Home Top Ad

டயானா விபத்தில் உயிரிழக்கவில்லை எனவும் திட்டமிட்டே அவர் படுகொலை செய்யப்பட்டார் எனவும் டயானாவின் காதலரின் தந்தை கூறியுள்ளார். பிரித்தானியா...

டயானா விபத்தில் உயிரிழக்கவில்லை எனவும் திட்டமிட்டே அவர் படுகொலை செய்யப்பட்டார் எனவும் டயானாவின் காதலரின் தந்தை கூறியுள்ளார்.

பிரித்தானியா இளவரசி டயானா தனது காதலர் Dodi Fayed-யுடன் காரில் செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் கடந்த 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் திகதி பலியானார்.

டயானா இறந்து 20 வருடங்கள் ஆகவுள்ள நிலையில் அவர் விபத்தில் தான் இறந்தாரா அல்லது கொல்லப்பட்டாரா என்ற விவாதங்கள் தற்போதும் நடைப்பெற்று வருகின்றது.

இதனிடையில் டயானா - Dodi Fayed காதல் விவகாரத்தை அறிந்து அவர்களுக்கு ஆதரவாக இருந்த Dodiயின் தந்தை Mohamed Al-Fayed ஆரம்பத்திலிருந்தே இது விபத்தல்ல படுகொலை என கூறி வருகிறார்.

இது தொடர்பாக அவர் நீதிமன்றத்தில் சில வருடங்களுக்கு முன்னர் வழக்கு தொடர்ந்த நிலையில் அது தள்ளுபடி செய்யப்பட்டது.

Mohamed கூறுகையில், MI6 ரகசிய புலனாய்வு நிறுவனமும், பிரித்தானியா அரச குடும்பமும் சேர்ந்து தான் திட்டமிட்டு இந்த விபத்தை ஏற்படுத்தினார்கள்.

இது ஒரு படுகொலை என கூறியுள்ளார்.

மேலும் Mohamed கூறுகையில், பிரான்ஸ் புலானாய்வு நிறுவனமும் இதற்கு உதவியுள்ளது.

தன்னிடம் டயானா ஒரு முறை போனில் பேசும் போது தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தான் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறியதாக Mohamed தெரிவித்துள்ளார்.

மேலும், இஸ்லாமிய மதத்தை சேர்ந்த குழந்தை டயானாவின் வயிற்றில் வளருவதை அரச குடும்பம் விரும்பவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தனது கணவர் சார்லஸ் தனது காரின் பிரேக்கை எடுத்து விட்டு விபத்தை ஏற்படுத்த திட்டமிடுவதாகவும் டயானா தான் கைப்பட எழுதியதாக ஒரு கடிதம் முன்னர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தீனா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் தான் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.மேலும் அஜித்திற்கு தல என்று பெயர் வர காரணமாகவும்...


தீனா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் தான் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.மேலும் அஜித்திற்கு தல என்று பெயர் வர காரணமாகவும் இருந்த இவர் இதுவரை தமிழில் எடுத்த அனைத்து படங்களுமே ஹிட் என்றே கூறலாம்.

கள்ளக்குறிச்சியில் பிறந்த ஏ. ஆர்.முருகதாஸ் அதே ஊரை சார்ந்த ரம்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மேலும் இவரது மனைவி ரம்யா மிகுந்த தெய்வபக்தி கொண்டவராம். அதனால் இவர்கள் இருவரும் அடிக்கடி கோவில், குளம் என்று தான் செல்வார்களாம்.

தற்போது ஏ. ஆர். முருகதாஸிற்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் இருக்கின்றனர். பெரும்பாலும் பிரபலங்கள் சிலர் தங்களது குடும்ப நபர்களை வெளியுலகிற்கு அறிமுகம் செய்து கொள்வது இல்லை. ஆனால் முருகதாஸ் சற்று வித்தியாசமனவராக இருந்து வருகிறார்.

இவர் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாளும் பெரும்பாலும் தனது மனைவி மற்றும் தனது பிள்ளைகளுடனே தான் செல்வாராம். அவ்வளவு ஏன் தனது மகன் மற்றும் மகளை அடிக்கடி ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு கூட அழைத்து செல்வாராம். விஜய் நடித்த துப்பாக்கி படத்தின் போது கூட அவர்கள் இருவருமே விஜயயை ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்துப் பேசியுள்ளார்களாம்.

ராக்ஸ்டார் ரமணியம்மா இவரை தற்போது தெரியாதவர்கள் என்று யாருமே இல்லை. அந்த அளவிற்கு பட்டித்தொட்டியெல்லாம் தன் குரலால் பட்டையை கிளப்பியவர். ...

ராக்ஸ்டார் ரமணியம்மா இவரை தற்போது தெரியாதவர்கள் என்று யாருமே இல்லை. அந்த அளவிற்கு பட்டித்தொட்டியெல்லாம் தன் குரலால் பட்டையை கிளப்பியவர்.

இவர் கலந்துக்கொண்ட போட்டியில் இரண்டாம் பரிசை வென்றார், தற்போது பல இசையமைப்பாளார்கள் இவரை பாட வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரமணியம்மா முதன் முதலாக போட்டிக்கு பிறகு ஒரு உருக்கமான பேட்டியை கொடுத்துள்ளார்.

இதில் ‘எனக்கு தமிழக மக்கள் கொடுத்த அன்பே போதும், இந்த புகழுக்கு மேல் எனக்கு என்ன வேண்டும், இதுவே போதும்.

வீட்டு வேலை செய்து தான் இந்த இடத்திற்கு வந்தேன், சினிமாவில் பிஸியானாலும் அந்த வேலையை ஒரு போதும் விடமாட்டேன்’ என உருக்கமாக பேசியுள்ளார்.

சொந்த வீட்லேயே எலியை வச்சுகிட்டு, ஊருக்கே மருந்து தெளித்துக் கொண்டிருக்கிறார் கமல். கமலின் மய்யம் விசில் ஆப், நேற்று கோலாகலமாக துவங்கப்பட...

சொந்த வீட்லேயே எலியை வச்சுகிட்டு, ஊருக்கே மருந்து தெளித்துக் கொண்டிருக்கிறார் கமல்.

கமலின் மய்யம் விசில் ஆப், நேற்று கோலாகலமாக துவங்கப்பட்டுவிட்டது. பல நாள் உழைப்பு. மண்டையை கசக்கியதன் பலன், மிக அற்புதமான செயலியாக வந்திருக்கிறது அது.

அந்தந்த ஊரில் தேவைப்படும் அவசியங்களை, நடக்கும் அநியாயங்களை இதில் வீடியோவாக பதிவிடலாம். அல்லது புகாராக தெரிவிக்கலாம். அதை சம்பந்தப்பட்ட துறைக்கு கொண்டு செல்கிற பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறது கமலின் இந்த செயலி. இத்தகைய புகார்களை அரசு கண்டுகொள்ளுமா, விட்டுத் தள்ளுமா? என்பது அடுத்த விஷயம். ஆனால் குறைகளை அரசின் கண் விழிக்கு அருகே கொண்டு செல்கிற இந்த ஒரு திட்டமே, கமலின் புலிவேக பாய்ச்சலுக்கு எடுத்துக்காட்டு.

இந்த நேரத்தில்தான் அவரது அண்ணன் சாருஹாசன் ட்விட்டரில் ஒரு கருத்தை பதிவு செய்திருக்கிறார். கர்நாடகத்தை சேர்ந்த ஒருவர்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்று கூறியிருக்கிறார்.

எப்போதும் தாட் பூட்டாக பேசுவதில் சாருஹாசன் யாருக்கும் சளைக்காத ஹாசன். ‘என் தம்பி கமலாவது கடவுள் இருந்தா நல்லாயிருக்கும்னு சொல்றான். நான் இல்லேன்னு சொல்றேன்’ என்றார் ஒருமுறை. அப்படிப்பட்டவர், இப்படி தடாலடியாக பதிவிடுவது ஆச்சர்யமில்லை. ஆனால் ஒரு குழப்பம்.

அவர் சொல்லும் அந்த கர்நாடகாக் காரர் யார்? வாட்டாள் நாகராஜா இருக்குமோ, இல்ல தேவ கவுடாவாக இருக்குமோ? என்றெல்லாம் மயிர் கூச்செரிகிறார்கள் ரசிகர்கள்.

ஏனென்றால், ‘நான் தமிழன்’ என்று ரஜினி சத்தியம் பண்ணி பல வருஷமாச்சே?

வரவர தமிழன் சோம்பேறியாப் போனான் என்பதற்கு உதாரணம்தான், சர்பத் மற்றும் டீ கடைகளில் கூட வட மாநிலத்தானின் ஆக்ரமிப்பு. (நீ ஒழுங்கா வேல பார்த்தா...

வரவர தமிழன் சோம்பேறியாப் போனான் என்பதற்கு உதாரணம்தான், சர்பத் மற்றும் டீ கடைகளில் கூட வட மாநிலத்தானின் ஆக்ரமிப்பு. (நீ ஒழுங்கா வேல பார்த்தா அவன் ஏன்யா வர்றான்?) ஆனால் தமிழனின் சோம்பேறித்தனத்தையும், குடிக்கு அடிமை ஆகிவிட்டதை பற்றியும் கவலைப்பட வேண்டிய சூழ்நிலையில் தமிழ்நாடு இருப்பதை மறந்துவிட்டு, பழியை அவன் தலையில் போடுகிற வேலையை சிறப்பாக செய்தது ஒரு பட விழா.

யுரேகா இயக்கிய ‘காட்டுப்பய சார் இந்த காளி’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில்தான் இத்தகைய கார சாரம். சும்மாவே அரசியல் சூடு காணும் களமாகிவிட்ட மேடைகளில், பாரதிராஜா, கவுதமன் போன்றவர்கள் இருந்தால் அது எப்படியிருக்கும். அப்படியே கொதித்தது. முதலில் தீயை மூட்டியவரே யுரேகாதான்.

‘இப்பல்லாம் சரவணபவன்ல சாம்பார் ஊத்துறவன் கூட வட மாநிலத்தவனாதான் இருக்கான். எங்க திரும்பினாலும் அவனைதான் வேலைக்கு வச்சுருக்காங்க. அவன் பேசுற மொழிக்கு நாம மாற வேண்டியிருக்கு. இந்த அநியாயத்தை எங்க போய் சொல்லுவது? அது ஒருபக்கம்னா, வட்டிக்கு விடுற மார்வாடிங்க தமிழனின் கஷ்டத்துக்கு முன்னாடி வந்து நிற்க மாட்டேங்குறான். காவேரி பிரச்சனையில் நாம வீதிக்கு வந்து போராடும்போது, அவன் ஜம்முன்னு மேட்ச் பார்க்க உள்ள போறான். இதையெல்லாம் தட்டிக் கேட்கணும். அதிக வட்டி வாங்குறது. கடனை அடைக்கணும்னு நினைச்சா கூட அடைக்க விடாம அவனை பிழிஞ்சு எடுக்கறது. இதையெல்லாம் விடக் கூடாது’ என்று பொங்கினார்.

உண்மையில் இந்தப்படமே தமிழ்நாட்டில் பிழைக்க வந்த வட மாநிலத்தவர்கள் பற்றிய படம்தானாம். ஜெயவந்த் ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப்படத்தின் பாடல்களில் ஒரு பாடல் எச்.ராஜா கோஷ்டிகளை வயிறெரிய விடுவது நிச்சயம். காவி உடையுடன் சாமியார்கள் கஞ்சா அடித்தபடி ஆடும் அந்தப்பாடல், ஆன்ட்டி இண்டியன்களின் தேசிய கீதமாக இருக்கப் போவதும் சத்தியம்.

ஆமா… அங்கு வந்த பாரதிராஜா என்ன பேசினாராம்?

அவருக்கென்ன? ரஜினியை கழுவி ஊற்றிவிட்டு கிளம்பினார். ஆல் ஆர் ஆன்ட்டி ரஜினிஸ்…

கர்நாடக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு சவால் விடுத்திருக்கிறார். கர்நாடகாவில் வீசுவது பா.ஜ.க, மோடியின...

கர்நாடக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு சவால் விடுத்திருக்கிறார். கர்நாடகாவில் வீசுவது பா.ஜ.க, மோடியின் அலை இல்லை, பா.ஜ.க-வின் புயல் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 12ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி பிரதமர் மோடி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத் ஆகியோர் 10 நாள்களில் 60 தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், சாமரஜனகார மாவட்டத்தில் உள்ள சாந்தமெராஹள்ளியில் நடந்த பா.ஜ.க பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடிபேசினார்.

கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், '' நான் இங்கு வந்ததற்கு முன்பு, கர்நாடகாவில் பா.ஜ.கவுக்கு ஒரு 'அலை' உள்ளது என்று கூறப்பட்டது. கர்நாடகாவில் வீசுவது பி.ஜே.பி அலை இல்லை, பி.ஜே.பியின் புயல். கர்நாடக மக்களுக்கு எடியூரப்பா மீது நம்பிக்கை உள்ளது. அவர் இந்த மாநிலத்தின் அடுத்த முதல்வர் ஆவார். கர்நாடகாவில் காங்கிரஸ் செய்த வளர்ச்சி திட்டங்கள் பற்றி 15 நிமிடங்கள் பேப்பர் இல்லாமல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசத் தயாரா?. பிரதமர் மோடி சவால் விடுத்தார். இந்தக் கூட்டத்தில் கார்வார், உடுப்பி மாவட்டங்களில் உள்ள சட்டசபை தொகுதிகளில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்தார்.

நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூலில் பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததால் அவர் மீது வழக்குப்ப...

நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூலில் பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அவர் எந்த நேரமும் கைது செய்யப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில் எஸ்.வி.சேகரின் முன் ஜாமீன் மனு விசாரணையில் அவரை கைது செய்ய தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதனையடுத்து எஸ்.வி.சேகரை கைது செய்ய சென்னை சைபர் கிரைம் போலீசார் தீவிரம் காட்டி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஆனால் எஸ்.வி.சேகர் தற்போது தலைமறைவாக இருப்பதாக கூறப்படுவதால் அவரை தேடும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டிருப்பதாகவும், மிக விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்றும் தெரிகிறது.

இந்த நிலையில் எஸ்.வி.சேகர் விவகாரம் குறித்து கருத்து கூறிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.வி.சேகர் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளார்.