Home Top Ad

தற்காலத்தில் அனைவருக்கும் பெரிய பிரச்சினையாக காணப்படும் தொப்பையை வீட்டிலேயே சில எளிய உடற்பயிற்சிகளை செய்து குறைப்பது எப்படி என பார்ப்போம். ...

தற்காலத்தில் அனைவருக்கும் பெரிய பிரச்சினையாக காணப்படும் தொப்பையை வீட்டிலேயே சில எளிய உடற்பயிற்சிகளை செய்து குறைப்பது எப்படி என பார்ப்போம்.

plank walks exercise: இரண்டு கைகளையும் நிலத்தில் ஊன்றி, பக்கவாட்டில் உடலை இயக்க வேண்டும். வலது கை, வலது காலை வலதுபக்கமாக சற்று கீழே இறக்கி, ஏற்ற வேண்டும். அதேபோல் இடது கால், இடது கையை இடதுபக்கமாக கீழே இறக்கி, பின் ஏற்ற வேண்டும். இவ்வாறு 20 முறை செய்ய வேண்டும். படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ள வேண்டும்.

Squats: கால்கள் எந்த அளவிற்கு வலுவாக உள்ளதோ, அந்தளவுக்கு உடலும் வலுவடையும். கைகளை நேரே நீட்டியவாறு, உடலை பாதியளவிற்கு கீழே இறக்கி, பின் மேலே ஏற்ற வேண்டும். சேரில் அமருவதை போல் அமர்ந்து செய்யும் உடற்பயிற்சி இது. இந்த பயிற்சியை செய்யும் போது உங்களின் கால் தொடைகளில் மாற்றம் தெரிவதை உணரலாம்.

Mountain Climbers: தண்டால் எடுப்பது போன்ற நிலையில் இருக்க வேண்டும். அப்போது மலை ஏறுவது போல் கால்களை ஒவ்வொன்றாக கொண்டு சென்று, பின் பழைய நிலைக்கு வரவேண்டும். தசைகள் எவ்வளவு வேலை செய்கிறதோ, அந்தளவிற்கு உடல் கொழுப்பு கரைக்கப்படும்.

toe To Bar: தொங்கக்கூடிய கம்பி வீட்டில் இருந்தால் போதும். அதில் தொங்கிக் கொண்டு, கால் விரல்களால் அந்த கம்பியை தொட வேண்டும். தொடக்கத்தில் கடினமாக இருந்தாலும், படிப்படியாக செய்ய முயற்சிக்க வேண்டும்.

மறைந்த கலைஞர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் இடம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துவருகிறது. திமுகவி...

மறைந்த கலைஞர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் இடம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துவருகிறது. திமுகவினர் பல இடங்களில் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சர்ச்சை பற்றி ரஜினி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

"மதிப்பிற்குரிய அமரர் கலைஞர் அவர்களுக்கு, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய, தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அது தான், நாம் அந்த மாமனிதருக்கு கொடுக்கும் தகுந்த மரியாதை" என ரஜினி ட்விட்டரில் கூறியுள்ளார்.

சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். சகாப்தம் முடிந்துவிட்டது, சூரியன்...

சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார்.

சகாப்தம் முடிந்துவிட்டது, சூரியன் அஸ்தமனமாகிவிட்டது என்று அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், அவர் மருத்துவமனையில் இருக்கும் போது நடைபெற்ற சுவாரஷ்ய சம்பவம் ஒன்று ஊடகங்களில் தீயாய் பரவி வருகின்றது.

மருத்துவமனையில் தாதியர் ஒருவர் உடல்நிலை குறித்து பார்வையிட்டு கொண்டிருக்கும் போது , உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள முச்சை இழுத்து விடுமாறு கூறியுள்ளார்.

அப்போது, கருணாநிதி மூச்சு நின்று விடக் கூடாதுனுதான் இங்க வந்தேன். நீங்களே எடுத்து விட சொல்லுறீங்கனு புன்னகையுடன் தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு அங்கிருந்த அனைவரும் புன்னகைத்துள்ளனர். இன்று மாலை அவரின் மரண செய்தி வெளியான பின்னர் அவரின் வரலாற்று சுவாரஷ்யங்களும் வெளிவரத்துடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் செல்போன் பயன்பாடுகள் அதிகரித்த பின் அனைத்து ஃபோன் நெட்வொர்க் நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு ஹை ஸ்பீடு டேட்டாக்களை வழங்கி ...

இந்தியாவில் செல்போன் பயன்பாடுகள் அதிகரித்த பின் அனைத்து ஃபோன் நெட்வொர்க் நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு ஹை ஸ்பீடு டேட்டாக்களை வழங்கி வருகிறதுது. தினமும் பல வீடியோக்கள் பார்த்தாலும் தீராமல் இருக்கிறது ஜிபிகள்.

தினமும் சினிமா, பாடல்கள் என எல்லாவற்றையும் பார்த்து போரடித்துப் பின் தனிமையை போக்கிக் கொள்ள பலரும் பார்க்கத் தொடங்குவது பார்ன் வீடியோக்களைத்தான். ஆரம்பத்தில் விளையாட்டாக பார்க்கத் தொடங்குவபர்கள் பின் தினமும் பார்த்தே ஆக வேண்டும் என்கிற அளவிற்கு பார்ன் வீடியோ பார்க்கும் பழக்கத்திற்கு அடிமைப்பட்டு விடுகின்றனர்.

பார்ன் சைட் பார்ப்பதில் ஆண்களின் எண்ணிக்கையை போல் பெண்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. பார்ன் சைட் பார்ப்பதால் ஏற்படும் உளவியல் சிக்கல்கள் என்னென்ன என்பதை உளவியல் மருத்துவர் வந்தனாவிடம் கலந்துரையாடிய போது:-

பார்ன் சைட்டை அதிகமாக பார்க்க மூன்று முக்கியக் காரணம்  உண்டு. எல்லோருக்கும் ஈஸியாக கிடைப்பது, மேலும் இதைப் பார்க்க எந்தவொரு செலவும் செய்யத் தேவையில்லை. மற்றொரு முக்கியமான காரணம் பார்ன் சைட்டை பார்க்கும் போது நம் முகம் யாருக்கும் தெரியாது’ என்கிற தைரியம்.

நம் அந்தரங்க ஆசைகள் யாருக்கும் தெரியாதென எண்ணிக்கொண்டுதான் பலரும் பார்க்கிறார்கள். போதைமருந்து எடுத்துக் கொண்டால் அனைவருக்கும் தெரியும். ஆனால் பார்ன் சைட் பார்ப்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாதென எண்ணிக்கொண்டு பார்க்கிறார்கள்.

பார்ன் சைட்டை பெரும்பாலும் மொபைல் ஃபோன்களில் மட்டும்தான் பார்க்கிறார்கள். லேப்டாப்பிலோ அல்லது டேப்களிலோ பார்ப்பதில்லை. இதனால் பலரும் மன அழுத்தத்துடன் தனிமையாக இருக்கும் நேரங்களில் பார்ன் சைட்டை பார்க்கிறார்கள். பெண்களுக்கு ஆர்கஸம்  சீக்கிரமே கிடைப்பதால் தொடர்ந்து பார்க்கிறார்கள். மன அழுத்தம் மற்றும் தனிமையில் இருப்பவர்கள் பலரும் இதை பார்க்கிறார்கள் என்று சொல்லமுடியாது நல்ல வேலையில் இருக்கிற நன்றாக படிக்கிற கல்லூரி இளம் பெண்கள் கூட இதை பார்க்கின்றனர்.

இன்றைய காலத்தில் இளைஞர்கள் பலருக்கும் பாலியல் அறிவு எதுமின்றி வெற்று சுவாரஸ்யத்திற்கு பார்க்கத் தொடங்கி பின் பார்ன் சைட் பார்ப்பதற்கு அடிமையாகி விடுகிறார்கள். இதனால் தனியாக இருக்கும் நேரங்களில் சுய இன்பத்தில் ஈடுபடத் தொடங்கிவிடுவார்கள். சிலருக்கு பார்க்கும் போது கிடைக்கும் மிகையுணர்ச்சிக்காக இதில் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள்.

பார்ன் சைட் பார்த்ததிலே ஆண்களின் எனர்ஜி முழுவதும் போய்விடும். பின், செயலாக எதுவுமே செய்ய முடியாது. சிலருக்கு உடலுறவில் விந்து விரைவாக வெளியேறிவிடும். இதனால் மனைவியுடன் செயல்பட முடியாமல் உறவில் சிக்கல் ஏற்படலாம்.

பார்ன் சைட் பார்ப்பதில் அடிமையானவர்கள் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போகும். அவர்களின் மூளை செக்ஸை நிகழ்த்தி பார்த்துக் கொண்டே இருக்கும். இன்னும் சிலர் தன்னுடைய துணையிடம் அந்த வீடியோக்களில் பார்த்தது போன்றே செய்ய வேண்டுமென வற்புறுத்தலாம். இந்த அறிகுறிகளை வைத்தே அவர்களின் மனநிலையை அறிந்து கொள்ளலாம். இவர்கள் நிச்சயமாக உளவியல் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று அதிலிருந்து மீளலாம்.

தீவிரமாக செக்ஸுவல் அடிக்ஸன்  இருப்பவர்கள்தான் பெண்கள், குழந்தைகள் மீது ஏன்  விலங்குகளை கூட வன்புணர்வை செய்கிறார்கள்.

டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு பாலியல் குறித்த விழிப்புணர்வை பள்ளியிலிருந்தே கொடுக்கவேண்டும்.முதலில் அவர்களுக்கு ‘குட் டஜ்’, ‘பேட் டஜ்’ பற்றிய ஆலோசனையும், அந்தரங்க உறுப்புகள் என்னென்ன என்பதை பற்றிய புரிதலையும் கொடுக்க வேண்டும். பின் அந்தரங்க உறுப்பை சுத்தமாக வைத்திருப்பது பற்றிய அறிவையும்  கொடுக்க வேண்டும். பெண் பிள்ளைகள் மட்டுமல்ல ஆண் பிள்ளைகளும் உடலளவில் முதிர்ச்சி அடையும் பருவம் உண்டு என்பதை சொல்ல வேண்டும் என்கிறார் மருத்துவர் வந்தனா.

பார்ன் சைட் பார்ப்பதால் நன்மைகளும் இருக்கிறது, சிலருக்கு உடலுறவு குறித்த சந்தேகங்களை பிறரிடம் கேட்கத் தயங்கி பலரும் இதைப்பார்த்து தெரிந்து கொள்கிறார்கள். சில தம்பதியர்களுக்கு உடலுறவு குறித்த புரிதலுக்காக சிலர் பார்க்கலாம். கட்டுப்பாடு எல்லாமே உங்களின் கையில்தான் உள்ளது என்கிறார் மருத்துவர்.

ஒரு காலத்தில் கெட்ட பழக்கமென ஒதுக்கி வைக்கப்பட்ட மது குடிக்கும் பழக்கத்தை இன்றைய நவீன காலத்தில் சோஸியல் டிரிங், எனச் சொல்லி பலரும் மதுவை அருந்தவே செய்கிறார்கள். ஒரு காலத்தில் மனக்கஷ்டம் என்றால் சாப்பிடாமல் தூங்காமல் இருப்பார்கள். இன்றைய காலத்தில் மன அழுத்தம் ஏற்பட்டால் தங்களின் இயல்பான அளவை விட கூடுதலாக சாப்பிடவும் தூங்கவும் செய்கிறார்கள். எந்தவொரு செயலையும் அவரவர் இயல்பை மீறி தீவிரமாக தொடர்ந்து செய்யும் போது அதற்கு நாம் அடிக்ட் ஆகிவிட்டோம் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

காலத்தை வென்று நிற்பார் கலைஞர் என திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு கவிப்பேரரசு வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். உடல்நலக் குறைவால் பாதி...

காலத்தை வென்று நிற்பார் கலைஞர் என திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு கவிப்பேரரசு வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதி இன்று மாலை காலமானார்.  அவருக்கு கவிப்பேரரசு வைரமுத்து இரங்கல் குறிப்பை வெளியிட்டுள்ளார்.

அந்தக் குறிப்பில் கூறியிருப்பதாவது:  கலைஞர் என்பது ஒரே சொல்லில் ஒரு சரித்திரம். நான்கே எழுத்துக்களில் ஒரு நூற்றாண்டை அடக்கமுடியுமென்றால் அதன்பேர் கலைஞர். ஒரு புலவனே போராளியாகவும், போராளியே புலவனாகவும் திகழ்ந்த பெருஞ் சரித்திரம் இந்தியப் பெரும்பரப்பில் கலைஞருக்கே வாய்த்திருந்தது. இந்திய தேசப்படம் யோசித்து ஏற்றுக்கொள்ளும் ஒரு குக்கிராமத்தில் பிறந்து இந்தியாவை ஆளும் குடியரசுத் தலைவர்களையும், பிரதமர்களையும் தேர்ந்தெடுக்கும் ஆற்றலாக வளர்ந்த அதிசயம் அவர். மெய்யான திராவிட இயக்கக் கொள்கைகளை 80 ஆண்டுகள் ஏந்தி நடந்தவர்.

அவர் கல்லூரிக் கல்வி காணவில்லை; ஆனால் பல்கலைக்கழகங்களைப் படைத்தளித்தார். மின்சாரம் இல்லாத ஊரில் பிறந்தார்; தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் பரிசளித்தார். இசைத்தமிழ் வளர்க்கும் குடும்பத்தில் பிறந்தார்; ஆனால் முத்தமிழுக்கும் பங்களிப்புச் செய்தார். பேராசிரியரையும் நாவலரையும் அழைத்துக் கூட்டம் போடுவதற்கு வீட்டு வெள்ளிக் கிண்ணத்தை அடமானம் வைத்தார்; ஆனால் ஆண்டாண்டு காலமாக அடமானம் கிடந்த தமிழர்களின் மானத்தை மீட்டெடுத்தார். வீழ்த்தப்பட்டவர்களுக்காகவும் தாழ்த்தப்பட்டவர்களுக்காகவும் இவர் போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டை இந்தியாவின் எல்லாத் திசைகளுக்கும் நீட்டித்தார்.

எழுத்தாளர் – கவிஞர் – நாடக ஆசிரியர் – பத்திரிகையாளர் – கட்சித் தலைவர் – ஆட்சித் தலைவர் – உறங்காத படைப்பாளி – ஓயாத போராளி என்று எத்துறை தொட்டாலும் அத்துறையில் வித்தகம் காட்டிய வித்தகர் இந்திய அளவில் இவர் மட்டும்தான். கட்சித் தலைவன் போய்விட்டான் என்று தொண்டர்கள் கதறுகிறார்கள். எங்கள் கவியரங்கத் தலைவன் போய்விட்டான் என்று கவிஞர்கள் கதறுகிறோம்.

பெரியார் ஆட்சிப் பொறுப்பை மறுத்திருந்தார். காலம் அண்ணாவுக்கு ஆயுளை மறுத்திருந்தது. ஆனால் இந்த இரண்டையும் ஒருங்கே பெற்று இத்தனை ஆண்டுகள் கலைஞர் இயங்கியதால்தான் பெரியார், அண்ணா என்ற தத்துவங்கள் கணிப்பொறித் தலைமுறைக்குக் கடத்தப்பட்டன. இந்த ஒரு பெரும்பணிக்காகவே காலம் கலைஞரை நினைவு கூரும்.

தொல்காப்பியப் பூங்கா – குறளோவியம் – சங்கத்தமிழ் – சிலப்பதிகார நாடகம் – ரோமபுரிப் பாண்டியன் – தென்பாண்டிச் சிங்கம் – திருக்குறள் உரை போன்ற படைப்புகளால் கலைஞர் காலத்தை வென்று நிற்பார்.

மகாகவி தாகூர் மரித்த நாளில் கலைஞர் மறைந்திருக்கிறார். ஓ! கலைஞரின் மரணம்கூட கம்பீரமானது. மரணத்தால் கலைஞர் மரிப்பதில்லை. அவர் வாழ்ந்த ஒவ்வொரு நாளும் அவர் புரிந்த ஒவ்வொரு செயலும் மரணத்தை முறியடிக்கும் ஏற்பாடுதான். என் ஒவ்வோர் எழுத்தையும் வாசித்து நேசித்து உரையாடுவார். இதோ இந்த இரங்கல் செய்தி படிக்க அவரில்லையே என்று அழுகிறேன். அவர் புகழுடம்பு வாழும் திசை நோக்கித் தொழுகிறேன். இவ்வாறு அந்த இரங்கல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரித்திர படம் இயக்குவதற்காக பாகுபலி பட இயக்குநர் ராஜமௌலியிடம் சசிகுமார் ஆலோசனை பெற்றுள்ளார். நாடோடிகள் 2  படத்தில் நடித்து முடித்துள்ள சச...

சரித்திர படம் இயக்குவதற்காக பாகுபலி பட இயக்குநர் ராஜமௌலியிடம் சசிகுமார் ஆலோசனை பெற்றுள்ளார்.

நாடோடிகள் 2  படத்தில் நடித்து முடித்துள்ள சசிக்குமார், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் `என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் தனுஷுக்கு அண்ணனாக நடித்துள்ளார். இப்படத்தை அடுத்து இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கிறார். நடிப்பில் கவனம் செலுத்தி வரும் சசிக்குமார் அடுத்ததாக சரித்திர படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளார்.

இப்படத்திற்காக இயக்குநர் ராஜலியை சந்தித்து அவரிடம் ஆலோசனை பெற்றுள்ளார். சமீபத்தில் இயக்குநர் ராஜமௌலி - சசிக்குமார் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து ராஜமௌலி இயக்கும் படத்தில் சசிக்குமார் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அது உண்மையில்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

ராஜமௌலி 'பாகுபலி 2' திரைப்படத்திற்குப் பிறகு ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஹீரோக்களாக நடிக்கும் படத்தை இயக்குகிறார். இப்படத்தின் கதை விவாதம் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே சசிக்குமார் கேட்டதன் பேரில் அவர் இயக்க இருக்கும் சரித்திர படத்திற்கான ஆலோசனைகளை ராஜமௌலி வழங்கியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குன்றி இன்று 11 நாளாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்ற...

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குன்றி இன்று 11 நாளாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை காவேரி மருத்துவமனை செயல் இயக்குநர் அரவிந்தன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ”கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. வயது மூப்பின் மூலம் வரும் பிரச்சினைகளை கணக்கிடும்போது, முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டைப் பராமரிப்பதில் சவாலான நிலையே தொடர்கிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, மிகச் சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுமா என்பது 24 மணி நேரத்துக்கு பிறகே தெரியும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து இரவு முதலே ஆயிரகணக்கான தொண்டர்கள் மருத்துவமனை வாசலில் கூடி அவருக்கு அதரவாக முழக்கமிட்டு வருகின்றனர்.

அதுமட்டுமின்றி கடந்த 2001ம் ஆண்டில் நள்ளிரவில் மேம்பாலங்கள் கட்டுமான சர்ச்சைகளுக்காக முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி மற்றும் அவருடன் அப்போதைய மத்திய அமைச்சர்களான முரசொலி மாறன் மற்றும் த. ரா. பாலு ஆகியோர் கைது செய்யப்பட்டபோது எடுத்த காணொளி தற்போது நெட்டிசன்கள் கையில் எடுத்து வைரலாக்கி வருகின்றனர்.