Home Top Ad

கும்கி விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் அறிமுகமான படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபிஸ் மட்டுமின்றி விமர்ச...

கும்கி விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் அறிமுகமான படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது.

பாக்ஸ் ஆபிஸ் மட்டுமின்றி விமர்சனங்கள் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற, தற்போது கும்கி-2 படத்திற்கான வேலைகள் தொடங்கிவிட்டது. இதையும் பிரபுசாலமன் தான் இயக்கி வருகின்றார்.

ஏற்கனவே தாய்லாந்தில் ஒரு சில காட்சிகள் எடுக்க, தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடந்து வருவதாக தெரிகின்றது.

இப்படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடித்து வருவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

செல்வராகவன் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர். ஒரு படத்தின் வெற்றி, தோல்வி தாண்டி எழுத்து-இயக்கம் செல்வராகவன் என்று திரையி...

செல்வராகவன் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர். ஒரு படத்தின் வெற்றி, தோல்வி தாண்டி எழுத்து-இயக்கம் செல்வராகவன் என்று திரையில் வரும் போது விசில் சத்தம் பறக்கும்.

அப்படி ஒரு புகழுக்கு சொந்தமான செல்வராகவனின் மாஸ்டர் பீஸ் புதுப்பேட்டை வெளிவந்து இன்றுடன் 12 வருடங்கள் ஆகின்றது.

இந்த படம் இப்போது வந்திருந்தால் மெகா ஹிட் ஆகியிருக்கும், சூப்பர் ஹிட் ஆகியிருக்கும், ரூ 100 கோடி வசூல் வந்திருக்கும் என சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஒரு பேச்சு இருக்கும்.

ஆனால், செல்வராகவனோ எப்போது வந்தாலும் புதுப்பேட்டை இப்படித்தான் இருக்கும் என்று சிம்பிளாக முடித்துவிடுவார். படத்தின் தொடக்கத்திலேயே நாயகன் பிச்சை எடுப்பது போல் ஒரு காட்சி.

தீம் மியூஸிக் போட்டு நடிகர்களுக்கு ஸ்லோ மோஷனில் மாஸ் இண்ட்ரோ கொடுத்த தமிழ் சினிமாவில் அம்மாவிடம் அடிவாங்கி கொண்டு பள்ளிக்கு கிளம்பும் ஒரு நாயகனாக தனுஷின் அறிமுகம்.

அம்மா இழப்பு, தெருவில் பிச்சை, அன்புவிடம் அறிமுகம், செல்வியுடன் காதல், காதலுக்காக கொலை, கொலையில் இருந்து பிறக்கும் அரசியல், அரசியல் ஆசையால் வரும் விளைவு என இதைவிட ஒரு கேங்ஸ்டர் வாழ்க்கையை யாரும் அருகில் நின்று படம் பிடித்திட முடியாது.

அதிலும் வேங்கைய மகன் ஒத்தைல நிக்கிறேன் என்பது போல் ஒரே ஆளாக நின்றுக்கொண்டு இரண்டே அடியில் மூர்த்தியின் தம்பியை கொலை செய்து, பின் ஒரு கேங்ஸ்டரிடம் சென்று ட்ரெயினிங் எடுப்பது, அந்த கேங்ஸ்டரும் உள்ளே பயத்தை வைத்துக்கொண்டு தனுஷிடம் தில்லாக பேசுவது.

வேரு ஒருவருக்கு திருமணம் செய்த பெண்ணை, கல்யாண மேடையில் தாலி கட்டுவது என சினிமா பார்முலா அனைத்தையும் குத்தி கிழித்த படம் தான் இந்த புதுப்பேட்டை.

இப்படி ஒவ்வொரு காட்சியிலும் நம்மை பிரமிக்க வைத்த செல்வராகவன் மீண்டும் இதே பலத்துடன் திரும்ப வரவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்.

கமல்ஹாசன் ரசிகர்களுக்கு அவர் நடித்த படங்களில் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படும் படம் தேவர்மகன். அப்படத்தை பற்றிய சில சுவாரஸ்ய விஷயங்களை ரசிக...

கமல்ஹாசன் ரசிகர்களுக்கு அவர் நடித்த படங்களில் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படும் படம் தேவர்மகன். அப்படத்தை பற்றிய சில சுவாரஸ்ய விஷயங்களை ரசிகர்கள் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்த நேரத்தில் தேவர்மகன் படத்தில் கௌதமி வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது வேறொரு நடிகையாம். அவர் வேறு யாரும் இல்லை ஐஸ்வர்யா தான் முதலில் நடிக்க இருந்தாராம்.

இன்னொரு நாயகியின் கால்ஷீட் பிரச்சனையால் நாயகியையே மாற்றிவிட்டனர், நானும் நடிக்க முடியவில்லை என்று மன வருத்தத்துடன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

நடிகர் என்பதை தாண்டி தற்போது மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவராக இருக்கும் கமல்ஹாசன் பொதுவாழ்க்கையில் அதிகமாக ஈடுபட்டுவருகிறார். இன்று கா...

நடிகர் என்பதை தாண்டி தற்போது மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவராக இருக்கும் கமல்ஹாசன் பொதுவாழ்க்கையில் அதிகமாக ஈடுபட்டுவருகிறார்.

இன்று காலை தூத்துக்குடி கலவரத்தில் இறந்த, பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சென்று ஆறுதல் கூறினார். அதே சமயம் மாலையில் பெங்களூரில் குமாரசாமி பதவியேற்பு விழாவுக்கு நேரில் சென்று வாழ்த்து கூறியுள்ளார் கமல்.

காவேரி விவகாரத்தில் இன்னும் இழுபறி வலுக்கும் சூழலில் தமிழ் மக்களின் உணர்வுகளை மதிச்சு அந்த விழாவை கமல் புறக்கணித்திருக்க வேண்டாமா என்று நெட்டிசன்ஸ் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியை மிகவும் புதிதானது. ரஞ்சித்தை தொடர்ந்து இளம் இயக்குனருடன் ரஜினி இணைந்திருப்பதால் பெரிய எதிர்ப்பார்ப்பி...

ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியை மிகவும் புதிதானது. ரஞ்சித்தை தொடர்ந்து இளம் இயக்குனருடன் ரஜினி இணைந்திருப்பதால் பெரிய எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

படத்தின் இசையமைப்பாளர் அனிருத் என்பது மேலும் ஒரு சிறப்பு. அடுத்தகட்டமாக படத்தை பற்றி எந்த ஒரு தகவலும் வராமல் இருந்த நிலையில் புதிதாக ஒரு விஷயம் வந்துள்ளது.

அதாவது படத்தில் முக்கிய நடிகர்களாக பாபி சிம்ஹா மற்றும் சனந்த் ரெட்டி இணைந்துள்ளார்களாம்.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நீண்டகாலமாக எல்லைப்பிரச்சனை இருந்து வருகிறது. இதனால், எல்லையில் அவ்வப்போது அசாதரண சூல்நிலையும் ஏற்பட்டு ...

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நீண்டகாலமாக எல்லைப்பிரச்சனை இருந்து வருகிறது. இதனால், எல்லையில் அவ்வப்போது அசாதரண சூல்நிலையும் ஏற்பட்டு வருகிறது.

இதற்கு காரணம், இந்தியாவிற்கு சொந்தமான அருணாசலபிரதேசத்தை தங்களது தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வருவது தான்.

இந்நிலையில், அருணாச்சல பிரதேச எல்லயை ஒட்டிய லூன்சே எனும் பகுதியில் சீன அரசாங்கம் தங்கச் சுரங்கம் தோண்டி வருவதாக செய்திகள் வந்தன.

இதில், சுமார் 60 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவிர்கு தங்கம், வெள்ளி மற்றும் விலை உயர்ந்த உலோக தாதுப் பொருட்கள் இருப்பதாக தனியார் செய்தி நிறுவனம் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லூ காங் கூறியதாவது, சீனா தனது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அவ்வப்போது பூமிக்கு அடியில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இப்படியிருக்கையில், தற்போது தங்கச் சுரங்கம் தோண்டப்படும் பகுதி முழுக்க முழுக்க சீனாவின் இறையாண்மைக்கு சொந்தமானது. இந்த பகுதியை அனுபவிக்க எங்களுக்கு முழு உரிமை உள்ளது. என்று தெரிவித்துள்ளார்.

காலம்காலமாக மற்ற மொழிப்படங்களில் சில நம் ரசிகர்களை ஈர்த்து விடுகிறது. அவை நம் மொழியிலும் பார்த்தால் நன்றாக இருக்குமே என்ற எதிர்பார்ப்பும் இ...

காலம்காலமாக மற்ற மொழிப்படங்களில் சில நம் ரசிகர்களை ஈர்த்து விடுகிறது. அவை நம் மொழியிலும் பார்த்தால் நன்றாக இருக்குமே என்ற எதிர்பார்ப்பும் இருக்கும்.

அப்படி ஒரு ரசனையுடன் மலையாளத்தில் இருந்து வந்திருக்கிறான் இந்த பாஸ்கர் ஒரு ராஸ்கல். யார் இவன், மக்களிடம் இடம் பிடிப்பானா என உள்ளே சென்று பார்க்கலாம்.

கதைக்களம்

அரவிந்த் சாமி ஒரு சாதாரண பிசினஸ் மேன். ஆனால் இவர் வம்பு என வந்துவிட்டால் முரடன். இவருக்கு ஆகாஷ் என்ற பையனும், அப்பா நாசரும் இருக்கிறார்கள். அப்பா மீது பாசமாக இருந்தாலும் சில விசயங்களால் அவனுக்கு அரவிந்த் சாமியை பிடிக்கவில்லை.

நடிகை அமலா பால் ஒரு எதிர்பாராத விதமாக ஒரு கட்டத்தில் தன் காதல் கணவரை இழக்கிறார். பின் வேறொரு ஊரில் தன் மகள் நைனிகாவுடன் தனியே வாழ்கிறார். இந்நிலையில் அரவிந்த் சாமிக்கு தன் மகன் மூலம் அமலா பாலின் அறிமுகம் கிடைக்கிறது. பின் இரு குடும்பமும் ஒன்றாக நட்புறவாக மாறுகிறார்கள்.

பின் அரவிந்த் சாமி, அமலா பால் இருவரும் வாழ்க்கையில் இணைய விரும்பும் நேரத்தில் பயங்கர அதிர்ச்சி. தன்னை தேடி வந்த ஒரு நபரால் பெரும் அதிர்ச்சியாகிறார் அமலா.

மேலும் முக்கிய அறிவியல் விஞ்ஞானி ஒருவர் கொல்லப்படுகிறார். அவரின் கொலைக்கு காரணமானவர்கள் யார்? மர்ம பின்னணி என்ன? அமலா பாலை தேடி வந்த நபர் யார்? அவரின் கணவர் என்ன ஆனார்?

அரவிந்த் சாமி, அமலா பால் இருவரும் வாழ்க்கையில் இணைந்தார்களா என்பதே இந்த படத்தின் கதை.

படத்தை பற்றிய அலசல்

அரவிந்த் சாமி அண்மைகாலமாக படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார். மீண்டும் அவர் ஹீரோவாக பாஸ்கர் படத்தில் வந்திருக்கிறார். அவருக்கு இன்னும் அந்த காலத்து ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை தியேட்டரில் காணமுடிகிறது. அவர்களின் எதிர்பார்ப்பை அவரும் இப்படத்தில் பூர்த்தி செய்கிறார். முரட்டுத்தனமாக இருக்கும் இவர் தன் மகனுக்காக வேறுவிதமாக மாறுகிறார்.

அமலா பால் மீண்டும் ஹீரோயினாக இப்படத்தின் மூலம் இறங்கியுள்ளார். படத்தில் அவரை பார்க்கும் போது முன்பு இருந்த அமலா பாலை அப்படியே பார்க்க முடிந்தது. தான் விரும்பும் யோகாவையும் கூடவே கூட்டி வந்திருக்கிறார். விரும்பிய ஒன்றுக்காக வாழ்க்கையை விட்ட கதை அவரின் ரியல் லைஃப் போலிருந்தது.

விஜய் சேதுபதியுடன் நடித்த குட்டி பையன் மாஸ்டர் ராகவன் படத்தில் ஆகாஷாக தன் திறமையை காட்டியிருக்கிறார். இவரை சும்மா சொல்லக்கூடாதுங்க. நடனம், நடிப்பு என அசத்துகிறார். எதிர்காலத்தில் திறமையான நடிகராக வருவார் என தெரிகிறது.

தெறி படத்திற்கு பிறகு பேபி நைனிகா மீண்டும் இப்படத்தில் இறங்கியுள்ளார். சொல்லப்போனால் ஒரு குட்டி ஹீரோயின் போல தான். சில நேரத்தில் பிள்ளைகள் விரும்பும் சிலவற்றில் பெரிய விசயம் இருக்கும் என அவர் படத்தில் தெளிவுபடுத்துகிறார்.

படத்தில் காமெடிக்கு மூன்று பேர் கூட்டணியாக, ரமேஷ் கண்ணா, ரோபோ சங்கர், சூரி என ஒன்று கூடியுள்ளார்கள். யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் கிடையாது என காட்டியிருக்கிறார்கள்.

மலையாளத்தில் ஹிட்டான இப்படத்தை தமிழ் படம் போல அழகாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சித்திக். இந்த படம் எப்படியிருக்குமோ என நினைப்பவர்களை படம் முழுக்க உட்கார்ந்து பார்த்து ரசிக்கும் படி செய்திருக்கிறார்.

நிகிஷா படேல், நடிகர் ரியாஸ் கான், பாலிவுட் நடிகர் அஃப்தப் சிவ்தஸனி என பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். ஆனால் என்ன ரியாஸ்கானா இது என உருவத்தால் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

சிம்பிளான ஸ்டோரி, மலையாள பட ஸ்டைலில் அழகான எடிட்டிங், கேட்கும் படியான பாடல்கள் என படம் ஒரு அழகான படைப்பு. கல்யாணி என ஓரே ஒரு சின்ன விசயத்தால் வந்த பிரச்சனை.

மது வா இல்லை மாது வா, என்ன அது என்பதை படத்தில் பாருங்கள்..

கிளாப்ஸ்

மாஸ்டர் ராகவன், பேபி நைனிகா இருவரும் படம் முழுக்க ஸ்கோர் அள்ளுகிறார்கள்.

அரவிந்த் சாமி, அமலா பால் ஜோடி நன்றாக தான் இருக்கிறது.

ரோபோ சங்கர், சூரி, ரமேஷ் கண்ணா என தங்கள் பங்குக்கு ஆடியன்ஸிடம் கிளாப்ஸ் பெறுகிறார்கள்.

பல்ப்ஸ்

எதற்காக கதை ஆரம்பித்தார்களோ அதை ஒரு இடத்தில் சொல்லாமல் விட்டது போல ஒரு ஃபீல்.

மொத்தத்தில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் நல்ல எண்டர்டெயின்மெண்டான ஃபேமிலி பேக்கேஜ்.