Home Top Ad

கரு: அப்பாவும், தாத்தாவும் தங்களது தாதா தனத்தால் இழந்த தனது பூர்வீக சொத்தான ஒரு தியேட்டரை மீட்க, காமெடியாகதாதா தனத்தை கையிலெடுக்கும் ஹீரோவே...

ஜுங்கா சினிமா விமர்சனம் - அப்படி, இப்படி , எப்படி கூட்டிக் கழித்தாலும்., 'ஜுங்கா' - 'கிங்கா'க நினைத்த விஜய் சேதுபதியை 'தொங்க' லிலேயே விட்டிருக்கிறது!

கரு: அப்பாவும், தாத்தாவும் தங்களது தாதா தனத்தால் இழந்த தனது பூர்வீக சொத்தான ஒரு தியேட்டரை மீட்க, காமெடியாகதாதா தனத்தை கையிலெடுக்கும் ஹீரோவே "ஜுங்கா" படக்கரு.


கதை: "டான் " எனும் கெத்தில் பந்தா தாதாக்களாகவாழ்ந்த டான் லிங்கா வின் பேரனும், டான் ரங்காவின் மகனுமாகிய ஜுங்காவிற்கு. தன் அப்பா தாத்தா, தங்களது டம்மி டான் தனத்தால் ஒரு வசதியான செட்டியாரிடம் விற்று இழந்த தங்களது பூர்வீக சொத்தான "சினிமா பாரடைஸ் "தியேட்டரை மீட்டெடுக்க., தன் தந்தையும் தாத்தாவும் செய்யாத டான் தனத்தை எல்லாம் செய்து ஒரு கோடி ரூபாய்சம்பாதித்தும் தியேட்டரை மீட்க முடியாது தவிக்கிறார் ஜுங்கா - விஜய் சேதுபதி ஒரு கட்டத்தில் பாரீஸில் வசிக்கும் செட்டியாரின் செல்ல மகள் யாழினி எனும் சாயிஷாவை கடத்தி தியேட்டரை மீட்க நண்பன் யோகி பாபுவுடன்பாரீஸ் போய் இறங்குகிறார். அங்கு இவர் சாயிஷாவை கடத்துவதற்கு முன்பே., இத்தாலிய போதை மருந்து கடத்தல் கும்பல் சாயிஷாவை கடத்த அவர்களிடமிருந்து யாழினி - சாயிஷாவை ஜுங்கா - விஜய் சேதுபதி காப்பாற்றி கடத்தி, செட்டியாரை தன் வழிக்கு கொண்டு வந்து, தன் லட்சியமான தியேட் டரை கைப்பற்றினாரா? இல்லையா...? என்பது தான் ஜுங்கா. படத்தின் கதை யும் களமும்.



காட்சிப்படுத்தல்: டாக்டர் ஐசரி வி.கணேஷ், அருண்பாண்டியன், ஆர.எம். ராஜேஷ்குமார் ஆகிய மூவருடன் இணைந்து நடிகர் விஜய் சேதுபதியேதயாரித்து நடித்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் சாயிஷா, மடோனா செபாஸ்டின், ராதாரவி, சரண்யா, "நான் கடவுள் "ராஜேந்திரன், சுரேஷ் மேனன்உள்ளிட்ட பலரும் நடிக்க., :"இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா "நாயகர்விஜய் சேதுபதியும், இயக்குனர் கோகுலும் மீண்டும் இணைந்திருக்கும் "ஜுங்கா". படத்தில் இயக்குனர் சாமான்யரசிகர்களுக்கு அவ்வளவு எளிதில் புரியாத வகையில் பல காமெடி காட்சிகளை காட்சிப்படுத்தியிருப்பதும், ஆரம்ப காட்சிகளில்., "தமிழ் படம் -1 & 2" சாயலில் பிறபடங்களைநக்கல், நையாண்டி செய்யத்துணிந்து, அதில்ஒரு தெளிவு இல்லாமல் பல காட்சிகளை காட்சிப்படுத்தியிருப்பதும்., பிறகு அப்பாணியில் இருந்து விலகி, படம் முழுக்க விஜய் சேதுபதி கத்தும்படியாக காட்சிகள் அமைத்திருப்பதும் பெரும் பலவீனம்.




கதாநாயகர்: பேரன் ஜுங்காவாக முக்கால்வாசிப் படத்திலும், தாத்தா லிங்கா, தந்தை ரங்காவாக இரண்டொரு சீன்களிலும் வெவ்வேறு கெட்-அப்களில் வரும் விஜய்சேதுபதி படம் முழுக்க பேசிக் கொண்டேயிருக்கிறார்.

"யாதும் ஊரே யாவரும் கேளீர்", "புதிய இந்தியா பிறந்துடுச்சு" என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் "பன்ச் " அடித்தபடி ,தன்னை என்கவுண்டருக்கு தான் போலீஸ் அழைத்து செல்கிறது எனத் தெரிந்தும் அலட்டிக் கொள்ளாமல் அவர்களுடன் செல்வதில் தொடங்கி., அவர்களுக்கு சொல்வது மாதிரி தன் ப்ளாஷ்பேக் "டான்" தனம் மொத்தத்துடன், கூடவே தன் கண்ணாமூச்சி காதல் மற்றும் ,கஞ்சத்தனத்தையும்ரசிகர்களுக்கும்காட்சிகளாக சொல்ல ஆரம்பித்து, இறுதியில் போலீஸிடமிருந்து தப்பிப்பது வரை விஜய்சேதுபதி, வழக்கம் போல வெளுத்துகட்டியிருக்கிறார். அதிலும், "என்னை தேடி வர்றவங்களுக்கு நான் எவ்ளோ வேணும்னு இறங்கி வருவேன்...", "ஹேய் நண்பனை சாப்பிட்டே சாகடிக்காதே...." என்றெல்லாம் அவர் அடிக்கும் டயலாக் "பன்ச் " கள்பர்ஸ்னலாய் யாரையோ குறிவைத்து குத்துவது போன்றே தெரிவது படத்திற்கு பலமா? பலவீனமா சேதுபதிக்கே வெளிச்சம்!




கதாநாயகியர்: யாழினியாக, நாயகியாக 2547 கோடி சொத்துக்கு சொந்தக்காரியாகசாயிஷா பாரீஸ் வாழ் இந்திய பெண்ணாகசெம சாய்ஸ்.

சாயிஷா மாதிரியே., ஆரம்ப காட்சிகளில் கோவை பஸ் கண்டக்டர்சேதுபதியின் மற்றொரு நாயகியாக வரும்
மடோனா செபாஸ்டின், தெலுங்கு பேசும் பெண்ணாக மிரட்டியிருக்கிறார்.




காமெடியன்: "நாங்க ராயபுரம், நீங்க ஆர்ஏ புரம்... நடுவுல ஒய் ஏ மட்டும் தான் மேடம் மிஸ்ஸிங்... சாரி மேடம்... என நாயகியையும், பல காட்சிகளில் நாயகரையும் ஓட்டும் யோகி பாபு செம கிளாஸ் அப்பு!




பிற நட்சத்திரங்கள்: மாஜி தாதா சோப்ராஜாகராதாரவி, சேதுபதியின் 'தொணதொண' தாயாக சரண்யா, அந்த கெத்து காட்டும் பாட்டியம்மா ,
சேதுபதியிடம் ஜீப்பிலேயே ப்ளாஷ்பேக் கேட்கும் போலீஸ் "நான் கடவுள் "ராஜேந்திரன், காஸ்ட்லி செட்டியார் சுரேஷ் மேனன் உள்ளிட்டோரில் எல்லோரும் மிரட்டல் என்றாலும், அந்த பாட்டியம்மா செம மிரட்டல்.

டட்லியின் ஒளிப்பதிவு பனி படர்ந்த பாரீஸ் அழகை பக்காவாக படம் பிடித்து வந்திருப்பது ஆறுதல்!.

சித்தார்த் விபினின் இசையில்., "ஏய் இப்படி சூடண்டி", "ஜொலிக்கிறியா கலாய்க்கிறாயா.", "ஜுங்கா ஜுங்கா...", "நீ யாரோ யாரோ ...." உள்ளிட்ட பாடல்களும். பின்னணி இசையும் ஒஹோ இல்லை... ஒகே!




பலம்: சாயிஷாவும், யோகி பாபுவும் அந்த பாட்டியம்மாவும் மட்டுமே..
பெரும் பலம்.




பலவீனம்: "ஜுங்கா" எனும் டைட்டிலும்., விஜய் சேதுபதியின் நடை, உடை, பாவனை மற்றும் பேச்சு, வீச்சு உள்ளி ட்டவை ஒவர் அலட்டலாக தெரிவது பெரும் பலவீனம்!




இயக்கம்: கோகுலின் எழுத்து, இயக்கத்தில்., "நமக்கு சொந்தமான ஒண்ணு ஒருத்தன் கையில இருக்குன்னா, அவனுக்கு சொந்தமான ஒண்ணு நம்ம கையில இருக்கணும்.", "இதுலேயிருந்து என்ன தெரியுதுன்னா, ஒரு ' டான், ' டாவடிக்கக் கூடாதுன்னு தெரியுது....", "எங்க தமிழ் சினிமாவுல ,நாங்க புரடக்ஷன் மேனேஜருக்குதான்ரொம்ப முக்கியத்துவம் கொடுப்போம்... " ஆகிய வசனங்களும் செம காமெடி டச்சிங் ... என்பது இப்படத்திற்குகொஞ்சம் வலு சேர்க்கிறது!

ஆனாலும், பாரீஸ் போலீஸ் ஹெட்- குவாட்டர்ஸில் அத்தனை போலீஸுக்கும் போக்கு காட்டி விட்டுநாயகி சாயிஷாவுடன் நாயகர் விஜய் சேதுபதி காரில் தப்புவதும், மைனஸ் ஐந்து டிகிரி நதி நீரில் (தேம்ஸ்?) காசு மிச்சம் என்பதற்காக ஹீரோநீ ந்தி சென்றே ஹீரோயினை காப்பாற்ற முற்படுவதும் உ ள்ளிட்ட நம்ப முடியாதகாட்சிகள்... படம் முழுக்க நிரம்பியிருப்பது ரசிகனை பெரிதாய் படுத்துகின்றன.

அதே நேரம், விஜய் சேதுபதியின் "சினிமா பாரடைஸ்" தியேட்டரில் அன்று, "பாட்சா" படம் தோல்வியை தழுவியதற்குசொல்லப்பட்ட காரணம், "ஜுங்கா" பெயர் காரணம் .... உள்ளிட்ட கிண்டல், கேலி வசனங்களிலும், சம்பந்தப்பட்ட காட்சிகளிலும்... தூக்கலாகத் தெரியும்காமெடி சென்ஸ் சற்றே ஆறுதல்!

பைனல் பன்ச்: "அப்படி, இப்படி , எப்படி கூட்டிக் கழித்தாலும்., 'ஜுங்கா' - 'கிங்கா'க நினைத்த விஜய் சேதுபதியை 'தொங்க' லிலேயே விட்டிருக்கிறது!

0 coment�rios: