Home Top Ad

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி பொழுது போக்கான சானல்களில் அறிவுப்பூர்வமான ஒரு நிகழ்ச்சியாக வலம் வந்தது. இந்நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருந்து...

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி! அடுத்த சீசனின் தொகுப்பாளர் இந்த பிரபல நடிகர் தானாம்

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி பொழுது போக்கான சானல்களில் அறிவுப்பூர்வமான ஒரு நிகழ்ச்சியாக வலம் வந்தது. இந்நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருந்து வந்தது. இதில் சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டார்கள்.

ஹிந்தியில் இந்நிகழ்ச்சியை அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கினார். அடுத்து தமிழிலும் வந்தது. சூர்யா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். கன்னடத்தில் கடந்த 2015ல் இந்நிகழ்ச்சி தொடங்கியது.

முதல் இரண்டு சீசன்களை அங்குள்ள பிரபல நடிகர் புனித் ராஜ் குமார் தொகுத்து வழங்கினார். தற்போது இதன் அடுத்த சீசனை பிரபல நடிகர் ரமேஷ் அரவிந்த் தொகுத்து வழங்கவுள்ளாராம்.

இதை அவரே தன் ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார். பாலசந்தர் இயக்கத்தில் மனதில் உறுதி வேண்டும் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தவர்.

0 coment�rios:

பாகுபலி... இந்த ஒற்றை வார்த்தையை சொன்னால் சின்னாளப்பட்டி முதல் சீனா வரை உள்ள அனைவருக்கும் ஞாபகம் வருவது பிரமாண்டம்தான். அந்தளவிற்கு உலகளவில...

"மகிழ்மதிக்கு மீண்டும் அழைத்துச் செல்லுங்கள் ராஜமெளலி!" #1YearOfBaahubali2

பாகுபலி... இந்த ஒற்றை வார்த்தையை சொன்னால் சின்னாளப்பட்டி முதல் சீனா வரை உள்ள அனைவருக்கும் ஞாபகம் வருவது பிரமாண்டம்தான். அந்தளவிற்கு உலகளவில் தன்னை பரிட்சையமாக்கியது பாகுபலி. அசத்தல் திரைக்கதை, பிரமாண்ட காட்சியமைப்பு என்பதோடு நில்லாமல் 'கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?' என்ற ஒற்றை கேள்வியே அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. 'பாகுபலி 2' வெளியாகி ஒரு வருடம் நிறைவானதை முன்னிட்டு அந்த கதாபாத்திரங்கள் பற்றியும் படத்தைப் பற்றியும் சின்ன ஃப்ளாஷ்பேக்.

பாகுபலி - பிரபாஸ் :

அமரேந்திர பாகுபலியின் அசத்தல் என்ட்ரியே படத்தை வேற லெவலுக்கு அழைத்துச்சென்றது. போர் காட்சிகளில் தேவசேனாவுக்கு 'நா விரல், பிடித்ததும் மறுமுகம்' என்று எதிராளிகளை தாக்கும் யுக்திகளை சொல்லிக்கொடுத்து அம்பெய்தும் காட்சிகள் மாஸ் ஹிட்டானது. 'தேவசேனையை கட்டிப்போட்டு மண்டியிட செய்யுங்கள்' என்று சிவகாமி தேவி சொன்னவுடன், மின்னல் வேகத்தில் பாகுபலி மறித்து நிற்கும்போது திரையரங்குகளில் விசில் சத்தம் அதிர்ந்தது. பல்வாள்தேவனின் பட்டாபிஷேகத்தில், படைத்தளபதியாக பாகுபலியின் உடல்மொழி, வசனம், நடை என அனைத்திலும் செஞ்சுரி அடித்தார் பிரபாஸ். 'அமரேந்திர பாகுபலியாகிய நான்...'என்று பாகுபலி சொல்லும் வசனம் இந்தப் படத்தின் மாஸ் சீன்களில் முக்கியமான ஒன்று. கோட்டையைவிட்டு போகும்போதும், இறக்கும்போது தனக்கான ஸ்டைலில் 'ஜெய் மகிழ்மதி' என்று சொல்லி உயிரைவிடும் போதும் மகிழ்மதி மக்களுடன் இணைந்து படம் பார்க்கும் ஒவ்வொருவர் கண்களிலும் கண்ணீர் கசிந்தது.

பல்வாள்தேவன் - ராணா :

பார்வை, கோவம், பொறாமை என பார்ப்பவர்களும் கோவம் கொள்ளுமளவு வில்லத்தனத்தில் மிரட்டியிருப்பார் ராணா டகுபதி. தான் அரசனாகியும் மக்கள் பாகுபலியை கொண்டாடுகிறார்கள் என்ற கோவம், அப்பாவோடு சேர்ந்து ராஜமாதாவை தன் திட்டங்களால் ஏமாற்றும் காட்சிகளில் பல்வாள்தேவனின் நடிப்பு 'பலே'. இறந்த பிறகும் பாகுபலியை வெட்டி தன் வெறியைத் தீர்த்துக்கொள்ளும் பல்வாள்தேவன் ரோலில் அரக்ககானாகவே வாழ்ந்தார் ராணா. மகேந்திர பாகுபலியை பார்த்தவுடன் 'உன் தந்தையின் மூச்சு என்னால் நிற்கவில்லை என்ற குறை என்னை நிம்மதியாக வாழவிடவில்லையடா', 'என் கைகளால் உன் இதயத்தை பிய்த்து எரிவதற்காவே இங்கு வந்திருக்கிறாய்' என  தலைமுறை கடந்து கோவத்தை காட்டும் பல்வாள்தேவன் மகிழ்மதியின் ஆகச்சிறந்த வில்லன்.

கட்டப்பா - சத்யராஜ் :

இந்த ஒரு மனிதனின் பதிலுக்காகத்தான் இரண்டு வருடம் காத்திருந்தோம். 'நாயல்லவா, அதான் மோப்பம் பிடித்தேன்' என்ற வசனத்தை பேசிவிட்டு திரும்பி பார்க்காமல் வரும்போது 'கட்டப்பா டா' என்று அவரை புகழ ஆரம்பித்தது அரங்கம். பாகுபலியுடன் இணைந்து சண்டை போடும் காட்சியிலும் கட்டப்பா சிக்ஸர் அடித்திருப்பார். மகிழ்மதிக்கு விஸ்வாசமாக இருக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காக கணத்த மனதுடன் பாகுபலியை கொன்று 'என்னை மன்னித்துவிடு பாகு'  என்று அழும்போதும், 'தவறு செய்துவிட்டாய் சிவகாமி' என்று உண்மையை சொல்லி தன் ஆதங்கத்தை கொட்டும்போதும் கட்டப்பா நடிப்பில் இருக்கும் உயிர்ப்பு அவருக்கான அனுபவத்தைக் காட்டும். மொத்தத்தில் கட்டப்பா இந்த கதையின் இரும்பு மனிதன் என்றே சொல்லலாம்.

ராஜமாதா சிவகாமி தேவி - ரம்யா கிருஷ்ணன் :

ராஜ நடை, சத்ரிய தர்மம் பேசும் கம்பீரம் என ஒரு தாயாகவும் நாட்டின் ராஜமாதாவாகவும் ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு அபாரமாக இருக்கும். வீரமான பெண் என்பதைத் தாண்டி ரம்யா கிருஷ்ணனை வேறொரு பரிமாணத்தில் காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குநர். 'சிவகாமியின் மருமகளுக்கு கொஞ்சம் அகந்தை அழகுதான்', 'நீ கொல்லப்போகிறாயா நான் கொல்லவா?' என்று வசனங்களின்போது, இவர் கண்களும் பேசும். முதல் பாகத்தில் குழந்தையுடன் இவர் நிலைத்தடுமாறி வரும் காட்சியைப் பார்த்த நமக்கு இந்தப் பாகத்தில் 'உங்கள் புதிய அரசன் மகேந்திர பாகுபலி' என கைக்குழந்தையைக் காட்டும் காட்சி ஆல் டைம் ஃபேவரைட்டாக இருக்கிறது. 

பிங்களத்தேவன் - நாசர் :

'தாயின் நாய் வருகிறது', 'தாயை கொன்றுவிடலாமா?', 'உன் தியாகத்துக்கு இவன் கொடுக்கும் பெயர் தவறு...' போன்ற வசனங்களிலும், இந்த நாட்டை ஆள ஒரு இரும்புக்கை போதாதா? என தூணை உடைக்கும் காட்சியில் தனக்கான பலத்தையும், விரக்தியையும், வெளிப்படுத்துவதிலும் அப்ளாஸ் அள்ளினார் நாசர். தன் ராஜ தந்திரத்தால் ராஜமாதாவையே நம்ப வைத்து பாகுபலியை கொல்ல சொல்லும் போது அவர் நடிப்பில் அத்தனை யதார்த்தம். 'உயிருடன் இருக்கும் வரை அவன் எங்கிருந்தாலும் அரசன்' என்று வஞ்சகத்திலே வாழும் பிங்களத்தேவன் உண்மையில் தி கிங் மேக்கர்.

தேவசேனா - அனுஷ்கா :

'அழகே பொறாமைப்படும் பேரழகி' என ரம்யா கிருஷ்ணன் அனுஷ்காவை சொன்னது நூறு சதவிகிதம் உண்மை என்பது முதல் காட்சியிலேயே புரிந்துகொள்ள முடியும். 'என் வாளை அனுப்பிவைக்கிறேன். உங்கள் மகனை அலங்கரித்து என் வாளுக்கு தாலி கட்டவைத்து அவனை குந்தல தேசத்துக்கு அனுப்புங்கள். நான் பத்திரமாக பார்த்துக்கொள்கிறேன்' என்று அனைவரும் கண்டு அஞ்சும் ராஜமாதாவுக்கு எதிராக பதில் கடிதம் அனுப்பும் குந்தல தேசத்து யுவராணியாக மெர்சல் காட்டியிருப்பார். அம்பு எய்தும் காட்சிகளில் தன் திறமையையும் எய்து அனைவரின் மனதிலும் இடம்பிடித்தார். சேதுபதியின் விரல்களை வெட்டிய காட்சியில் 'சூப்பர் தேவசேனா' என அரங்கமே அவருக்கு ஹாட்ஸ் ஆஃப் செய்தது.

ஹைலைட்ஸ் வசனங்கள் - மதன் கார்க்கி:

"காலம் ஒவ்வொரு கோழைக்கும் வீரனாக ஒரு கணம் கொடுக்கும். அந்த கணமிது"

"மூச்சைப் படைப்பவன் தேவன்; மூச்சை நீட்டிப்பவன் வைத்தியன்; மூச்சைக் காப்பவனே சத்ரியன்".

"சூரியன் மேற்கில் உதிக்காது; ஆனால் அதை கிழக்கில் புதைக்கலாம்"

"வஞ்சகனின் தீஞ்செயலைவிட நல்லவனின் மெளனம் மிகவும் கொடியது "

"பெண்கள் மீது கை வைத்தால் வெட்ட வேண்டியது விரல்களை அல்ல. தலையை..."

"இந்தப் பிண்டத்தின் அழுகையை நிறுத்தினால்தான் அண்டத்தில் அமைதி நிலவும். நசுக்கி விடு சிவகாமி"

"இதுவே என் கட்டளை; கட்டளையே சாசனம்" போன்ற வசனங்களில் தன் பங்கிற்கு வெளுத்து கட்டியிருப்பார் மதன் கார்க்கி.

பாகுபலி 2

பாகுபலி 2 சுவாரஸ்யங்கள் :

    4K ஃபார்மெட்டில் வெளியான முதல் இந்திய திரைப்படமாக அமைந்தது.
    இந்தப் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளை நான்கு விதமாக எடுத்து வைத்திருந்தாராம் இயக்குநர் ராஜமெளலி.
    2000க்கும் மேற்பட்ட நபர்களை வைத்து மகிழ்மதி சாம்ராஜ்யத்தை கட்டமைத்தார் கலை இயக்குநர் சாபு சிரில்.
    இப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளுக்காக மட்டும் 30 கோடி செலவு செய்து காட்சிப்படுத்தினார்கள்.
    2500க்குமான VFX காட்சிகளை வைத்தது மட்டுமல்லாமல் உலகில் பல்வேறு இடங்களில் இருந்து இதற்காக பணிபுரிந்திருக்கிறார்கள்.
    பிரபாஸ் - ராணா இருவரும் இந்தப் படத்திற்காக 100 கிலோ வரை தன் எடையை கூட்டினார்கள்.
    இந்தப் படத்திற்கு பிறகு பாகுபலி, கட்டப்பா கேரக்டர்களுக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டது.
    'பாகுபலி' படத்திற்காக ஐந்து வருடங்களாக வேறு எந்தப் படத்திலும் கமிட்டாகாமல் இருந்தார் பிரபாஸ்.

இது தவிர, பாடலிலும், பேக் க்ரவுண்ட் ஸ்கோரிலும் நம்மை கதைக்குள் மூழ்கடித்திருப்பார் மரகதமணி. நினைத்து பார்க்க முடியாத அளவில் சண்டை காட்சிகள் அமைத்து தேசிய விருதை தட்டிச்சென்றார் கிங் சாலமன். மகிழ்மதி சாம்ராஜ்யம், குந்தல தேசம், பிரமாண்ட போர் காட்சிகள் என விஷுவல் எஃபெக்ட்ஸில் கலக்கி தன் பங்கிற்கு படத்தை அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றதில் பெரும் பங்கு கமலக்கண்ணனைச் சாரும். தான் நினைத்ததை மிக நேர்த்தியாக சொல்லி, பிரமாண்டமே பார்த்து வியந்து போகுமளவிற்கு பிரமாண்டமாக இயக்கிய இயக்குநர் ராஜமெளலி இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த படைப்பாளி என்பதில் ஐயமில்லை.

168 நிமிடங்கள் மகிழ்மதி சாம்ராஜ்யத்திற்கு நம்மை அழைத்துச் சென்ற ராஜமெளலிக்கு பிக் சல்யூட்...

0 coment�rios:

உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின்...

நீரிழிவு நோயாளிகள் பயமின்றி சாப்பிடக்கூடிய உணவுகள்! உடனே பகிருங்கள்

உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான்.

மேலும் இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இல்லாவிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

நீரிழிவு நோயாளிகள் ஒருசில உணவுகளை சாப்பிடுவதன் மூலம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவில் பாதிப்பை ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ளலாம்.

இப்போது நீரிழிவு நோயாளிகள் பயமின்றி நிம்மதியாக சாப்பிடக்கூடிய சில உணவுகளை பார்ப்போம்.
சாப்பிடக்கூடியவை

    காய்களையும், கீரைகளையும் சாப்பிடலாம். பீட்ரூட், கேரட் அளவோடு சாப்பிடலாம்.
    ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு, பேரிக்காய், மாதுளை, சாத்துக்குடி, பப்பாளி, திராட்சை.
    மோர், பசும்பால், கொழுப்பு நீக்கப்பட்ட பால், கோழிக்கறி, மீன்(வறுக்கக்கூடாது), முட்டையின் வெள்ளைக்கரு.
    சூரியகாந்தி எண்ணெய், தவிட்டு எண்ணெய், நல்ல எண்ணெய், ஆலிவ் எண்ணெய் (ஒரு நபருக்கு மாதம் ½ லிட்டர் என்ற அளவில்).
    டீ, காபி (அளவோடு), வெள்ளரி, முளைகட்டி பாசிப்பயிறு, சுண்டல், முந்திரி, பாதாம், வால்நட்.

சாப்பிடக்கூடாத உணவுகள்

    உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பரங்கிக்காய்.
    வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், அன்னாசிப்பழம், சீத்தாப்பழம், சப்போட்டா பழம், தர்பூசணி, பேரிட்சை.
    எருமைபால், பாலாடை, தயிர், வெண்ணெய், நெய், பால்கோவா.
    ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, பன்றிக்கறி, ஈரல், மூளை, முட்டையின் மஞ்சள் கரு, தேங்காய் எண்ணெய், வனஸ்பதி, பாமாயில், குளிர்பானங்கள்.
    சர்க்கரை, வெல்லம், இனிப்பு பலகாரங்கள், சிப்ஸ், வடை, முறுக்கு, பூரி, சமோசா போன்ற எண்ணெயில் பொரித்த பலகாரங்கள், பிரட், பன், கேக், பப்ஸ், ஐஸ்கிரீம், நெய்பிஸ்கட், மிளகாய் சாஸ், தக்காளி சாஸ், ஊறுகாய், தேங்காய், வேர்கடலை.

0 coment�rios:

'நீயா நானா கோபிநாத்' - இவரை அறியாதவர்கள் இருக்க முடியாது.  'நீயா நானா' தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் இன்று உலகம் முழுக்க...

"மகிழ்ச்சியாளராக இருந்தால்தான் வெற்றியாளராக முடியும்!’’ - ஸ்ட்ரெஸ் ரிலீஃபுக்கு `நீயா? நானா?’ கோபிநாத் டிப்ஸ்!

'நீயா நானா கோபிநாத்' - இவரை அறியாதவர்கள் இருக்க முடியாது.  'நீயா நானா' தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் இன்று உலகம் முழுக்க இருக்கும் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் எனப் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாகத் திகழ்பவர். ஆழமாகவும், ஆர்வம்  குறையாமல் பிறர் கேட்கும் வகையிலும் பேசுவதில் வல்லவர். மன அழுத்தம் ஏற்பட்டால், எந்தெந்த வழிமுறைகளைக் கையாண்டு அதிலிருந்து விடுபடலாம் என்பது குறித்து விளக்குகிறார் கோபிநாத்...

``மன அழுத்தத்தைப் பத்தி  இன்னிக்கி நாம பேசக்கூடிய விஷயங்கள்தான் அதிகமாக  மன அழுத்தத்தை உண்டு பண்ணுதோனுகூட ஒரு வியூ இருக்கு. எல்லா காலகட்டத்திலுமே மனுஷனுக்கு மன அழுத்தம் ஏற்படுறது உண்டு. ஆனா, அதை ஒரு மனுஷன் எப்படி எடுத்துக்கிறான்கிறதுதான் முக்கியம்.  எளிதாக அதைக் கடந்துபோவது ஒண்ணு. மன அழுத்தங்கிறதுக்கு அளவுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து சிக்கலாக்கிக்கொள்றது இரண்டாவது வகை.  உலகம் பரபரப்பாக இயங்குகிறபோது, மனிதன் தன்னை எப்படி ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டும் என்கிற கருத்தியல்கள் இயல்பாகவே ஏற்படும். அதில் ஒன்றுதான், நம் மனத்தை நாம் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதும்.  மன அழுத்தம் ஏற்படுவதற்கு சில காரணங்கள் இருக்கு. அவரவர் சார்ந்திருக்கும் வேலை; அவரவரின் புறச்சூழ்நிலைகள் மற்றும் அவரது 'அகம்' என்னும் மனம்.

அந்த மனம், அதனுடைய கேரக்டர்... அது எவ்வளவு தூய்மையாக இருக்குங்கிறது ஒரு முக்கிய விஷயம். அதில் நாம் என்னென்ன விஷயங்களைத் தேக்கிவைத்து சிக்கலாக்கிக்கொள்கிறோம்கிறது, இன்னும் முக்கியம்.
மன அழுத்தம்கிறது ஏதோ வெளியிலேர்ந்து வந்து நம்மைத் தாக்குதுங்கிற ஒரு பிம்பத்தை நாமாகக் கட்டமைச்சுக்கிட்டு, 'மலையில போய் தியானம் பண்றது', 'கோயில்ல போய் உட்கார்ந்திருக்கிறது', 'கதவைச் சாத்திக்கிட்டு அமைதியாக இருக்கிறது', 'சோகப் பாடல்கள் கேட்கிறது'னு நாமே ஒரு  ஸ்டேண்டர்டு ஆஃப் லிஸ்ட் இருக்குற ஒரு டெம்ப்ளேட் வெச்சிருக்கோம். அப்படியெல்லாம் மன அழுத்தத்துக்கு நிரந்தரமான தீர்வு இருக்கானு தெரியலை.

முதல்ல மன அழுத்தத்தை வெளியில இருந்து பார்க்கிறதைவிட நமக்குள்ள, அகம் சார்ந்து பார்க்கிறதுங்கிற வழிமுறையை நாம் கையாண்டால் நன்றாக இருக்கும். நம்ம மனசு எவ்வளவு சுத்தமா இருக்கு? முதல் கேள்வியா இதை நாம கேட்டுக்கணும்.
மன அழுத்தம்கிறது தேவையான காரணங்களுக்காகத்தான் வருதானு முதல்ல பார்க்கணும். நமக்கு இருக்கும் பொறுப்புகள், வேலைகள், பொருளாதார நெருக்கடிகள், நம் எதிர்காலக் கடமைகளுக்காக அது வருதுன்னா தப்பில்லை. இருக்கட்டும். அந்த மன அழுத்தம்தான் ஒரு மனுஷனை அடுத்தநிலைக்கு எடுத்துக்கிட்டுப்போகும்.

எவனோ ஒருத்தனுடைய வெற்றி நமக்கு மன அழுத்தம் கொடுக்குதுன்னா அது நம்ம சிக்கல்தானே ஒழிய, அவன் சிக்கல் இல்லை. நமக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு விஷயத்துக்காக பொறாமையின் காரணமாக நமக்கு மன அழுத்தம் வருதுன்னா நம்ம மனசைத்தான் நாம சரி பண்ணணுமே தவிர, மன அழுத்தத்தைச் சரிபண்ண முடியாது.  மனதைச் சரிசெய்வதன் மூலமாகத்தான் மன அழுத்தத்தைச் சரிசெய்ய முடியும். மன அழுத்தம்கிறது வெறும் ரீ- ஆக்‌ஷன் மட்டும்தான். கடந்த 25 ஆண்டுகளாக இதற்குத்தான் நாம பதில் சொல்லிக்கிட்டிருக்கோம். ஆனால், அதனுடைய வேர் என்னங்கிறதைத்தான் பார்க்கணும்.

என் மனசளவுல எந்த அளவுக்கு நான்  சுத்தமா இருக்கேங்கிறதுதான் மிக முக்கியமான முதல் கேள்வி. அது இல்லாதபட்சத்துல சிக்கல்கள்தான் உண்டாகும். வேலை காரணமாக உங்களுக்கு ஒரு சின்ன பிரஷர் இருக்குன்னா அதை உள்வாங்கிக்கங்க. அதுதான் உங்களை அடுத்த லெவலுக்கு எடுத்துக்கிட்டுப் போகும். இன்னிக்கு எல்லாருக்குமே அவங்கவங்க லெவலுக்கு ஸ்ட்ரெஸ் இருக்கு. ஸ்ட்ரெஸ்ங்கிறதை வேற மாதிரியும் எடுத்துக்கலாம். அது நாம பார்க்கும் வேலையாக இருந்தால் அதைப் பத்திக் கவலைப்படாதீங்க. அதுதான் உங்களுடைய பொறுப்பு. அது குறித்து உங்களுக்கு இருக்கிற பயம் நல்லது. ஆனால், அந்தப் பயம் அதிகமாகிவிடக் கூடாது.

அடுத்தவங்களோட கம்பேர் பண்ணி பார்த்துட்டு, அடுத்தவனோட வெற்றியாலே நமக்கு ஸ்ட்ரெஸ் ஏற்பட்டுச்சுன்னா அது தப்பு. 'அவனுக்கு உண்டானது அவனுக்கு... நமக்கு உண்டானது நமக்கு'னு போயிடணும். அவனைப்போல நாமும் வெற்றி பெறணும்னா நம் மன அமைப்பைத்தான் மாத்திக்கணும்.

'எதிர்த்த வீட்டுக்காரன் கார் வாங்கிட்டான்; பக்கத்து வீட்டுக்காரன் வீடு கட்டிட்டான்; நம்ம சொந்தக்காரங்க எல்லாம் நல்லா இருக்கானுங்க; நாம மட்டும் இப்படியே இருக்கோம்'னு நினைச்சோம்னா அங்கே வந்து மன அழுத்தம் உட்கார்ந்துக்கும். இப்படி நமக்கு ஏற்படுற இந்த மனஅழுத்தத்தை 'ஸ்ட்ரெஸ்'ங்கிற பேர்ல பூதாகரப்படுத்துறாங்க. ஸ்ட்ரெஸ்ங்கிறதைவெச்சு இப்போ மிகப் பெரிய அளவுல வணிகம் நடக்க ஆரம்பிச்சிடுச்சு. ஸ்ட்ரெஸுக்குத் தீர்வாக உங்களைத் தனிமைப்படுத்திக்கிட்டு, வித்தியாசமான வழிமுறைகள் மூலமாகத் தீர்வு கிடைக்கும்கிறதை நான் நம்பலை. உளவியல்ரீதியாக எனக்குத் தெரியாது.

இயல்பாகவே எனது பணியின் காரணமாக, சமூகத்தின் பல அடுக்குகளில் வாழும் பலதரப்பட்ட மனிதர்களை நான் சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கிறதால நான் சொல்றேன்... ஒரு கூட்டுச் சமூகமான இந்தச் சமூக அமைப்புல மனிதர்களுடன்தான் பழகணும்.
வழக்கமாக செய்கிற காரியங்களைச் செய்யாமல், மற்றவர்களுக்கு மன மகிழ்ச்சி தரும் செயல்களைச் செய்ய ஆரம்பிச்சாலே, உங்களுடைய மன அழுத்தம் தானாகப் போய்விடும். ஆனால், நமக்கு மனநிறைவைத் தருகிறச் செயல்களைச் செய்தால்தான் மன அழுத்தம் போகும் எனத் தவறாக நினைத்துக்கொள்கிறோம்.

நமக்கு மனநிறைவைத் தருகிற செயல் எதுன்னு தெரிஞ்சிட்டாலே, நமக்கு மன அழுத்தம் வராது. ஆனால், மன அழுத்தத்தை பிசினஸ் மாதிரி ஆக்கிட்டாங்க.

`இன்னிக்கு பொறந்த குழந்தையில் இருந்து வயசானவங்க வரைக்கும் ஸ்ட்ரெஸ் இருக்கு. இது போகணுமா? எங்கக்கிட்ட வாங்க. நாலு நாள்  பேக்கேஜ்ல டூர் போங்க'னு சொல்றாங்க. 'எங்க முகாமுக்கு வாங்க’ங்கிறாங்க. `எங்க ஃபுட்டை சாப்பிடுங்க'னு பிசினெஸா பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.செயற்கையாக ஏற்பட்ட மன அழுத்தத்துக்கு செயற்கையான தீர்வுகளைத் தேடிப்போகிற நிலைதான் இங்கே இருக்கு. அதெல்லாம் தேவையே இல்லை. இதற்கான தீர்வு இங்கேயே இருக்கு.

உங்களுக்கு ரொம்ப மன அழுத்தமா இருக்கா? ஒண்ணும் வேணாம். வீட்டுல ஞாயிற்றுக்கிழமை குடும்பத்துல இருக்குறவங்களோட சந்தோஷமா மனம்விட்டுப் பேசுங்க. ஒரு ஆணாக இருக்கும்பட்சத்தில் உங்க குழந்தைக்கு, மனைவிக்கு  நீங்க சமைச்சுப்போடுங்க. அதுவே பெரிய ரிலாக்சேஷனாக இருக்கும்.

மூணு வேளையும் நல்ல சோறு கிடைக்காம, எத்தனையோ  விவசாயிங்க  நித்தமும் செத்துப் பிழைக்கிறாங்க. பட்டினி கிடக்கிறாங்க. நம்மால் வெளியில தலைக்காட்ட முடியாத வெயில்லதான் வியர்வை வழிய,  தார் ரோட்டுல பலர் வேலை பார்க்கிறாங்க. அவங்களுக்கில்லாத மன அழுத்தம் நமக்கு என்ன இருக்கப் போகுது?

`நம்ம குழந்தை எதிர்காலத்துல என்னவா ஆகப் போகுதோ?’னு நினைக்கிற பேரன்ட்ஸுக்கு இல்லாத மன அழுத்தம் அந்தப் பிள்ளைக்கு என்ன வந்திடப் போகுது? அதாவது, வளர வளர `கஷ்டப்பட்டுக் கவலைப்படுறது’ங்கிற இடத்துக்கு நாம வந்துட்டோம். மன அழுத்ததுக்குத் தீர்வாக நீண்டகாலமாக நம்பிக்கிட்டு இருக்கிற விஷயத்துக்கு எதிராக நான் பேசுறதா நினைக்காதீங்க.
மன அழுத்தம் நம்மோட இலக்குல ஃபோகஸ் குறையும்போது வரும். இலக்கு இல்லாதபோது நமக்கு பயம் வரும். அந்த பயத்தை வெல்வது எப்படி?

நம்ம வாழ்க்கைக்குள்ளேயே, மன அழுத்தத்தைப் போக்கக்கூடிய செட்அப் இருந்துச்சு. ஆனா, அதை நாம கொஞ்சம் கொஞ்சமா துண்டிச்சிட்டோம். நம்ம உலகம், நம்ம ஆபீஸ், நம்முடைய கேபின்-னு இருக்க ஆரம்பிச்சிட்டோம்.
உலகம் கைக்குள்ள வந்துடுச்சு. அமெரிக்காவுல இருக்கிறவங்களோட ரொம்ப ஈஸியாப் பேசுறோம். ஆனா, நம்ம ஃப்ரெண்ட்ஸோட பேச மறந்துப் போயிடுறோம். அவங்க எண்ணிக்கையும் குறைஞ்சிடுச்சு. உறவுகள் சுருங்கிப் போச்சு. சொந்த ஊர்ல நடக்கிற நல்லது கெட்டதுக்குப் போயிட்டு வர்றது குறைஞ்சிடுச்சு. 'என்னடா பண்றே... சும்மாதான் இருக்கியா... வீட்டுக்கு வாடா'ங்கிற டயாலாக்கே குறைஞ்சு போச்சு.

மனிதர்கள் ஓர் இடத்தில் ஒன்றாகக் கூடும்போது லைஃபில் ஒரு கூட்டமைப்பு உருவாகும். தனித் தனியாகப் போகும்போது  மனச்சுமை குறையாது. அதனாலதான் கல்யாணம், காதுகுத்து, திருவிழாவிலெல்லாம் மனிதர்கள் ஒன்றாகக் கூடினார்கள்.
`கவலைப்படாதே மாப்ளே! உன் பிரச்னையை என்கிட்ட விடு. நான் பார்த்துக்கிறேன்'னு மாமா சொல்றார்னா, அவர் தீர்த்துவைக்கிறாரோ இல்லையோ நமக்கு அதுல ஒரு தெம்பு கிடைக்கும்.

சமீபத்துல உறவுகள் பற்றிய ஒரு நிகழ்ச்சியில, `உங்களால மறக்க முடியாத வார்த்தை எது?’னு கேட்டப்போ ஒரு அம்மா, 'எல்லாத்தையும் இழந்துட்டு கஷ்டப்பட்டு நின்னப்போ, சொந்தக்காரங்க `கவலைப்படாதே, நாங்கல்லாம் இருக்கோம்'னு சொன்னாங்க. அந்த வாக்கியத்தைத்தான் என்னால் மறக்க முடியாது’ன்னாங்க. அப்படிப்பட்ட உறவுகளையெல்லாம் துண்டித்துவிட்டு எனக்கு மன அழுத்தமாக இருக்குன்னா என்ன செய்ய முடியும்?

    `மன அழுத்தத்தைப் போக்க டிப்ஸ் இருக்கா?’னு கேட்டா, இருக்கு. இது முழுவதும் வொர்க்அவுட் ஆகும்னு சொல்ல முடியாது. ஆனா, ஓரளவு நிச்சயம் சரிபண்ணும்'' என்று கூறிய கோபிநாத், சில டிப்ஸ்களையும் வழங்கினார்.

* சின்னச் சின்ன வேலைகளாக இருந்தாலும், அதைத் தள்ளிப் போடாதீர்கள். உடனுக்குடன் செய்து முடியுங்கள். இல்லையென்றால், அவை ஒவ்வொன்றாகச் சேர்ந்து பெரிய சுமையாக மாறி நிற்கும்.

* இன்றைக்கு மன அழுத்தம் தரக்கூடிய மிகப்பெரிய விஷயம், கடன். 'ஒரு காலத்தில் சேமிப்பில் வளருங்கள்' என்று சொன்னார்கள். 'இன்று கடனில் வளருங்கள்'னு சொல்கிறார்கள். ஒரு சதவிகிதம், இரண்டு சதவிகிதங்கிறதுக்கு ஆசைப்பட்டு கடன் வாங்காதீர்கள். வருமானத்துக்குள் செலவு செய்து வாழப் பழகுங்கள். திடுதிப்பென ஒரு போனஸோ, இன்சென்ட்டிவோ கிடைத்தால், உடனே அதைக்கொண்டு ஒரு கடனை அடைத்துவிடுங்கள். அது உங்களுக்கு பெரும் நிம்மதியைத் தரும். உளவியல்ரீதியாக உங்களுக்குத் தைரியம் கொடுக்கும்.

* உங்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய விஷயங்களாகச் செய்யுங்கள். பாதுகாப்பு தரக்கூடிய விஷயங்களைச் செய்யாதீர்கள்.

* என்ன ஆனாலும் சரி, 'ஞாயிற்றுக்கிழமை' என்பதை உங்களுக்காக வைத்துக்கொள்ளுங்கள்.

 * மனதை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என நினைத்தால், 24 மணி நேரமும், `வேலை... வேலை...’ என்று இருக்காதீர்கள்.அப்படிப்பட்டவர்களிடமிருந்து சிறந்த புராடக்ட் வருவதில்லை. '24 மணி நேரமும் கடினமாக உழைக்கணும் போராடணும், வெற்றியை நோக்கி நகரணும். எவர் கிவ் அப்', அப்படிங்கிறதெல்லாம் நல்ல விஷயம்தான். ஆனால், அதை ஒரு டைம் ஷெட்யூலுக்குள் கொண்டு வாங்க. 

* '24 மணிநேரமும் வேலை பாருங்க' எனச் சொல்கிறவர்கள் யாரும் அப்படிச் செய்வதில்லை. அவர்கள் காலையில் 'வாக்கிங்' போகிறார்கள். சன்டே ஃபேமிலியோடு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். வருடத்துக்கு ஒரு முறை டூர் போகிறார்கள். மாதத்துக்கொரு முறை சொந்தக்காரர்கள் கல்யாணத்துக்குப் போகிறார்கள். பிடித்த புத்தகங்களைத் தேடித்தேடி வாங்கிப் படிக்கிறார்கள். புதிய புதிய விஷயங்களை இன்னோவேட்டிவாகச் செய்து பார்க்கிறார்கள்.

*ரொம்ப சக்சஸ்ஃபுல்லாக இருக்கிறவர்களைப் பார்த்தால், அவர்களுடைய 'ஸ்டைல் ஆஃப் வொர்க்கிங்' வேறு மாதிரியாக இருக்கும். உடம்பையும் மனதையும் நல்ல நிலையில் தகுதியோடு வைத்துக்கொண்டு முழு ஈடுபாட்டுடன் ஒரு வேலையைச் செய்வார்கள். 5 மணிநேரத்தில் செய்யவேண்டிய வேலையை ஒரு மணி நேரத்தில் செய்து முடிப்பார்கள். அதைத்தான் வெற்றியாளர்கள் செய்கிறார்கள்.

* வாழ்தலின் அடிப்படை நோக்கமே வாழ்தல்தான். உங்களுக்கு வாழத்தெரியலைனா உங்களுக்கு ஆளவும் தெரியாது. நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால்தான் உங்களால் வெற்றியாளராக இருக்க முடியும். ஆனால், வெற்றியாளராக இருந்தால்தான் என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று தவறாகப் புரிந்துவைத்துக்கொண்டிருக்கிறோம்.

0 coment�rios:

பேரணி… பேரணியை விட்டால் மறியல்… மறியலை விட்டால் மனித சங்கிலி… நடுவில் அவ்வப்போது கிளர்ச்சி, பஸ் உடைப்பு என்று தமிழ்நாடு முழுக்க ஒரே மாதிரிய...

யாரும் யோசிக்காத கோணத்தில் செல்லும் கமல்!

பேரணி… பேரணியை விட்டால் மறியல்… மறியலை விட்டால் மனித சங்கிலி… நடுவில் அவ்வப்போது கிளர்ச்சி, பஸ் உடைப்பு என்று தமிழ்நாடு முழுக்க ஒரே மாதிரியான நிகழ்வுகள் நடந்து வருகிறது.

‘சிஸ்டம் சரியில்லை’ என்று ஒருவர் பொத்தாம் பொதுவாக பேசிவிட்டு சென்றுவிட, சிஸ்டத்தை எங்கிருந்து சரி செய்ய வேண்டும் என்பதை ஒரு டெமோவாகவே காட்டிவிட்டார் கமல்.

யூ ட்யூபில் வெளியான அந்த நேரடி நிகழ்வை பார்த்தவர்களால், ஒரு நிமிஷமாவது அசந்து போகாமலிருக்க முடியாது. கிராம பஞ்சாயத்துக்கு இருக்கிற அதிகாரம், அது நினைத்தால் நடத்திக் காட்டிவிட முடியும் என்கிற துணிச்சல், அந்த பஞ்சாயத்தின் கைகளுக்குள் பத்திரமாக இருக்க வேண்டிய உரிமைகள் குறித்தெல்லாம் அசல் கிராம மக்களை வைத்து நடத்தியே காட்டிவிட்டார் கமல். இந்த நிகழ்ச்சிக்கு அவர் வைத்த பெயர் மாதிரி கிராம சபை.

இந்த கிராம பஞ்சாயத்து சபையை அவர் கூட்டிய நாள், கிராம பஞ்சாயத்து ராஜ் தினம் என்பதுதான் இன்னும் கூடுதல் சிறப்பு. வருகிற மே 1 ந் தேதி தமிழகத்தின் ஏதோவொரு கிராமத்திற்கு சென்று, அங்கு நடக்கும் பஞ்சாயத்தில் கலந்து கொள்ளவும் திட்டமிட்டிருக்கிறார் கமல்ஹாசன்.

ஒரு கிராம பஞ்சாயத்து நினைத்தால், எவ்வளவு பெரிய நச்சுக்கழிவு ஆலைகளையும் கூட ஊருக்குள் வர விடாமல் தடுத்துவிட முடியும் என்பதையும் அங்கே விவாதித்தார்கள். இந்த அருமையான, முன் மாதிரியான நிகழ்வில், சட்ட பஞ்சாயத்து இயக்கம் போன்ற நாட்டுக்கு பயனுள்ள இயக்கங்களும், இன்னும் பல குழுக்களும் கலந்து கொண்டதும் கூட எக்ஸ்ட்ரா சிறப்பு.

கோட்டையின் பாரத்தை கொஞ்சம் குறைப்போம் என்கிற முழக்கத்துடன் வைக்கப்பட்டிருக்கும் இந்த திட்டம், கமலின் அரசியல் பயணத்தில் பெரும் நம்பிக்கையை விதைக்கும் என்பதில் சந்தேகமே இருக்கப் போவதில்லை. அவருக்கு பின்னால் இந்துத்வாவின் சக்தி இருக்கக் கூடுமோ என்கிற சந்தேகம் இன்னொரு புறம் விதைக்கப்பட்டு வந்தாலும், கமலின் சின்ன சின்ன முன்னெடுப்புகள், சேச்சே… அப்படியெல்லாம் இருக்காது என்கிற நம்பிக்கையையும் கொடுக்கிறது.

அந்த நம்பிக்கை ஓட்டாக மாறினால், கமல் தமிழ்நாட்டின் அசைக்க முடியாத சக்தியாக இருப்பார்.

0 coment�rios:

Avengers: Infinity War உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த படம். ஒரு சூப்பர் ஹீரோ வந்தாலே ரசிகர்கள் சந்தோஷத்தில் துள்ளிக்குதிப்பார்...

Avengers: Infinity War இந்த கோடை விடுமுறைக்கான கொண்டாட்டம் - திரைவிமர்சனம்

Avengers: Infinity War உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த படம். ஒரு சூப்பர் ஹீரோ வந்தாலே ரசிகர்கள் சந்தோஷத்தில் துள்ளிக்குதிப்பார்கள். அப்படியிருக்க படம் முழுவதும் தன் பேவரட் சூப்பர் ஹீரோக்கள் அனைவரையும் காட்டி, மார்வல் காமிக்ஸ் எடுத்திருக்கும் பிரமாண்ட அவதாரம் தான் Avengers: Infinity War. இந்த பிரமாண்டம் மக்களை மெய் மறக்க வைத்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

ஆறு இன்ஃபினிட்டி கற்கள் தானோஸ் என்பவனுக்கு வேண்டும். அந்த 6 கற்கள் கிடைத்துவிட்டால் இந்த உலகத்தையே ஒரு சொடக்கில் அழித்து விடும் ஆற்றல் அவனுக்கு கிடைக்கும்.

அந்த கற்களை தேடி தானோஸ் ஒவ்வொரு கிரகமாக வர, அவனை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்ற டாஸ்க் தான் நமது சூப்பர் ஹீரோக்களுக்கு இந்த பாகத்தில்.

தானோஸின் அரக்கத்தனத்தையும், அவர் ஆற்றலையும் நமது சூப்பர் ஹீரோக்கள் எப்படி கட்டுப்படுத்தினார்கள், மேலும் கட்டுப்படுத்த முடிந்ததா? என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

சரி சிம்பிளாக படம் எப்படி? அதை பார்ப்போம். சூப்பர் ஹீரோ படம் என்றாலே கிமு காலத்திலிருந்து உலகம் அழியும், அதை நம் சூப்பர் ஹீரோ தடுத்து நிறுத்துவார். இது பல பாகங்கள் வந்தாலும் பார்முலா ஒன்று தான்.

அதில் இந்த Avengers: Infinity War எப்படி வேறுப்படுகின்றது என்பதே கூடுதல் சிறப்பு. நான் இதில் எந்த பாகமும் பார்த்தது இல்லை, Avengers: Infinity War பார்க்க வேண்டும் என்று ஒரு ஆர்வம் இருக்கின்றது, படத்திற்கு போகலமா என்றால், கண்டிப்பாக போகலாம்.

அதே உலகம் அழிய, சூப்பர் ஹீரோக்கள் சண்டை என ஜாலியாக படம் சென்றாலும், பல எமோஷ்னல் கதைகள் படத்திற்குள் வந்து செல்கின்றது. அதெல்லாம் இந்த சீரியஸ் தொடர்ந்து பார்ப்பவர்களுக்கே புரியும், மேலும், படத்தை புதிதாக பார்ப்பவர்களுக்கு கிளைமேக்ஸ் கொஞ்சம் ஏமாற்றத்தை தரும்.

தானோஸ் Avengers: Infinity War படத்தின் வில்லன் இல்லை, ரியல் ஹீரோ. ஒரு வில்லனை சமாளிக்க ஒட்டு மொத்த சூப்பர் ஹீரோ படையும் ஒன்று கூடுகின்றது. அப்போதும் சமாளிக்க முடியவில்லை, இரக்கம் துளியும் இல்லாதவன்.

ஆனாலும் தன் மகள் மீது பாசம் வைத்திருப்பது, அவருக்கான காரணங்களை கூறுவது, ஒரு கட்டத்தில் தன் லட்சியத்திற்காக மகளையே பலி கொடுப்பது என தானோஸ் தான் படத்தில் கம்பீரமாக காட்சியளிக்கின்றார்.

மற்றபடி அயர்ன்மேன், ஹல்க், கேப்டன் அமெரிக்கா, ஸ்ப்டைர் மேன், ப்ளாக் பேந்தர், தோர் என பல சூப்பர் ஹீரோக்கள் தங்களுக்காக கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர். அதிலும் சிவில் வார் படத்தில் கேப்டன் அமெரிக்காவிற்கும், அயர்ன் மேனுக்கும் சண்டை வரும்.

அந்த சண்டை குறித்து இந்த Avengers: Infinity War-ல் எந்த ஒரு விளக்கமும் இல்லை, அவர்கள் சந்தித்துக்கொள்ளவும் இல்லை, கிளைமேக்ஸும் அடுத்த பாகத்திற்கான மிகப்பெரும் டுவிஸ்ட்டை தான் விட்டு சென்றுள்ளது. சிலருக்கு சுவாரஸியம், சிலருக்கு ஏமாற்றம்.

க்ளாப்ஸ்

படத்தின் விறுவிறுப்பு எங்குமே குறையவில்லை, தானோஸின் அழுத்தமான கதாபாத்திரம்.

மார்வல் காமிக்ஸ் படங்கள் என்றாலே ஜாலியாக தான் செல்லும், வியாபாரத்திற்கான படமாக தான் இருக்கும் என்றாலும், இதில் நிறைய எமோஷ்னல் காட்சிகள் வைத்து கதையை நகர்த்தியுள்ளனர். அது ரசிக்கும் படியாகவும் உள்ளது.

மேலும், அடுத்த பாகத்திற்கான லீட்.

பல்ப்ஸ்

கிளைமேக்ஸ் டுவிஸ்ட் எதிர்ப்பார்ப்பை எகிற வைத்தாலும், புதிதாக இந்த படத்தை பார்க்க வருபவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

மொத்தத்தில் Avengers: Infinity War இந்த கோடை விடுமுறைக்கான கொண்டாட்டம்.

0 coment�rios:

அமைதியான நீர்நிலை. ஒரே ஒரு பறவை மட்டும் அமைதியாக நீண்ட கால்களோடு நீருக்குள் நின்றுகொண்டிருக்கிறது. அதைப் பார்க்கும்போதே இரைக்காகக் காத...

குடை போல் உடலை வளைத்து உணவு தேடும் அதிசய பறவை! வைரல் வீடியோ



அமைதியான நீர்நிலை. ஒரே ஒரு பறவை மட்டும் அமைதியாக நீண்ட கால்களோடு நீருக்குள் நின்றுகொண்டிருக்கிறது. அதைப் பார்க்கும்போதே இரைக்காகக் காத்துக்கொண்டிருப்பது புரிகிறது. அதென்ன திடீரென்று சிறகுகளை விரித்து உடலை மறைத்துக்கொண்டு நீருக்குள் பார்க்கிறது. அது என்ன செய்கிறது என்பதைப் பார்க்க முடியவில்லையே. ஒருவேளை நீர் அருந்துகிறதோ. நீரை ஏன் இப்படி இறகுகள் கொண்டு முகத்தை மறைத்து மறைவாகக் குடிக்கவேண்டும்.

நீர் அருந்த வெக்கப்படும் ஒரு பறவையா! என்ன அதிசயம். மீண்டும் நகர்கிறது. அரவம் ஏதேனும் இருக்கிறதா என்று கூர்ந்து கவனிக்கிறது. சில அடிகள் எடுத்து வைத்தவுடன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மீண்டும் சிறகுகளுக்குள் மறைகிறது. ஆஹா… எவ்வளவு வெட்கம் வருகிறது இந்தப் பறவைக்கு. அது நீர் பருகுவதாக இருந்தால் ஏன் அடிக்கடி இடம் மாறிக்கொண்டே இருக்கவேண்டும். அப்படி என்னதான் செய்கிறது. அதைத் தெரிந்துகொள்வதற்கு முன் அது என்ன பறவை என்பதைப் பார்த்துவிடுவோமா!

அந்தப் பறவைதான் கருநாரை (Black Heron). அடிப்படையில் மிகவும் அமைதியான கருநாரை ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்டது. உடல் முழுவதும் கருமை நிறத்தில் இருக்கும் அதற்கு கால் மட்டும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதுவே இனப்பெருக்கக் காலத்தில் இரு பாலினத்திலும் அடர் சிவப்பு நிறத்திற்கு மாறிவிடும். இணைசேர்ந்தவுடன் ஆண் பறவை முதலில் குச்சிகள், மரக்கிளைகளைக் கொண்டு சுமார் 15 அடி உயரத்தில் நீர்நிலைக்கு அருகிலோ நீர்நிலையிலேயே உள்ள மரங்களிலோ கூடுகட்டத் தொடங்கும்.

மழைக்காலங்களில் இனப்பெருக்கம் செய்யும் இவ்வகைப் பறவைகளில் ஆண், பெண் பறவைகள் இரண்டுமே இணைந்து அவற்றின் முட்டைகளை அடைகாக்கும். 18 முதல் 30 நாள்கள் அடைகாக்கப்படும் முட்டைகள் ஒவ்வொன்றாகச் சிறிது இடைவெளியோடு பொறிந்து வெளிவரும் கருநாரைக் குஞ்சுகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலகட்டத்தில் பிறப்பதால் அவை வெவ்வேறு அளவுகளில் இருக்கும். மிகவும் சிறிய பறவைகள் உயிர் பிழைத்து வருவது மிகவும் கடினம். பெரும்பாலும் இறந்தே விடுகின்றன. முழுமையாகப் பறக்கப் பழகும் வரை கூட்டிலேயே இருந்து பெற்றோர் இருவரும் பாதுகாக்கின்றனர். கூட்டமாகவே வாழக்கூடிய இந்தப் பறவை இனம் கூடுகட்டுவது கூட ஒரே பகுதியில் கூட்டமாகத்தான் கட்டும். அதன் பெருமளவு நேரத்தை நீர்நிலைகளில் அலைந்து திரிவதில் கழிக்கும் இது தன் நீண்ட கால்களை வளைத்து பாதத்தில் இருக்கும் நகங்களால் உடலில் ஒட்டும் பூச்சிகளைச் சுத்தம் செய்துகொள்கிறது. சிறகுகளைப் பயன்படுத்தி தலையில் நீண்டிருக்கும் கொண்டையைச் சீவிச் சிங்காரித்து அழகுபடுத்திக் கொள்ளுமாம்.

ஆப்பிரிக்கா கண்டத்தில் தெற்கு சகாரா, நியூ கினியா, ஐவரி கடலோரப் பகுதி, நைஜீரியா, கென்யா, தான்சானியா, சாம்பியா, ஜிம்பாப்வே மற்றும் தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் வாழ்ந்து வருகிறது. தற்போது அதிகமாகவே இருக்கும் இந்தப் பறவையினம் அழிந்து வரும் பறவைகள் பட்டியலில் இல்லையென்றாலும் அது குறைந்துவருவது அந்த நிலைக்கு இட்டுச்செல்ல வாய்ப்புகள் அதிகம் என்ற நிலையில்தான் இருக்கிறது. மனித ஆக்கிரமிப்புகள் அதிகமாகி வருவது மற்றும் அவர்களது வாழ்விடங்களில் மனிதத் தலையீடுகள் அதன் இனப்பெருக்கத்தைப் பாதிக்கின்றன. 1950 களில் மடகாஸ்கர் தீவின் அண்டானானரிவோ என்ற ஒரு பகுதியில் மட்டுமே பத்தாயிரத்திற்கும் அதிகமான ஜோடிகள் இருந்தன. தற்போது 50 ஜோடிகள் மட்டுமே எஞ்சி இருக்கின்றன. இது வரும் காலத்தில் அவை அழிய வாய்ப்புகள் அதிகம் உள்ளதைச் சுட்டுகிறது. இந்தப் பறவைகளின் இனப்பெருக்க எண்ணிக்கை கூட பெருமளவில் குறைந்துவருவது குறிப்பிடத்தக்கது.

ஒரு குறிப்பிட்ட கண்டத்தில் மட்டுமே வாழக்கூடிய இந்த அறிய வகைப் பறவைக்கு மற்றுமொரு தனித்தன்மையும் உண்டு. அதுதான் அதன் வேட்டையாடும் யுக்தி. நாம் மேலே பார்த்த அதன் செயல் யாராவது பார்த்துவிடுவார்களோ வெட்கப்பட்டுக்கொண்டு இறகுகளை மறைத்து நீர் அருந்த அல்ல. சூரிய ஒளியில் அதிகம் மீன்கள் நீரின் மேற்பகுதிக்கு வராது. அதனால் அது தன் இறகுகளைக் குடைபோல் வளைத்து நீரின் மேல் வைத்துக் காத்திருக்கும். இருட்டாக இருக்கிறது என்று அந்தப் பகுதிக்கு வரும் மீன்களை நிலத்தில் இருக்கும் கால்களை அசைப்பதன் மூலம் கீழே செல்லவிடாமல் பயமுறுத்தி இன்னும் மேலே வரவைத்துத் தனது நீண்ட அலகால் கொத்திப் பிடித்துக்கொள்ளும். பிடித்த மீனை கொத்திச் சாப்பிடாமல் அப்படியே வாயில் போட்டு விழுங்கிவிடும். அதன் மீன்பிடிக்கும் தனித்தன்மை வாய்ந்த யுக்திக்காகவே பறவையியல் ஆய்வாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனது.

0 coment�rios:

நடிகை ஓவியா என்னதான் படங்கள் நடித்தாலும் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் தான் பிரபலம் ஆனார். அவரின் உண்மையான குணத்தை பார்த்த ரசிகர்கள் அவர் ம...

பிக்பாஸ் ஓவியாவை போல எங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் அபர்ணதிக்கும் அடித்த லக்

நடிகை ஓவியா என்னதான் படங்கள் நடித்தாலும் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் தான் பிரபலம் ஆனார். அவரின் உண்மையான குணத்தை பார்த்த ரசிகர்கள் அவர் மேல் பைத்தியமாக இருந்தனர்.

அந்த நிகழ்ச்சி ஓவியாவின் சினிமா வாழ்க்கையை மாற்றியிருந்தது, படங்கள் நடிப்பது, விளம்பரங்கள் நடிப்பது என பிஸியாக இருந்தார். தற்போது தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி மூலம் அனைவரையும் கவர்ந்தவர் அபர்ணதி.

இவரும் கிட்டத்தட்ட ஓவியாவை போலவே என்று கூறலாம். ரசிகர்களின் அதிக வரவேற்பை பெற்ற இவருக்கு ஏற்கெனவே மாடலிங் துறையில் ஆர்வம் அதிகம். இப்போது அவருக்கு ஓவியாவை போல நிறைய விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறதாம்.

அதன் முதற்படியாக அபர்ணதியை வைத்து ஒரு விளம்பரத்திற்காக போட்டோ ஷுட் எல்லாம் நடத்தியுள்ளனர் 

0 coment�rios:

கோபிநாத் சின்னத்திரை உலகில் மிகவும் பிரபலமானவர். இவர் தான் இன்று வரை சிறந்த ஆண் தொகுப்பாளர் என்று விருது பெற்று வருகின்றார். இந்நிலையில்...

எத்தனை கியூட்டாக உள்ளார் பாருங்கள் தொகுப்பாளர் கோபிநாத்தின் மகள்- முதன் முறையாக வந்த புகைப்படம் உள்ளே


கோபிநாத் சின்னத்திரை உலகில் மிகவும் பிரபலமானவர். இவர் தான் இன்று வரை சிறந்த ஆண் தொகுப்பாளர் என்று விருது பெற்று வருகின்றார்.

இந்நிலையில் மேலும் இவருக்கு ஒரு விருது தொகுப்பாளர் பணிக்காக கிடைக்க, அந்த மேடையில் இவருடைய தந்தை வந்தது, இவர் அழுதது எல்லாம் அறிந்ததே.

மேலும், அதே மேடையில் தன் மகளையும் கோபிநாத் அழைத்து வந்தார், பலரும் இதைப்பார்த்த செம்ம கியூட் என்று கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ...

0 coment�rios:

தமிழ் சினிமாவில் 90 களில் முக்கிய நடிகையாக இருந்தவர் கௌசல்யா. பெங்களூரை சேர்ந்த இவர் நிறைய தமிழ் படங்களில் நடித்துள்ளார். ஏப்ரல் 19 என்னும்...

இத்தனை வயதில் பிரபல நடிகை கௌசல்யாவுக்கு கல்யாணமாம்!

தமிழ் சினிமாவில் 90 களில் முக்கிய நடிகையாக இருந்தவர் கௌசல்யா. பெங்களூரை சேர்ந்த இவர் நிறைய தமிழ் படங்களில் நடித்துள்ளார். ஏப்ரல் 19 என்னும் மலையாள படம் மூலம் சினிமாவிற்கு வந்தார்.

தமிழில் முரளியுடன் காலமெல்லாம் காதல் வாழ்க என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பின் கார்த்தி, விஜய், விஜய காந்த், பிரபு தேவா என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார்.

இவரின் படங்களில் உன்னுடன், பூவேலி, ஏழையின் சிரிப்பில், பிரியமுடன், நேருக்கு நேர் என சில படங்கள் அவருக்கு ஹிட்டாக அமைந்தன. பின் அக்கா, அண்ணி, அம்மா போன்ற கேரக்டர்களில் நடிக்க தொடங்கினார்.

38 வயதாகும் இவர் திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்துவிட்டாராம். இவரின் குடும்பத்தில் வரன் பார்க்க தொடங்கிவிட்டார்களாம். விரைவில் அவர் திருமணம் செய்துகொள்ள இருக்கிறாராம்.

0 coment�rios:

பேராசிரியர்கள் கேட்டதால் மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக சர்ச்சைக்குள்ளான பேராசிரியை நிர்மலா தேவி தெரிவித்துள்ளார். மாணவிகளை பாலியல...

இவர்களுக்காகத் தான் இவ்வாறு செய்தேன்... நிர்மலா தேவியின் திடுக்கிடும் வாக்குமூலம்

பேராசிரியர்கள் கேட்டதால் மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக சர்ச்சைக்குள்ளான பேராசிரியை நிர்மலா தேவி தெரிவித்துள்ளார்.

மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக கைதான அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று முதல் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில், விசாரணை அதிகாரியான சூப்பிரண்டு ராஜேஸ்வரி, உதவி அதிகாரியான துணை சூப்பிரண்டு சாஜிதா பேகம் ஆகியோர், பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தினர். இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இந்த விசாரணை நடந்தது.

அப்போது பெரும்பாலான கேள்விகளுக்கு நிர்மலா தேவி மவுனமாகவே இருந்துள்ளார். மாணவிகளிடம் யாருடைய தூண்டுதலின் பேரில் பேசினீர்கள் என கேட்டபோது, காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் கருப்பசாமி, முருகன் ஆகியோர் தான் ஆசை வார்த்தை கூறி தன்னை தூண்டியதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.

அவரது வாக்குமூலத்தை பொலிசார் வீடியோவில் பதிவு செய்தனர். இதனிடையே பேராசிரியை நிர்மலா தேவியிடம் முழுமையாக விசாரணை நடத்திய பிறகே, வழக்கின் முழு விவரம், அதில் தொடர்புடையவர்கள் பற்றி தெரியவரும் என சிபிசிஐடி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் பல்கலைக்கழகம் வந்து சென்றபோது பதிவு ,செய்யப்பட்ட சி.சி.டி.வி. கமெரா பதிவுகளை சேகரித்து வருகிறோம் என்றும் அந்த அதிகாரி கூறினார். பேராசிரியை நிர்மலா தேவிக்கு வேறு யாருடன் தொடர்பு உள்ளது? என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம் என்றும் சிபிசிஐடி அதிகாரி கூறியுள்ளார்.

பேராசிரியை நிர்மலா தேவியிடம் 2-வது நாளாக இன்றும் சி.பி.சி.ஐ.டி. பொலிசார் விசாரணை நடத்தினர். அவர் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் மதுரை அழைத்துச் செல்ல இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு முத்து சங்கரலிங்கம் தெரிவித்துள்ளார்.

இவர் மாணவிகளை எவ்வாறு மூளைச் சலவை செய்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 'நிர்மலா தேவி, கல்லூரியில் எல்லோரிடமும் அன்பாகப் பழகுவார். குறிப்பாக மாணவிகளிடம் உரிமையோடு பேசுவார். அப்போது, மாணவிகளின் குடும்பப் பின்னணிகுறித்தும் விசாரிப்பார். அதன்பிறகு, அதில் சில மாணவிகளின் செல்போன் நம்பர்களை வாங்கிப் பேசுவார். அதனால், அவரை எளிதில் நம்பிப் பழகிவிடுவார்களாம்.

தினமும் மெஸேஜ் அனுப்புவார். பதில் அனுப்பாதவர்களிடம் உரிமையாகப் பேசி பதில் அனுப்பச்சொல்வார். அவர்களுடைய எதிர்காலத்தில் அக்கறை கொண்டவர்போல அட்வைஸ் செய்வார். இப்படி சில வாரப் பழக்கத்துக்குப் பிறகு, வாட்ஸ்அப், சாட்டிங் என வேறு ரூட்டில் உரையாடல் பயணிக்கும். அதற்கு எதிர்த்தரப்பிலிருந்து வரும் ரியாக்‌ஷனைப் பொறுத்து, நிர்மலா தேவி தன் பேச்சுவார்த்தைத் தொனியை அமைத்துக்கொள்வாராம்.

கல்லூரி வளாகத்துக்குள், நிர்மலா தேவியைத் தெரியாதவர்கள் யாருமே இல்லை என்ற அளவுக்கு தகவல்கள் கிடைத்திருக்கின்றன. மேடம், அந்த அளவுக்கு கல்லூரியில் பிரபலம். எப்போதும் அவரைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். எப்போதுமே, ’கண்ணுங்களா’ என்றுதான் மாணவிகளை அழைப்பார் என்று தெரியவந்துள்ளது.

0 coment�rios:

கம்பு, கேழ்வரகு, தினை, சாமை உள்ளிட்ட சிறுதானியங்களை, கடந்த பல ஆண்டுகளாகவே மத்திய அரசு கண்டுகொள்ளாமலே இருந்தது. இவற்றின் உற்பத்தி, விலை நிர்...

"இனி எல்லா வீடுகளிலும் சிறுதானியம்!" - அரசின் அறிவிப்புக்குப் பெருகும் வரவேற்பு

கம்பு, கேழ்வரகு, தினை, சாமை உள்ளிட்ட சிறுதானியங்களை, கடந்த பல ஆண்டுகளாகவே மத்திய அரசு கண்டுகொள்ளாமலே இருந்தது. இவற்றின் உற்பத்தி, விலை நிர்ணயம், சந்தை வாய்ப்புகள் உள்ளிட்ட எதிலும் ஆட்சியாளர்கள் ஆர்வம் காட்டாமலே இருந்துவந்தார்கள். தற்போது, பொதுமக்களிடம் சிறுதானியங்கள்குறித்த விழிப்புஉணர்வு நாளுக்குநாள் அதிகரித்துவருவதால், தற்போது மத்திய அரசு இதில் சிறப்புக் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. பொது விநியோகத் திட்டத்தில் கம்பு, கேழ்வரகு, சோளம், தினை உள்ளிட்ட சிறுதானியங்களைச் சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என சமீபத்தில் மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் ராதாமோகன் சிங் அறிவித்தார். பொது விநியோகத் திட்டத்தில் சிறுதானியங்களைச் சேர்ப்பது தொடர்பாக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிதி ஆயோக் மற்றும் மத்திய வேளாண்மைத் துறையின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் சிறுதானியங்கள்குறித்த பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டன. நிதி ஆயோக் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், பொது விநியோகத் திட்டத்தில் சிறுதானியங்களை வழங்க மத்திய வேளாண்மைத் துறை திட்டமிட்டுள்ளது. 2018-ம் ஆண்டை சிறுதானிய ஆண்டாகவும் அறிவித்துள்ளது. 


சிறுதானியம்

இதற்கு, பல்வேறு தரப்பினரிடமிருந்தும் வரவேற்பு பெருகிவருகிறது. தமிழ்நாட்டில் சிறுதானியம் சாகுபடியை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பாமரர் ஆட்சியர் கூடத்தின் ஒருங்கிணைப்பாளர் சரவணன் இதுகுறித்து நம்மிடம் பேசும்போது, ‘50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் பரவலாக அதிக அளவில் சிறுதானியங்கள் சாகுபடிசெய்யப்பட்டு வந்தது. நம் முன்னோர்களின் முதன்மை உணவாகவே கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள் திகழ்ந்தன. காலப்போக்கில், அடுத்தடுத்த தலைமுறையினரின் உணவுப் பழக்கம் மாறியதால், விவசாயிகள் இவற்றை சாகுபடிசெய்வதைக் கைவிடத் தொடங்கினார்கள். தமிழ்நாட்டில் சிறுதானிய பயிர்களைப் பார்ப்பதே அரிது என்ற நிலை உருவாகிக்கொண்டிருந்தது. இந்நிலையில்தான் நம்மாழ்வார் மற்றும் பசுமை விகடனின் தொடர் முயற்சிகளால் சிறுதானியச் சாகுபடி புத்துயிர் பெறத் தொடங்கியது. கம்பு, கேழ்வரகு, சாமை, தினை, குதிரை வாலி, வரகு ஆகியவற்றின் சாகுபடி முறைகள்குறித்தும் இதன் மகத்துவம்குறித்தும் விரிவான கட்டுரைகள் வெளியாகின. சிறுதானியங்களை எப்படியெல்லாம் விதவிதமாக சமைக்கலாம் என அவள் விகடன் ஆர்வத்தை உருவாக்கியது. சிறுதானிய உணவுத் திருவிழாவும் நடத்தி, மக்களின் கவனத்தை ஈர்த்தது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்களின் முயற்சிகளாலும் சிறுதானியம்குறித்த விழிப்புஉணர்வு அதிகரித்துவருகிறது. இதனால், மத்திய மாநில அரசுகளின் கவனம் சிறுதானியங்களின் பக்கம் திரும்பியுள்ளது. ரேஷன் கடைகளில் சிறுதானியம் வழங்கப்பட்டால், இதைப் பயிர்செய்யும் விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கும். வெளிச் சந்தையிலும் சிறுதானியங்களின் கொள்முதல் விலை உயர்வதோடு, சந்தை வாய்ப்புகளும் பெருகும். இதனால், சிறுதானிய சாகுபடி பரப்பு அதிகரிக்கும்” என்றார்.

பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்து, ‘சிறுதானியங்கள் ஏழைகளின் உணவாக இருந்தது. அவர்களிடம் அரிசியைப் புகுத்தி. சத்துக்கள் நிறைந்த சிறுதானியங்கள் நாளடைவில் கைப்பற்றப்பட்டன. தற்போது, பணக்காரர்களின் உணவாக இவை உள்ளன. பொது விநியோகத் திட்டத்தில் சிறுதானியங்கள் வழங்கப்பட்டால், மீண்டும் ஏழைகளின் உணவாக இவை மாறும். இதனால், அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிதாக சிறுதானியங்கள் கிடைக்கும். மத்திய அரசின் நடவடிக்கை பாராட்டத்தக்கது.” என்றார்.

சிறுதானியங்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர் ஒருவர், ’’நாளுக்குநாள் வெப்பம் அதிகரித்துவருவதால், நெல் சாகுபடியில் மகசூல் குறைந்துகொண்டேவருகிறது. சிறுதானியங்கள் மட்டுமே வறட்சியைத் தாங்கி வளரக்கூடியன. அதே சமயம், மக்களிடம் சத்துக் குறைபாடுகள் அதிகரித்து, பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. இதனால்தான், சிறுதானியங்களை மத்திய மாநில அரசுகள் கையில் எடுக்கத் தொடங்கியுள்ளன. இவற்றை சாகுபடிசெய்யும் முறைகள்குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி அளிப்பதோடு மட்டுமல்லாமல், இவற்றை மதிப்புக்கூட்டுவதற்கான இயந்திரங்கள் எல்லா இடங்களிலும் பரவலாகக் கிடைக்கவும் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.” என்றார்.  

0 coment�rios:

தமிழனுக்கு பிறப்பிலிருந்தே வீரம் வளர்கிறது என்பதற்கான வெளிப்பாடு தம்பி என்றும் உம் வீரதீர செயல் தொடங்கட்டும் தமிழா வீழ்வது நாமாக இருந்தாலு...

தீரன் சூர்யா : சிங்கம் சூர்யாவை மிஞ்சிய சிறுவன் சூர்யா #SpecialStoryAboutSuriya

தமிழனுக்கு பிறப்பிலிருந்தே வீரம் வளர்கிறது என்பதற்கான வெளிப்பாடு தம்பி என்றும் உம் வீரதீர செயல் தொடங்கட்டும் தமிழா வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது நம்முடைய எதிர்கால சந்ததியாக இருக்கட்டும் வெல்லட்டும் தமிழன் முயற்சிகள்.

தம்பி பெருமையாக இருக்கிறது உங்களை நினைத்து. உங்கள் வயதில் உள்ளவர்கள் பாக்கெட் மணிக்காக, உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருடிக்கொண்டிருக்கையில் நீ அதிசயமானவன்.


0 coment�rios:

மாணவிகளை பாலியல் ரீதியாக பெரிய மனிதர்களுக்கு கட்டிலுக்கு அனுப்ப முயற்சித்ததால் கைதாகி சிறையில் இருக்கும் நிர்மலா தேவி 10 ஆண்டு கால கதையை ஒர...

சிபிசிஐடி-யை ஒற்ற வார்த்தையால் அலற வைத்த பேராசிரியை நிர்மலா... அப்படியென்ன வார்த்தை அது?

மாணவிகளை பாலியல் ரீதியாக பெரிய மனிதர்களுக்கு கட்டிலுக்கு அனுப்ப முயற்சித்ததால் கைதாகி சிறையில் இருக்கும் நிர்மலா தேவி 10 ஆண்டு கால கதையை ஒரே நாளில் சொல்லிவிட முடியாது என்று கூறி பொலிசாரை அலறவிட்டுள்ளார்.

அருப்புக்கோட்டை மகளிர் பொலிஸ் நிலையத்தில் நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்திய ஆவணங்கள் சிபிசிஐடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன. அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் உள்ளன.

நிர்மலா தேவி அளித்த வாக்குமூலத்தில் 10 ஆண்டு கால கதையை ஒரே நாளில் சொல்லிவிட முடியாது என்று கூறியுள்ளார். இதை கேட்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பேராசிரியை நிர்மலா தேவி, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதப் பேராசிரியை நிர்மலா மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உயரதிகாரிகளுடன் ஆசைக்கு இணங்க கல்லூரி மாணவிகள் 4 பேரிடம் தொலைபேசியில் புரோக்கராக பேசி சிக்கிய ஆடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த கைதான நிலையில், பின்னர் விருதுநகர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் நிர்மலா ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரை ஏப்ரல் 28ம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

நிர்மலா தேவி விவகாரத்தை அருப்புக்கோட்டை நகர காவல் நிலையத்திலிருந்து சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டார். இதையடுத்து பேராசிரியை பணியாற்றிய அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் 5 பேர் கொண்ட சிபிசிஐடி விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில், நிர்மலா தேவி 2008ம் ஆண்டில் கல்லூரியில் உதவி பேராசிரியையாக சேர்ந்தார். அப்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு பல்வேறு பணிகளுக்காக அவர் சென்று வந்தபோது தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் 2 பேராசிரியர்களுடன் பணி ரீதியில் நிர்மலாவுக்கு பழக்கம் உருவானது.

இந்நிலையில் தான் கடந்த மாதம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு பேராசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சிக்காக அவர் சென்றுள்ளார். அப்போது அந்த இரு பேராசிரியர்களின் தூண்டுதலின் பேரிலேயே மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்துள்ளார். விரைவில் இதுதொடர்பாக அந்த இரு பேராசிரியர்கள் விசாரணை நடத்தப்படவுள்ளதாக அந்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

0 coment�rios:

நடிகர் ராதாரவி தளபதி விஜய்யின் அடுத்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் சமீபத்தில் விஜய்யுடன் எடுத்த ஒரு புகைப்...

ஜெயலலிதாவிற்கு பிறகு விஜய் மட்டுமே- நடிகர் ராதாரவி

நடிகர் ராதாரவி தளபதி விஜய்யின் அடுத்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் சமீபத்தில் விஜய்யுடன் எடுத்த ஒரு புகைப்படம் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் தற்போது விஜய்62 பற்றி ஒரு பேட்டியில் பேசிய ராதாரவி "ஜெயலலிதாவிற்கு பிறகு நடிகர் விஜய்யின் வீட்டிற்க்கு நான் குடும்பத்துடன் சென்று புகைப்படம் எடுத்துக்கொண்டோம். என் பேரன் விஜய் மீது பைத்தியமாக இருப்பான். நான் சுறா படம் நடிக்கும்போதே அவருடன் போட்டோ எடுக்கவேண்டும் என கேட்டான். அந்த ஆசை முருகதாஸ் படத்தில் நடிக்கும்போது தான் நிறைவேறியுள்ளது" என கூறியுள்ளார்.

மேலும் விஜய் அரசியலுக்கு வருவது பற்றி பேசிய அவர், "விஜய் இந்த மண்ணின் மைந்தர், ரசிகர்கள் ஆதரவளித்து அவர் அரசியலுக்கு வந்தால் நான் வரவேற்பேன். ஆனால் அவரின் கொள்கை பற்றி கேள்வி கேட்பதை தவிர்க்க முடியாது" என குறிப்பிட்டுள்ளார்.

0 coment�rios:

தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போதெல்லாம் பிஸினஸ் பல கோடிகளில் தான் நடக்கின்றது. ஹீரோக்களும் படத்திற்கு படம் தங்கள் சம்பளங்களை ஏற்றிக்கொண்டே ...

உங்கள் பேவரட் நடிகர்களின் லேட்டஸ்ட் சம்பள விவரங்கள்- இத்தனை கோடிகளா! முழு லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போதெல்லாம் பிஸினஸ் பல கோடிகளில் தான் நடக்கின்றது. ஹீரோக்களும் படத்திற்கு படம் தங்கள் சம்பளங்களை ஏற்றிக்கொண்டே செல்கின்றனர்.

இதையே ஒரு குறையாக பல தயாரிப்பாளர்கள் கூறி வருகின்றனர், இந்நிலையில் பிரபல நடிகர்கள் சம்பளங்கள் எவ்வளவு என்று ஒரு சில தகவல்கள் வெளிவந்துள்ளது. இதோ...(பிரபல ஆங்கிலத்தளத்தில் வெளியிடப்பட்ட தகவல்).

    ரஜினிகாந்த்- ரூ 50 கோடி
    விஜய்- ரூ 35 கோடி
    அஜித்- ரூ 32 கோடி
    கமல்ஹாசன்- ரூ 20 கோடி
    சூர்யா- ரூ 20 கோடி
    சிவகார்த்திகேயன்- ரூ 15 கோடி
    விக்ரம்- ரூ 12 கோடி
    தனுஷ்- ரூ 10 கோடி
    கார்த்தி- ரூ 8 கோடி
    விஜய் சேதுபதி- ரூ 6 கோடி
    விஷால்- ரூ 6 கோடி
    ஜெயம் ரவி- ரூ 5 கோடி
    சிம்பு- ரூ 5 கோடி
    ஆர்யா- ரூ 2 கோடி
    மாதவன்- ரூ 2 கோடி

0 coment�rios: