நடிகர் கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் தமிழ் பேச தடுமாறியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமல் தயாரிக்கும் படம்...
நடிகர் கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் தமிழ் பேச தடுமாறியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமல் தயாரிக்கும் படம் கடாரம் கொண்டான். விக்ரம் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் கமலின் இளையமகள் அக்ஷரா முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
கடராம் கொண்டான் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கமல், விக்ரம், அக்ஷரா உள்ளிட்டோர் கலந்துகொண்ட பிரமாண்ட விழா நடைபெற்றது.
இவ்விழாவில் அக்ஷரா ஹாசன் தமிழில் பேச மிகவும் கஷ்டப்பட்டார். பேச துவங்கும் முன் தனக்கு தமிழ் சரியாக வராது எனக் கூறிய அவர், ஒன்றிரண்டு தமிழ் வார்த்தைகளை இடையில் சொருகி, 70 சதவீதம் ஆங்கிலம், 30 சதவீதம் தமிழ் என பேசி முடிந்தார்.
அப்பாவுக்கு நன்றி:
"அப்பாவுக்கு பெரிய நன்றி. எனக்குப் பெரிய வாய்ப்பை கொடுத்திருக்கிறார். ராஜேஷ் சார் பெரிய சவாலான ரோலை கொடுத்தார். ரொம்ப நன்றி". விழாவில் அக்ஷரா பேசியது இது தான். இரண்டு வாக்கியங்களைக்கூட ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேச முடியவில்லை அவரால். அக்ஷரா பேசுவதை அருகில் அமர்ந்திருந்த கமல் ரசித்து பார்த்தார்.
பல மொழி வித்தகர்:
நடிகர் கமலின் தமிழ் அறிவு பற்றி அனைவருக்கும் தெரியும். பாரதியின் கவிதைகளில் இருந்து பல தமிழ் இலக்கியங்களை கரைத்து குடித்தவர். மேலும், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளை அறிந்தவர். அவருடைய மகளாக இருந்து கொண்டு அக்ஷரா தமிழில் பேச திணறியது, எல்லோருக்கும் வியப்பையே அளித்தது.
மும்பையில் வளர்ந்தவர்:
அக்ஷரா மும்பையில் அவரது தாயுடன் வளர்ந்தவர். எனவே அவருக்கு தமிழ் பேச வராதது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என சிலர் காரணம் கூறலாம். ஆனால் அக்கா ஸ்ருதி பேசும் அளவுக்கு கூட அக்ஷராவால் தமிழ் பேச தெரியாமல் போனது ஏன் எனும் கேள்விக்கு என்ன பதில் வரப்போகிறது என தெரியவில்லை.
விமர்சனம்:
கமல் இப்போது வெறும் நடிகர் மட்டுமல்ல. மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியின் தலைவரும் கூட. மேடைகளில் தனித்தமிழில் முழக்கமிடும் கமல், தனது மகளுக்கு தமிழ் கற்றுக்கொடுக்காமல் போனது ஏன் எனும் கேள்விக்கு பதில் கூறிய ஆக வேண்டும். பொதுவாக விமர்சனங்களை காதில் வாங்கிக்கொள்ளாத கமல், அக்ஷராவின் தமிழ் பற்றிய விமர்சனத்துக்கு எப்படி 'ரியாக்ட்' செய்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
முதல்வன் இரண்டாம் பாகத்தில் நடிகர் விஜய் நடிப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் அவருக்கு வில்லனாக நடிக்கபோவதாக பிரபல நடிகரின் பெயர் அடிபட்...
முதல்வன் இரண்டாம் பாகத்தில் நடிகர் விஜய் நடிப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் அவருக்கு வில்லனாக நடிக்கபோவதாக பிரபல நடிகரின் பெயர் அடிபட்டு வருகிறது.
ஏற்கனவே ஹிட்டான பல படங்களின் இரண்டாம் பாகங்கள் தற்போது வெளியாகி வருகின்றனர். காஞ்சனா, சிங்கம் உள்ளிட்ட படங்கள் மூன்று பாகங்கள் வெளியாகி ஹிட்டானது.
இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் முதல்வன் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளதாக கூறினார். இதில் ஏற்கனவே ரஜினி அல்லது கமலை வைத்து எடுக்க திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்டது.
விஜய் ஹீரோ
ஆனால் அவர்கள் அடுத்தடுத்து படங்கள் மற்றும் அரசியல் என பிஸியாக உள்ளனர். இதனால் முதல்வன் இரண்டாம் பாகத்தை நடிகர் விஜயை வைத்து எடுக்க ஷங்கர் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
அர்ஜுன் நடிக்கிறார்?
இதற்கான கால்ஷீட்டும் விஜய் தரப்பில் ஒதுக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில் நடிகர் விஜய்க்கு வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பார் என கூறப்படுகிறது.
வில்லன் கேரக்டர்
இதுதொடர்பாக அர்ஜுனுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வில்லனாக இல்லாவிட்டாலும் ஏதாவது ஒரு குணச்சித்திர வேடத்திலாவது அர்ஜுன் நிச்சயம் நடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் முதல்வர்
முதல்வன் முதலாம் பாகத்தில் நடிகர் அர்ஜுன் ஒரு நாள் முதல்வராகவும், பின்னர் முதல்வராகவும் நடித்தார். அந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
தண்ணீர் பிரச்னை உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் , தண்ணீரை சேமிக்க வேண்டும் என்று நகைச்சுவை நடிகர் வடிவேலு வேண்டுகோள் விடுத்துள்ளார். சி...
தண்ணீர் பிரச்னை உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் , தண்ணீரை சேமிக்க வேண்டும் என்று நகைச்சுவை நடிகர் வடிவேலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கலியாந்தூர் அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது. ஊரை காவல் காக்கும் அய்யனாருக்கு புரவி எடுப்பு திருவிழா நடத்தினால் மழை பெய்யும் என்பது ஐதீகம். இந்த விழாவில் நகைச்சுவை நடிகர் வடிவேலு குடும்பத்துடன் கலந்து கொண்டார்.
வடிவேலுவின் மனைவிக்கு கலியாந்தூர் சொந்த ஊர் என்பதால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வள்ளி திருமணம் நாடகத்தை தொடங்கி வைத்தார்.
விழாவில் அவர் பேசும் போது ”அய்யனாருக்கு அடிக்கடி திருவிழா நடத்தி மழையை வரவழைக்க வேண்டும், குடிநீர் பிரச்னை எல்லா இடங்களிலும் உள்ளது. அதனை வீணாக்காமல் சேமிக்க இளைஞர்கள் முன் வரவேண்டும் கிராமத்தின் பாரம்பரியமும், பண்பாடும் திருவிழாக்களில் உள்ளது. அதில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.”
பின்னர், கிராம மக்கள் வேண்டுகோளை ஏற்று, எட்டணா இருந்தா என்பாட்டை கேட்கும் என்ற பாடலை பாடி, நடனமாடினார்.
ஹைலைட்ஸ் ஜூலை 5, 2019 காலை 11 மணிக்கு 2019-20 மத்திய பட்ஜெட் தாக்கல். நிர்மலா சீதாராமன் முதல் முறையாக பட்ஜெட் உரையாற்றுகிறார். 2019...
ஹைலைட்ஸ்
ஜூலை 5, 2019 காலை 11 மணிக்கு 2019-20 மத்திய பட்ஜெட் தாக்கல்.
நிர்மலா சீதாராமன் முதல் முறையாக பட்ஜெட் உரையாற்றுகிறார்.
2019 மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு பட்ஜெட் உரை தொடங்கும் நேரம், நேரடி ஒளிப்பரப்பு, லைவ் அப்டேட் மற்றும் எதிர்பார்க்கப்படும் அறிவிப்புகள் பற்றிய முழுமையான தகவல்களைப் அறிந்துகொள்ளுங்கள்.
பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக பொதுத்தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசின் முதல் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கிறார்.
வரும் ஜூலை 5ஆம் தேதி இந்த ஆண்டுக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட் மீதான எதிர்பார்ப்புகள் சாமானியர்களிடமும் பல துறைகளைச் சேர்ந்தவர்களிடமும் அதிகமாக உள்ளது. பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக பொருளாதார ஆய்வறிக்கை ஜூலை 4ஆம் தேதி (நாளை) சமர்ப்பிக்கப்பட உள்ளது. மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் கே. வி. சுப்ரமணியன் இதனைத் தாக்கல் செய்கிறார்.
2019 பட்ஜெட் உரை தொடங்கும் நேரம்
சுதந்திர இந்தியாவில் முழு நேர நிதி இலாகா பொறுப்பை மட்டும் வகிக்கும் முதல் பெண் நிதி அமைச்சர் என சிறப்பித்துக் கூறப்படுகிறார் நிர்மலா சீதாராமன். 59 வயதாகும் இவர் ஏற்கெனவே வர்த்தகத்துறை, பாதுகாப்புத்துறை என முக்கிய துறைகளின் அமைச்சராக இருந்தவர். பிரதமர் நரேந்திர மோடியின் முதல் மத்திய அமைச்சரவையில் குறிப்பிடத்தக்க அங்கமாகத் திகழ்ந்தார். இவர் வெள்ளிக்கிழமை (ஜூலை 5, 2019) காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.
2019 பட்ஜெட் லைவ் அப்பேட்
2019 மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் நிகழ்வு தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படும். அத்துடன் பட்ஜெட் குறித்து சமயம் தமிழ் மூலம் லைவ் அப்பேட் பெறலாம். பட்ஜெட் சிறப்புப் பகுதியில் அனைத்து துறை சார்ந்த அறிவிப்புகளையும் உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம்.
2019 பட்ஜெட் கேள்வி நேரம்
ஜூலை 26ஆம் தேதி வரை இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும். அப்போது பட்ஜெட் மீதான அவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளிப்பார்.
2019 பட்ஜெட் - முக்கிய எதிர்பார்ப்புகள்
1. வருமான வரி விலக்கு உச்ச வரம்பு 7.5 லட்சம் வரை உயர்த்தப்படலாம்.
2. விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு மூலம் வட்டியில்லா கடன் வழங்கும் அறிவிப்பு.
3. பெண்கள் தொழில் தொடங்குவதை ஊக்குவிக்க 25 முதல் 50 சதவீதம் வரை வட்டியில்லா கடன் திட்டம்.
4. 2022க்குள் 10,000 விவசாயிகள் உற்பத்திக் குழுக்களை அமைக்கும் பாஜகவின் வாக்குறுதிக்க உறுதுணையாக விவசாய உற்பத்திப பொருட்களுக்கு விலை உயர்வு.
5.மானிய விலையில் சர்க்கரையை மீண்டும் பொது விநியோக திட்டத்தில் கொண்டுவரலாம்.
6. பரம்பரை வரி, விலையில்லா கடன் பத்திரம் ஆகியவை கொண்டுவரப்படலாம். காலி மனை வரி அறிமுகப்படுத்தப்படலாம்.
7. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சுகாதார வசதி பெறுபவர்கள் எண்ணிக்கையை அதிகமாக்கும் அறிவிப்பு வெளியாகலாம்.
8. ஜிஎஸ்டியில் பதிவு செய்த நிறுவனங்களுக்கு 10 லட்சம் ரூபாய் விபத்துக் காப்பீடு வழங்கும் திட்டம்.
இன்று (ஜூலை 02, 2019) வேல்ஸ் உயர் நீதிமன்ற விசாரணைக்குச் செல்கிறார் (Vijay Mallya) விஜய் மல்லையா. விஜய் மல்லையாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு ...
இன்று (ஜூலை 02, 2019) வேல்ஸ் உயர் நீதிமன்ற விசாரணைக்குச் செல்கிறார் (Vijay Mallya) விஜய் மல்லையா. விஜய் மல்லையாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு இங்கிலாந்து அரசிடம் சட்ட ரீதியாக பேசிக் கொண்டிருக்கிறது இந்திய அரசு தரப்பு.
இந்திய அரசு தரப்பின் விண்ணப்பத்தை எதிர்த்து, (Vijay Mallya) விஜய் மல்லையாவும் தன்னால் முடிந்த வரை அனைத்து சட்ட வழிகளையும் ஒவ்வொன்றாக பிரயோகித்துக் கொண்டிருக்கிறார்.
அப்படித் தான் இந்த வேல்ஸ் உயர் நீதிமன்ற (Oral Hearing) வாய் வழி விசாரணையும் இன்று நடந்து கொண்டிருக்கிறது. இதைப் பற்றி ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் ஒரு கட்டுரையில், மல்லையா தப்பிக்க இருக்கும் நான்கு சட்ட வழிகளைப் பற்றியும் சொல்லி இருக்கிறார்கள்.
உள் துறை உத்தரவு
ஆக மல்லையாவுக்கு நடக்கும் இந்த வாய்வழி விசாரணையில் வென்றால் என்ன செய்ய வாய்ப்பிருக்கிறது, தோற்றால் என்ன செய்ய வாய்ப்பிருக்கிறது என விரிவாகப் பார்ப்போம். மல்லையா வழக்கில் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின், இங்கிலாந்தின் உள் துறை அமைச்சகம் கடந்த பிப்ரவரி 04, 2019 அன்றே, விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல, இந்திய அரசுக்கு அனுமதி கொடுத்து விட்டது.
வாய் வழி விசாரணை (Oral Hearing)
அந்த உத்தரவை எதிர்த்து தான், இப்போது வேல்ஸ் உயர் நீதி மன்றத்தில் முறையிட்டு வாய் வழி விசாரணைக்கு (Oral hearing) சென்று கொண்டிருக்கிறார் (Vijay Mallya) விஜய் மல்லையா. இந்த மேல் முறையீட்டைக் குறித்து பேசிய இந்திய தரப்பினர் "விஜய் மல்லையாவை நாடு கடத்துவது குறித்த வாதங்களைக் கேட்க (Oral Hearing), வேல்ஸ் நீதிமன்றம் ஒரு நாள் ஒதுக்கி இருக்கிறது."
தீர்ப்பு
மேலும் "விசாரணை ஒரு நாளுக்குள்ளேயே முடிந்து விட்டால், இன்றைக்கே தீர்ப்பும் வந்துவிடும். அப்படி இல்லை என்றால் வாதங்கள் மட்டும் இன்று கேட்டு விட்டு, தீர்ப்பை மட்டும் மற்றொரு நாளுக்கு ஒத்தி வைப்பார்கள். இந்த விசாரணை நீதிபதி லெகாத் (Justice Leggatt) மற்றும் நீதிபதி பாப்பல்வெல் (Justice Popplewell) முன் நடக்கப் போகிறது" என முன் கூட்டியே சொல்கிறார்கள் (Vijay Mallya) விஜய் மல்லையாவை எதிர்த்து, இந்திய அரசு தரப்பில் வாதாடிக் கொண்டிருக்கும் வழக்கறிஞர்கள்.
மேல் முறையீடு
ஒருவேளை இதுவரையான வழக்கு விசாரணைகளில், ஏதாவது சில சாட்சியங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் விசாரிக்கப்பட்டிருந்தால் மற்றொரு மேல் முறையீடு (Appeal) கொடுக்கப்படலாம் என்கிறார்கள் சட்ட நிபுணர்கள். இன்று (Vijay Mallya) விஜய் மல்லையாவின் வழக்கை (appeal)மேல் முறையீடாகக் கருதாமல், வெறும் ஒரு நாள் (Oral Hearing) வாய் வழி விசாரணையாகத் தான் எடுத்துக் கொண்டிருக்கிறது வேல்ஸ் நீதிமன்றம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாய்ப்பு 1
அப்படி இந்த வாய் வழி விசாரணை (Vijay Mallya) விஜய் மல்லையாவுக்கு சாதகமாக தீர்ப்பானால், மீண்டும் வழக்கம் போல உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து வழக்கு நடைபெறும். அப்படி இல்லை என்றால் இது தான் (Vijay Mallya) விஜய் மல்லையாவின் கடைசி சட்ட வாய்ப்பாக இருக்கும் என்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.
வாய்ப்பு 2
ஒருவேளை இந்த வாய்வழி விசாரணையும் (Vijay Mallya) விஜய் மல்லையாவுக்கு எதிராக வந்தால், இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தை நாடலாமாம். பொதுவாக இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளை விசாரிக்க எடுத்துக் கொள்வார்களாம். ஆக விஜய் மல்லையாவின் வழக்கையும் ஒரு பொது நல வழக்காக கருதி இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.
வாய்ப்பு 3
அது போக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தையும், (Vijay Mallya) விஜய் மல்லையா தப்பிக்கும் வழிகளில் ஒன்றாக வைத்துக் கொள்ளலாம் என்கிறார்கள் சட்ட நிபுணர்கள். காரணம், இங்கிலாந்து இன்னும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விடுவிக்கப்படவில்லை. அதாவது பிரெக்ஸிட் இன்னும் முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை. ஆகையால் இன்னமும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்கும் இங்கிலாந்து ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்துக்கு உட்பட்டே நடந்து கொள்ள வேண்டி இருக்கும் என்கிறார்கள்.
வாய்ப்பு 4
Representation என ஒரு வழி இருக்கிறதாம். இதையும் (Vijay Mallya) விஜய் மல்லையா பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பிருக்கிறதாம். இந்தியாவில் 1993 சூரத் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட டைகர் ஹனீஃப் என்பவர் சட்ட ரீதியாக எல்லாவற்றிலும் தோற்ற பிறகு, இந்த Representation முறையைப் பயன்படுத்தி இருக்கிறார். இன்று வரை டைகர் ஹனீஃப் விவகாரத்தில் முடிவு செய்யாமல் காத்திருக்கிறது இங்கிலாந்து உள் துறை அமைச்சகம். அதே போல மல்லையாவும் புதிய ஆதாரங்களைச் சமர்பித்து Representation கோர வாய்ப்பிருக்கிறதாம். கோரினால் டைகர் ஹனீர் போல மல்லையாவுக்கு இந்திய அரசு காத்திருக்க வேண்டி இருக்கும் என்கிற டைகர் ஹனீஃபின் Representation.
ஆக இத்தனை கெடுபிடிகளுக்குப் பின்னும் மல்லையா தப்பிக்க கொஞ்சம் வழி இருப்பது போலத் தான் தெரிகிறது. (Vijay Mallya) விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வந்து வட்டியும் முதலுமாக கடனை வசூலித்தால் சரி.
நடிகர் விஜய் சேதுபதி புகழ் ஏற ஏற ஆளே மாறிவிட்டார். அவரின் தன்னடக்கம் இப்போது புள்ளி அளவில் கூட இல்லை. என்னவோ உச்ச நடிகர் என்கிற கனவில் மிதக...
நடிகர் விஜய் சேதுபதி புகழ் ஏற ஏற ஆளே மாறிவிட்டார். அவரின் தன்னடக்கம் இப்போது புள்ளி அளவில் கூட இல்லை. என்னவோ உச்ச நடிகர் என்கிற கனவில் மிதக்கிறார் என்று இன்டஸ்ட்ரியில் பேசிக்கறாங்க.
அவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த சிந்துபாத் படம் பல ஊர்களில் சனிக்கிழமை காலைக் காட்சிகள்தான் வெளியானதாம். அதுவும் கூட கூட்டமில்லாமல் காற்று ஓடியதால்தான் என்றும் கூறுகிறார்கள்.
இவர் கதை இப்படி இருக்க, ஏற்கனவே இரண்டு படப்பிடிப்புக்களில் இருக்கும் விஜய் சேதுபதி, ஒரு தயாரியப்பாளரிடம் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒரு படம் தயாரிக்க பேசி இருக்காராம்.
சச்சின் டெண்டுல்கர் கால்ஷீட்டா
அந்த தயாரிப்பாளரை சந்திச்சு, கிரிக்கெட் விளையாட்டை மையமா வச்சு ஒரு படம் எடுக்க கதை தயாரா இருக்கு. 30 கோடி ரூபாய் பட்ஜெட்.கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கால்ஷீட் ரெண்டு அல்லது மூணு நாட்களுக்கு கேளுங்கன்னு சொல்லி இருக்காராம். முப்பது கோடி ரூபாய் பட்ஜெட்டில் சச்சின் கால்ஷீட்டுமான்னு தயாரிப்பாளர் மயங்கி விழாத குறைதான்.
விஜய சேதுபதி எதுக்கு
ஏன், எதுக்காக விஜய் சேதுபதி இப்படி மாறிட்டார். அதிகப் படங்கள் நடிச்சு எண்ணிக்கையை கூட்டணும்னு இந்த வேலை செய்யறாரா... இல்லை உண்மையிலேயே மனுஷனுக்கு நாட்டு நடப்பு தெரியலையான்னு அவரை சுத்தி உள்ளவங்க குழம்பிப் போயி இருக்காங்களாம். அதுவும், இவரை வச்சு படம் எடுத்து நஷ்டம் அடைந்த தயாரிப்பாளர், ஒரு படம் பண்ணிகுடுங்கன்னு கேட்டதன் விளைவுதான் இதுன்னு சொல்றாங்க.
பணத்துக்காக நடிக்க வந்து
பிகாம் படிச்சு இருக்கும் விஜய் சேதுபதி, எங்கெல்லாமோ வேலை பார்த்துட்டு, கடைசியாத்தான் சினிமாவில் நடிச்சா நல்லா பணம் சம்பாதிக்கலாம்னு இந்த பக்கம் வந்தவர். சின்னத் திரை, குறும் படம் திரைப்படம்னு இப்போ நினைச்சபடி பெரிய ஆளாயிட்டார்.பணமும் கை நிறைய சம்பாதிக்கிறார்.
தயாரிப்பாளர் கஷ்டத்தில்
நம்மால் நஷ்டப்பட்ட தயாரிப்பாளர், நஷ்டத்தை சரிக்கட்ட ஒரு படம் பண்ணித் தாங்கன்னு கேட்கறப்போ, அவர்கிட்டே போயி முப்பது கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் எடுங்கன்னு சொன்னதும் தப்பு. அதோட சச்சின் கால்ஷீட் ரெண்டு மூணு நாளைக்கு கேளுங்க படத்தை நல்லா எடுக்கலாம்னு சொன்னதும் எவ்ளோ பெரிய தப்பு. சச்சின் கால்ஷீட் வாங்குவது என்பது அவ்வளவு எளிதானதா?
இவ்வளவு சின்ன பிள்ளைத் தனமாவா விஜய் சேதுபதி இருப்பார்...!
நடிகர் விஜய்யின் ஐடி கார்டு ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த...
நடிகர் விஜய்யின் ஐடி கார்டு ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பிகில். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில், விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் மூன்று போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்நிலையில், படத்தில் விஜய்க்கு கொடுக்கப்பட்ட ஐடி கார்டு இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் விஜய் புகைப்படத்துடன் மைக்கேல் என்ற பெயரும், தலைமை பயிற்சியாளர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை ரசிகர்கள் பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
Follow Us