Home Top Ad

நடிகை கீர்த்தி சுரேஷ் தான் தற்போது டாக் ஆஃப் தி டவுன் என்று சொல்லலாம். அவருக்கான பட வாய்ப்புகள் அடுத்தடுத்து குவிந்து வருகிறது. தற்போது மகா...

நடிகை கீர்த்தி சுரேஷ் தான் தற்போது டாக் ஆஃப் தி டவுன் என்று சொல்லலாம். அவருக்கான பட வாய்ப்புகள் அடுத்தடுத்து குவிந்து வருகிறது. தற்போது மகாநதி படத்திற்கு தமிழில் எதிர்பார்ப்புகள் கூடியுள்ளது.

நடிகையர் திலகம் சாவித்திரியாக இப்படத்தில் அவர் நடித்துள்ளார். தெலுங்கில் இப்படத்தின் முன்னோட்ட காட்சியை பார்த்த பலரும் படத்தை மிகவும் பாராட்டியுள்ளார்கள்.

மேலும் பல ஊடகங்கள் 3 க்கும் அதிகமான ரேட்டிங்ஸ் கொடுத்துள்ளன. கீர்த்தியை தெலுங்கு சினிமாவை சேர்ந்த நடிகைகள், நடிகர்கள் பலரும் வாழ்த்தியுள்ளனர். ட்விட்டரில் ரசிகர்கள், ரசிகைகளும் மாஸ் காட்டியுள்ளனர்.

சாவித்திரியின் மகளும் படத்தை பார்த்துவிட்டு தன் அம்மாவை மீண்டும் பார்த்தது போல இருந்ததாக கீர்த்திக்கு போன் மூலம் மெசேஜ் அனுப்பி பாராட்டியுள்ளார். தமிழில் நாளை பிரிமியர் காட்சிகள் காண்பிக்கப்படவுள்ளது.

மேலும் தமிழக ரசிகர்களை இப்படம் ஈர்க்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்...

பலரையும் அசரவைத்த கீர்த்தி சுரேஷ்! குவியும் பாராட்டுக்கள் 

பாண்டியராஜனே தனது மகன் குறித்து கவலைப்பட்டால் நான் எங்கே போவது என்று இயக்குநர் கே.பாக்யராஜ் வருத்தம் தெரிவித்தார். ஜெ.எஸ்.அபூர்வா புரொடக...

பாண்டியராஜனே தனது மகன் குறித்து கவலைப்பட்டால் நான் எங்கே போவது என்று இயக்குநர் கே.பாக்யராஜ் வருத்தம் தெரிவித்தார்.

ஜெ.எஸ்.அபூர்வா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் `தொட்ரா’. இயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.

பிருத்வி ராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ளா இந்தப்படத்தில், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், மைனா சூஸன், கூல் சுரேஷ், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா, ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். உத்தமராஜா இசையமைத்துள்ளார்.

தொட்ரா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பாண்டியராஜன், ஆர்.கே.செல்வமணி, பேரரசு, ஏ.வெங்கடேஷ், ​மீரா கதிரவன், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, ஜே எஸ் கே, சுரேஷ் காமாட்சி, விடியல் ராஜூ, கனியமுதன், நடிகர்கள் பரத், ஸ்ரீகாந்த், கலையரசன், அரீஷ் குமார்,​ நடிகை நமீதாவின் கணவரும் நடிகருமான வீரா, ​ஷரண், போஸ் வெங்கட், லொள்ளு சபா ஜீவா, நடிகைகள் நமீதா, வசுந்தரா, கோமல் ஷர்மா தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ், பி. டி. செல்வகுமார் உள்ளிட்ட பலரும் மற்றும் படக்குழுவினரும் கலந்துகொண்டனர்.

நடிகர் பரத் பேசும்போது, “தொட்ரா படம் டைட்டிலிலேயே பாஸ்மார்க் வாங்கிவிட்டது. எனக்கு காதல் படம் பிரேக் கொடுத்தது போல பிருத்விக்கு இந்த ‘தொட்ரா’ படம் அமையும் என சொல்கிறார்கள். உண்மைதான் அந்தப்படம் எனக்கு மட்டுமல்லாமல் அதில் பணியாற்றிய பலருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. அதேபோல இந்தப்படமும் ஒரு காவியமாக அமையும் என நம்புகிறேன்” என்றார்.

நடிகர் கூல் சுரேஷ் பேசும்போது, “இந்தப்படத்தில் ஹீரோ ஹீரோயின் கையைப் பிடித்துக்கொண்டு ஓடவேண்டும்.. அவர்களை நானும் இயக்குநர் ஏ.வெங்கடேஷும் துரத்த வேண்டும். இப்படி ஒரு காட்சியை படமாக்கியபோது, இயக்குநர் கட் சொன்னபின்னும் கூட ஹீரோவின் கையை விடாமல் பிடித்து ஓடிக்கொண்டே இருந்தார் நாயகி வீணா. அப்புறம் உதவி இயக்குநர்கள் பின்னாலேயே ஓடிப்போய்த்தான் நிறுத்தவேண்டி இருந்தது” என படப்பிடிப்பின் சுவாரஸ்யங்களை பகிர்ந்துகொண்டார்.

அடுத்ததாக பிரபல இயக்குநரும், படத்தின் நாயகன் பிருத்வியின் தந்தையுமான பாண்டியராஜன் பேசியபோது, “பிருத்வி இவ்வளவு நண்பர்களை சேர்த்து வைத்திருப்பான் என நினைத்தே பார்க்கவில்லை. என் கவலையெல்லாம் இன்னும் அவன் சினிமாவில் ஒரு நல்ல நிலைக்கு வரவில்லையே என்பதுதான். வெற்றி அவ்வளவு சாதாரணமாக வந்துவிடாது. உடனே வந்துவிட்டால் அதற்கு மரியாதையும் கிடையாது. எதற்கும் ஒரு நல்ல நேரம் வரவேண்டும். ஆனால் இந்தப் படத்தை பார்த்ததும் பிருத்விக்கு அந்த நல்ல நேரம் வந்துவிட்டது என்றே தோன்றுகிறது. அந்த அளவுக்கு இந்தப் படத்தில் பிருத்வியை பார்க்கும்போது புது தேஜஸ் தெரிகிறது.” என ஒரு தகப்பனாக தனது உணர்வுகளை நெகிழ்ச்சியுடன் கூறி கண் கலங்கினார்.

படத்தின் இயக்குநர் மதுராஜ் பேசும்போது, “இந்தப் படத்தை பார்த்துவிட்டு என் குருநாதர் பாக்யராஜ் சார், என் பெயரைக் காப்பாற்றிவிட்டாய் எனக் கூறினார். இதைவிட பெரிய விருது வேறொன்றும் இருக்க முடியாது. கதாநாயகி வீணாவை படப்பிடிப்பின் போது அடித்துவிட்டதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். படத்தின் தயாரிப்பாளர் சந்திரா எனக்கு இன்னொரு அம்மா போல” என நெகிழ்வுடன் குறிப்பிட்டார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, “சமீபத்தில் நடைபெற்று முடிந்த வேலைநிறுத்தம் வெற்றி என எல்லோரும் பாராட்டிப் பேசுகிறார்கள்.. அதற்கு ஒரு பிரஸ்மீட்டும் வைத்து அறிவித்துவிட்டார்கள். அதனால் நான் குறை ஏதும் சொன்னால் அது தவறாகப் போய்விடும்.. ஆர்.கே.செல்வமணி அண்ணன் இந்த சமயத்தில் இயக்குநராக படம் இயக்கவேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.. அப்போதுதான் எங்கள் கஷ்டம் உங்களுக்கு புரியும். சினிமாவில் எப்போதும் பெரிய நடிகர்களை சுற்றிக்கொண்டே இல்லாமல் புது ஆட்களும் வளரட்டும். அதனால் இந்த நடிகரை வைத்து இவ்வளவு சம்பளம் கொடுத்து இந்த பட்ஜெட்டுக்குள் தான் படம் எடுக்கவேண்டும் என தயாரிப்பாளர்களின் சுதந்திரத்தை நசுக்க வேண்டாம். கோடிகளைக் கொட்டி படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு யாரை வைத்து படமெடுக்க வேண்டும் எனத் தீர்மானிக்கும் உரிமை கூட இல்லையா..?” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்..

அவருக்கு பதில் கொடுக்கும் விதமாக மீண்டும் மைக் பிடித்த இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, “தயாரிப்பாளர்களுக்குள் புரிதல் இல்லை என இதைத்தான் நாங்கள் சொல்கிறோம். மீண்டும் மீண்டும் விவாதத்திற்கு நாங்கள் தயாராக இல்லை. பணம் இருக்கிறதே என நீங்கள் விரும்பிய ஆட்களுக்கு சம்பளத்தை அள்ளிக்கொடுத்து விட்டால், பின்னால் வரும் தயாரிப்பாளர்களை அது பாதிக்கும்.. அதற்காகத்தான் இந்த கட்டுப்பாடுகள். படம் எடுக்கும்போது உள்ள பிரச்சனைகளை சொல்லுங்கள்.. சரி பண்ணுகிறோம்.. கடந்த வருடம் வரை நடந்த விஷயங்களை இனி பேசவேண்டாம்.. கோடிகளைக் கொட்டி படம் எடுக்கிறீர்கள்.. டெக்னீசியன்களுக்கு கொடுத்த சம்பளம் போக மீதிப்பணம் உங்களுக்கு திரும்பி வந்துவிட்டதா..? நஷ்டம் தானே.. இனி அது இன்னொரு தயாரிப்பாளருக்கு நேரக்கூடாது.. அதுதான் எங்கள் நோக்கம்”. என்றார்..

நிகழ்ச்சியின் இறுதியில் இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, “பாண்டியராஜன் தனது மகனைப் பற்றி ரொம்பவே ஃபீல் பண்ணிப் பேசினார். அவரே ஃபீல் பண்ணினால், அவருக்கு முன்னாடி வந்த நான் என் மகன் சாந்தனுவை பற்றி எவ்வளவு ஃபீல் பண்ணியிருப்பேன். பத்து வருடங்களுக்கு முன் ‘காதல்’ படத்தில் நடிக்கச்சொல்லி சாந்தனுவுக்குத்தான் அந்த வாய்ப்பு வந்தது. படம் நிச்சயம் ஹிட்டாகும் என நன்றாகவே தெரிந்தது. ஆனாலும் அப்போது அந்தப்படத்தில் நடிக்கும் அளவுக்கு அவருக்கான வயது இல்லை என மறுத்துவிட்டேன். அதற்குப்பின் அந்த வாய்ப்பு பரத்திற்குப் போய், படமும் மிகப்பெரிய ஹிட்டாகி விட்டது.

அதனால் யாருக்கு என்ன கிடைக்கவேண்டுமோ அது எல்லாமே வரும் நேரத்தில் தான் வரும். அதற்காக நாம் கவலைப்பட வேண்டியதில்லை. என்னுடைய உதவி இயக்குநர் என்பதற்காகவே மதுராஜுக்கு படம் கொடுத்ததாக தயாரிப்பாளர் சொன்னார். அந்தவகையில் இந்தப்படத்தை நல்லபடியாக முடித்து ஆடியோ ரிலீஸ் அளவுக்கு கொண்டு வந்ததிலும் தயாரிப்பாளருடன் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் படத்தை முடித்ததிலும் இயக்குநர் மதுராஜ் என் பெயரைக் காப்பாற்றி விட்டார். சினிமாவில் பலரும் வில்லனாக நடித்து ஹீரோவாக உயர்ந்தவர்கள் தான். அதனால் இந்தப்படத்தில் நடித்த எம்.எஸ்.குமாரும் ஹீரோவாக மாற வாழ்த்துகள்” என வாழ்த்திப் பேசினார்.

ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானின் மகள் ஓரினச்சேர்க்கையாளருடன் இருப்பதற்கு இடமில்லாமல் தெருவோரம் வசித்து வருவதால் உதவி கேட்டு தனது தோழியுடன் இருக...

ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானின் மகள் ஓரினச்சேர்க்கையாளருடன் இருப்பதற்கு இடமில்லாமல் தெருவோரம் வசித்து வருவதால் உதவி கேட்டு தனது தோழியுடன் இருக்கும் படத்தை வெளியிட்டுள்ளார்.

ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் 1998-ம் ஆண்டு ஆசிய அழகி பட்டம் வென்ற எலைன் இ லீ என்ற பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார். இவர்களுக்கு பிறந்த மகள் எட்டா சோக் லாம் (18). இதை ஜாக்கிசான் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். தாயுடன் வசித்து வந்த எட்டா சோக் லாமை காணவில்லை என்று அவருடைய தாய் எலைன் போலீசில் புகார் செய்தார்.

இந்த நிலையில் எட்டா சோக்லாம் நான் ஒரு ஓரின சேர்க்கையாளர் என பகிரங்கமாக அறிவித்தார். தனது தோழி ஆன்டி ஆன்டுடன் ஜோடியாக இருக்கும் படத்தையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் எட்டா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

நானும் என் தோழி ஆன்டி ஆன்டும் செலவுக்கு பணம் இல்லாமல், இருக்க இடம் இல்லாமல் ஹாங்காங்கில் கஷ்டப்படுகிறோம். வீடு இல்லாமல் தெரு ஓரத்தில், பாலத்தின் அடியில் எல்லாம் தூங்க வேண்டியது இருக்கிறது. தயவு செய்து எங்களுக்கு இருக்க இடம் கொடுத்து உதவி செய்யுங்கள்.

எங்கள் இருவருக்கும் இடையே இருப்பது புனிதமான அன்பு. பெற்றோர் நண்பர்கள், உறவினர்கள் என பலரிடம் உதவி கேட்டோம். யாரும் உதவ முன்வரவில்லை. என் தந்தை 395 மில்லியன் டாலர்களுக்கு சொந்தகாரர் அவரும் எங்களை கண்டுகொள்ளவில்லை. நாங்கள் ஓரின சேர்க்கையாளர்களாக இருப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். தயவு செய்து எங்களுக்கு இருக்க இடம் கொடுங்கள். அரசு நடத்தும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்றால் எங்களை பிரித்து விடுவார்கள். தயவு செய்து யாராவது உதவுங்கள்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். 

என் இனிய தமிழ் மக்களுக்கு, தினந்தோறும் தட்டு நிறைய திட்டுகளை வழங்கிக் கொண்டிருக்கிறார் பாரதிராஜா. “சும்மா சிகரெட்டை தூக்கிப் போட்டு பிடிச்ச...

என் இனிய தமிழ் மக்களுக்கு, தினந்தோறும் தட்டு நிறைய திட்டுகளை வழங்கிக் கொண்டிருக்கிறார் பாரதிராஜா. “சும்மா சிகரெட்டை தூக்கிப் போட்டு பிடிச்ச ஆளோட கட் அவுட்டுக்கு எதுக்குய்யா பாலாபிஷேகம் பண்ற? சி.எம் ஆகுறதுக்கு அதுவே தகுதியாகிடுமா? என்றெல்லாம் அவர் ரஜினியை வார வார…. ரஜினி மக்கள் மன்றம் படு சூடாகி வருகிறது.

பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘கொடிபறக்குது’ படத்தில் ரஜினி சிகரெட் பிடிக்கும் காட்சியை திரும்ப ரிப்பீட் பண்ணி, ‘இப்படி சீன் வச்சவரு எப்படி பேசுறார் பாருங்க?’ என்று ரிப்பீட் அடிக்கிறார்கள். அது போதாது என்று பாரதிராஜாவின் திரைப்பட கல்லூரியை திறந்து வைக்க வந்த ரஜினியின் போட்டோவை போட்டு, அப்ப மட்டும் இவர் உங்களுக்கு தேவைப்படுகிறாரா? என்று கேள்வி கேட்கிறார்கள். இதெல்லாம் பாரதிராஜாவின் பார்வைக்கு போகிறதோ, இல்லையோ?

‘நாம ஏன் அவரை தேவையில்லாமல் விமர்சிக்கணும்?’ என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் அவர். ‘இன்னும் கட்சியே ஆரம்பிக்கல. இன்னும் கொடியை கூட அறிமுகப்படுத்தல. இரண்டையும் செஞ்சுட்டு முழு நேர அரசியல்வாதியா ரஜினி வரட்டும். அப்ப விமர்சிக்கலாம். இப்ப விமர்சிக்கறது அவ்வளவு நல்லாயிருக்காது’ என்று திடீர் முடிவை எடுத்திருக்கிறாராம்.

இனி சினிமா விழாக்களில் மைக்கை பிடிக்கும் பாரதிராஜாவிடம், ரஜினி பற்றி கேள்வி கேட்பவர்களுக்கு ஒரே பதில்தான் வைத்திருப்பார்.

“ஸாரிய்யா… நெக்ஸ்ட் கொஸ்டீன்!”

டயானா விபத்தில் உயிரிழக்கவில்லை எனவும் திட்டமிட்டே அவர் படுகொலை செய்யப்பட்டார் எனவும் டயானாவின் காதலரின் தந்தை கூறியுள்ளார். பிரித்தானியா...

டயானா விபத்தில் உயிரிழக்கவில்லை எனவும் திட்டமிட்டே அவர் படுகொலை செய்யப்பட்டார் எனவும் டயானாவின் காதலரின் தந்தை கூறியுள்ளார்.

பிரித்தானியா இளவரசி டயானா தனது காதலர் Dodi Fayed-யுடன் காரில் செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் கடந்த 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் திகதி பலியானார்.

டயானா இறந்து 20 வருடங்கள் ஆகவுள்ள நிலையில் அவர் விபத்தில் தான் இறந்தாரா அல்லது கொல்லப்பட்டாரா என்ற விவாதங்கள் தற்போதும் நடைப்பெற்று வருகின்றது.

இதனிடையில் டயானா - Dodi Fayed காதல் விவகாரத்தை அறிந்து அவர்களுக்கு ஆதரவாக இருந்த Dodiயின் தந்தை Mohamed Al-Fayed ஆரம்பத்திலிருந்தே இது விபத்தல்ல படுகொலை என கூறி வருகிறார்.

இது தொடர்பாக அவர் நீதிமன்றத்தில் சில வருடங்களுக்கு முன்னர் வழக்கு தொடர்ந்த நிலையில் அது தள்ளுபடி செய்யப்பட்டது.

Mohamed கூறுகையில், MI6 ரகசிய புலனாய்வு நிறுவனமும், பிரித்தானியா அரச குடும்பமும் சேர்ந்து தான் திட்டமிட்டு இந்த விபத்தை ஏற்படுத்தினார்கள்.

இது ஒரு படுகொலை என கூறியுள்ளார்.

மேலும் Mohamed கூறுகையில், பிரான்ஸ் புலானாய்வு நிறுவனமும் இதற்கு உதவியுள்ளது.

தன்னிடம் டயானா ஒரு முறை போனில் பேசும் போது தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தான் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறியதாக Mohamed தெரிவித்துள்ளார்.

மேலும், இஸ்லாமிய மதத்தை சேர்ந்த குழந்தை டயானாவின் வயிற்றில் வளருவதை அரச குடும்பம் விரும்பவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தனது கணவர் சார்லஸ் தனது காரின் பிரேக்கை எடுத்து விட்டு விபத்தை ஏற்படுத்த திட்டமிடுவதாகவும் டயானா தான் கைப்பட எழுதியதாக ஒரு கடிதம் முன்னர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தீனா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் தான் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.மேலும் அஜித்திற்கு தல என்று பெயர் வர காரணமாகவும்...


தீனா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் தான் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.மேலும் அஜித்திற்கு தல என்று பெயர் வர காரணமாகவும் இருந்த இவர் இதுவரை தமிழில் எடுத்த அனைத்து படங்களுமே ஹிட் என்றே கூறலாம்.

கள்ளக்குறிச்சியில் பிறந்த ஏ. ஆர்.முருகதாஸ் அதே ஊரை சார்ந்த ரம்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மேலும் இவரது மனைவி ரம்யா மிகுந்த தெய்வபக்தி கொண்டவராம். அதனால் இவர்கள் இருவரும் அடிக்கடி கோவில், குளம் என்று தான் செல்வார்களாம்.

தற்போது ஏ. ஆர். முருகதாஸிற்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் இருக்கின்றனர். பெரும்பாலும் பிரபலங்கள் சிலர் தங்களது குடும்ப நபர்களை வெளியுலகிற்கு அறிமுகம் செய்து கொள்வது இல்லை. ஆனால் முருகதாஸ் சற்று வித்தியாசமனவராக இருந்து வருகிறார்.

இவர் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாளும் பெரும்பாலும் தனது மனைவி மற்றும் தனது பிள்ளைகளுடனே தான் செல்வாராம். அவ்வளவு ஏன் தனது மகன் மற்றும் மகளை அடிக்கடி ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு கூட அழைத்து செல்வாராம். விஜய் நடித்த துப்பாக்கி படத்தின் போது கூட அவர்கள் இருவருமே விஜயயை ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்துப் பேசியுள்ளார்களாம்.

ராக்ஸ்டார் ரமணியம்மா இவரை தற்போது தெரியாதவர்கள் என்று யாருமே இல்லை. அந்த அளவிற்கு பட்டித்தொட்டியெல்லாம் தன் குரலால் பட்டையை கிளப்பியவர். ...

ராக்ஸ்டார் ரமணியம்மா இவரை தற்போது தெரியாதவர்கள் என்று யாருமே இல்லை. அந்த அளவிற்கு பட்டித்தொட்டியெல்லாம் தன் குரலால் பட்டையை கிளப்பியவர்.

இவர் கலந்துக்கொண்ட போட்டியில் இரண்டாம் பரிசை வென்றார், தற்போது பல இசையமைப்பாளார்கள் இவரை பாட வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரமணியம்மா முதன் முதலாக போட்டிக்கு பிறகு ஒரு உருக்கமான பேட்டியை கொடுத்துள்ளார்.

இதில் ‘எனக்கு தமிழக மக்கள் கொடுத்த அன்பே போதும், இந்த புகழுக்கு மேல் எனக்கு என்ன வேண்டும், இதுவே போதும்.

வீட்டு வேலை செய்து தான் இந்த இடத்திற்கு வந்தேன், சினிமாவில் பிஸியானாலும் அந்த வேலையை ஒரு போதும் விடமாட்டேன்’ என உருக்கமாக பேசியுள்ளார்.