனது திருமணத்துக்காக பெண் தேடி வருகிறார். அதற்காக ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

தற்போது போட்டியும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதில் துவக்கத்தில் 16 போட்டியாளர்கள் இருந்த நிலையில் தற்போது பலரும் வெளியேற்றப்பட்டு வெறும் 8 பெண்கள் மட்டுமே உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில், 8 பெண்களில் பார்வையாளர்களின் அதிக வரவேற்பை பெற்றவர் அபர்னதி என்றுதான் கூற வேண்டும்.

அபர்னதிக்கும் ஆர்யாவிற்கும் உள்ள பொருத்தம் பற்றி நீங்களே பாருங்கள்.அ வரின் இயல்பான குணம், இயல்பான பேச்சு, பழகும் விதம் என அனைத்தும் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

ஆர்யாவின் வருங்கால மனைவியாக இவர் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பது பலரின் விருப்பமாக இருக்கின்றது.

இந்த புகைப்படங்களை பார்க்கும் போது அது புலப்படுகின்றது. அது மட்டும் இன்றி ஆர்யாவிற்காக அபர்னதி அவரின் குணாதிசியங்களையும் மாற்றி கொண்டுள்ளது இறுதி இரண்டு நிகழ்சியிலும் காண்பிக்கப்பட்டுள்ளது.