Home Top Ad

சில ஹார்ட் அட்டாக் வருவதற்கான காரணங்கள் நமக்கு தெரியும். உடல் பருமன், நீரிழிவு என அடுக்கிவிடலாம். ஆனால் நாம் நினைத்தே பார்க்காத பல காரணங்கள...

அடக்கொடுமையே! இப்படியெல்லாம்கூட ஹார்ட் அட்டாக் வருமா? படிக்காதீங்க... பயந்துடுவீங்க...

சில ஹார்ட் அட்டாக் வருவதற்கான காரணங்கள் நமக்கு தெரியும். உடல் பருமன், நீரிழிவு என அடுக்கிவிடலாம். ஆனால் நாம் நினைத்தே பார்க்காத பல காரணங்கள் இருக்கின்றன. அதக்கேட்டாலே பீதியாகிடுவீங்க...

வயிறுமுட்ட சாப்பிட்டா, ஐஸ் வாட்டர் குடிச்சா, காலையில் எழும்போது என நாம்இதுவரை நினைத்துக்கூட பார்க்க முடியாத காரணங்களால் கூட ஹார்ட் அட்டாக் வருமாம். நீங்க இதையெல்லாம் சரிசெய்யலேன்னா, திடீர் ஹார்ட் அட்டாக் வரலாம், ஜாக்கிரதை.!

ஒழுங்கான தூக்கம் இல்லாமல் இருப்பது, மனச்சோர்வையும், எல்லோரிடமும் சிடுசிடுவென எரிச்சலடைய வைப்பதோடு மட்டுமல்லாமல், ஹார்ட் அட்டாக் ஏற்படும் அபாயத்தை, பெருமளவு உண்டாக்கி விடுகிறது.

தினமும் ஆறுமணி மணித்தியாளம் குறைவாக தூங்குபவர்களுக்கு, ஆறிலிருந்து எட்டு மணி நேரம் தூங்குபவர்களைவிட, இருமடங்கு இருதய பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக, ஒருஆய்வு கூறுகிறது.

மருத்துவர்கள் சரியான காரணத்தை அறியாவிட்டாலும், அதிகநேரம் தூங்காமல் இருப்பதால், இரத்த அழுத்தம் அதிகரித்து, உடல் அழற்சி ஏற்படுவது, இதயத்துக்கு நன்மை தராத ஒன்றாகும்.

ஒற்றைத் தலைவலியும், பிற்காலத்தில், இருதய பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்தைத் தரும். ஆரா ஒளிவட்டமுள்ள தியானம் செய்பவர்கள், தலைவலி இல்லாதவர்கள் போன்றோரை பாதிப்பதைவிட, அதிகமாக ஒற்றைத்தலைவலி உள்ளவர்களுக்கு, மாரடைப்பு கோளாறுகள் ஏற்படக்கூடும்.

வினோதமான காட்சிகள், சப்தம், உணர்வுகள் போன்ற தலைவலிக்கு முன் தோன்றும் வித்தியாசமான அனுபவங்கள், இருதய பாதிப்பின் கடுமையான அறிகுறிகளாகக் கருதப்படுகிறது.

குளிர்காலத்தில் அதிகநேரம் வெளியில் இருப்பது, உடல் இரத்த நாளங்களை சுருக்கி, இதயத்துக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை, தடை செய்கிறது. இதனால், உடலை கதகதப்பாக வைக்க, இதயம் சிரமப்படுகிறது.

    பனிக்காலங்களில், ஐஸ் கட்டியில் விளையாடுவது, பனியில் ஊர் சுற்றுவது, போன்ற வெளிப்புற செயல்களைக் குறைப்பதன் மூலம், மாரடைப்பு உள்ளிட்ட இதய பாதிப்புகளைத் தவிர்க்க முடியும்.

மூக்குமுட்ட சாப்பிடுவதும், இரண்டாவது, மூன்றாவதுமுறை குழம்பு, பாயசம் வாங்கி சாப்பிடுவது, வயிற்றைமட்டும் பாதிக்காது, மனப்பதட்டத்தை ஏற்படுத்தும் நோர்பின்பிரைன் ஹார்மோனை அதிகம் சுரக்கவைத்து, அதனால், இரத்த அழுத்தமும் இதயத்துடிப்பும் அதிகரித்து, ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்திவிட வாய்ப்புகள் ஏற்படும்.

கொழுப்புநிறைந்த அசைவ உணவுகள், இரத்தக்கொழுப்பை சட்டென அதிகரித்து, இரத்த நாளங்களை பாதிக்கக்கூடியவை.

0 coment�rios:

தமிழ்நாட்டில் பட்டிமன்றம் என்றாலே ரசிகர்களுக்கு ஞாபகம் வருவது ஒரு சிலர் தான். அதில் முக்கியமானவர் திண்டுக்கல் ஐ.லியோனி. அவரை தான் சிவாஜி ...

ரஜினி படத்தில் நான் அப்பாவாக நடித்திருக்க வேண்டும்: திண்டுக்கல் ஐ.லியோனி

தமிழ்நாட்டில் பட்டிமன்றம் என்றாலே ரசிகர்களுக்கு ஞாபகம் வருவது ஒரு சிலர் தான். அதில் முக்கியமானவர் திண்டுக்கல் ஐ.லியோனி.

அவரை தான் சிவாஜி படத்தில் ஸ்ரேயாவுக்கு அப்பாவாக நடிக்க ஷங்கர் அணுகினாராம். ஆனால் சில காரணங்களால் அவர் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டாராம். அதன்பின்தான் ஷங்கர் பட்டிமன்றம் ராஜாவை அந்த ரோலில் நடிக்க வைத்தாராம்.

இந்நிலையில் அவர் தற்போது அடுத்து வடிவேலுவின் அடுத்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறாராம். சீனு ராமசாமியின் அடுத்த படத்திலும் அவர் கமிட் ஆகியுள்ளாராம். 

0 coment�rios:

தளபதி விஜய் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான தமிழ் நெஞ்சங்களை கவர்ந்தவர். இவர் படங்கள் வருகின்றது என்றால் ரசிகர்கள் மட்டுமின்றி திரையரங்குகளே ...

விஜய்யை அசிங்கப்படுத்திய பிரிட்டன் விருது- ரசிகர்கள் கோபம்

தளபதி விஜய் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான தமிழ் நெஞ்சங்களை கவர்ந்தவர். இவர் படங்கள் வருகின்றது என்றால் ரசிகர்கள் மட்டுமின்றி திரையரங்குகளே கொண்டாடும்.

ஏனெனில் ரஜினிக்கு பிறகு விஜய்க்கு தான் அதிக ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது, குடும்பத்துடன் பலரும் வந்து இவருடைய படத்தை பார்த்து செல்கின்றனர்.

இந்த நிலையில் மெர்சல் படம் சிறந்த வெளிநாட்டு படம் பிரிவில் பிரிட்டனின் தேசிய விருதை வென்றுள்ளது.

அதே நேரத்தில் விஜய்யை சிறந்த துணை நடிகர் பிரிவில் நாமினி செய்துள்ளனர், மெர்சல் படத்தின் நாயகனே விஜய் தான்.

அப்படியிருக்க அவரை துணை நடிகர் பிரிவில் நாமினி செய்தது அவரை அசிங்கப்படுத்தும் நோக்கமா? என்று விஜய் ரசிகர்கள் செம்ம கோபத்தில் உள்ளனர்.

0 coment�rios:

பப்புவா நியூ கினியா தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ...

சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு..!சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியா தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம்

தென் மேற்கு பசிபிக் நாடுகளில் ஒன்றான பப்புவா நியூ கினியாவில், இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளது. இதன் காரணமாகக் கட்டடங்கள் குலுங்கியதால், பீதியடைந்த மக்கள் சாலைகளுக்கு வந்தனர்.

இந்த நிலநடுக்கத்தினால், பசிபிக் கடல் பகுதியில் பூமிக்கடியில் சுமார் 300 கி.மீ ஆழத்தில் சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள்குறித்து இன்னும் அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

0 coment�rios:

"கலைமாமணி" "நகைச்சுவை தென்றல்" திண்டுக்கல் ஐ. லியோனியின் "நகைச்சுவை குதிரையில் என் சிந்தனை பயணம்"நூல் வெளியீட...

வடிவேலு, ரோபோ சங்கர், சூரிக்கு அப்பாவாக நடிக்கும் திண்டுக்கல் ஐ.லியோனி

"கலைமாமணி" "நகைச்சுவை தென்றல்" திண்டுக்கல் ஐ. லியோனியின் "நகைச்சுவை குதிரையில் என் சிந்தனை பயணம்"நூல் வெளியீட்டு விழா! திரைப்பட நடிகரும், பட்டிமன்றநடுவரும், மேடைபேச்சாளருமான திண்டுக்கல் ஐ. லியோனி ஒரு புத்தகம் எழுதி உள்ளார்.

1992ஆம் ஆண்டு வத்தலக்குண்டு அருகே உள்ள காளி அம்மன் கோவில் மேடையில் முதன் முதலில் நகைச்சுவை பேச்சாளராக அறிமுகமானார்.பின்னர் 1996 ஆம் ஆண்டு முதல் தொலைக்காட்சிகளிலும், வெளிநாடுகளிலும் சுமார் 5000 க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட பட்டிமன்றங்களை நடத்தி இருக்கிறார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக கலைஞர் தொலைக்காட்சிஇவரை நடுவராக்கி "நல்லா பேசுங்க நல்லதையே பேசுங்க" என்ற பேச்சரங்க நிகழ்ச்சியை 250 வாரங்களாக ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு ஒளிபரப்பி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் இவர் பேசிய நகைச்சுவை ததும்பிய கருத்துக்களை தொகுத்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள "அசசி" பதிப்பகத்தார் புத்தகமாக கொண்டு வந்துள்ளனர். இந்த புத்தகத்திற்கு திமுக. செயல் தலைவரும், சட்ட மன்ற எதிர்க்கட்சி தலைவருமான மாண்புமிகு மு. க. ஸ்டாலின், பேராசிரியர் சுப. வீரபாண்டியன், வித்தக கவிஞர் பா. விஜய், உணர்ச்சிக்கவிஞர் யுகபாரதி ஆகியோர் அணிந்துரை வழங்கி உள்ளனர்.

லியோனி எழுதிய அந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் தேனாம்பேட்டையில் உள்ள அன்பகம் அரங்கத்தில்திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் புத்தகத்தை வெளியிட திரைப்பட இயக்குநர் சீனுராமசாமி பெற்றுக் கொண்டார். சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன், கவிஞர்கள் பா. விஜய், யுகபாரதி குமரிஆதவன் வாழ்த்தி பேசினார்கள்.

திண்டுக்கல் ஐ. லியோனி தனது ஏற்புரையில்,  "கங்கா கவுரி படத்துல அருண்குமார், வடிவேல் இருவருக்கும் தந்தை யாக நடித்தேன். ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்தனர். பின்னர் நான் பட்டிமன்றம், மேடைபேச்சு, தொலைக்காட்சி ஆகியவைகளில் பிஸியாக இருந்ததால் சினிமாவில் கவனம் செலுத்த முடியவில்லை.

ரஜினி நடிச்ச" சிவாஜி " படத்துல பட்டிமன்ற பேச்சாளர் ராஜா நடிச்ச கேரக்டர் ல நடிக்க என்னைதான் முதல்ல கேட்டாங்க. அப்ப நேரம் இல்ல.  நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேல் என்னிடம், நாம மறுபடியும் ஒருபடத்தில் சேர்ந்து நடிக்கலாம் என்று கூறினார். அப்புறம் டைரக்டர் சீனுராமசாமியும் அவரோட படத்துல நடிக்க கேட்டு இருக்கிறார். மறுபடியும் நான் சினிமாவுல நடிக்க அடுத்த ரவுண்டுக்கு தயாராயிட்டேன்.

தொடர்ந்து சினிமா, அரசியல்னு ட்ராவல் பண்ண ரெடியாயிட்டேன். " இவ்வாறு பேசினார். 

0 coment�rios:

கடைசி நிமிஷம் வரைக்கும் ரப்பராக இழுத்துவிட்டு, காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் புளியேப்பம் விடும் போலிருக்கிறது மத்திய அரசு. ஆட்டுவிக்கி...

முதல்வர் எடப்பாடி கமல்ஹாசன் சந்திப்பு நடக்குமா?

கடைசி நிமிஷம் வரைக்கும் ரப்பராக இழுத்துவிட்டு, காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் புளியேப்பம் விடும் போலிருக்கிறது மத்திய அரசு. ஆட்டுவிக்கிறவன் அவன். ஆடுகிறவன் நான்… என்கிற நிலையிலிருக்கும் மாநில அரசு, என்னதான் ஒப்புக்கு சப்பாணியாக இருந்தாலும் ஒரு முடிவெடுக்க வேண்டுமே?

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இந்த நிலையில்தான் பிரஸ்சை சந்தித்தார் கமல்ஹாசன். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கிற விஷயத்தில் மத்திய அரசு நடந்து கொள்ளும் முறையை கண்டித்தவர், அப்படியே மாநில அரசுக்கும் குட்டு வைத்தார். இருந்தாலும் முதல்வர் பழனிச்சாமியை நேரில் சந்தித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க சொல்ல விரும்புகிறாராம். முறைப்படி முதல்வர் அலுவலகத்தில் முன் அனுமதி கோரப்பட்டிருப்பதாக கூறினார்.

ஆனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கமல்ஹாசனையும் ரஜினிகாந்தையும் விமர்சித்து வரும் எடப்பாடி பழனிச்சாமியும், அவரது அமைச்சர் பெருமக்களும், இந்த சந்திப்பை விரும்புவார்களா? முன் அனுமதி கொடுக்கப்படுமா? என்பது டவுட்டுதான். அரசியலில் துளி கூட பெயர் எடுத்துவிடக் கூடாது என்று முனைப்பு காட்டும் இவர்கள், இந்த சந்திப்பினால் கமல்ஹாசனுக்கு நல்ல பெயர் சென்றுவிடக் கூடாது என்று நினைப்பார்கள் அல்லவா?

இது ஒருபுறம் இருக்க, தூத்துத்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வரும் 1 ந் தேதி ஞாயிற்றுக் கிழமை கமல் அங்கு செல்கிறார்.

0 coment�rios:

நடிகர் ஆர்யாவுக்கு தற்போது பெண்பார்க்கும் படலம் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக புதியதாக வந்துள்ள தமிழ் தொலைக்காட்சி ஒன்று மும்பரமாக இறங்...

ஏழு பெண்களுக்கும் காத்திருந்த சோகம்! இவர் வெற்றியாளரா? ஆர்யா முகத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

நடிகர் ஆர்யாவுக்கு தற்போது பெண்பார்க்கும் படலம் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக புதியதாக வந்துள்ள தமிழ் தொலைக்காட்சி ஒன்று மும்பரமாக இறங்கியுள்ளது.

இதனையடுத்து, முதல் முயற்சியாக ஆர்யா தன் வருங்கால மனைவியை தேடும் விதத்தில் “எங்க வீட்டு மாப்பிள்ளை” என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று வருகிறார்.

அதில் துவக்கத்தில் 16 போட்டியாளர்கள் இருந்த நிலையில் தற்போது பலரும் வெளியேற்றப்பட்டு வெறும் 7 பெண்கள் மட்டுமே போட்டியில் உள்ளனர்.

இந்நிலையில், நாளை மேலும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படவுள்ளார். இருவரில் ஒருவர் விட்டு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்படுகின்றது. இதன்போது, ஆர்யாவின் முகமும் திடீர் என்று அதிர்ச்சியடைவது போல காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் அகாதா வெற்றி பெற்றிருந்தார். இதனை பார்த்த மிகுதி ஏழு பெண்களும் சோகத்தில் மூழ்கி விட்டனர்.

இதேவேளை, இவர் ஆர்யாவை திருமணம் செய்துகொள்வதற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்றும் , கேமரா முன்பு எப்போதும் போலியாக நடிக்கிறார் எனவும் மற்ற பெண்கள் இவர் மீது குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. 

0 coment�rios:

சினிமாவில் திறமை மற்றும் கடின உழைப்பால் ஜெயித்து விடலாம் என்பதற்கு நிறைய நடிகர்கள் உதாரணம். மக்களுக்கு இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றா...

அரசியலில் ரஜினி, கமல் யாருக்கு ஆதரவு- சிவகார்த்திகேயன் கூறிய அதிரடி பதில்

சினிமாவில் திறமை மற்றும் கடின உழைப்பால் ஜெயித்து விடலாம் என்பதற்கு நிறைய நடிகர்கள் உதாரணம். மக்களுக்கு இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் நடிகர் சிவகார்த்திகேயனை கூறலாம்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலக்கி ஒவ்வொரு படியாக அந்த துறையில் முன்னேறி மக்களின் பார்வைக்கு வந்தவர். இப்போது சினிமாவிலும் ரசிகர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கிறார். படங்களில் தண்ணி அடிப்பது, சிகரெட் பிடிப்பது, பெண்களை கிண்டல் செய்வது போன்ற விஷயங்களை தவிர்த்து வருகிறார்.

அண்மையில் சினிமா பயணம் குறித்து பேட்டி கொடுத்தவரிடம் அரசியலில் ரஜினி, கமல் இதில் யாருக்கு ஆதரவு என கேட்டுள்ளனர். அதற்கு சிவகார்த்திகேயன், இருவரும் அவர்களின் நிலைப்பாடு என்ன என்பதை இன்னும் சொல்லவில்லை. நான் ஓட்டு போடுவதை என் வீட்டில் கூட சொல்ல மாட்டேன். ஓட்டு போடுவது என்பது மிகப்பெரிய பொறுப்பு. அது யாருக்கு என்பது எனக்கு மட்டுமே தெரிஞ்ச உண்மை, ரகசியம் என்று கூறியுள்ளார்.

0 coment�rios:

சிவகார்த்திகேயன் தொடர் வெற்றியால் உச்சத்தை நோக்கி செல்கின்றார். இவர் நடிப்பில் எந்த படம் வந்தாலும் அதை பார்க்க பலரும் ஆவலுடன் இருக்கின்றனர்...

அப்போ அந்த பையன் இல்லை- மேடையிலேயே கலாய்த்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தொடர் வெற்றியால் உச்சத்தை நோக்கி செல்கின்றார். இவர் நடிப்பில் எந்த படம் வந்தாலும் அதை பார்க்க பலரும் ஆவலுடன் இருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் ‘இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமான், ஹீரோயினாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கவுள்ளார், சிவகார்த்திகேயன் சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் கேள்வி-பதில் கூட்டத்தில் கலந்துக்கொண்டார்.

அதில் நயன்தாரா பற்றி கேட்க ‘ஒரு காலத்தில் அவரை நேரில் பார்க்க முடியுமா? என்று ஏங்கியுள்ளேன், சின்னத்திரையில் இருக்கும் போது அவரை பார்க்கும் வாய்ப்பு வந்தது.

அவர் எப்போது வருவார் என நானும் காத்திருந்தேன், ஆனால், அப்போது அந்த பையன் அவருடன் இல்லை(விக்னேஷ் சிவனை குறிப்பிடுகின்றார்)’ என்று சொல்ல அனைவருமே சிரித்துவிட்டனர்.

0 coment�rios:

டெல்லி உயர் நீதிமன்றம் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கியதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஆர்.கே.நகர் தொகு...

டிடிவி தினகரன் குக்கர் சின்னத்திற்கு ஆப்படித்த நீதிமன்றம் - திமுகாவுடன் கூட்டணியா? - அப்போ அதிமுக!

டெல்லி உயர் நீதிமன்றம் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கியதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றார் டிடிவி தினகரன். எனவே செண்டிமெண்டாக தனக்கு குக்கர் சின்னத்தையே அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்த அனுமதிக்குமாறு தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

அந்த வழக்கில், டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு கடந்த 9ம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது தினகரன் தரப்பிற்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்பட்டது. எனவே, உள்ளாட்சி தேர்தலில் தினகரன் அணியினர் குக்கர் சின்னத்திலேயே போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும், தினகரனின் வழக்கில் 2 நீதிபதிகள் அமர்வு முடிவு எடுக்க வேண்டும் எனவும், இரட்டை இலை வழக்கை 3 வாரத்திற்குள் டெல்லி உயர் நீதிமன்றம் விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

எனவே, வழக்கின் இறுதி தீர்ப்பு வெளியாகும் வரை குக்கர் சின்னத்தை தினகரன் தரப்பு பயன்படுத்தக் கூடாது. இது தினகரனுக்கு கிடைத்த பின்னடைவாக கருதப்படுகிறது.

பொதுமக்களின் பிரச்சனைகளுக்காக திமுக உள்பட எந்த கட்சியுடனும் இணைந்து போராட்டம் நடத்த தயார் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் இன்று தஞ்சையில் அறிவித்துள்ளார்.

    இதனையடுத்து வரும் தேர்தலிலும் திமுகவுடன் தினகரன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

0 coment�rios:

நடிகர் ஆர்யா தனது திருமணத்துக்காக பெண் தேடி வருகிறார். அதற்காக ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். தற்போது ப...

நடிகர் ஆர்யாவின் ஜோடி இவர்தான்!? வைரலாகும் புகைப்படங்கள்

நடிகர் ஆர்யா தனது திருமணத்துக்காக பெண் தேடி வருகிறார். அதற்காக ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

தற்போது போட்டியும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதில் துவக்கத்தில் 16 போட்டியாளர்கள் இருந்த நிலையில் தற்போது பலரும் வெளியேற்றப்பட்டு வெறும் 8 பெண்கள் மட்டுமே உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில், 8 பெண்களில் பார்வையாளர்களின் அதிக வரவேற்பை பெற்றவர் அபர்னதி என்றுதான் கூற வேண்டும்.

அபர்னதிக்கும் ஆர்யாவிற்கும் உள்ள பொருத்தம் பற்றி நீங்களே பாருங்கள்.அ வரின் இயல்பான குணம், இயல்பான பேச்சு, பழகும் விதம் என அனைத்தும் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

ஆர்யாவின் வருங்கால மனைவியாக இவர் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பது பலரின் விருப்பமாக இருக்கின்றது.

இந்த புகைப்படங்களை பார்க்கும் போது அது புலப்படுகின்றது. அது மட்டும் இன்றி ஆர்யாவிற்காக அபர்னதி அவரின் குணாதிசியங்களையும் மாற்றி கொண்டுள்ளது இறுதி இரண்டு நிகழ்சியிலும் காண்பிக்கப்பட்டுள்ளது.

0 coment�rios:

பிரசாந்த் ஒரு காலத்தில் விஜய், அஜித்தை விட உச்சத்தில் இருந்தவர். இவருக்கு என்று பெரிய ரசிகர்கள் கூட்டமே இருந்தது. இதில் குறிப்பாக இளைஞர்க...

நடிகர் பிரசாந்தின் மாஜி மனைவிக்கு நடந்த கொடுமை- அதிர்ச்சி தகவல்

பிரசாந்த் ஒரு காலத்தில் விஜய், அஜித்தை விட உச்சத்தில் இருந்தவர். இவருக்கு என்று பெரிய ரசிகர்கள் கூட்டமே இருந்தது.

இதில் குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் ரசிகர்கள் இவருக்கு அதிகம், இந்நிலையில் இவரின் திருமண வாழ்க்கை இவரை புரட்டி போட்டது.

அதன் பின் எந்த படமும் ஓடவில்லை, மேலும், இவருடைய திருமண வாழ்வும் நிம்மதியாக இல்லாமல், விவாகரத்து வரை சென்றார்.

தற்போது பிரசாந்தின் மாஜி மனைவி கிரகலட்சுமி வீட்டில் இருந்து 170 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாம், இந்த செய்தி எல்லோரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இவர் பிரசாந்தை விட அதிக வயதானவர், ஏமாற்றி திருமணம் செய்துக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

0 coment�rios:

ராஜமௌலி படங்கள் என்றாலே பிரமாண்டங்களுக்கு பஞ்சம் இருக்காது. இவரின் பாகுபலியை தொடர்ந்து அடுத்து என்ன கதையை கையில் எடுப்பார் என்று ரசிகர்கள் ...

யாருமே செல்லாத இடத்திற்கு முதன் முறையாக செல்லும் ராஜமௌலி- ரசிகர்கள் ஆச்சரியம்

ராஜமௌலி படங்கள் என்றாலே பிரமாண்டங்களுக்கு பஞ்சம் இருக்காது. இவரின் பாகுபலியை தொடர்ந்து அடுத்து என்ன கதையை கையில் எடுப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அந்த வகையில் தற்போது ஒரு பாக்ஸிங் கதைக்களத்தை ராஜமௌலி கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் ராஜமௌலியின் பாகுபலி படம் பாகிஸ்தான் சினிமா விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாம்.

அதற்காக அவரை அங்கு அழைத்துள்ளார்கள், இதனால், ராஜமௌலி மிகவும் சந்தோஷமாக உள்ளதாகவும், அங்கு செல்ல ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தென்னிந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு அழைப்பு வந்த முதல் பிரபலம் ராஜமௌலி தான்.

0 coment�rios:

பரத் தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் தொடர்ந்து காதல், பட்டியல், எம் மகன் என வெற்றி படங்களாக கொடுத்தவர். சமீப கா...

இன்னும் அந்த அளவிற்கு நான் கீழே போகவில்லை- எப்படி இருந்த பரத் இப்படி சொல்லிவிட்டாரே!

பரத் தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் தொடர்ந்து காதல், பட்டியல், எம் மகன் என வெற்றி படங்களாக கொடுத்தவர்.

சமீப காலமாக இவர் எந்த படத்திலும் பெரிதும் கமிட் ஆகவில்லை, ஸ்பைடர் படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார்.

தற்போது சிம்பா, காளிதாஸ் ஆகிய படங்களில் நடித்து வரும் இவர், சமீபத்தில் ஒரு பேட்டியில் மனம் நொந்து சில விஷயங்களை கூறியுள்ளார்.

இதில் குறிப்பாக ’நான் டபுள் ஹீரோ படங்கள் செய்தால், அதில் என் கதாபாத்திரமும் பேசப்படும், சின்ன கேரக்டர் ரோல் மட்டும் செய்ய, நான் இன்னும் அந்த அளவிற்கு கீழே போகவில்லை’ என வருத்தமாக கூறியுள்ளார்.

0 coment�rios:

 இசைஞானி இளையராஜா இசையில் மயங்காத ஆட்களே கிடையாது, ஆனால் சில சமயங்களில் சர்ச்சையான சில விஷயங்களை பேசக்கூடியவர். அப்படி சமீபத்தில் அமெரிக்...

இசைஞானி இளையராஜா மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் !

 இசைஞானி இளையராஜா இசையில் மயங்காத ஆட்களே கிடையாது, ஆனால் சில சமயங்களில் சர்ச்சையான சில விஷயங்களை பேசக்கூடியவர்.

அப்படி சமீபத்தில் அமெரிக்கா வில் உள்ள கூகள் அலுவலகத்தில் பேசிய இசைஞானி , “உலகத்திலேயே தோன்றிய ஞானிகளில் பகவான் ரமண மகிரிஷியை போல வேறு ஒருவர் கிடையாது. இயேசு உயிரித்தெழுந்து வந்தார் என சொல்வார்கள். இயேசு உயிரித்தெழுந்து வந்தார் என நிரூபணமாகவில்லை. பகவான் ரமண மகரிஷிக்கு மட்டும்தான் உயிரித்தெழுதல் நடைபெற்றிருக்கிறது. அதுவும் அவரின் 16 வயதில்” என்று சர்ச்சையான விஷயத்தை பேசினார்.

இதனால் கிறிஸ்தவ மக்கள் அவரது வீட்டை நேற்று முற்றிகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இன்று கமிஷனர் அலுவலகத்தில் இளையராஜா மீது கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த புகாரில், இயேசு கிறிஸ்து உயிரித்தெழுந்தார் என்பது உலகத்தில் உள்ள அணைத்து கிறிஸ்தவரிகளின் நம்பிக்கை. இன்னும் சில தினங்களில் இயேசு கிறிஸ்தவ உயிரித்தெழுந்தா தினத்தை கொண்டாடவுள்ளோம் இந்த நேரத்தில் இளையராஜா, இயேசு உயிர்த்தெழுதலை கொச்சைப்படுத்தி கருத்து தெரிவித்திருக்கிறார். அவரின் கருத்து கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மத உணர்வை புண்படுத்தும் விதத்தில் பேசிய இளையராஜா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்

0 coment�rios:

ஆர்யாவை வைத்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிளை. இந்நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது ...

அபர்ணதி ஒரு டம்மி பீஸ் - நிகழ்ச்சியை சூடாக்கிய அந்த போட்டியாளர் !

ஆர்யாவை வைத்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிளை. இந்நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது

இந்நிலையில் நேற்று நடந்த ஷோவில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் எல்லாரும் மற்ற போட்டியாளர்களை பற்றி தங்களுக்கு பிடித்த ஒரு நல்ல விஷயம், கெட்ட விஷயம் பகிர வேண்டும்.

இதில் எல்லாரும் அபர்ணதியின் முரட்டுத்தனமான சுபாவம் பிடிக்கவில்லை என்றார்கள். ஆனால் நவீனா மட்டும் அபர்ணதி ஒரு டம்மி பீஸ், அவளது பேச்சு தான் அப்படி, மற்றபடி ஒன்றுமில்லை என கலாய்த்தார்.

0 coment�rios:

உங்கள் உடல் எடையைக் குறைக்க பல வழிகளை முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லையா? அப்படியானால் OMAD டயட்டை பின்பற்றுங்கள். என்ன புரிய வில்லையா? OMA...

ஒரு நாள் ஒருவேளை மட்டும் இப்படி சாப்பிடுங்க.... தொப்பை மின்னல் வேகத்தில் குறைந்திடுமாம்

உங்கள் உடல் எடையைக் குறைக்க பல வழிகளை முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லையா? அப்படியானால் OMAD டயட்டை பின்பற்றுங்கள். என்ன புரிய வில்லையா? OMAD என்பது ஒரு நாள் ஒரு வேளை உணவு டயட் ஆகும். இந்த டயட்டின் படி ஒருவர் ஒரு நாளைக்கு 23 மணிநேரம் எதுவும் சாப்பிடாமல், ஒரு மணிநேரம் மட்டும் எவ்வித தடையும் இல்லாமல் சாப்பிடலாம்.

கலிபோர்னியா பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மனிதர்கள் விரதம் இருப்பதன் விளைவு குறித்து சோதனை செய்தார்கள். அதில் விரதம் இருந்ததில், மனிதர்களின் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சர்க்கரை அளவு குறைந்திருப்பதோடு, குடல் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் அளவும், ஆரோக்கியமும் அதிகரிப்பதோடு, உடலின் மெட்டபாலிசம் சிறப்பாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆகவே வாரத்திற்கு 2 முறை அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் விரதம் இருந்தால், அதன் விளைவாக உடல் எடை குறைவதோடு மட்டுமின்றி, உடல் ஆரோக்கியம் மேம்படும். இக்கட்டுரையில் ஒரு நாளை ஒரு வேளை உணவு டயட் மேற்கொள்ளும் போது என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக்கூடாது, செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை என அனைத்து விஷயங்களும் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.
ஒரு நாளை ஒரு வேளை உணவு டயட்

இந்த டயட்டின் பேரின் படி, ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு மற்றும் இரண்டு அல்லது மூன்று ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்கு பதிலாக ஒரு வேளை உணவு மட்டும் உட்கொள்ள வேண்டும். இதனால் நாள் முழுவதும் எடுக்கும் கலோரிகளின் அளவுக் குறையும். இதன் விளைவாக உடல் எடை குறைவதோடு, செரிமானமும் மேம்படும். இதற்கு செய்ய வேண்டியது எல்லாம் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை, அந்த ஒரு வேளை உணவின் போது உட்கொள்ள வேண்டியது தான்.

பெரும்பாலானோர் இரவு நேரத்தில் தான் சாப்பிடுவார்கள். ஆனால் உங்களுக்கு எந்த வேளையில் சாப்பிட்டால் சரியாக இருக்குமோ, அந்த வேளையில் சாப்பிடலாம். சில சமயங்களில், இந்த டயட்டினை முதன்முதலாக ஆரம்பிப்பவர்கள், க்ரீன் டீ அல்லது ப்ளாக் டீ மற்றும் சில திட உணவுகளான முட்டை அல்லது ஆப்பிள் போன்றவற்றை சாப்பிடலாம். ஏனெனில் எந்த ஒரு டயட்டும் எடுத்த எடுப்பிலேயே உடலுடன் ஒத்துப் போகும் என்று கூற முடியாது.

OMAD டயட் எப்படி வேலை செய்கிறது?

ஒரு நாள் ஒரு வேளை உணவு டயட்டை மேற்கொள்ளும் போது, உட்கொள்ளும் கலோரிகளின் அளவு குறையும் மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள நேடும். ஒருவர் 23 மணிநேரம் சாப்பிடாமல் இருக்கும் போது, உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களானது, எரிப்பொருளாக பயன்படுத்தப்பட்டு, உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கின்றன.

இதன் விளைவாக உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைக்கப்பட்டுவிடும். அதோடு இந்த டயட்டை மேற்கொண்டால், மலச்சிக்கல் தடுக்கப்படும், செரிமானம் மேம்படும் மற்றும் உடலுக்கு ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறன் அதிகரிக்கும். இப்போது OMAD டயட்டை மேற்கொள்ளும் போது சாப்பிட வேண்டிய உணவுகள் எவையென்று காண்போம்.

OMAD டயட்டை மேற்கொள்ளும் போது சாப்பிட வேண்டிய உணவுகள்!
காய்கறிகள்

கேரட், ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், பீட்ரூட், முள்ளங்கி, ஊதா நிற முட்டைக்கோஸ், சைனீஸ் முட்டைக்கோஸ், லெட்யூஸ், குடைமிளகாய், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, தோல் நீக்கப்பட்ட உருளைக்கிழங்கு, பசலைக்கீரை மற்றும் கேல் கீரை போன்ற காய்கறிகளை அதிகம் சாப்பிடுவது நல்லது.

பழங்கள்

ஆப்பிள், வாழைப்பழம், ஆரஞ்சு, கிரேப்ஃபுரூட், திராட்சை, வெள்ளரிக்காய், தக்காளி, பீச், ப்ளம்ஸ், எலுமிச்சை, சாத்துக்குடி, அன்னாசிப் பழம், மாம்பழம், ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, மலை நெல்லிக்காய் போன்ற பழ வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

புரோட்டீன்

புரோட்டீன் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. அதுவும் தோல் நீக்கப்பட்ட சிக்கன் நெஞ்சுக்கறி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, மீன், காளான், பீன்ஸ், பயறு வகைகள், பருப்பு வகைகள், டோஃபு மற்றும் முட்டைகள் போன்ற உணவுகளை சாப்பிடுவது சிறந்தது.

பால் பொருட்கள்

கொழுப்பு நிறைந்த பால், கொழுப்பு நிறைந்த தயிர், சீடார் சீஸ், ஃபேட்டா சீஸ், மோர், ரிக்கோட்டா சீஸ் மற்றும் காட்டேஜ் சீஸ் போன்ற பால் பொருட்களை சாப்பிடுவது நல்லது.

முழு தானியங்கள்

கைக்குத்தல் அரிசி, கருப்பு அரிசி, திணை, பார்லி போன்ற தானிய வகைகள் ஒரு நாள் ஒரு வேளை உணவு டயட்டின் போது சேர்த்துக் கொள்வது, அந்த ஒரு வேளை உணவையும் ஆரோக்கியமானதாக வைத்திருக்கும்.

கொழுப்புக்கள் மற்றும் எண்ணெய்கள்

ஆலிவ் ஆயில், அரிசி தவிடு ஆயில், சூரியகாந்தி வெண்ணெய், வேர்க்கடலை வெண்ணெய், தேங்காய் எண்ணெய், பாதாம் வெண்ணெய் போன்றவற்றை இந்த டயட்டுடன் சேர்த்துக் கொள்வதன் மூலம், எடை குறைந்து, உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

நட்ஸ் மற்றும் விதைகள்

பாதாம், வால்நட்ஸ், பேகன், பைன் நட்ஸ், பிஸ்தா, மகாடாமியா, சூரியகாந்தி விதைகள், பூசணிக்காய் விதைகள் மற்றும் மெலன் விதைகள் போன்றவைற்றையும் இந்த டயட்டுடன் சேர்த்துக் கொண்டால், உடல் ஆரோக்கியம் மேம்படும்.

மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள்

புதினா, தில், சோம்பு, ரோஸ்மேரி, தைம், கற்பூரவள்ளி, பூண்டு, இஞ்சி, வெங்காயம், கொத்தமல்லி, சீரகம், மஞ்சள், மிளகுத் தூள், மிளகாய் தூள், வெள்ளை மிளகு, சில்லி ப்ளேக்ஸ், அன்னாசிப்பூ, ஏலக்காய், பூண்டு பவுடர் மற்றும் கிராம்பு போன்றவையும் உடல் எடையைக் குறைக்க உதவியாக இருக்கும்.

பானங்கள்

தண்ணீர், எலுமிச்சை ஜூஸ், இளநீர், நற்பதமான பழச்சாறுகள் போன்றவற்றை ஒரு நாள் ஒரு வேளை உணவு டயட்டுடன் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளலாம்.

OMAD டயட்டை மேற்கொள்ளும் போது சாப்பிடக்கூடாத உணவுகள்!
பழங்கள்

திராட்சை, பலாப்பழம், மாம்பழம் மற்றும் அன்னாசிப் பழம் போன்றவற்றில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவு அதிகமாக உள்ளது. இந்த பழங்களை இந்த டயட் மேற்கொள்ளும் போது அதிகமாக சாப்பிடாமல், அளவாக சாப்பிடுவதே நல்லது.

புரோட்டீன்

மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் பேகான் போன்றவற்றில் புரோட்டீன் அதிகம் இருக்கலாம். அதே சமயம் இவற்றில் கொழுப்புக்கள் அளவுக்கு அதிகமாக இருப்பதால், இவற்றை அதிகம் தேர்ந்தெடுக்காதீர்கள்.

பால் பொருட்கள்

கொழுப்பு குறைவான பால், கொழுப்பு குறைவான தயிர், ப்ளேவர்டு தயிர் மற்றும் க்ரீம் சீஸ் போன்ற பால் பொருட்களை அதிகம் தேர்ந்தெடுத்து சாப்பிடாதீர்கள். முடிந்த அளவு இம்மாதிரியான பொருட்களைத் தவிர்த்திடுவதே நல்லது.

முழு தானியங்கள்

வெள்ளை அரிசி சாதத்தை மிதமான அளவில் உட்கொள்வதே நல்லது. அப்படியே மிதமான அளவில் சாப்பிட்டாலும், குறைந்தது 5 வகையான காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடுவதே சிறந்தது. முக்கியமாக இந்த டயட்டில் வெண்ணெய், வெஜிடேபிள் ஆயில், மயோனைஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டியது மிகவும் முக்கியம். அதேப் போல் முந்திரியை அதிகம் சாப்பிடக்கூடாது. மேலும் சலாமி, சாசேஜ், ப்ரைஸ், பாட்டில் ஜாம் மற்றும் ஜெல்லிகளை சாப்பிடக்கூடாது.

பானங்கள்

டப்பாவில் அல்லது கேன்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் பழச்சாறுகள் மற்றும் காய்கறி சாறுகள், டயட் சோடா, சோடா மற்றும் ஆற்றல் பானங்களை அறவேத் தொடக்கூடாது. இவை உடலை வறட்சி அடையச் செய்வதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்துவிடும்.

OMAD டயட்டின் போது உடற்பயிற்சி செய்யலாமா?

    இந்த டயட்டை முதன்முதலாக ஆரம்பிக்கும் போது, மிகவும் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பதால், உடலில் ஆற்றல் இருக்காது. இந்நேரத்தில் உடற்பயிற்சியில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வேண்டுமானால், யோகா அல்லது ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
    இந்த டயட் ஆரம்பித்து பல நாட்கள் ஆகிவிட்டால், எடை குறையும் போது தசைகள் சுருங்கி, அசிங்கமாக காட்சியளிக்காமல் இருக்க, தசைகளுக்கான பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
    இந்த டயட்டை நீங்கள் பின்பற்றினாலும் அல்லது பின்பற்றாவிட்டாலும், தினமும் தவறாமல் தியானத்தில் ஈடுபடுங்கள். இல்லாவிட்டால் வாக்கிங் அல்லது ரன்னிங் போன்ற சிறு பயிற்சிகளைக் கூட மேற்கொள்ளலாம்.

OMAD டயட்டினால் சந்திக்க நேரிடும் பிரச்சனைகள்!

    இந்த டயட்டை மேற்கொள்வது என்பது எளிதானது அல்ல. ஆரம்பத்தில் இந்த டயட்டை மேற்கொள்ளும் போது கடுமையான பசியையும், மிகுதியான சோர்வையும் உணரக்கூடும்.
    உடல் பலவீனமாக இருப்பது போன்று உணரக்கூடும்.
    தலைச் சுற்றல் மற்றும் மந்தமான மனநிலையில் இருக்க நேரிடும்.
    எதிலும் சரியாக கவனத்தை செலுத்த முடியாமல் போகும்.
    இறுதி மாதவிடாயை நெருங்கும் பெண்களின் உடலில் மெட்டபாலிச குறையக்கூடும்.

எச்சரிக்கை

ஒவ்வொருவரின் உடலும் ஒவ்வொரு டயட்டிற்கும் ஒவ்வொரு மாதிரி செயல்படும். ஆகவே எந்த ஒரு டயட்டை மேற்கொள்ளும் முன்பும், சரியான ஊட்டச்சத்து அல்லது உடல்நல நிபுணரை அணுகி அவருடன் கலந்தாலோசித்து, பின்பே பின்பற்ற வேண்டும். முக்கியமாக, கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் இந்த டயட்டை மேற்கொள்ளக்கூடாது.

0 coment�rios:

தென்னிந்தியா அளவில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்தார் நடிகை ஸ்ரீவித்யா. இவர் தமிழ் சினிமாவில் ரஜினி , கமல் முதல் அனைத்து முன்னணி ஹீரோக்களுக...

பழம்பெரும் நடிகை ஸ்ரீவித்யா வீட்டுக்கு வந்த சோதனை !

தென்னிந்தியா அளவில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்தார் நடிகை ஸ்ரீவித்யா. இவர் தமிழ் சினிமாவில் ரஜினி , கமல் முதல் அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் அம்மா வேடத்தில் நடித்திருந்தார். சில வருடங்களுக்கு முன்பு கேன்சர் நேயால் இறந்தார்.

இந்நிலையில் இவர் பெயரில் சென்னையில் உள்ள அபிராமிபுரத்தில் ஒரு விடு உள்ளது, அந்த வீட்டில் தற்போது ஒரு குடும்பம் வாடகைக்கு தங்கியிருந்தது, இடையில் இந்த நிர்வாகத்தை ஸ்ரீவித்யா வின் தம்பி பார்த்து வந்தார், ஸ்ரீவித்யா இறப்பதற்கு முன் வருமானவரித்துறையில் 45 லட்சம் பாக்கி வைத்திருந்தார். இதனால் வருமானவரித்துறை அபிராமிபுரத்தில் உள்ள அந்த வீட்டை கைப்பற்றியுது, வாடகைதாரர் வருமானவைத்துறையிடம் வாடகை செலுத்தி வந்தார்.

இந்த வீட்டை ஏலத்தில் விடுவது என்று முடிவு செய்தது வருமானவரித்துறை. அதன் படி ஒரு கோடியை 17 லட்சத்துக்கு ஏலத்துக்கு விடலாம் என்று முடிவு செய்து நேற்று அதற்க்கான வேலைகள் நடத்துவந்தது. பலரும் வீட்டை சுற்றி பார்த்தார்கள் தவிர யாரும் ஏலத்துக்கு வீட்டை வாங்க வரவில்லை. இதனால் வருமானவரித்துறை மீண்டும் ஏலத்துக்கான தேதியை தள்ளிவைத்துள்ளது.

0 coment�rios:

நம்மில் பெரும்பாலானோர் பஸ் பயணம் செய்யும் போது வழியிலுள்ள ஹைவேஸ் ஓட்டல்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் உள்ள கடைகள் ஆகியவற்றில், உணவு பொரு...

முன்னாள் நிதியமைச்சர் ஏர்போர்ட்டில் டீ வாங்கி குடிக்க முடியாத சோக ட்வீட் ட்ரெண்டிங் ஆனது!

நம்மில் பெரும்பாலானோர் பஸ் பயணம் செய்யும் போது வழியிலுள்ள ஹைவேஸ் ஓட்டல்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் உள்ள கடைகள் ஆகியவற்றில், உணவு பொருட்களின் விலை யைக் கேட்டு நொந்து போயிருக்கிறோம்.. அப்போதெல்லாம் இந்த விலை சர்ச்சையை சீண்ட ஆளாளில்லாத நிலையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்த்துக்கு நேர்ந்த ஓர் அதிர்ச்சியால் அந்த விலைவாசி விஷயம் ட்ரெண்டிங் ஆகி விட்டது ..

அதாவது சென்னை விமான நிலையத்தில் உள்ள காபிடே கடையில் ஒரு டீ கேட்டதாகவும், அந்த கடையின் ஊழியர் ஒரு கப் வென்னீர் மற்றும் ஒரு டீ பேக் எடுத்து வந்து வைத்து விட்டு ரூ.135 பில் கொடுத்ததாகவும், தான் மறுத்துவிட்டதாகவும் தன் ட்விட்டர் பேஜ்-ஜில் கூறியுள்ளார். மேலும் நான் செய்தது சரியா அல்லது தவறா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த ட்வீட்டில், சென்னை விமான நிலையத்தில் உள்ள ஒரு காஃபி கடையில், டீ கேட்டேன். சுடு தண்ணீரும், ஒரு டீயும் கொடுத்தனர். விலை ரூ.135. விலையை கேட்டு அதிர்ச்சியடைந்த நான், டீ வேண்டாம் என்று கூறிவிட்டேன். நான் செய்தது சரியா? தவறா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் காபியின் விலை என்னவென்று கொஞ்சம் அதிர்ந்து போய் தான் கேட்டதாகவும் அதற்கு அந்த ஊழியர் ரூ.180 என்று கூறியதாகவும், இவ்வளவு விலைக்கு யார் வாங்கி குடிக்கின்றார்கள் என்று கேட்ட கேள்விக்கு ‘நிறைய பேர்’ என்று அந்த நபர் பதில் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். ஒருவேளை நான் தான் அப்டேட்டில் இல்லையா? என்றும் சிதம்பரம் கூறியுள்ளார்.

முன்னாள் நிதியமைச்சரின் இந்த ஏர்போர்ட்டில் டீ வாங்கி குடிக்க முடியாத சோக ட்வீட் ட்ரெண்டிங் ஆகி போச்சு!

0 coment�rios:

நீங்கள் புகைப்படத்தில் காணவிருக்கும் விலங்கினம் எங்கிருந்து வந்தது என கண்டு பிடிக்க முடியவில்லையாம். அதன் ஸ்டெம்செல் எடுத்து ஆராய்ந்த போது ...

இந்த அதிசய உயிரினத்தின் ரகசியம் தெரியுமா?... படித்துப் பாருங்க ஆடிப்போயிடுவீங்க

நீங்கள் புகைப்படத்தில் காணவிருக்கும் விலங்கினம் எங்கிருந்து வந்தது என கண்டு பிடிக்க முடியவில்லையாம். அதன் ஸ்டெம்செல் எடுத்து ஆராய்ந்த போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அது ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டதாம். மேலும் பூமியிலுள்ள எந்த ஒரு உயிரின செல்லோடும் ஒத்துப்போகவில்லையாம்.

நாம் உண்ணும் எதையும் அது உண்பதில்லையாம். சூரியனிலிருந்து ஆற்றலை கிரகித்துக் கொள்கிறதாம். இரவில் பறக்கிறதாம். இன்னும் ஆய்வுகள் நடந்து வருகிறது.

இந்த தகவலினை வெளியிட்டால் மக்கள் பீதி அடைவார்கள் என மத்திய உள்துறை அமைச்சகம் ரகசியம் காக்கிறதாம். அடுத்த வாரம் நாசாவிலிருந்து வருகிறார்களாம்.

இதன் செல்லை எடுத்து சாகாவரம் பெற்ற மனிதர்களை உருவாக்க முயல்கிறார்களாம். இதை விலைக்கு வாங்க 7500 டிரில்லியன் டொலர்களை இந்தியாவிற்கு கொடுக்க அமெரிக்கா முன் வந்துள்ளதாம்

ஆனால் இந்தியா 18575 டிரில்லியன் கேட்கிறதாம். இந்த தொகை கிடைத்தால் இந்தியர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள் ஆகிவிடுவார்களாம்.

இந்த அதிசய உயிரினம் கேரளா நீலம்பூரியில் சிக்கியுள்ளது.


0 coment�rios:

சிலருக்கு ஒரு கண் மட்டும் அடிக்கடி துடிக்கும். அவ்வாறு துடிக்கும் போது, ஒருசில மூடநம்பிக்கைகளானது மக்கள் மத்தியில் உள்ளது. அது என்னவென்றா...

வலது கண் துடிக்கின்றதா? என்ன அர்த்தம் தெரியுமா?

சிலருக்கு ஒரு கண் மட்டும் அடிக்கடி துடிக்கும். அவ்வாறு துடிக்கும் போது, ஒருசில மூடநம்பிக்கைகளானது மக்கள் மத்தியில் உள்ளது.

அது என்னவென்றால், ஆண்களுக்கு வலது கண் துடித்தால், நல்லது நடக்கும், அதுவே பெண்களுக்கென்றால் தீமை ஏற்படும் என்றும், ஆண்களுக்கு இடது கண் துடித்தால் கெட்டது நடக்கப் போகிறது, அதுவே பெண்களுக்கானால் நல்லது நடக்கும் என்று நம்புகின்றனர்.

    உண்மையில் இது மிகப்பெரிய முட்டாள்தனமான ஒரு மூடநம்பிக்கை என்று தான் சொல்ல வேண்டும். ஆம், நல்லது கெட்டது நடப்பதற்கும், கண்களுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று சிந்திக்காமல், குருட்டுத்தனமாக பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் இந்த மாதிரி கண்கள் துடிப்பதற்கு, உடலில் ஒருசில பிரச்சனைகள் உள்ளது என்பதற்கான அறிகுறியாகும்.

அதுமட்டுமல்லாமல், கண்கள் துடிப்பதற்கு ம்யோகிமியா (myokymia) என்று பெயர். இத்தகைய கண் துடிப்பு அல்லது தசைச் சுருக்கம் ஏற்படுவதற்கு அதிகப்படியான மன அழுத்தம், தூக்கமின்மை, அதிகமாக காப்ஃபைன் உட்கொள்ளுதல் மற்றும் பல காரணங்களாகும். சிலருக்கு கண் துடிப்பானது ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் கூட இருக்கலாம்.
கண்கள் துடிப்பது ஏன்?

உடம்பில் உள்ள புறநரம்புகளின் இயல்புக்கு மீறிய மிகையான தூண்டலின் காரணமாக சில நேரங்களில் கண்களின் நரம்புகளும், அதனைச் சார்ந்த தசைகளும் துடிக்கும். இந்த கண்கள் துடிப்பிற்கு மயோகீமியா என்று மருத்துவ துறையில் கூறுவார்கள்.

குடிப்பழக்கம்,சோர்வு, கண்கள் வறட்சி, மன அழுத்தம், அதிக காபி குடிப்பது, சரிவிகித சத்துக்களின் பற்றாக்குறை, அலர்ஜி, அதிக நேரம் புத்தகம் படிப்பது போன்ற செயல்பாடுகள் கண்களின் ஆரோக்கியத்தைக் குறைத்து கண் துடிப்புகளை ஏற்படுத்துகிறது.

ஆனால் நீண்ட நாள் கண் துடிப்பு அல்லது வெட்டி இழுப்பது போன்ற பிரச்சனைகள் இருந்தால், அது மூளை தொடர்பான கோளாறாகவும் இருக்கலாம்.
கண் துடிப்பை தடுப்பது எப்படி?

    கண் துடிப்பினை தடுக்க, நன்றாக உறங்குவதுடன், கண்களுக்கு போதிய ஓய்வினைக் கொடுக்க வேண்டும். அல்லது கண்களுக்கு வெதுவெதுப்பான ஒத்தடம் கொடுத்தால், கண் நரம்புகளின் இறுக்கம் தளர்ந்து கண் துடிப்பது நிற்கும்.

0 coment�rios:

சினிமா என்றாலே தற்போது மக்களுக்கு கொஞ்சம் வெறுப்பாகவே உள்ளது. ஆனால், சினிமாவையும் தமிழகத்தையும் ஒரு போதும் பிரிக்க முடியாது. ஏனெனில், திர...

சினிமா ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வர சூப்பர் திட்டத்தை கொண்டு வந்த பிரபல திரையரங்கம்

சினிமா என்றாலே தற்போது மக்களுக்கு கொஞ்சம் வெறுப்பாகவே உள்ளது. ஆனால், சினிமாவையும் தமிழகத்தையும் ஒரு போதும் பிரிக்க முடியாது.

ஏனெனில், திரையரங்க டிக்கெட் விலையால் தான் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளார்களே தவிர, சினிமா பார்ப்பதையே யாரும் தவிர்க்கவில்லை.

அப்படி சினிமா மீது ஆர்வம் உள்ள ரசிகர்களுக்கு சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்று செம்ம தகவல் ஒன்றை கூறியுள்ளது.

ரூ 349 கட்டினால் அந்த திரையரங்கில் எத்தனை படம் வேண்டுமானாலும் ஒரு மாதத்திற்கு பார்த்துக்கொள்ளலாம்.

அதேபோல் ரூ 1749 கட்டினால் 6 மாதத்திற்கு எத்தனை படம் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்று ஸ்பெஷல் தகவல் ஒன்றை அறிவித்துள்ளது.

0 coment�rios:

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் தமிழ் சினிமாவே கொண்டாடும் படம் ஆயிரத்தில் ஒருவன். பாகுபலிக்கு முன்பே இப்படி ஒரு கதைக்களத்தை எடுத...

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் முதலில் இந்த நடிகர் தான் நடிக்க இருந்தாராம்- நீண்ட நாளுக்கு பிறகு கிடைத்த தகவல்

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் தமிழ் சினிமாவே கொண்டாடும் படம் ஆயிரத்தில் ஒருவன். பாகுபலிக்கு முன்பே இப்படி ஒரு கதைக்களத்தை எடுத்து செல்வராகவன் மிரட்டியிருப்பார்.

ஆனால், அப்போது அந்த படம் ஒரு சில காரணங்களால் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை, இந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பார்த்திபன் கதாபாத்திரத்தை நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.

ஒரு வாக்கு வித்தியாசத்தில் தேசிய விருதை தவறவிட்ட கதாபாத்திரம், அப்படியிருக்கையில் பார்த்திபன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகரே வேறு ஒருவர் தானாம்.

அது செல்வராகவன் தம்பி பிரபல நடிகர் தனுஷ் தான் நடிப்பதாக இருந்ததாம், சோழர்களின் இளவரசராக தனுஷை நடிக்க வைக்க செல்வராகவன் முயற்சி செய்ய, ஒரு சில கால்ஷிட் பிரச்சனையால் அதில் தனுஷ் நடிக்க முடியாமல் போனதாம்.

0 coment�rios:

ரஜினிகாந்தை இனி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் என கூறி காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார். ...

இனி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்! - பிரபலம் பரபரப்பு பேச்சு

ரஜினிகாந்தை இனி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் என கூறி காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.

"ரஜினிகாந்த் அவர்களை முதல் முறையாக நான் சந்தித்தபோது, தமிழகத்தின் சூப்பர் ஸ்டாரைச் சந்திக்கப் போகிறேன் என்ற நினைப்புடன்தான் சென்றேன். என் முதல் சந்திப்பில் அவர் நடிகர் என்கிற மாயை மறைந்தது. அவரை அடுத்தடுத்து சந்தித்த போது அவர் நடிகர் என்ற நினைப்பே எனக்கு இல்லாமல் போனது. அடுத்த முறை சந்தித்த போது, அவரை மிகச் சிறந்த மனிதனாகப் பார்த்தேன்" என தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

"உங்கள் லட்சியம் என்ன என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் சொன்னார் 'ஒரு நடிகனாக என் வாழ்வைத் தொடங்கினேன். நடிகனாகவே முடிந்துவிடுவது என் வாழ்வின் லட்சியம் அல்ல,' என்றார். உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். தயவு செய்து இனிமேல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று அவரை அழைக்க வேண்டாம். அந்தக் கட்டம் முடிந்துவிட்டது. இனி நீங்கள் சொல்ல வேண்டியது தமிழகத்தின் முதல்வர் ரஜினிகாந்த் என்று" என தமிழருவி மணியன் மேலும் கூறியுள்ளார்.

0 coment�rios:

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நயன்தாரா. அனைத்து தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார். நய...

வருங்கால கணவர் பெயரை அறிவித்த நயன்தாரா


தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நயன்தாரா. அனைத்து தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார்.

நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகிறார்கள். கடந்த மாதம் காதலர் தினத்தன்று இருவரும் ஒன்றாக சேர்ந்து ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து கொண்டாடினார்கள்.

அதன் பிறகு இருவரும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றனர். பிறந்த நாள் வாழ்த்து தெரிப்பது, காதலர் தின கொண்டாட்டம் என வெளிநாடு சென்ற படங்கள் இணைய தங்களில் வெளியானது. என்றாலும் இருவரும் தங்களது காதல் பற்றி வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் முதல் முறையாக விக்னேஷ் சிவனை தனது வருங்கால கணவர் என்று நயன்தாரா குறிப்பிட்டுள்ளார். சென்னையில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் நயன்தாரா பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் அம்மா, அப்பா, சகோதரர், என் வருங்கால கணவர் ஆகிய அனைவருக்கும் முதலில் நன்றி என்று குறிப்பிட்டார். இதன் மூலம் காதலரான விக்னேஷ் சிவனை வருங்கால கணவர் என்று நயன்தாரா தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா முதலில் நடிகர் பிரபுதேவாவை காதலித்து திருமணம் செய்யவும் முடிவு செய்தார். இதற்காக கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த நயன்தாரா இந்து மதத்துக்கு மாறினார். ஆனால் கடைசி நேரத்தில் இருவருக்கும் இடையேயான உறவு முறிந்து விட்டது.

அதன் பிறகு ராமராஜ்ஜியம் படத்தில் சீதையாக நயன்தாரா நடித்தபோது இந்து முறைப்படி விரதம் இருந்து நடித்ததாக ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 coment�rios:

கடலிலுள்ள உப்பையெல்லாம் எடுத்து நிலத்தில் சமமாக பரப்பினால் எவ்வளவு உயரமாக இருக்கும் தெரியுமா? சுமார் 150 மீட்டர் உயரமாக இருக்கும். அதாவது...

கடல் நீரில் உப்பு வந்தது எப்படி தெரியுமா? வெந்நீர் ஊற்றுகளில் நடக்கும் அதிசயம்!

கடலிலுள்ள உப்பையெல்லாம் எடுத்து நிலத்தில் சமமாக பரப்பினால் எவ்வளவு உயரமாக இருக்கும் தெரியுமா? சுமார் 150 மீட்டர் உயரமாக இருக்கும்.

அதாவது ஏறக்குறைய 45 மாடி கட்டடத்தின் உயரத்திற்கு இருக்கும்! ஏராளமான ஆறுகளும் நன்னீர் ஓடைகளும்தானே கடலில் கலக்கின்றன.

அப்படியிருக்க இவ்வளவு அதிகமான உப்பு எங்கிருந்து வந்தது? அது பல இடங்களிலிருந்து வந்து சேர்வதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அதில் ஒரு இடம், நாம் நின்றுகொண்டிருக்கும் நிலமாகும். நிலத்திலுள்ள மண் வழியாகவும், பாறைகள் வழியாகவும் மழைநீர் கசிந்து செல்கையில் சில உப்புகளையும் அவற்றின் பாகமான இரசாயனங்கள் உட்பட சிறிதளவு தாதுப் பொருள்களையும் கரைத்துச் செல்கிறது.

அந்த நீர், ஓடைகள், ஆறுகள் வழியாக கடலில் கலக்கையில் இந்த உப்புகளையும் எடுத்துச் செல்கிறது. ஆனால், நன்னீரில் உப்பின் சதவிகிதம் மிகவும் குறைவாக இருப்பதால் அது நமக்கு தெரிவதில்லை.

மற்றொரு இடத்திலிருந்தும் உப்பு வருகிறது. அதுவே, கடலுக்கு அடியிலிருக்கும் புவி மேலோட்டிலுள்ள தாதுப் பொருள்கள் ஆகும்.

கடல் தரையிலுள்ள வெடிப்புகள் வழியாக தண்ணீர் புவி ஓட்டிற்குள் செல்கிறது. அங்கு பயங்கரமாக சூடாக்கப்பட்டு, தாதுப் பொருள்களையும் தன்னோடு எடுத்துக்கொண்டு, கடலடி வெந்நீர் ஊற்றுகள் வடிவில் மீண்டும் வெளியே வந்து கடலோடு கலக்கிறது. இதுபோன்ற வெந்நீர் ஊற்றுகளில் சில, ஆழ்கடலில் உள்ளன.

1 coment�rios:

நடிகராக சினிமாவில் தனக்கென தனி பாணி அமைத்து உலகநாயகனாக சாதித்தவர் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் களமிறங்கிய...

ஸ்டெர்லைட் பிரச்சனையில் களமிறங்க அனுமதி கேட்கும் உலகநாயகன்

நடிகராக சினிமாவில் தனக்கென தனி பாணி அமைத்து உலகநாயகனாக சாதித்தவர் கமல்ஹாசன்.

மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் களமிறங்கியுள்ள கமல்ஹாசன் சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க தொடங்கியுள்ளார்.

தற்போது பலரும் கண்டுகொள்ளாத ஸ்டெர்லைட் பிரச்சனை பற்றி பேசத்தொடங்கியுள்ளார்.

டிவிட்டரில், ஊடகங்களும் தமிழக மக்களும் இந்த ஸ்டெர்லைட் புரட்சியில் பங்கு பெறுவது கடமை.

தூத்துக்குடி மக்களுடன் நானும் உள்ளேன். புரட்சிக் களம் அழைத்தால் நான் வருவேன். என்று கூறியுள்ளார்.

0 coment�rios:

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் களத்தில் குதித்துள்ளது அனைவரும் அறிந்ததே. தனது ரசிகர்கள் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை தேர்ந்துடக்கும் பணி ந...

மன்ற நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்த ரஜினி - என்ன நடந்தது !

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் களத்தில் குதித்துள்ளது அனைவரும் அறிந்ததே. தனது ரசிகர்கள் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை தேர்ந்துடக்கும் பணி நடந்துவருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் நிர்வாகிகளை நியமித்து வருகின்றனர்.ஆனால் இரு தினங்களுக்கு முன்பாக மன்றத்தின் விதிகளை மீறி செயல்பட்டு வருவதாக ரஜினி மக்கள் மன்றம் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் தம்பிராஜை இடைநீக்கம் செய்தது, இதை எதிர்க்கும் விதத்தில் ஒட்டுமொத்த ரஜனி மக்கள் மன்ற nநிர்வாகி கள் ராஜினாமா செய்வதாக கூடி பேசி நேற்று அறிவித்தனர்

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகளுக்கு, ரஜினியின் அறிவுரைப்படி, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி விஎம்.சுதாகர் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை வெளியிட்டுள்ள செய்தியில்,

தம்புராஜ் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கு அனைவரையும் அழைக்காமல் தனக்கு விருப்பமானவர்களை மட்டும் அழைத்து பேசியிருக்கிறார். இதுதொடர்பாக அவரை தொடர்பு கொண்டபோது சரியான விளக்கம் அளிக்கவில்லை. நியமிக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளுடன் ஒற்றுமையா செயல்பட அறிவுறுத்தியது. சென்னை தலைமை மன்றத்திற்கு இரண்டு முறை அழைத்தபோதும் அவர் வராமல் வேறு ஒருவரை அனுப்பி வைத்தார்.

தன்னலமற்ற மக்கள் சேவை என்ற புனிதமான உயர்ந்த எண்ணத்தோடும், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக நாம் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் துவங்கப்பட்ட ரஜினி மக்கள் மன்றத்தில் இதுபோன்ற செயல்கள் ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டாது.

பொதுநலம் விடுத்து தங்கள் சுயநலத்திற்காக சிலர் செயல்பட முயற்சி செய்வதும், அத்தகைய முயற்சி நிறைவேறாத பட்சத்தில் மன்றத்தில் நற்பெருக்கு களங்கம் கற்பிக்க முயல்வதும் மக்கள் விரோத செயல் என்பதால் அவை ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டாது. அத்தகைய செயல்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கு மன்றத்தில் இடமில்லை.

மன்றத்தின் உள் விவகாரங்களை நமக்குள் விவாதிப்பதை விடுத்து, அதை பிரச்சாரம் செய்து அதில் ஆதாயம் தேட முயற்சிப்பது ஆரோக்கியமான செயல் அல்ல. தலைமை எடுத்த முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். ஒழுக்கத்திற்கும், கட்டுப்பாட்டிற்கும் பெயர்போன ரசிகர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும்.

ஒற்றுமையாக செயல்பட்டு கொடுக்கப்பட்ட பணியை செய்வதே நமக்கும், மன்றத்திற்கும் நல்லது. என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

0 coment�rios:

நம் நாட்டின் ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் தாஜ் மஹாலுக்கு இணையான அழகுடைய கட்டிடம் இந்த உலகத்திலேயே வேறு இருக்க முடிய...

தாஜ்மகால் ஏலத்துக்கு வருது!- தத்து எடுக்க தனியாருக்கு உ.பி. அரசு அழைப்பு!



நம் நாட்டின் ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் தாஜ் மஹாலுக்கு இணையான அழகுடைய கட்டிடம் இந்த உலகத்திலேயே வேறு இருக்க முடியாது. கட்டிடக்கலையின் உச்சமென திகழும் இந்த தாஜ் மஹால் போன்றொரு கட்டிடத்தை காண்பது கூட அரிதே. சில இடங்களை பகலில் சென்று பார்ப்பதை விடவும் இரவு நேரத்தில், மின் விளக்குகளின் ஒளியில் பார்க்கையில் அவை அதி அற்புதமாக காட்சியளிக்கும். அதிலும் குறிப்பாக சில இடங்களை பவுர்ணமி நாளில் நிலவொளியில் பார்ப்பதற்கு இணையான விஷயம் வேறெதுவுமே இருக்க முடியாது என்பதால் இந்த அதிசயத்தைக் கண ஆண்டுக்கு 50 லட்சத்துக்கும் அதிகமானோர் வந்து கண்டு கழிப்பார்கள். இதனிடையே இந்த தாஜ்மகாலை தனியார் நிறுவனங்கள் தத்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உத்தர பிரதேச அரசு கோரிக்கை வைத்து இருக்கிறது.

முன்னதாக உத்தர பிரதேசத்தில் உள்ள சுற்றுலாதலங்களின் பட்டியலில் இருந்து தாஜ்மஹாலை நீக்க சொல்லி அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சில மாதங்களுக்கு முன் உத்தரவிட்டார். இந்த உத்தரவு உலகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாஜ்மஹால் முகாலய அரசால் கட்டப்பட்டது அது இந்தியக் கட்டிடக் கலை இல்லை என்பதால், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்பட்டது. அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ பட்டியலில் இருந்தும் தாஜ்மஹால் நீக்கப்பட்டது. அதே சமயத்தில் சில பா.ஜ.க தலைவர்கள் அது ஒரு இந்து கோவில் என்றும் குறிப்பிட்டு வந்தனர். தற்போது இதன் பராமரிப்பை அம்மாநில அரசு கைவிட்டு விட்டது.

இனி தாஜ்மஹாலில் அரசு நியமித்து இருக்கும் துப்புரவு பணியாளர்களும் வெளியேற்றப்பட இருக்கிறார்கள். காரணம் தற்போது பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தின் படி முக்கியமான சுற்றுலாதலங்களை தனியாருக்கு கொடுக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது தாஜ்மகாலை தனியாருக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.டி.சி மற்றும் ஜி.எம்.ஆர் என்ற இரண்டு நிறுவனங்கள் தங்கள் ஆண்டு வருமானத்தில் 2 சதவிகிதத்தை தாஜ்மகால் பராமரிப்பிற்கு கொடுக்க வேண்டும். இதற்கான ஏலம் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ளது என்பதுதான் லேட்டஸ்ட் ரிப்போர்ட்.

0 coment�rios:

தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது என்று தமிழக அரசியலில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் களமிறங்கவுள்ளார். ரஜினியின் அரசியல் வருகையை பலரும் விமர்சித்து...

ரஜினி டென்ஷனான இமயமலைக்கு போய்டலாமா, எதுக்கு இந்த வயதில் அரசியல் - முன்னாள் பா.ஜ.க பிரமுகர் தாக்கு !

தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது என்று தமிழக அரசியலில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் களமிறங்கவுள்ளார். ரஜினியின் அரசியல் வருகையை பலரும் விமர்சித்து வரும் வேளையில் முன்னாள் பா.ஜ.க மகளிர் அணி தலைவி ஜமீலாவும் விமர்சித்துள்ளார்.

அவர் பேசுகையில், ரஜினி முதலில் தனித்துவமான அரசியல்வாதியாக வரவேண்டும், இத்தனை காலகட்டத்துக்கு பிறகு அவர் அரசியலுக்கு வரும் நிலையில் டென்ஷனான உடனே இமயமலைக்கு சென்றுவிடுகிறார். பின்பு மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்.

அன்றாட அரசியல் நிகழ்வுகளை பற்றி பேசமாட்டேன்னு சொல்றாரு, நான் குளத்துல குதிக்கல, நான் நீந்தும் போது தான் நீந்துவேன்னு சொல்றாரு, நாடே பற்றி எரியும் போது நான் இன்னும் அரசியலுக்கு வரலங்க, வரும்போது தான் பேசுவேன்னு சொன்னா எப்படிங்க மக்கள் ஏற்பார்கள்.

சினிமா வேறு, அரசியல் வேறு, நாட்டை ஆள வேண்டும் என்றால் நல்ல தலைவனுக்குரிய தகுதிகள் மக்கள் எதிர்பார்ப்பது மிகமிக அதிகம், வெற்றிடம் இருக்கிறது என்று சினிமா பாணியில் பேசுகிறார்.

வயசான காலத்தில் எதுக்கு இவர்களுக்கு முதல்வர் ஆசை, இங்கு நல்ல தலைவர்களே இல்லையா, 25 ஆண்டு காலமாக ஒதுக்கப்பட்ட மக்களுக்காக திருமாவளவன் போராடி வருகிறார். அவரை பார்த்தால் நல்ல தலைவராக தெரியவில்லையா. இந்த சினிமா நடிகர்களின் போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.

0 coment�rios:

நடிகர் ஆர்யா தற்போது எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். அவருக்கு பெண் தேடுவதற்காக இந்த ரியாலிட்டி ஷோ நடத்த...

கல்யாணம் பண்ணிட்டு டைவர்ஸ் பண்ண முடியாது! - முக்கிய போட்டியாளரை எலிமினேட் செய்த ஆர்யா

நடிகர் ஆர்யா தற்போது எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். அவருக்கு பெண் தேடுவதற்காக இந்த ரியாலிட்டி ஷோ நடத்தப்பட்டு வருகிறது.

ஆர்யாவை இம்ப்ரெஸ் செய்ய பல போட்டியாளர்கள் முயன்று வருகின்றனர். அதில் முக்கியமானவராக கருதப்பட்ட தேவசூர்யாவை எலிமினேட் செய்வதாக ஆர்யா இன்று அவரிடமே நேரடியாக அழைத்து கூறினார்.

"கல்யாணம் செய்தால் அது வாழ்நாள் முழுவதும் சேர்ந்து இருக்கவேண்டும். பின்னர் பிடிக்கவில்லை என டைவர்ஸ் செய்வது எனக்கு வேண்டாம். நாம் நட்போடு இருப்பது ஓகே ஆனால் லைப் பார்ட்னராக இருப்பது கஷ்டம் என எனக்கு தோன்றுகிறது" என கூறி தேவசூர்யாவை நிகழ்ச்சியில் இருந்து அனுப்பிவைத்தார்.

0 coment�rios:

சசிகலா புஷ்பா எம்.பி. மறுமணம் செய்யப்போவதாக கூறப்படும் வழக்கறிஞர் ராமசாமியின் முதல் மனைவி சத்யபிரியா கைக்குழந்தையுடன் கண்ணீர் மல்க ஆட்சியர்...

பூதாகரமாக வெடித்த சசிகலா புஷ்பாவின் மறுமணம்... கைக்குழந்தையுடன் மனைவி கண்ணீர் புகார்

சசிகலா புஷ்பா எம்.பி. மறுமணம் செய்யப்போவதாக கூறப்படும் வழக்கறிஞர் ராமசாமியின் முதல் மனைவி சத்யபிரியா கைக்குழந்தையுடன் கண்ணீர் மல்க ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

அதிமுக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா டெல்லியில் வழக்கறிஞர் ராமசாமியை திருமணம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பான அழைப்பிதழ்கள், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகின.

ஆனால் சசிகலா புஷ்பா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வரவில்லை. இந்த நிலையில் இன்று சத்யபிரியா என்ற பெண் கைக்குழந்தையுடன் மதுரை ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்துள்ளார்.

அம்மனுவில், தமக்கும் சசிகலா புஷ்பா எம்.பி. திருமணம் செய்ய இருப்பதாக சொல்லப்படும் ராமசாமிக்கும் 2014ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. என்னை நீதிபதி என கூறி திருமணம் செய்தார்.

நாங்கள் இருவரும் ஓராண்டுதான் வாழ்ந்தோம். இருவருக்கும் மன வருத்தம் ஏற்பட்ட நிலையில் தந்தை வீட்டுக்குச் சென்றுவிட்டேன். இருந்தபோதும் என்னிடம் செல்போனில் ராமசாமி பேசி வந்தார்.

இந்நிலையில்தான் தற்போது சசிகலா புஷ்பா எம்.பி.யை ராமசாமி திருமணம் செய்யப் போவதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இது குறித்து விசாரிக்க வேண்டுகிறேன். என் கணவர் ராமசாமியுடன் வாழ விரும்புவதாக சத்யபிரியா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 coment�rios:

ஆர்யா தற்போது தனியார் தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதில் இறுதியில் வெற்றி பெறும் பெண்ணை ஆர்யா த...

ஆர்யா நடத்திவரும் எங்க வீட்டு மாப்பிள்ளை டிவி நிகழ்ச்சிக்கு தடை? நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

ஆர்யா தற்போது தனியார் தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதில் இறுதியில் வெற்றி பெறும் பெண்ணை ஆர்யா திருமணம் செய்வார் என சொல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை சுற்றி சில சர்ச்சைகள் இருந்து வருகிறது. பெண்களின் மாண்பை சிதைப்பதாகவும், கலாச்சாரத்தை கெடுப்பதாகவும் இருப்பதாக கூறி மதுரையை சேர்ந்த ஜானகியம்மாள் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

மதுரை உயர்நீதிமன்றத்தில் இது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதை விசாரித்த நீதிபதிகள் சினிமா தணிக்கை வாரிய தலைவர், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் செயலர் ஆகியோர்க்கு நோட்டிஸ் அனுப்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.

0 coment�rios:

அதிமுகவில் இருந்து ஜெயலலிதா இருக்கும்போதே நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவுக்கு வரும் மார்ச் 26ஆம் தேதி திருமணம் நடைபெற இர...

சசிகலாவிற்கு இரண்டாவது திருமணமா?.. தீயாய் பரவும் திருமண அழைப்பிதழ்

அதிமுகவில் இருந்து ஜெயலலிதா இருக்கும்போதே நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவுக்கு வரும் மார்ச் 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது. ஓர் அழைப்பிதழும், அடுத்து சசிகலா புஷ்பாவிற்கும் அவரது கணவருக்கும் விவாகரத்து ஆன சான்றிதழ் வெளியாகியிருக்கிறது.

அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா. டெல்லி நார்த் அவென்யூ பகுதியில் வசிக்கிறார். ஜெயலலிதாவின் மறைவுக்கு முன் அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர். தற்போது நாடாளுமன்றத்தில் அதிமுகவுக்கு ஆதரவாகவும் இல்லாமல், ஆதரித்து பேசாமலும் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் அவருடைய சொந்த வாழ்க்கை பற்றி ஒரு தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சசிகலா புஷ்பாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவர் தனிமையில் டெல்லியில் வசித்து வந்தார்.

இந்நிலையில், இந்த நிலையில், சசிகலா புஷ்பாவுக்கும் ஓரியண்டல் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் இணை துணைவேந்தர் ராமசாமி என்பவருக்கும் திருமணம் வரும் மார்ச் 26ஆம் தேதி டெல்லியில் நடைபெறுவதாகத் திருமண அழைப்பிதழ் பரவி வருகிறது. இது அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சசிகலா புஷ்பாவின் நெருக்கமான அரசியல் வட்டாரங்களில் இதுபற்றி விசாரித்தபோது, ‘ஆமாம் உண்மைதான்’ என சொல்லுகிறார்கள். இந்த திருமண அழைப்பிதழ் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

இதுகுறித்து உண்மை நிலவரத்தை அறிய சசிகலா புஷ்பாவிடம் கேட்டபோது, அவர் சரியான பதில் ஏதும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் இதை மறுக்கவும் இல்லை.

இதுகுறித்து அவரது உதவியாளர் கூறுகையில், சசிகலா புஷ்பாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதையடுத்து இருவரும் விவாகரத்து செய்து கொள்வதற்காக நீதிமன்றத்தை நாடினர். கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக நடந்து வந்த நீதிமன்ற விசாரணையில், நேற்று முன்தினம் துவாரகா மாவட்ட நீதிமன்றம் அவர்களுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ஆனால், சமூக வலைதளங்களில் வந்து கொண்டிருக்கும் சசிகலா புஷ்பாவின் திருமண அழைப்பிதழ் பற்றி இன்னும் யாரும் உறுதியாக சொல்லவில்லை, அந்த அழைப்பிதழில் இருக்கும் அலைபேசி என்னை தொடர்புகொள்ள முயன்றோம் ஆனால் தொடர்புகொள்ள முடியவில்லை இன்னும் அடங்காத இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 coment�rios:

எதிலும் கறாராக இருப்பவர்களைக் கண்டாலே எனக்கு ரொம்பவும் பிடிக்கும். எல்லாவற்றிலும் அப்படி இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய தனிப்பட்ட விரு...

ஜெயலலிதாவுக்குப் பிடித்த கறார் பேர்வழி இவர்தான்!

எதிலும் கறாராக இருப்பவர்களைக் கண்டாலே எனக்கு ரொம்பவும் பிடிக்கும். எல்லாவற்றிலும் அப்படி இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய தனிப்பட்ட விருப்பமும் ஓயா முயற்சியுங்கூட.

கறாராக இருப்பது எளிதான காரியமல்ல. அதற்கு நிறைய மன உறுதி வேண்டும். சில அடிப்படை இலட்சியக் கோட்பாடுகளை நமக்கு நாமே விதித்துக் கொண்டு, அவற்றின்படி நடக்கும் திடநம்பிக்கையும் இருக்க வேண்டும். அதற்காகப் பிறர் நம்மை ஏளனமாகப் பேசினாலும், பரிகாசம் செய்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாது நமது லட்சியத்தை விட்டுக்கொடுக்காது அதனைக் காப்பாற்ற நிற்கக் கூடிய துணிவும் தேவை.

பொதுவாக, ஒருவர் பணம் விஷயத்தில் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை வைத்தே அவரை எடை போட்டு விட முடியும். ஒருவர் பணம் கொடுப்பதிலும் பெற்றுக்கொள்வதிலும், இரண்டிலும் கறாராக இருந்தால் அப்படிப்பட்டவரை எதிலும் நம்பலாம். அவரை ''நல்லவர் நாணயமானவர்" என்று மதிக்கலாம்.

பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஒருவரின் நடத்தை சரியில்லை என்றால் பொதுவாக எல்லாவற்றிலுமே அவரது நடத்தை அப்படித்தான் இருக்கும் என்றும் கூறலாம்.

இந்த உண்மையை எனது சொந்த அனுபவத்திலேயே பலமுறை உணர்ந்திருக்கிறேன். என்றாலும், இங்கே குறிப்பிட இருப்பது என் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவம் அல்ல. 100 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் இருவருமே கறார் பேர் வழிகள்தாம்.

1887-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ம் நாள் பிற்பகலில் இங்கிலாந்தின் பிரபுக்களில் ஒருவரான வில்லியம் லார்ட் டிராக்ஸ் தனது இல்லத்தை விட்டுப் புறப்பட்டார். அவர் இருந்தது பிரைட்டன் என்னும் துறைமுக நகரத்தில். லார்ட் டிராக்ஸ் பெரிய கோடீஸ்வரர், கப்பல் ஓட்டுவதில் அதிக ஈடுபாடு உள்ளவரும், அதில் பெரும் புகழும் பெற்றவர். ஒரு வாடகை குதிரை வண்டியைக் கூப்பிட்டார். அதில் ஏறிக்கொண்டு ''மேற்கு கப்பல் துறைக்கு அழைத்துப்போ" என்று ஆணையிட்டார்.

கப்பல் துறையிலிறங்கிக்கொண்டு வாடகை குதிரை வண்டி ஓட்டுநரைக் காத்திருக்கும் படி கட்டளையிட்டார். "எனது புதிய கப்பலை முதன் முறையாக பரிசீலிக்க ஓட்டிச் செல்லப் போகிறேன். பிற்பகலிலேயே திரும்பி வர உத்தேசித்திருக்கிறேன். எப்படியும் மாலைக்குள் திரும்புவேன். நான் வரும் வரை இங்கேயே காத்திரு நான் திரும்பியதும் நீ தான் என்னை வீட்டுக்கு அழைத்துப்போக வேண்டும்" என்றார். அந்த வாடகை வண்டி ஓட்டுநரின் பெயர் மார்டின் ஹால்லோவே சம்மதம் தெரிவிக்கின்ற வகையில் தலையை அசைத்தார்.

அன்று பிற்பகல், மாலை பூராவும் மார்டின் அங்கேயே காத்திருந்தார். லார்ட் டிராக்ஸ் திரும்பவில்லை. வெகு நேரமான பின்பு இரவில் மார்டின் தன் வீட்டுக்குச் சென்றார்.

மறுநாள் அதிகாலையிலேயே மார்டின் மீண்டும் துறைமுக வாசலுக்குக் குதிரை வண்டியுடன் வந்து காத்திருந்தார். இப்படியே ஒரு நாள்; ஒரு வாரம்; ஒரு மாதம் கழிந்துவிட்டன. தொடர்ந்து மார்டின் காத்திருந்தார். அதுவே அவரது வாழ்க்கை முறையாகிவிட்டது. தினமும் காலையில் மார்டின் குதிரை வண்டியுடன் துறை முகத்திற்கு வருவார். இரவு வரை அங்கேயே காத்திருப்பார்.

வேறு யார் வண்டியை வாடகைக்கு அழைத்தாலும் ஏற்றிச் செல்ல மறுத்தார். லார்ட் டிராக்ஸின் மாளிகைக்கு மார்டின் போகவுமில்லை. அவர் எப்போது திரும்பி வருவார் என்று விசாரித்துத் தெரிந்துகொள்ளமுயலவும் இல்லை. தன்னுடைய விசித்திரமான நடத்தைக்கான விளக்கத்தை கூறவும் இல்லை. ஒவ்வொரு நாளும் காலையிலிருந்து மாலை வரை பேசாமல் அப்படியே குதிரை வண்டியில் உட்கார்ந்திருப்பார்.

இப்படியே 599 நாள்கள் உருண்டோடிவிட்டன. கடைசியில் 1889 ம் ஆண்டு, மே மாதம் 12-ம் தேதி, மார்டினுடைய பிடிவாதம் பலன் அளித்தது. லார்ட் டிராக்ஸின் கப்பல் துறைமுகத்துக்குத் திரும்பியது. அவரும் இறங்கி வந்தார். மார்டினைக் கண்டதும் லார்ட் டிராக்ஸ் இவ்வளவு தாமதமாகத் திரும்பியதற்கு விளக்கம் கூறினார். ''ஒரு நாள் பிற்பகலுக்குள் திரும்பி வரத்தான் உத்தேசித்திருந்தேன். ஆனால், கப்பலில் புறப்பட்டதும், கப்பலின் சீரான ஆடாத அசையாத போக்கு; குளிர்ந்த காற்று; இனிமையான சூழ்நிலை எல்லாமே என் மனதுக்கு ரொம்ப இன்பகரமாகப் பட்டன. அப்போதே, அந்தக் கணமே, கப்பலில் உலகச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளுவது என்று தீர்மானித்தேன். கிளம்பி விட்டேன்" என்றார்.

நிதானித்த ஆழ்ந்த தோரணையுடன் மார்டின் தனது சட்டைப்பையிலிருந்து மருள வைக்கக்கூடிய அளவிற்கு நீளமான ஒரு காகிதத்தை வெளியே இழுத்தார்.

'பிரபு அவர்களே... இதோ என்னுடைய பில் ஒவ்வொரு நாளுக்கான காத்திருக்கும் கட்டணத்தையும் (WAITING CHARGES) சரிவர கணக்குப் பார்த்து பட்டியல் போட்டு வைத்திருக்கிறேன். காவல்துறை விதிமுறைகளின்படி வாடகைக் கட்டணம், காத்திருப்பதற்கான கட்டணம் இரண்டையும் சேர்த்து பட்டியல் போட்டிருக்கிறேன்."

"மொத்தத் தொகை எவ்வளவு?" என்று கேட்டார் லார்ட் டிராக்ஸ். மார்டின் காகிதத்தை நீட்டினார். லார்ட் டிராக்ஸ் பில்லைப் பார்த்தார். ஒரு புருவத்தை உயர்த்தினார். மொத்தத் தொகை 989 பவுண்ட்ஸ், 15 ஷில்லிங்க்ஸ், 6 பென்ஸ் - அதாவது ஏறத்தாழ 5000 டாலர், இந்தியக் கணக்குப்படி ஏறத்தாழ 45,000 ரூபாய்! (இந்தத் தொடர் வெளியான காலத்தின் மதிப்பீட்டில்)

அத்தனை நாள்களாக அவருக்காகவே காத்திருந்த வேறு வாடிக்கைக்காரர்கள் எவரையும் வண்டியில் ஏற்றிச் செல்ல மறுத்து வந்தது குறித்து மார்டின் விளக்கம் கூறினார்.

''ரைட்டோ!" என்றார் லார்ட் டிராக்ஸ் மறுவார்த்தையின்றி, கண்ணை ஒரு முறைகூட இமைக்காமல், உடனே நின்ற இடத்திலேயே அத்தனை பெரிய தொகையைச் செலுத்திவிட்டார்.

குதிரைவண்டியில் ஏறிக்கொண்டார். ''வீட்டுக்கு மார்டின் என்று ஆணையிட்டார்.

லார்ட் டிராக்ஸின் மாளிகை வாசலில் குதிரை வண்டி போய் நின்றது. வண்டியை விட்டு இறங்கினார். மறுபடியும் மார்டின் அவருக்கு முன்னால் நிற்பதைக் கண்டார். மரியாதை காண்பிக்கும் வகையில் தனது தலையில் அணிந்திருந்த தொப்பியைக் கழற்றி மார்டின் அதனைக் கையில் பிடித்திருந்தார்.

"துறைமுகத்திலிருந்து உங்களை வீடு வரை அழைத்து வந்ததற்கு இரண்டு காசு (ஷில்லிங்) வாடகை நீங்கள் தர வேண்டும்" என்றார் மார்டின் கறாராக.

மறுபடியும் லார்ட் டிராக்ஸ் கட்டணத்தை செலுத்தினார். இம்முறை தெரிந்தும் தெரியாத நிழலைப் போல, இலேசான ஒரு புன்முறுவல் அவரது முகத்தில் ஒரே ஒரு கணம் தோன்றியது.

0 coment�rios:

 நாம் உண்ணுவது, நமக்கு மனநிறைவையும், முழுமையையும் கொடுத்தால் தான் மகிழ்ச்சியாகவும் மன நிறைவுடனும் வாழ முடியும். அந்த வகையில் சாப்பிடும் உணவ...

நாம் என்ன சாப்பிட வேண்டும்? எப்படிச் சாப்பிட வேண்டும்?

 நாம் உண்ணுவது, நமக்கு மனநிறைவையும், முழுமையையும் கொடுத்தால் தான் மகிழ்ச்சியாகவும் மன நிறைவுடனும் வாழ முடியும். அந்த வகையில் சாப்பிடும் உணவில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் பெருமளவிற்கு நம்முடைய வாழ்க்கையில் பங்கு பெறுகின்றன.


உண்ணும் உணவு மனதிற்கும் வயிறுக்கும் நிறைவாக இல்லாமல் இருந்தாலோ அல்லது சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே வேறு நொறுக்குத் தீனிகளைத் தேடிச் செல்லத்தூண்டினாலோ நமது உணவு பழக்கம் சரியில்லை என்று பொருள். அதனால், சாப்பிடும் உணவை ரசித்து, சுவைத்து சாப்பிட்ட பின், அதில் மனநிறைவையும் முழுமை யையும் கொடுக்கும் சில உணவுப் பழக்கங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

அதற்கு முன்னதாக, மனிதர்கள் உணவு பழக்கத்தால் ஏற்படும் நன்மை தீமை பற்றி அண்மையில் ஒரு கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அப்போது உலகம் முழுவதும் பெரும் பாலானவர்கள் காலை உணவு சாப்பிடுவதில்லை என்று தெரிய வந்தது. மது அருந்துபவர்கள், புகை பிடிப்பவர்கள், அதிக நேரம் உழைப்பவர்கள், திருமணம் ஆகாதவர்கள், போதிய உடற்பயிற்சி செய்யாதவர்கள்தான் காலை உணவை சாப்பிடாமல் உள்ளனர் என்றும் தெரிந்தது. காலை உணவை சாப்பிடாதவர்களுக்கு மற்றவர்களை விட திடீர் மாரடைப்பு ஏற்பட 27 விழுக்காடு கூடுதல் வாய்ப்பு இருப்பதாக அறிவியலாளர்கள், கருத்துக் கணிப்பு மற்றும் மருத்துவ ஆய்வை ஒப்பிட்டு எச்சரித்துள்ளனர்.

அது போல இரவு நேர உணவை 10 மணிக்கு பிறகே சாப்பிடும் பழக்கம் பெரும்பாலானவர்களிடம் இருக்கிறது. இது இதய நோய்களைக் கொண்டு வந்து விடும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் இரவு உணவை முடித்து விட வேண்டும் என்றும் ஆய்வாளர் கள் கூறியுள்ளனர். காலை உணவை தவிர்த்தால் உடல் பருமன், உயர்ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு ஆபத்து ஆகிய பிரச்சினைகளும் வர வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சாப்பிடும் போது தொலைக்காட்சி பார்த்துக் கொண்டோ அல்லது பேசிக் கொண்டோ சாப்பிடக் கூடாது. உணவு உண்ணும் நேரத்தை, சாப்பிடுவதில் மட்டுமே செலவிட வேண்டும். அப்படி கவனத்துடன் சாப்பிடும் வேளை களில், வேகமாகவும், முழுமையாகவும் உண்டு முடித்த மனநிறைவு கிடைக்கும். மேலும் சாப்பிடும் நேரங்களில் வேகமான இசையைக் கேட்பதை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் சாப்பிடும் வேகத்தை அது அதிகப்படுத்திவிடும். இதனால் உடல் நலத்திற்கும் கேடு விளையும்.

நுகர்தலும், மெல்லுதலும்: உணவை நுகர்ந்து பார்க்கும் போதே, பாதி மனநிறைவு ஏற்படும். இரண்டாவதாக, மெதுவாக மென்று சாப்பிட வேண்டும். ஏனெனில் நொறுங்கத் தின்றால் நூறு வயது! நன்றாக மென்று சாப்பிடும் போது, நாவின் உயிரணுக்கள் தூண்டப்பட்டு, இந்த செய்தியை மூளைக்குக் கொண்டு செல்லும். இதன் மூலம் 'நன்றாக சாப்பிட்டு விட்டோம் என்ற உணர்வும் கிடைக்கும்.

நீர்மச்சத்து மற்றும் நீர்மம் போன்ற உணவுகளை தேர்ந்தெடுப்பதற்கு காரணம், அதிக காற்றும், நீரும் உள்ள உணவுகள் வேகமாக வயிற்றை நிரப்பிவிடும். எனவே காய்கறி சாறும், திராட்சை களையும் சாப்பிடலாம்.

புரதச்சத்து அதிகமாக உள்ள உணவுகளை விட, கொழுப்பு அதிகமாக உள்ள உணவுகள் மனநிறைவை ஏற்படுத்தும் உணர்வைத் தூண்டுவதற்கு சற்று அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்ளும். எனவே கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கலாம்.

தூக்கம்: தூக்கம் குறைவாக இருக்கும் போது, க்ரெலின் மற்றும் குறைவான அளவு லெப்டின் ஆகிய ஹார்மோன்கள் உற்பத்தியாகும். இவை தான் உணவுத் தேவைக்கான வேலைகளில் ஈடுபட்டு வருபவை. வயிற்றில் சுரக்கும் க்ரெலின் பசிக்கான தூண்டுதலை அதிகப்படுத்தும் போது, லெப்டின் மனநிறைவிற்கான தூண்டுதலை உருவாக்கி, பசியைக் குறைக்கும். எனவே உடலுக்கு ஓய்வும், தூக்கமும் தேவை.

தினமும் சராசரியாக 8 குவளை (3முதல் 4 லிட்டர்) தண்ணீர் குடிக்க வேண்டும். சில சமயங்களில் அடிக்கடி பசியெடுக்கும். இதற்கு உண்மை யான காரணம் தாகமாக இருப்பது தான்! எனவே சாப்பிடும் முன் ஒரு தம்ளர் அளவு அல்லது அதற்கும் மேல் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உணவில் மனநிறைவும், முழுமையும் கிடைக்கும்.

சிறிய தட்டுகள்: சாப்பிடும் தட்டு எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அந்த தட்டு முழுவதும் உணவைப் பரிமாறி, தட்டு காலியாகும் வரை சாப்பிடு வது தான் வழக்கம். இந்த பழக்கத்தால், சாப்பிடுவதன் நோக்கம் முழுமை யாக மற்றும் மனநிறைவாக சாப்பிடுவது என்று இல்லாமல், தட்டை காலியாக்குவது தான் என்று மாறி விடுகிறது. எனவே, பெரிய தட்டுக்கு மாற்றாக, சற்றே அளவில் சிறிய தட்டினை பயன்படுத்தத் தொடங்கினால், மனநிறைவைஉணரலாம்.

நெடுநேரம் சாப்பிட வைக்கும் உணவுகள்: சாப்பிட அதிக நேரம் எடுக்கும் உணவு வகைகளை உண்ணும் போது, உண்ணுவதில் முழுமையாக கவனம் திரும்பும் மற்றும் மனநிறைவும் ஏற்படும். எடுத்துக்காட்டாக, நார்ச்சத்த அதிகமுள்ள அவரை, வாழைத்தண்டு, காரமான குழம்பு ஆகிய உணவுகள் உண்ணும் நேரத்தை அதிகப்படுத்தும்.

ஆப்பிள்: சாப்பிடுவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னர், ஒரு ஆப்பிளை சாப்பிடுவதால், உணவின் அளவு குறைவதுடன், மனநிறைவும் கிடைக் கும் என்று ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. எனவே, தினசரி உணவில் ஒரு ஆப்பிளை சேர்த்துக் கொள்வதன் மூலம், தேவையான நார்ச்சத்தும் கிடைக்கும்.

இயற்கை உணவுகள்: செயற்கையாக தயாரிக்கப்பட்ட உணவுகளில், சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்கள் அதிகமான கலோரிகளைக் கொண்டது. எனினும், இயற்கையாகக் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை நாம் சாப்பிடும் போது, அதிகமாக மென்று தின்ன வேண்டியதாக இருப்ப தால், ஒவ்வொருமுறை மெல்லும் போதும் மனநிறைவும், முழுமையும் கிடைப்பதை உறுதி செய்ய முடிகிறது.

இவைகளையெல்லாம் பின்பற்றும் போது, உடலை பருமனடையச் செய்யும் அதிகமான உணவு உட்கொள்ளுதல் குறைவதோடு, நீண்ட நாட்கள் நல்ல உடல் நலத்துடன் இருக்கும்.

0 coment�rios:

அலங்காரத்திற்காகவும் குபேர பொம்மையை வீட்டில் வைத்திருப்பர். கடவுளாக குபேர பொம்மையினை வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வம் குவியும். வீட்டின...

குபேர பொம்மையை இங்கே வையுங்கள்.... அதிர்ஷ்டக் காற்று உங்களுக்கு தான்

அலங்காரத்திற்காகவும் குபேர பொம்மையை வீட்டில் வைத்திருப்பர். கடவுளாக குபேர பொம்மையினை வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வம் குவியும்.

வீட்டின் கிழக்கு திசை தான் குடும்பத்தின் அதிர்ஷ்ட புள்ளியாக கருதப்படுகிறது. எனவே சிரிக்கும் குபேர பொம்மையை கிழக்கு திசையில் வைத்தால் வீட்டில் ஒற்றுமையும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

கிழக்கு திசையில் குபேர பொம்மையினை வைப்பதால் குடும்பத்திற்குள் ஏற்படும் சண்டைகள், சச்சரவு, வாக்குவாதத்தினால் ஏற்படும் மனகஷ்டம் தீரும்.

கிழக்கு திசையில் வைப்பதால் செல்வம் பெருகுவதோடு வாழ்க்கையில் வெற்றி கிடைக்க உதவிடும். நேர்மறையான எண்ணங்களை நமக்குள் கொண்டு வரும்.

குபேர பொம்மையை அறை, ஹால், படுக்கையறை அல்லது உணவருந்தும் அறை என எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். தென்கிழக்கு திசையில் வைத்தால் எதிர்பாராத அதிர்ஷ்டமும், அதிக வருமானமும் கிடைக்கும்.

சிரித்து கொண்டு இருக்கும் பொம்மையை பார்க்கும் போது மன அழுத்தம் குறைகிறது. பிரச்சனைகளை எதிர்நோக்குவதற்கு புது நம்பிக்கை நமக்கு கிடைக்கும்.

புத்த மதத்தில் இந்த பொம்மையை கடவுளாக மதிக்கின்றனர். எனவே இதை இழிவு படுத்தவோ அவமதிக்கவோ கூடாது.

0 coment�rios:

கள்ள நோட்டு கடத்தலில் பெரும் புள்ளியாக இருக்கும் பிரகாஷ் ராஜ் ஹாங்காங்கில் வசித்து வருகிறார். இவர் சென்னையில் ஆஷிஷ் வித்யார்த்தி மூலம் கள்ள...

போக்கிரி பையன் – சினிமா விமர்சனம்

கள்ள நோட்டு கடத்தலில் பெரும் புள்ளியாக இருக்கும் பிரகாஷ் ராஜ் ஹாங்காங்கில் வசித்து வருகிறார். இவர் சென்னையில் ஆஷிஷ் வித்யார்த்தி மூலம் கள்ள நோட்டு பிசினஸ் செய்து வருகிறார். இவர்களுக்கு எதிராக ஒரு கூட்டம் செயல்பட்டு வருகிறது.

சென்னையில் ஆதரவற்ற இல்லத்தில் இருக்கும் ஜூனியர் என்.டி.ஆர், தான் உழைக்கும் பணத்தை அந்த இல்லத்திற்கே செலவு செய்து வருகிறார். ஒரு பிரச்சனையில் சிறப்பாக சண்டைப் போட்டதால், ஆஷிஷ் வித்யார்த்தி கூட்டத்தில் இணைகிறார். பல சிறப்பான விஷயங்கள் செய்வதால் ஆஷிஷிடம் நல்ல பெயரை பெற்று விடுகிறார்.

இந்நிலையில், ஹாங்காங்கில் ஒரு வேலை வருகிறது. இதை முடிப்பதற்காக என்.டி.ஆர். செல்கிறார். அந்த வேலையை சிறப்பாக செய்து முடித்து பிரகாஷ் ராஜ் மனதில் இடம்பிடிக்கிறார்.

பின்னர் சென்னை திரும்பும் என்.டி.ஆருக்கு, ஆதரவற்ற இல்லத்தில் இருக்கும் சிறுவனுக்கு உடல் நிலை சரியில்லாததால் 10 லட்சம் பணம் தேவைப்படுகிறது. இதற்காக ஆஷிஷ் வித்யார்த்திடம் பணம் கேட்கிறார் என்.டி.ஆர். ஆனால், அவரோ பணம் தர மறுத்து விடுகிறார். இதனால் கோபப்படும் என்.டி.ஆர்., துப்பாக்கி முனையில் ஆஷிஷ் வித்யார்த்திடம் இருக்கும் பணத்தை எடுத்து சென்று விடுகிறார்.

அந்த சிறுவனின் சிகிச்சைக்குப் பிறகு பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்யார்த்துக்கு எதிராக செயல்பட்டு வரும் கேங்கிடம் சேர்ந்து விடுகிறார். மேலும் பிரகாஷ் ராஜை கொல்ல போவதாக அவரிடம் சொல்லுகிறார். இதைக் கேட்ட பிரகாஷ் ராஜ் ஹாங்காங்கில் இருந்து சென்னை வருகிறார்.

இறுதியில் என்.டி.ஆர். பிரகாஷ் ராஜை கொலை செய்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

தெலுங்கில் ‘கன்த்திரி’ என்ற பெயரில் 2008ம் ஆண்டு வெளியான இப்படம், தற்போது டப்பிங் செய்யப்பட்டு ‘போக்கிரி பையன்’ என்ற பெயரில் வெளியாகி உள்ளது. இப்படம் ஆக்‌ஷன் கலந்து மாஸ் என்டர்டெயின்ட் படமாக உருவாகி இருக்கிறது. 2008ம் ஆண்டு வெளியான படம் என்பதால், அப்போது பார்த்திருந்தால் ரசிக்கும் படமாக இருந்திருக்கும். ஆனால், தற்போது பார்க்கும் போது, லாஜிக் இல்லாதது போல் தோன்றுகிறது.

கதாநாயகனாக நடித்திருக்கும் ஜூனியர் என்.டி.ஆர். வழக்கம் போல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்திருக்கிறார். ஹன்சிகாவிற்கு வேலை அதிகமாக இல்லை என்றாலும் கொடுத்த வேலையை சிறப்பாக நடித்திருக்கிறார். வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் பிரகாஷ் ராஜ். இவருக்கு உதவியாளராக வரும் ஆஷிஷ் வித்யார்த்தி ஓரளவிற்கு ரசிக்க வைத்திருக்கிறார்.

மணி ஷர்மா இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். டப்பிங் படம் என்பதால் சுமாரான வரவேற்பை பெற்றிருக்கிறது. சமீர் ரெட்டியின் ஒளிப்பதிவு சிறப்பு.

மொத்தத்தில் ‘போக்கிரி பையன்’ பழைய பையன்.

0 coment�rios:

பாஜகவில் இருந்து நரேந்திர மோடியை நீக்கிவிட்டால், பாஜக கட்சியே கிடையாது என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார். அகில இந்...

மோடியை தூக்கிவிட்டால் பாஜக என்கிற கட்சியே கிடையாது - குஷ்பு ஆவேசம்

பாஜகவில் இருந்து நரேந்திர மோடியை நீக்கிவிட்டால், பாஜக கட்சியே கிடையாது என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 84ஆவது காரிய கமிட்டி மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்க வந்த குஷ்பு செய்தியாளர்களிடம் பேசியபோது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

தற்போது தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி முதுகெலும்பில்லாத ஆட்சி என விமர்சித்த குஷ்பு, தங்களின் பதவிகளை காப்பாற்றிக்கொள்ளவும், ஊழல் வழக்குகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளவும், பாஜகவின் கைப்பாவையாக தமிழக ஆட்சியாளர்கள் உள்ளதாக குற்றம் சாட்டினார்.

0 coment�rios:

பெங்களூர் அருகே ராமநகரம் பகுதியில் ஆசிரமம் நடத்தி வரும் சாமியார் நித்யானந்தா மீது அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியப் பெண் கற்பழிப்பு புகார் கூற...

பெண் கற்பழிப்பு வழக்கு - நித்தியானந்ததிற்கு வந்தது ஆப்பு

பெங்களூர் அருகே ராமநகரம் பகுதியில் ஆசிரமம் நடத்தி வரும் சாமியார் நித்யானந்தா மீது அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியப் பெண் கற்பழிப்பு புகார் கூறினார்.

இவர் சில வருடங்கள் பிடதி ஆசிரமத்தில் தங்கி இருந்தார். அப்போது ஆன்மீக பேரின்பம் என்ற பெயரில் தன்னை நித்யானந்தா கற்பழித்ததாக புகார் தெரிவித்து இருந்தார்.

அதன் பேரில் ராமநகரம் போலீசார் நித்யானந்தா மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கோர்ட்டு அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த உத்தரவிட்டது.

இதை எதிர்த்து கடந்த 2012-ம் ஆண்டு நித்யானந்தா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். 2014-ல் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டது.

அதன்படி அவருக்கு பரிசோதனை நடந்தது. இதில் அவர் ஆண்மையற்றவர் அல்ல என முடிவு வெளியானது. பரிசோதனை முடிவை கர்நாடக சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு ராமநகரம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நித்யானந்தா சார்பில் வக்கீல் நாகேஷ் ஆஜராகி வாதாடினார்.

நித்யானந்தாவின் பெயரையும், புகழையும் கெடுப்பதற்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. புகார் கூறியிருக்கும் பெண் ஆசிரமத்தில் பல வருடங்கள் தங்கி உள்ளார். அவர் ஆன்மீக பேரின்பத்துக்காக விருப்பப்பட்டுத்தான் நித்யானந்தாவுடன் ‘செக்ஸ்’ உறவு வைத்து இருந்தார். அது கற்பழிப்பு அல்ல. பெண்ணின் சம்மதத்துடன் உறவு கொள்வது கற்பழிப்பு ஆகாது.

0 coment�rios:

ஆர்யா பெண் தேடும் வேலைகளில் இருப்பது நாம் அனைவருக்கும் தெரியும். பெண் தேடுவது என்றால் படத்திற்காக அல்ல, வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுக்க இருக...

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆர்யாவுக்கு இத்தனை கோடி சம்பளமா?

ஆர்யா பெண் தேடும் வேலைகளில் இருப்பது நாம் அனைவருக்கும் தெரியும். பெண் தேடுவது என்றால் படத்திற்காக அல்ல, வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுக்க இருக்கிறார்.

அதற்காக ஒரு புதிய தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியே நடக்கிறது. இதில் ஆர்யாவுக்காக 16 பெண்கள் போட்டி போட களமிறங்கினர். சமீபத்திய நிகழ்ச்சி முடியில் 10 பெண்கள் மட்டுமே உள்ளனர், மற்றவர்கள் வெளியேறிவிட்டனர்.

இனி இருப்பவர்களில் யாரை ஆர்யா திருமணம் செய்து கொள்வார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தற்போது என்ன தகவல் என்றால் பொதுவாக ஒரு படத்திற்கு ஆர்யா இரண்டு மாதம் கால்ஷீட் கொடுப்பாராம், அதோடு 2ல் இருந்து 3 கோடி வரை சம்பளம் வாங்குவாராம்.

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்காக மட்டும் ஆர்யா ரூ. 8ல் இருந்து 10 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது சரியாக தெரியவில்லை.

0 coment�rios:

”இனி பூமி 100 ஆண்டுகளுக்கு மேல் நிச்சயம் தாங்காது. மாற்று கிரகத்தைத் தேடி மனித இனம் நகர வேண்டிய காலகட்டம் இது…”ஸ்டீபன் வில்லியம் ஹோக்கிங்கி...

ஸ்டீபன் ஹாக்கிங்கின் அழகான காதல் கதை!

”இனி பூமி 100 ஆண்டுகளுக்கு மேல் நிச்சயம் தாங்காது. மாற்று கிரகத்தைத் தேடி மனித இனம் நகர வேண்டிய காலகட்டம் இது…”ஸ்டீபன் வில்லியம் ஹோக்கிங்கின் மறக்க முடியாத, மறுக்க முடியாத வரிகள் இவை.

உலகத்தின் தலை சிறந்த அறிவியல் ஆராய்ச்சியாளர்களில் மிக முக்கியமானவர் இவர். அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (Amyotrophic Lateral Sclerosis ALS) என்னும் நரம்பு நோயால் தாக்கப்பட்டவர். ஒவ்வொரு உறுப்புகளாக செயல் இழந்து நடமாடவும் பேசவும் முடியாத நிலையில், இன்னும் இரண்டு வருடங்களுக்கு மேல் தாங்காது என மருத்துவர்களால் கைவிடபட்டவர்.

இந்நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பேச்சையும் இழந்த நிலையில் கணினியூடாகப் பேச்சுத் தொகுப்பி மூலம் மற்றவர்களுடன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டு அதன் மூலமே பல்வேறு சாதனைகளைப் படைத்தவர்.

உலகின் சிறந்த அறிவியல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு நிகராகனவர் ஸ்டீபன் ஹாக்கிங். இந்த அறிவியல் ஜாம்பவானின் வாழ்க்கையிலும் அழகான காதல் கதைகள் இருந்தது எவ்வளவு பேருக்குத் தெரியும்?

ஆக்ஸ்ஃபோர்ட்டில் இயற்பியல் பயின்று முதல் வகுப்பில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார். பின்னர் கேம்பிரிட்ஜில் Ph.D பயின்று வந்த ஹோக்கிங்குக்கு ஜேன் வீல்ட் அறிமுகமானார்.இருவரும் நட்பில் இணைந்தனர் பின் காதலாக மாறியது.

வாழ்க்கையில் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கும்போது தான் ALS நோயின் தாக்கம் அதிகரித்து இன்னும் இரண்டு வருடங்களுக்கு மேல் உயிர் வாழ இயாலாது என மருத்துவர்கள் கூறியதை கேட்டு மிகுந்த சோகத்திற்கு ஆளானார்.

ஆனால் ஜேன் தளரவில்லை ஹோக்கிங்கை விட்டு விலகவுமில்லை. இந்த நோயை நாம் சேர்ந்தே எதிர்கொள்வோம் என்றார். இந்த வார்த்தை அவரை உற்சாகபடுத்தி படிப்பைத் தொடர்ந்துமுனைவர் பட்டம் பெற்றார். பின் அவர்களது திருமணமும் நடந்தது.

நாள்களை எண்ணிக் கொண்டிருந்த இருவரும் தங்களது நேரத்தை சந்தோஷமாக மட்டுமே கழிப்பது என உறுதியாயிருந்தனர். குழந்தைகள், இன்னும் கொஞ்சம் நீடி த்த வாழ்க்கை என நாள்கள் வளர அவரது நோயின் தீவிரமும் வளர்ந்தது.

நாளடைவில் எழுந்து நடமாட முடியாத, கை கால்களை அசைக்க முடியாத, பேசும் திறன் இழந்தவரானார். ஆனாலும் அவரது சிந்திக்கும் திறனுக்கும் அறிவியல் சாதனைகளுக்கும் முட்டுக்கட்டை போட அந்தக் கொடிய நோயால் முடியவில்லை.பின் கருத்துவேறுப்பாட்டால் இருவரும் பிரிந்தனர்.

1990 இல் தனக்கு சேவை புரிந்த செவிலியர் எலைன் மேசனைக் காதலித்து மணந்து கொண்டார். வயது, உடல் கடந்த மனப்பூர்வமான காதலாக இருந்திருக்க வேண்டும். ஜேனும் ஜோனத்தன் ஹெல்லர் என்பவரை மணந்து கொண்டார். 5 வருடங்களாக சிறப்பாகத் தொடர்ந்த ஹோக்கிங்மேசன் திருமண உறவில் விரிசல் விழ ஆரம்பித்தது.

பின் சில காரணங்களால் 2006ம் வருடம் இருவரும் விவாகரத்து பெற்றனர். இதன் பிறகு ஹோக்கிங்க மீண்டும் ஜேனிடம் வந்து சேர்ந்தார். அவரது கடைசி 10 வருடங்களை ஜேன்- ஜோனத்தன் மற்றும் தன் மகன், மகள்கள் பேரப் பிள்ளைகளோடு கழித்தார்.

வெவ்வேறு நபர்களைத் திருமணம் செய்து வெவ்வேறு வழியில் சென்றாலும், வாழ்வின் கடைசி சில வருடங்களில் மீண்டும் இணைந்து, எவ்வித எதிர்பார்ப்புமில்லா அன்பை முதுமையிலும் பகிர்ந்து கொண்டு, வாழ்க்கையை இவ்வளவு அழகான முதிர்ச்சியோடு கடந்து சென்ற இவர்கள் உண்மையாகவே காலத்தையும் காதலையும் ஒருசேர வென்றிருக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல!

எதை இழந்த போதிலும் இழந்ததைப் பற்றி கவலைகொள்ளாமல் நம்மிடம் மிச்சம் என்ன இருக்கிறது என்று பார்க்கவேண்டும் என சொல்லிக்கொடுத்த ஹோக்கிங் அறிவியலில் மட்டுமல்ல அன்பிலும் அரசனே!

0 coment�rios:

பிரபல தொலைக்காட்சி மூலம் தன் வருங்கால மனைவியை தேர்தெடுக்க எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் நடிகர் ஆர்யா. இதற்காக ப...

ஆர்யாவிற்கு ஷாக் கொடுத்த மலையாள இளம்பெண்... அதிர்ச்சியில் பெற்றோர்

பிரபல தொலைக்காட்சி மூலம் தன் வருங்கால மனைவியை தேர்தெடுக்க எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் நடிகர் ஆர்யா. இதற்காக பல பெண்கள் போட்டிபோட 16 பெண்களை நிகழ்ச்சி குழு தேர்தெடுத்திருந்தது.

இந்நிலையில் சில போட்டியாளர்கள் வெளியேறினாலும் நிகழ்ச்சியில் இன்னும் இருக்கின்ற இளம்பெண்கள் ஆர்யாவை எப்படியாவது கவர வேண்டும் என்ற எண்ணத்தோடு உள்ளார்கள்.

தற்போது சீத்தாலட்சுமி என்ற இளம்பெண் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒன்றை ஆர்யாவிடம் கூறியுள்ளார்.

அவர் கூறியது, 'நான் என் பெற்றோருக்கு தாமதமாக பிறந்த பெண்குழந்தை, 8 வயது இடைவெளியில் நான் என் சகோதரருக்கு அடுத்து பிறந்துள்ளேன். நான் 12 வகுப்பு படிக்கும்போது என்னுடன் ஒரு பெண் தோழி இருந்தால், அவள் என்னுடன் தவறாக நடக்க முற்பட்டால், இதனால் நான் மிகவும் மனமுடைந்து மன அழுத்தத்தில் இருந்தேன். அப்போது இதைப்பற்றி என் குடும்பத்தினரிடம் சொல்ல சிரமப்பட்டேன்’. இதை கேட்ட ஆர்யா என்ன சொல்வதென்று புரியாமல் இருந்துள்ளார்.

0 coment�rios:

நடிகர் கமல்ஹாசனை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் விஷால் சந்தித்து பேசினார். சுமார் 10 நிமிடங்கள் அவர்கள் பேசிக் கொண்டிருந்தன...

கமலுடன் சந்தித்தது குறித்து விஷால் விளக்கம்

நடிகர் கமல்ஹாசனை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் விஷால் சந்தித்து பேசினார். சுமார் 10 நிமிடங்கள் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

பின்னர் வெளியே வந்த விஷால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- அரசியலில் கமல் பரபரப்பாக உள்ள நிலையில் அவரை சந்தித்தது ஏன்?

பதில்: கமல் சினிமாதுறை சார்ந்த முக்கியமான பிரமுகர். இப்போது ஸ்டிரைக் நடந்து வரும் வேளையில் என்ன நடக்கிறது என்பதை கமலிடம் சொல்ல வேண்டியது என்னுடைய பொறுப்பு. எதற்காக ஸ்டிரைக்கில் ஈடுபடுகிறோம். எந்தெந்த வி‌ஷயங்களுக்காக போராடுகிறோம் என்பதை விலாவாரியாக அவரிடம் தெரிவித்தேன். நான் சொன்னதை அவர் தெளிவாக கேட்டுக் கொண்டார். அவர் சினிமாவின் முன்னோடி.

சினிமா உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். எனவே அவருடைய ஒத்துழைப்பு எங்களுக்கு 100 சதவீதம் இருக்கும். தமிழ் சினிமாவை பொறுத்தவரை அவர் குரல் கொடுத்துள்ளார். எந்த பிரச்சினையாக இருந்தாலும் அவர் பக்க பலமாக இருந்துள்ளார்.

அவரது ஆதரவு வேண்டும் என்ற அடிப்படையில் நான் இதை சொல்லவில்லை. இதுபோன்ற நேரங்களில் அவருடைய ஈடுபாடு கண்டிப்பாக இருக்கும்.


கேள்வி:- கமல் அரசியலுக்கு வந்த பிறகு இது போன்ற பிரச்சினைகளில் குரல் கொடுப்பாரா?

பதில்:- அவர் பார்த்துக் கொண்ட ஒரு துறைதான் சினிமா. சினிமா எப்படி ஒரு துறையோ அப்படித்தான் அரசியல் இன்னொரு துறை. அவர் இப்போது 2-வது துறையை தேர்ந்தெடுத்துள்ளார். சினிமாதுறை பிரச்சினைகளை நான் நடிகர் சங்க பொதுச் செயலாளர் என்ற முறையிலும், தயாரிப்பாளர் சங்க தலைவர் என்ற முறையிலும் கமலிடம் சென்று சொல்வது எனது கடமை. அதனால் போய் சொன்னேன்.

இப்போது நடக்கும் ஸ்டிரைக்கை வேலைநிறுத்தம் என்று சொல்வதை விட சினிமா துறையை புதுப்பிக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். இதில் நிறைய வி‌ஷயங்களை மாற்ற வேண்டும் என்பது எல்லோருடைய உணர்வு. எனவே இதில் எதிர்காலத்தில் அவருடைய பங்களிப்பும் இருக்கும் என்று நம்புகிறேன்.

கேள்வி:- தயாரிப்பாளர் சங்க போராட்டம் எப்போது முடிவுக்கு வரும்?

பதில்:- தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. நாளை (திங்கட்கிழமை) டைரக்டர்களுடன் பேச்சு நடத்த உள்ளோம். செவ்வாய்க்கிழமை கேமராமேன்களுடன் பேச்சு வார்த்தை. அதன்பிறகு நடிகர் சங்கத்தினர் பேச்சு வார்த்தை நடத்துவோம். எங்கள் பிரச்சினைகளை தியேட்டர் அதிபர்கள் புரிந்து கொள்ளும்போது அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவோம்.

சினிமாதுறை சார்ந்த அனைத்து அமைப்புகளுடனும் பேச்சு வார்த்தை தொடரும். இது ஈகோ வினாலோ, அவசரப்பட்டோ எடுத்த முடிவு அல்ல. இந்த நேரத்தில் தயாரிப்பாளர்கள் படம் எடுக்கும்போது ஒரு கஷ்டம் வருகிறது. படம் ரிலீஸ் ஆகும் போது இன்னொரு கஷ்டம் இருக்கிறது. நாங்கள் கேட்பது அடிப்படை வி‌ஷயங்கள்.

டிக்கெட் விற்பனையை கம்ப்யூட்டர் மயமாக்குங்கள் என்று சொல்லும்போது அதை அவர்கள் கண்டிப்பாக செய்தாக வேண்டும். ஒரு வண்டி வாங்குகிறோம் என்றால் 36 தவணை அல்லது 48 தவணை இருக்கும். 48-வது தவணைக்கு பிறகு எனக்கு ஒரு தெளிவு வரும். வண்டி எனக்கு சொந்தம். 49-வது மாதம் நான் கட்டத் தேவையில்லை. ஆனால் சினிமாவில் என்னவென்றால் நாங்கள் கட்டிக் கொண்டே இருக்கிறோம். கட்டக்கூடாத கட்டணத்தை இன்னும் கட்டிக் கொண்டே இருக்கிறோம்.

இன்னொன்று, மக்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்க்க வேண்டும். பாப்கார்ன் செலவிலும், உணவு பொருட்கள் செலவிலும் விஷால் ஏன் மூக்கை நுழைக்கிறார் என்றால் நான் அதற்கு வரவில்லை. மக்கள் சந்தோ‌ஷமாக வந்து படம் பார்க்க வேண்டும். அவர்கள் அமைதியாக இருக்க வேண்டும். அது ரொம்ப ஆடம்பரமான வி‌ஷயமாக தெரியும்போது அதை எப்படி முறைப்படுத்தி அவர்களை தியேட்டருக்கு வரவழைக்க வேண்டும் என்பதுதான் எங்களின் முயற்சி.

இதுதொடர்பாக நிறைய வி‌ஷயங்களை நாங்கள் பேசுகிறோம். ஆன்லைன் முன்பதிவுக்கு 1 டிக்கெட்டுக்கு கூடுதலாக 30 ரூபாய் வசூலிக்கிறார்கள். நான் குடும்பத்துடன் படம் பார்க்க செல்லும்போது 1 டிக்கெட்டுக்கு 30 ரூபாய் கூடுதல் என்பது எனக்கு அதிகமாக தெரிகிறது. அதைத்தான் சொல்கிறோம். ஏன் 30 ரூபாய் போடுகிறீர்கள், 5 ரூபாய் போடுங்கள். 25 ரூபாயை சலுகையாக கொடுங்கள். அவர்கள் படம் பார்க்க தியேட்டருக்கு வருவார்கள். இதைத்தான் நாங்கள் விண்ணப்பமாக வைக்கிறோம். இது அவர்களுடன் சண்டை போடுவதற்காக அல்ல.

ஏனென்றால் தயாரிப்பாளர்களால் முடியாது. இதையெல்லாம் செய்யும் போதுதான் மக்கள் படம் பார்க்க வருவார்கள். இதுபோல கிடைக்கும் சேமிப்பை தயாரிப்பாளர் இன்னொரு படம் எடுக்கத்தான் பயன்படுத்துவார்.

கேள்வி:- இது தொடர்பாக ரஜினியை சந்தித்து பேசினீர்களா?

பதில்:- இதுவரை சந்திக்க வில்லை. கண்டிப்பாக அவருக்கும் தகவல் தெரியப்படுத்துவோம்.

கேள்வி:- டிஜிட்டல் ஒளிபரப்பில் தமிழக அரசு தலையிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

பதில்:- இது சினிமா துறை சார்ந்த ஒரு வி‌ஷயம். மாநகராட்சியை பற்றி எல்லோருக்கும் தெரியுமா? இந்தியாவிலேயே முதல் மாநிலமாக நாம்தான் 2 முறை வரி செலுத்துகிறோம். அதை 30 சதவீதத்தில் இருந்து 8 சதவீதத்துக்கு கொண்டு வந்தார்கள். அதுவே இப்போது எங்களால் முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம்.

ஜி.எஸ்.டி. உள்பட அனைத்து வரிகளையும் மக்கள் மீது திணிக்கும்போது டிக்கெட் விலை அதிகரிக்கிறது. அது பெரிய படங்களுக்கு தாங்குகிறது. சிறிய பட்ஜெட் படங்களுக்கு தாங்கவில்லை. இதையெல்லாம் பேசி சரி செய்யும் போதுதான் நல்ல தீர்வு ஏற்படும்.

கேள்வி:- உங்களுடைய இரும்புத்திரை உள்ளிட்ட பல படங்கள் வெளியாக தயார் நிலையில் உள்ளது. இந்த போராட்டத்தால் நஷ்டம் ஏற்படுமா?

பதில்:- இரும்புத்திரை ரிலீஸ் செய்யும்போது டிக்கெட் விற்பனை கம்ப்யூட்டர் மயமானால்தான் எத்தனைபேர் பார்த்துள்ளனர். என்பது எனக்கு தெரியவரும். தியேட்டர் அதிபர்கள் அந்த கணக்கை கொடுத்தால்தான் நடிகர்களின் சம்பளத்தை குறைக்க முடியும். இது ஈகோ சண்டை அல்ல. எங்களால் முடியவில்லை. இதை சரி கட்டிய பிறகுதான் தயாரிப்பாளர்கள் மேற்கொண்டு படம் எடுப்பதிலோ, வெளியிடுவதிலோ நல்ல சூழ்நிலை ஏற்படும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

0 coment�rios:

‘ஆளு எப்படியிருந்தாலும் ஓகே. நாளும் நட்சத்திரமும் நல்லாயிருந்தா ஒரே ஜம்ப்தான்’ என்பதற்கு அனிருத் ஹீரோவாகிவிட்டார் என்பதே பெரிய எக்சாம்பிள்....

என்ன… அனிருத்துக்கு நயன்தாரா ஜோடியா?

‘ஆளு எப்படியிருந்தாலும் ஓகே. நாளும் நட்சத்திரமும் நல்லாயிருந்தா ஒரே ஜம்ப்தான்’ என்பதற்கு அனிருத் ஹீரோவாகிவிட்டார் என்பதே பெரிய எக்சாம்பிள். இசையில் ஜீன்ஸ் போட்ட சரஸ்வதியாக இருந்தாலும், நடிப்பதற்கு சர்வ லட்சணமும் பொருந்தியவரா அனிருத்? என்றால், அரை தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் ‘ஆளை விடு சாமி’யாகிவிடும் உலகம். ஆனாலும் இமேஜ் இருந்தால் எல்லாமே சாத்தியம் என்பதும் இங்கு சாத்தியம்தான்.

யெஸ்… கோலமாவு கோகிலா என்றொரு படத்தில் நடித்து வரும் நயன்தாராவுக்கு அனிருத்துதான் ஜோடி என்கிறார்கள் இன்டஸ்ட்ரியில். எண்ணி ஐந்தே நிமிஷம் வரக்கூடிய அந்த கேரக்டரில் அனிருத்தை நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறாராம் படத்தின் இயக்குனர் நெல்சன்.

இந்த நெல்சன் சிம்புவின் கிளாஸ்மெட். அதுமட்டுமல்ல… அவரை வைத்து வேட்டை மன்னன் என்கிற படத்தை இயக்கியவர். இவர், அனிருத், சிம்பு மூவரும் திக் பிரண்ட்ஸ் என்பதால், இப்படியொரு முடிவை அவர் எடுத்திருக்கலாம்.

எனிவே… ஐந்து நிமிஷம்தானே? அதற்குள் கேன்ட்டீன்ல ஒரு கேக் வாங்கிட்டு திரும்பிடுறோம்… நடத்துங்க நெல்சன்.

0 coment�rios:

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் காலா படம் அடுத்த மாதம் வெளியாகுமா என்பது தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது. தற்போது தயாரிப்பாளர் சங்கம் நடத்...

ரஜினியின் காலா வசூலுக்கு வந்த புதிய பிரச்சனை!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் காலா படம் அடுத்த மாதம் வெளியாகுமா என்பது தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது. தற்போது தயாரிப்பாளர் சங்கம் நடத்திவரும் வேலைநிறுத்தம் முடிந்தபிறகுதான் காலா ரிலீஸ் தேதி பற்றி தெளிவு கிடைக்கும்.

தற்போது காலா படத்தின் வசூலுக்கு புது பிரச்சனையாக வந்துள்ளது அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் படம். மார்வெலின் 22 சூப்பர்ஹீரோக்கள் தோன்றவுள்ள இந்த படத்தின் இரண்டாவது ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் படம் ஏப்ரல் 27ம் தேதி வெளியாகும் என அதில் அறிவித்திருந்தனர்.

இந்த படத்திற்கு இந்தியாவிலும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளதால் காலா படத்தின் வசூலுக்கு பெரிய பாதிப்பு இருக்கும் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

0 coment�rios:

ரஜினி, கமல் தமிழ் சினிமாவை தங்கள் கண்ட்ரோலில் வைத்திருந்த நாயகர்கள். இதில் ரஜினி இன்றும் அவர் தான் நம்பர் 1-ஆக இருக்கின்றார். அந்த வகையில...

நட்பில் ஏற்பட்ட விரிசல், ரஜினியை இப்படி தாக்கிவிட்டாரே கமல், ரசிகர்கள் சோகம்

ரஜினி, கமல் தமிழ் சினிமாவை தங்கள் கண்ட்ரோலில் வைத்திருந்த நாயகர்கள். இதில் ரஜினி இன்றும் அவர் தான் நம்பர் 1-ஆக இருக்கின்றார்.

அந்த வகையில் கமல் தற்போது முழு நேர அரசியல்வாதியாக, ரஜினி விரைவில் அரசியலில் களம் இறங்கவுள்ளார்.

சினிமாவில் ரஜினி, என்னை போல் நண்பர்கள் வேறு யாருமில்லை என்று கமல் வெளிப்படையாக பேசினார், இதனால் நல்ல நட்பிற்கு உதாரணமாக இவர்களை தான் சொல்வார்கள்.

ஆனால், சமீபத்தில் கமல் ‘நான் ரஜினி நடிக்கும் படங்களை நான் நடிக்க வேண்டும் என்று ஒரு போதும் விரும்பியது இல்லை.

எனக்கும் அவருக்கும் நல்ல நட்பு இருந்தது, அந்த நட்பு அரசியலால் கண்டிப்பாக பிளவு ஏற்படலாம், அவரின் சில கொள்கைகளை மாற்றினால் ரஜினியுடன் இணைவது குறித்து முடிவெடுப்பேன்’ என்று கூறியுள்ளார்.

எல்லோரும் புகழும் நண்பர்களாக இருந்த ரஜினி, கமல் நட்பிற்குள் திடீரென்று அரசியலால் ஏற்படும் பிளவு ரசிகர்களுக்கே வருத்தம் தான்.

0 coment�rios:

நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், என்னுடன் ...

மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது !

நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான்"நாவலன் தீவு"என்று அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான்"குமரிக்கண்டம்".ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலைநாடு,ஏழுபின்பலைநாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!. தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர்"இறையனார் அகப்பொருள்"என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள"தென் மதுரையில்"கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து,"பரிபாடல்,முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிரை, பேரதிகாரம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம்"கபாடபுரம்"நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன்"அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்,மாபுராணம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . இதில்"தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய"மதுரையில்"கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன்"அகநானூறு,புறநானூறு,நாலடியார், திருக்குறள்"ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் !!!!..இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் ,இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.வரலாற்று தேடல் தொடரும்.........!!

தமிழ் மொழி என்றும் வாழிய வாழியவே !


1 coment�rios:

அலுவலகத்தில் வேலை பார்ப்போருக்கும் சரி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் சரி ஞாயிற்றுக்கிழமை வந்தாலே உற்சாகம் தான். வாரம் முழுதும் வேலை பார்...

வாரத்தில் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை ஏன் வந்தது?.. எப்போதாவது யோசித்ததுண்டா?

அலுவலகத்தில் வேலை பார்ப்போருக்கும் சரி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் சரி ஞாயிற்றுக்கிழமை வந்தாலே உற்சாகம் தான்.

வாரம் முழுதும் வேலை பார்த்து சோர்வடைந்தவர்களுக்கு புத்துணர்ச்சி தரும் தினம் வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமையே.

உலகில் உள்ள அனைத்து உயிர்களும் வாழ்வதற்கு முக்கிய ஆதாரம் சூரிய ஒளி. இது இல்லை எனில் தாவரங்கள் அவற்றிற்கு தேவையான உணவினை தயாரித்து கொள்ள முடியாது. மற்ற உயிர்களுக்கும் உணவு கிடைக்காது.

உலகில் உள்ள ஓரறிவு உயிர் முதல் ஆறறிவுள்ள மனிதன் வரை அனைவருக்கும் மிக முக்கியமானது சூரியன். அனைத்து உயிர்களுக்கும் ஜீவாதரமாக சூரியன் திகழ்வதால் வாரத்தின் முதல் நாளாக சூரியனை ஏற்படுத்தினார்கள்.

ஐம்பெரும்காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்திலும் கடவுள் வாழ்த்தின் துவக்கத்தில் ஞாயிறு போற்றுதும் என்றே எழுதப்பட்டுள்ளது. சூரியனுக்கு பின்னரே மற்ற இயற்கை வழிபாடுகளான நிலா, மழை போன்ற தெய்வங்கள் குறிக்கப்படுகின்றன.

0 coment�rios:

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஹிட் படங்கள் என்பது எப்போதும் மிக குறைவு தான். வருடத்திற்கு 200 படங்கள் திரைக்கு வருகின்றது. இதில் ஹிட் ஆன படம்...

இந்த வருடம் இதுவரை வந்த படத்தில் ஒரே படம் தான் ஹிட், எது தெரியுமா?

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஹிட் படங்கள் என்பது எப்போதும் மிக குறைவு தான். வருடத்திற்கு 200 படங்கள் திரைக்கு வருகின்றது.

இதில் ஹிட் ஆன படம் என்று பார்த்தால் 10 கூட இருக்காது, அந்த வகையில் இந்த வருடம் இதுவரை சுமார் 35 படங்கள் வரை வந்துவிட்டது.

இதில் அனைத்து தரப்பினருக்கும் ஹிட் கொடுத்த படம் என்றால் கலகலப்பு-2 தான், இதை தவிர வேறு எந்த படமும் அனைத்து தரப்பினருக்கும் லாபம் கொடுக்கவில்லை.

பாலா இயக்கிய நாச்சியார் மட்டும் முதலுக்கு மோசமில்லை ரகம், மற்றபடி பெரிதும் எதிர்ப்பார்த்த தானா சேர்ந்த கூட்டம் படம் தோல்வியை சந்தித்துள்ளது.

ஸ்கெட்ச் படம் குறைந்த தொகைக்கு விற்றதால் பெரியளவில் நஷ்டம் இல்லை, இனி வரும் காலங்களில் திரையரங்க, தயாரிப்பாளர்கள் போராட்டம் எல்லாம் முடிந்து திரைக்கு வரும் படங்களாவது வெற்றியை கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பும்.

0 coment�rios:

ஒருவர் தன்னை தானே சுயவிமர்சனம்  செய்வது அவ்வளவு எளியது அன்று. கண்ணதாசன் தன்னுடைய மனதில் உள்ளவற்றை அப்படியே வெளிபடுத்துவார்.அவர் யோசித்து எள...

கண்ணதாசன் - சுயவிமர்சனம்

ஒருவர் தன்னை தானே சுயவிமர்சனம்  செய்வது அவ்வளவு எளியது அன்று. கண்ணதாசன் தன்னுடைய மனதில் உள்ளவற்றை அப்படியே வெளிபடுத்துவார்.அவர் யோசித்து எளிதிய பாடல்களைவிட அனுபவித்து எழுதியவை மிக அதிகம்.அவர் தன்னை தானே சுயவிமர்சனம் செய்தவற்றில்  நான் ரசித்த வரிகள்.

நானிடறி விழுந்தயிடம் நாலாயிரம் அதிலும்
நான் போட்ட முட்கள் பதியும்
நடைபாதை வணிகன்னென்று நான்
கூவி விற்ற பொருள்
நல்ல பொருளில்லை அதிகம்
நல்ல பொருளில்லை அதிகம்..."

கண்ணதாசன் ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யம். அவர் ஒரு சகாப்தம்.அவர் ஒரு தமிழ் அகராதி. அவர் நம் வாழ்க்கையின் அனுபவம்.

ஒரு கையில் மதுவும் ஒரு கையில் மாதுவும்
சேர்ந்திருக்கின்ற வேளையிலே என்
ஜீவன் பிறிய வேண்டும் - இல்லையென்றால்
என்ன வாழ்கை நீ வாழ்ந்தாயென்றே
எனை படைத்த இறைவன் கேட்பான் ...



மேலே உள்ள வரிகளை எழுதியது ஏதோ சாதரண கவிஞன் அல்ல. வெறும் பத்து பாடல்களை எழுதி மறைந்த ஒரு பாமர கவிஞன் அல்ல. 5000 பாடல்களையும்6000 கவிதைகளையும் படைத்த ஒரு அசுரன். அவர் எழுதிய புத்தகங்களின் எண்ணிக்கை 232.


அவரின் சுயசரிதை புத்தகங்கள்

    எனது வசந்த காலங்கள்
    எனது சுயசரிதம்
    வனவாசம்
    மனவாசம்


கண்ணதாசன்,சுயவிமர்சனம்


ஒரு கோப்பையில் என் குடியிருப்பு
ஒரு கோலமயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர்துடிப்பு ...

காவியத்தாயின் இளைய மகன்
காதல் பெண்களின் பெருன் தலைவன்
பாமர ஜாதியில் தனி மனிதன் - நான்
படைப்பதனால் என் பேர் இறைவன் ...


நான் மானிட ஜாதியில் ஆட்டி வைப்பேன் - அவர்
மாண்டு விட்டால் அதை பாடி வைப்பேன்
நான் நிரந்தரம் ஆனவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை...

அவருடைய "சேரமான் காதலி" சாகித்திய ஆகாடமி விருது பெற்றது.முதல் முதலில் பாடலுக்காக தேசிய விருது பெற்ற உன்னத கவிஞன்(1968). தமிழ் நாட்டின் முதல் அரசவை கவிஞன். அவருடைய அர்த்தமுள்ள இந்து மதம் உலகப்  புகழ் பெற்றவை.

0 coment�rios:

ரஜினிகாந்த் நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கியுள்ள 'காலா' திரைப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் பரப்பரப்பாக நடந்துவருகின்றன. ஏப்ரல் 27- ம் ...

"ரஜினியோடு மோதும் சூப்பர் ஹீரோக்கள், பாபிசிம்ஹாவின் வெப்சீரிஸ், ஜாக்குலின் ஆக்‌ஷன், அனுராக் காஷ்யப்பின் புதிய படம்...

ரஜினிகாந்த் நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கியுள்ள 'காலா' திரைப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் பரப்பரப்பாக நடந்துவருகின்றன. ஏப்ரல் 27- ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட இத்திரைப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளிவந்து அனைவரையும் கவர்ந்தது. அதே தேதியில் உலகமெங்கும் ரசிகர்களைக் கொண்டுள்ள மார்வல் ஸ்டுடியோஸின் 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்' ஹாலிவுட் திரைப்படம் வெளியாகவுள்ளது. கிட்டத்தட்ட சூப்பர்மேன், பேட்மேனைத் தவிர நாம் பார்த்த அனைத்து சூப்பர் ஹீரோக்களும் இப்படத்தில் இருப்பதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப்படமும் தெலுங்கு, இந்தி, தமிழ் என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள 'காலா'வும் உலகளாவிய அளவில் போட்டி போடும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்னதான் இருந்தாலும், நம்ம வேங்கைமவன் 'காலா' ஒத்தையா நிப்பாரு!.

பாபி சிம்ஹாவின் வெப்சீரிஸ்

தமிழ் ரசிகர்களுக்கிடையே வெப்சீரிஸ் கலாசாரம் பெருகி வருகிறது. யூ-டியூப், அமேசான், நெட்ஃப்லிக்ஸ் என எல்லா வீடியோ வலைதளங்களின் தொடர்களையும் தமிழ் ரசிகர்கள் பார்க்கத் தொடங்கியுள்ளனர். இதைப் புரிந்துகொண்ட திரை நட்சத்திரங்கள், மெள்ள மெள்ள வெப்சிரீஸ் பக்கமும் தலைகாட்ட ஆரம்பித்துள்ளனர். 'ப்ரீத்' என்ற இந்தித் தொடரில் மாதவன் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து தமிழில் பாபி சிம்ஹா வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இத்தொடரை ' `சவாரி' படத்தின் இயக்குநர் குகன் சென்னியப்பன் எழுதி இயக்குகிறார். பாபி சிம்ஹாவிற்கு ஜோடியாக பார்வதி நாயர் நடிக்கிறார்.

நேச்சுரல் ஸ்டார் நானியின் புதிய படம்

'வெப்பம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான தெலுங்கு நடிகர் நானி, 'பாகுபலி' இயக்குநர் ராஜமௌலியின் 'நான் ஈ' படம் மூலம் தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பெரிய ரசிகர் கூட்டத்தைப் பெற்றார். தொடர்ந்து தெலுங்கில் கடந்த மூன்று வருடமாக ஹிட் படங்களைக் கொடுத்து வரும் நானி, சமீபத்தில் தயாரித்த 'ஆவ்' படமும் ஹிட் ஆனது. டோலிவுட்டின் 'நேச்சுரல் ஸ்டார்' என அழைக்கப்படும் இவரின் அடுத்தபடம்,  'கிருஷ்ணார்ஜுனா யுத்தம்'. காதல், காமெடி, ஆக்‌ஷன் என வழக்கமான நானி படங்களின் டெம்ப்ளேட்டில் ஃபிட் ஆகியிருக்கும் இத்திரைப்படம், டோலிவுட்டில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் நானிக்கு ஜோடி அனுபமா பரமேஸ்ரன்.    

சல்மான் படத்தில் ஸ்டண்ட் செய்யும் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்

2008-ல் அப்பாஸ் மஸ்தான் இயக்கத்தில் சைஃப் அலிகான் நடித்து வெளிவந்த ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் 'ரேஸ்'. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதேகூட்டணியில் மீண்டும் வெளியான 'ரேஸ் 2' திரைப்படமும் வெற்றி பெற்றது. தற்போது, சல்மான் கான், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் நடிக்க, பிரபல நடன இயக்குநர் 'ரேஸ் 3' இந்தத் தலைப்பின் 3-வது அத்தியாயமாக வெளிவருகிறது. இப்படத்திற்காக நாயகி பிரத்யேக சண்டைக் காட்சிகளுக்காக மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அனுராக் காஷ்யப் - அபிஷேக் கூட்டணி

முன்னணி பாலிவுட் இயக்குநர்களில் ஒருவர் அனுராக் காஷ்யப். தற்போது நயன்தாரா, அதர்வா, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவுள்ள 'இமைக்கா நொடிகள்' திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இந்தியில் தொடர்ந்து படம் இயக்கிவரும் இவர், அடுத்து அபிஷேக் பச்சனை வைத்து 'மன்மர்ஸியான்' எனும் படத்தை இயக்கிவருகிறார். 'கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து படத்தில் நடிக்கிறேன்' என்று அபிஷேக் நெகிழ்வாய் ட்வீட் செய்ய, சூர்யா உள்பட அபிஷேக்கின் திரையுலக நண்பர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்.    

0 coment�rios:

 தலைமுடி அதிகமாக உதிர தொடங்கினால் அது நாளடைவில் சொட்டையாக மாறிவிடும். இப்பிரச்சனையை ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருபாலருமே சந்திக்கின்றனர்....

சொட்டையில் முடி வளர்ச்சியை தூண்டும் டிப்ஸ்: சில வாரத்தில் பலன் தெரியுமாம்

 தலைமுடி அதிகமாக உதிர தொடங்கினால் அது நாளடைவில் சொட்டையாக மாறிவிடும். இப்பிரச்சனையை ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருபாலருமே சந்திக்கின்றனர்.

இதற்கு மரபணுக்கள் மட்டும் காரணமல்ல, ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை உண்பது, மன அழுத்தம், பதற்றம் போன்ற வேறு சில காரணங்களும் உள்ளது. அதற்கான சில இயற்கை வழிகள் இதோ,
கடுகு எண்ணெய்

ஒரு கப் கடுகு எண்ணெயை ஊற்றி சூடேற்றி, அதில் 4 டேபிள் ஸ்பூன் மருதாணி இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி குளிர்ந்த பின் வடிகட்டி தினமும் தலையில் சொட்டை உள்ள இடத்தில் தடவி வந்தால், சில வாரங்களில் முடியின் வளர்ச்சியைக் காணலாம்.

வெங்காயம்

சொட்டையான இடத்தில் வெங்காயத்தை அரைத்து பேஸ்ட் செய்து தடவி சிறிது நேரம் கழித்து அவ்விடத்தில் தேனை தடவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்தால், முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

முட்டை

ஒரு முட்டையின் மஞ்சள் கருவுடன் சிறிது தேன் கலந்து, அதை ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி, 30 நிமிடம் கழித்து ஷாம்பு பயன்படுத்தி முடியை அலச வேண்டும். இதை வாரத்திற்கு 1 முறை செய்து வர வேண்டும்.

தயிர்

2 டேபிள் ஸ்பூன் தயிருடன், 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் செய்து, அதை ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி 1 மணிநேரம் கழித்து நீரில் அலச வேண்டும். அதனால் முடியின் வளர்ச்சி தூண்டப்படும்.

நெல்லிக்காய்

நெல்லிக்காயை துண்டுகளாக்கி, தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி அந்த எண்ணெய் குளிர்ந்ததும், தினமும் அதை தலைக்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், தலைமுடியின் வளர்ச்சி தூண்டப்படும்.

தேங்காய் பால்

தினமும் தேங்காய் பாலை கொண்டு முடியின் ஸ்கால்ப்பை மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து குளித்து வந்தால், முடி ஊட்டம் பெற்று, தலைமுடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும். 

0 coment�rios:

ஏற்கனவே 2 வாரமாக எந்தவொரு புதிய படமும் வெளியாகாததால் சினிமா ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை முதல் அனைத்து ...

தியேட்டர் உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு! ரசிகர்கள் மகிழ்ச்சி

ஏற்கனவே 2 வாரமாக எந்தவொரு புதிய படமும் வெளியாகாததால் சினிமா ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை முதல் அனைத்து திரையரங்குகளுக்கு மூடப்படும் என தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர்.

சென்னை தியேட்டர் உரிமையாளர்கள் சங்க கூட்டம் இன்று நடந்தது. அதில் ஸ்டிரைக்கில் கலந்துகொள்ளமாட்டோம் என முடிவெடுத்துள்ளதாக சங்க தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

மக்களின் பொழுதுபோக்கிற்காக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம் என அனைத்து மொழி படங்களையும் திரையிடவுள்ளோம் என மேலும் அவர் கூறியுள்ளார்.

0 coment�rios:

விஜய் சேதுபதி எப்போதும் தரமான படங்களை தான் தேர்ந்தெடுத்து நடிப்பார். அப்படி அவர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து செம்ம ஹிட் அடித்த படம் வி...

விஜய் சேதுபதி படத்தை கைப்பற்றிய அம்பானி- வேற லெவல்

விஜய் சேதுபதி எப்போதும் தரமான படங்களை தான் தேர்ந்தெடுத்து நடிப்பார். அப்படி அவர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து செம்ம ஹிட் அடித்த படம் விக்ரம் வேதா.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விக்ரம் வேதா நீண்ட நாட்களாக ஹிந்தியில் ரீமேக் செய்ய பேச்சு வார்த்தைகள் நடந்து வந்தது.

இறுதியாக Y Not Studios அனில் அம்பானியுடன் கைக்கோர்த்து விக்ரம் வேதாவை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளனர்.

ஹிந்தி பதிப்பில் மாதவன், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்கள் என்பதை விரைவில் அறிவிக்கப்படுமாம்.

0 coment�rios:

 மேலைநாட்டு தீர்க்கதரிசிகளில் மிகவும் பிரபலமானவர் 'மிஷெல் தெநாத்ருதாம்'(Michel de Notredame).ஆங்கிலத்தில் நாஸ்ட்ரடாமஸ் (Nostradamus...

நாஸ்ட்ரடாமஸ் : ஒரு புரியாத புதிர்

 மேலைநாட்டு தீர்க்கதரிசிகளில் மிகவும் பிரபலமானவர் 'மிஷெல் தெநாத்ருதாம்'(Michel de Notredame).ஆங்கிலத்தில் நாஸ்ட்ரடாமஸ் (Nostradamus) என்று கூறுவார்கள். வருங்காலத்தைப் பற்றி அவர் எழுதிவைத்தவற்றில் பல நிகழ்ச்சிகள் நடந்துவிட்டிருக்கின்றன. சில நிகழ்ச்சிகளின் துவக்கம் ஏற்பட்டிருக்கிறது. சில நிகழ்ச்சிகள், சில வாரங்களிலோ சில மாதங்களிலோ உருவாகக்கூடும். தீராத நோய்களைத் தீர்த்தவர்.


யார் இந்த நாஸ்ட்ரடாமஸ்?

நாஸ்ட்ரடாமஸ் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். இவர்களது குடும்பம் வருங்காலம் உரைத்தலில் திறமை பெற்றிருந்தது. அதன் வழி இவருக்கும் அந்த ஆற்றல் வந்தது. பாரம்பரிய ஜோதிட முறையை தனது முன்னோர்களிடம் பயின்ற இவர், “கப்பாலா” முறை எனப்படும் ரகசிய ஆருட முறையையும் பயின்றார். ஆனாலும் அவற்றை எல்லாம் விடுத்து மருத்துவத்தை முறையாகப் பயின்று டாக்டர் ஆனார். தம்மை பிரச்சனை என்று நாடி வந்தவர்களது பிரச்சனைகளைப் போக்கினார். அவர்களது நோய்களைக் குணப்படுத்தினார். மனத் தெளிவை ஏற்படுத்தினார். வருங்காலத்தில் நிகழ இருக்கும் செயல்களை முன்னரே கூறி அவர்களை எச்சரிக்கை செய்தார். அதனால் மக்களுக்கு அவர் மீது பெரிய மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது

நாஸ்ட்ரடமஸ்நாளடைவில் ரசவாதம், மாந்த்ரீகம், இறந்தவர்களுடன் பேசுதல், உடலை விடுத்து வெளியே சென்று வருதல் போன்ற பல ஆற்றல்கள் கை வரப் பெற்றார். ஆனால் மதவாதிகள் எதிர்த்ததால் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். பின் பிரான்ஸின் தெற்குப் பகுதிக்குக் குடியேறினார். ஒரு பெண்ணை மணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்த ஆரம்பித்தார். நாளடைவில் தனது ஆரூடங்களினால் அவருக்கு புகழும் ஆதரவும் பெருகியது. மக்களிடையே செல்வாக்கு வளர்ந்தது.

சைத்தானின் சீடரா?

அதன்பின்னர் நாஸ்ட்ரடாமஸ் ஐரோப்பா முழுவதும் புகழ் பெற்றார். ஆனாலும்கூட அவரை சைத்தனின் சீடர் என்று கருதியவர்களும் பலர் இருந்தனர். மருத்துவர் என்ற ஹோதாவைவிட சோதிடர் என்ற முறையிலேயே பொன்னும் பொருளும் புகழும் பெற்றார்.

இன்னும் இவருடைய புத்தகத்தை படித்தால் நிறைய புரியாத புதிர்கள் நிறைய இருக்கும்

கறுப்பா, வெள்ளையா?

ஒருமுறை ஒரு பெரிய பிரபுவின் வீட்ட்க்கு விருந்துக்குச் சென்றார். அவருடைய அரண்மனையின் பின்புறம் ஓரிடத்தில் இரண்டு பன்றிகள் இருந்தன. ஒன்று கறுப்பு; இன்னொன்று வெள்ளை. அவற்றைக் காட்டி, "இந்த இரண்டு பன்றிகளில் எதை நாம் இன்றிரவு விருந்தில் சாப்பிடப்போகிறோம்?", என்று அந்தப் பிரபு நாஸ்ட்ரடாமஸை வினவினார்.

"கறுப்புப் பன்றியை நாம் சாப்பிடுவோம். வெள்ளைப் பன்றியை ஓநாய் சாப்பிட்டுவிடும்," என்றார் நாஸ்ட்ரடாமஸ்.

"என்னுடைய அரண்மனை எல்லைக்குள் எங்கிருந்து ஐயா, ஓநாய் வரும்?" என்று எள்ளி நகையாடினார், பிரபு.

அதன் பிறகு நாஸ்ட்ரடாமஸுக்கே தெரியாமல் சமையற்காரரை அழைத்து அந்த வெள்ளைப் பன்றியைக் கொன்று சமைக்கச் சொல்லிவிட்டுப் போனார் அந்தப பிரபு.

அன்றிரவு விருந்தில் பன்றிக்கறி பரிமாறப்பட்டு உண்டுமுடிந்தபின், பிரபு மீண்டும் நாஸ்ட்ரடாமஸை வினவினார்.

"நாம் சற்றுமுன்பு எந்தப் பன்றியைச் சாப்பிட்டோம்?"

"கறுப்பு" என்று சற்றும் சளைக்காமல் கூறினார் நாஸ்ட்ரடாமஸ்.

உடனே அப்பிரபு, சமையற்காரரை அழைத்து, விருந்தினர் முன்னிலையில் விசாரித்தார்.

"எந்தப் பன்றியைப் பரிமாறியிருக்கிறாய், என்று இவர்கள் எல்லாரிடமும் சொல்"

"கறுப்புப்பன்றி"

பிரபு அதிர்ந்து போனார்.

"வெள்ளைப் பன்றியை அல்லவா சமைக்கச் சொன்னேன்? என் கண் முன்னால்தானே அதைக் கொன்றாய்?"

"ஆம்! பிரபோ. ஆனால் அடுப்பில் வைத்திருந்த பன்றியை உங்கள் வேட்டை நாய் கெளவி இழுத்துச்சென்று விட்டது. ஆகையால் வேறு வழியின்றி கறுப்புப் பன்றியைக் கொன்று சமைத்துப் பரிமாறினேன்", என்று கூறினார் சமையற்காரர்.

அந்தப் பிரபுவின் வேட்டைநாய் உண்மையிலேயே ஒரு வளர்ப்பு ஓநாய்க்குப் பிறந்தது.

நல்ல புகழின் உச்சியில் இருந்த நாஸ்ட்ரடாமஸ் கி.பி.1566-ஆம் ஆண்டு இறந்தார். அவரைப் புதைத்துவிட்டார்கள்.

மண்டை ஓட்டில் மது ஊற்றினான்!

நாஸ்ட்ரடாமஸான் இறப்புக்குப் பின்னர் அவருடைய மண்டையோட்டில் மதுவை ஊற்றி யார் அருந்துகிறார்களோ அவர்களுக்கு நாஸ்ட்ரடாமஸின் சக்திகள் அனைத்தும் வந்துவிடும் என்றும், ஆனால் அவ்வாறு செய்பவர்கள் உடனேயே இறந்துவிடுவார்கள் என்றும் நம்பப்பட்டது. நாஸ்ட்ரடாமஸ் இறந்து இருநூற்று இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் கி.பி. 1791-ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒருநாள் நள்ளிரவில் நாஸ்ட்ரடாமஸான் புதைகுழியைத் தோண்டி அவருடைய சவப்பெட்டியை மூன்றுபேர் திறந்தார்கள். அவர்கள் பிரெஞ்சுப் போர்வீரர்கள். அன்று அவர்கள் மிதமிஞ்சி குடிதிருந்தார்கள். போதை ஏறியநிலையில் அவர்கள் நாஸ்ட்ரடாமஸின் கல்லறையைத் தேடிச்சென்று திறந்தார்கள்.

அந்த சமயத்தில் பிரெஞ்சுப்புரட்சியின் தொடர்பாகக் கலவரம் நடந்து கொண்டிருந்தது.

சவப்பெட்டிக்குள் நாஸ்ட்ரடாமஸின் எலும்புக்கூடு இருந்தது. அதன் கழுத்தில் 'மே, 1791' என்று பொறிக்கப்பட்டிருந்த பித்தளைப்பட்டயம் ஒன்று விளங்கியது. நாஸ்ட்ரடாமஸை 225 ஆண்டுகளுக்கு முன்னர் அடக்கம் செய்யும்போது அந்தப் பட்டயம் அவருடைய கழுத்தில் மாட்டப்பட்டிருக்கவேண்டும்.

அம்மூவரில் ஒருவன் நாஸ்ட்ரடாமஸான் மண்டையோட்டை எடுத்து அதில் மதுவை ஊற்றிக் குடித்தான். அப்போது எங்கிருந்தோ வந்த துப்பாக்கிக் குண்டு ஒன்று அவனுடைய கழுத்தில் பாய்ந்தது. உடனே நாஸ்ட்ரடாமஸான் புதைகுழிக்குள்ளேயே அவன் விழுந்து மாண்டுபோனான்.

சுற்றி நிகழ்ந்துகொண்டிருந்த கலவரத்தில் யாரோ யாரையோ நோக்கிச் சுட்ட குண்டு அவனுடைய கழுத்தில் பாய்ந்துவிட்டது!

மற்ற இருவருக்கும் 'மே 1791' என்று பட்டயத்தில் எழுதியிருந்த காரணமும் அப்போதுதான் புலப்பட்டது. இன்ன ஆண்டு இன்ன மாதத்தில் தன்னுடைய புதைகுழியை யாராவது திறப்பார்கள் என்று நாஸ்ட்ரடாமஸுக்கு 225 ஆண்டுகளுக்கு முன்னமேயே தெரிந்திருந்திருக்கிறது. ஆகவேதான் தன்னுடைய கழுத்தில் அந்தப் பட்டயத்தைக் கட்டிக்கொண்டு இறந்திருக்கிறார்.

"புதைகுழியை யார் திறக்கிறார்களோ, அவர்கள் உடனடியாக அதை மூடவில்லையென்றால் பெருங்கெடுதல் நேரிடும்" என்று அவருடைய தீர்க்கதரிசனங்களின் 907-ஆவது பாடலில் கூறியிருந்தார்.

அவருடைய புதைகுழியைத் திறந்தவர்களில் மற்றவர்களும் திரும்பிச் சென்றுகொண்டிருந்தபோது எதிரிகளால் சுடப்பட்டு இறந்தார்கள்.

இலவச இணைப்பு:

இம்ஹோட்டெப் (Imhotep). இவர் நாலாயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தில் தோன்றியவர். எகிப்தியப் பேரரசன் ஜோஸரின் மதிமந்திரி; பொறியியல் வல்லுனர்; மருத்துவ நிபுணர்; சோதிட ஞானி. இப்படிப்பட்ட பேரறிஞர்தான் அவர். பெரும்பெரும் கற்களைக்கொண்டு பிரம்மாண்டமான பிரமிடுகளைக் கட்டும் முறையைக் கண்டுபிடித்தவர். தம்முடைய மருத்துவ ஆற்றலால் பெரும் வியாதிகளை நீக்கியவர். இறப்புக்குப் பின் மீண்டும் உயிர் பெறக்கூடிய ரகசியத்தை அறிந்தவர். இறந்தபின் உடலை பதனப்படுத்திப் பாதுக்காத்துவைக்கும் விதத்தைக் கண்டுபிடித்தவர். பிரமிடுகளும் அவற்றுள் வைக்கப்பட்ட மம்மி(Mummy) எனப்படும் சடலங்களும் இவருடைய ஆற்றலின் விளைவுகளே. 

0 coment�rios:

பிரச்னைகள் எப்போதும் தனித்து வருவது இல்லை’ என்பார்கள். உடல் பருமன் பிரச்னை வந்தாலே, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், முதுகு வலி, குழந்தைப்பேறு...

தொப்பையைக் குறைக்க சில முக்கிய குறிப்புகள் !!!

பிரச்னைகள் எப்போதும் தனித்து வருவது இல்லை’ என்பார்கள். உடல் பருமன் பிரச்னை வந்தாலே, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், முதுகு வலி, குழந்தைப்பேறு இன்மை, மூட்டு வலி, உளவியல் சிக்கல் மற்றும் மன அழுத்தம், மாரடைப்பு என அடுத்தடுத்து இதரப் பிரச்னைகளும் போனஸாக வரிசை கட்டும்.

உடல் எடை ஒரே நாளில் கூடிவிடுவது கிடையாது.

ஆனால், உடல் எடைக் குறைப்பு மட்டும் சில நாட்களில் நிகழ்ந்துவிட வேண்டும் என்று நாம் பேராசைப்படுகிறோம். ஒரே வாரத்தில் உடலை இளைக்கவைக்கும் பயிற்சி ஏதாவது இருக்கிறதா? என விளம்பரங்களைத் தேடி அலைகிறோம். உடல்பருமனில் இருந்து அபரிமிதமான உடற்பருமனுக்கு செல்லும்போது உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். இந்தியர்களின் சராசரி பாஸல் மெட்டபாலிக் ரேட் (பி.எம்.ஆர்.) என்பது 1800 கலோரி. ஆனால், சராசரியாக இந்தியர்கள் எடுத்துக்கொள்ளும் உணவில் 3000 கலோரி உள்ளது. நம் உடல்வாகையும், உணவுப் பழக்கத்தையும் முறையாக ஆராய்ந்து, படிப்படியான மாற்றங்களை நமக்குள் நிகழ்த்தினால், நிச்சயம் உடல் பருமன் பிரச்னையை சரி செய்துவிட முடியும். இதோ, உங்களை நீங்களே அலசுவதற்கான அற்புத வழிகள்…

உங்கள் உடலில் உள்ள கொழுப்பின் அளவைப் பொறுத்து மட்டுமே நோய் அபாயம் அதிகரிப்பது கிடையாது. எங்கே, எவ்வளவு இருக்கிறது என்பதைப் பொறுத்து அது மாறும். ஈஸியாகப் புரிந்து கொள்வதற்காக, கொழுப்பு சேரும் இடத்தை ஆப்பிள் மாடல், பேரிக்காய் மாடல் என்று இரண்டு விதமாக வகைப்படுத்துகிறார்கள் மருத்துவர்கள். வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பை ஆப்பிள் மாடல் என்றும், இடுப்பு மற்றும் பின்புறத்தில் சேரும் கொழுப்பை பேரிக்காய் மாடல் என்றும் கூறுவார்கள். இரண்டுமே மோசம்தான். பேரிக்காய் வடிவத்தினரைவிட ஆப்பிள் வடிவத்தினர்தான் அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குறிப்பாக, இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அவர்களைவிட இவர்களுக்கு அதிகம்!

இடுப்பை அளவிடுங்கள்… அபாயத்தைக் கணக்கிடுங்கள்…

நீங்கள் (ஆப்பிள்) ஆணாக இருந்தால் இடுப்பின் அளவு 94 செ.மீ-க்கு (37 இன்ச்) அதிகமாகவும், பெண்ணாக இருந்தால் 80 செ.மீ-க்கு (32 இன்ச்) அதிகமாகவும் இருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அர்த்தம். (பேரிக்காய்) ஆண்கள் 102 செ.மீ-க்கு (40 இன்ச்) அதிகமாகவும், பெண்கள் 88 செ.மீ-க்கு (35 இன்ச்) அதிகமாகவும் இருந்தால் கூடுதல் எச்சரிக்கை தேவை. இடுப்பு அளவைக் குறைக்கும் முயற்சியில் உடனடியாக ஈடுபட வேண்டியது அவசியம்!

திட்டமிட்ட ஆரோக்கிய உணவு

 ஆரோக்கியமான உணவு உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்தைக் கொடுப்பதுடன், உடல் எடையைக் குறைக்கவும் வழிவகுக்கும். இதனால் இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறையும். ஆரோக்கியமான உணவுத் திட்டமிடல் என்பதில், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புச் சத்து உள்ள உணவின் அளவைக் குறைத்து, அதிகக் காய்கறிகள், பழங்களை எடுத்துக்கொள்ளுதல், கொழுப்பு நீக்கப்பட்ட அல்லது குறைந்த அளவு கொழுப்பு உள்ள பால் எடுத்துக்கொள்ளுதல், இறைச்சி, மீன், முட்டை, பாதாம், முந்திரி ஆகியவற்றைக் குறைவாக எடுத்துக்கொள்ளுதல் போன்றவை அடங்கும். உணவில் சர்க்கரை மற்றும் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ளவேண்டும். இப்படி சமச்சீரான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடித்தாலே, உடல் எடை கட்டுப்படத் தொடங்கிவிடும்.

உடல் எடையைக் குறைக்க அதிக கலோரிகள் உள்ள உணவு மற்றும் பானங்கள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். சாப்பிடும் உணவில் இருந்து எந்த அளவு சக்தி கிடைக்கிறதோ, அதை உடம்பில் சேர்த்துவைக்காமல் அவ்வப்போது எரித்துவிட வேண்டும். அதாவது, உடல் உழைப்பின் மூலம் அவற்றைப் பயன்படுத்த வேண்டும். விளக்கமாகச் சொன்னால்… உண்ணுகிற உணவுக்கு ஏற்ப நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, நீச்சல் பயிற்சி என்று எது முடிகிறதோ, அதைச் செய்ய வேண்டும்.

உடல்பருமனால் அவதிப்படும் அதே நேரம், நீரிழிவு போன்ற பிரச்னை இல்லை என்றால் அவர்களுக்கு புதிய ஸ்லீவ் கேஸ்ட்ரக்டமி (Sleeve gastrectomy) அறுவைச் சிகிச்சை உள்ளது. இந்த அறுவைச் சிகிச்சையில், பசியைத் தூண்டும் க்ரெலின் (Ghrelin)) என்ற ஹார்மோன் அகற்றப்படும். மேலும், இரைப்பையின் அளவும் குறைக்கப்படும். இதனால் சாப்பிடும் அளவு மட்டுமே குறையும், ஊட்டச்சத்து கிரகிப்பது குறைக்கப்படாது. இந்த அறுவைச் சிகிச்சை முடித்த ஒரே ஆண்டில், உடல் எடை 70 சதவிகிதம் வரை குறைந்துவிடும். அபரிமிதமான உடல்பருமன் உள்ளவர்களுக்கு பை பாஸ் அறுவைச் சிகிச்சை தான் சிறந்தது. இதில் இரைப்பையின் அளவு குறைக்கப்படுவதுடன், ஊட்டச்சத்து கிரகிக்கப்படும் அளவும் குறைக்கப்படுகிறது. இதுதவிர, ரோபோட்டிக் அல்லது எண்டோஸ்கோப்பி மூலமாகவும் உடல்பருமன் அறுவைச் சிகிச்சை செய்யும் முறை இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் அறிமுகமாகியுள்ளது’ என்றார்.

உடல் எடை குறைய டாக்டர்கள், டயட்டீஷியன் அளிக்கும் உற்சாக வழிகள்…

காலை உணவு கண்டிப்பாகத் தேவை. குறைந்தது மூன்று வேளை உணவு அவசியம். ஆவியில் வேகவைத்த இட்லி, இடியாப்பம் போன்ற உணவுகளைச் சாப்பிடலாம்.

குறைந்தது நாள் ஒன்றுக்கு மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். பசியுடன் இருக்காமல், ஆரோக்கிய உணவை நேரத்துடன், அளவோடு சாப்பிடுவது நல்லது.

உடல் பருமனுக்கு முக்கியக் காரணமான சாதத்தைக் குறைத்து, ஒரு பங்கு சாதம், இரண்டு பங்கு வேகவைத்த காய்கறிகள் என்று அளவாகச் சாப்பிடலாம். இரவில் சாதத்தைத் தவிர்த்து, தோசை, சப்பாத்தி போன்ற டிஃபன் வகைகள் பெட்டர்.

முட்டைக்கோஸ், வாழைத்தண்டு, பாகற்காய் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது.

பழ வகைகளில் மா, பலா, வாழை, சப்போட்டா ஆகிவற்றைத் தவிர்த்து, மிதமான இனிப்பு உள்ள சாத்துக்குடி, கொய்யாப் பழங்களைச் சாப்பிடலாம்.

அசைவப் பிரியர்கள் தோல் மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட கோழி இறைச்சியைக் குழம்பு வைத்துச் சாப்பிடலாம். மீனை எண்ணெயில் பொரிக்காமல், குழம்புவைத்து சேர்த்துக்கொள்ளலாம். முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடலாம்.

குழந்தைகள் குறைந்தது ஒரு மணி நேரத்துக்காவது விளையாட்டு, உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.

பெரியவர்கள் குறைந்தது 30 நிமிடங்கள் பிரிஸ்க் வாக்கிங் செய்ய வேண்டும்.

குடும்பமே தொலைக்காட்சியில் மூழ்கிக்கிடக்காமல், எல்லோரும் சேர்ந்து ஈடுபடும் ஏதாவது ஒரு விளையாட்டு அல்லது தோட்ட வேலை போன்ற கூட்டு வேலைகளில் ஈடுபடலாம்.

காலையில் எழுந்ததும் டீ, காபி குடிப்பதைத் தவிர்க்க முயற்சிக்கலாம். முடியாதவர்கள் பிளாக் டீ அல்லது பிளாக் காபியில் சர்க்கரையின் அளவைக் குறைத்து அருந்தலாம்.

கிழங்கு வகைகளில் மாவுச்சத்து அதிகமாக இருப்பதால், அவற்றை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது.

லிபோசக்ஷன் என்ற கொழுப்பு உறிதல் சிகிச்சையும் உள்ளது. இது, உடலின் எந்தப் பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்பை அகற்ற வேண்டும் என்று நினைக்கிறோமோ, அந்த இடத்தில் செய்யப்படும்.

பொதுவாக, நாவை அடக்குவது என்பது மிகவும் கடினமான செயல். இனிப்பு, கொழுப்பு உணவுகளும் நிச்சயம் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதுதான். இவை அனைத்தையும் ஒரேயடியாகத் தவிர்த்தாலும், மனதளவில் தடுமாற்றமும், உற்சாகக் குறைவும் ஏற்படும். ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்று உடல் எடையைக் குறைப்பதற்காக, உணவு மற்றும் உடற்பயிற்சியை மிக வேகமாக மாற்றிவிடக் கூடாது. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்தானே… அதே பாணியில் பருமனையும் கரைப்போம்.

0 coment�rios: