இந்தியா முழுவதும் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வரும் ‘வாட்ஸ் அப்’பிற்கு போட்டியாக பாபா ராம் தேவ் கடந்த மே மாதம் ‘கிம்போ ஆப்’பை அறிமுகப்படுத்த...
‘வாட்ஸ் அப்’க்கு போட்டியாக மீண்டும் களம் இறங்கும் ‘கிம்போ ஆப்’
இந்தியா முழுவதும் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வரும் ‘வாட்ஸ் அப்’பிற்கு போட்டியாக பாபா ராம் தேவ் கடந்த மே மாதம் ‘கிம்போ ஆப்’பை அறிமுகப்படுத்தினார். ஆனால் சில கோளாறுகள் காரணமாக அந்த அப் மறு நாளே திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கிம்போ ஆப் வருகிற 27ம் தேதி மீண்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பதஞ்சலி நிறுவனத்தின் செய்தி தொடா்பாளா் திஜாரவாலா கிம்போ ஆப்பை யோகா குரு ராம்தேவ் வருகிற 27ம் தேதி மீண்டும் அறிமுகப்படுத்துவார் என்று தெரிவித்துள்ளார்.
கிம்போ என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு “என்ன நடக்கிறது, என்ன செய்தி” என்று பொருளாம்.
இந்த ஆப்பில் வீடியோ, ஆடியோ, ஸ்டிக்கா், டூடுள், ஜிஃப் பைல் என அனைத்து வகையான தொழில்நுட்பங்களையும் பிறருக்கு அனுப்ப முடியும்.
இதில் வீடியோ கால், குரூப் கால், வீடியோ குரூப் கால் போன்ற வசதிகள் இடம் பெற்றுள்ளன.
நாம் இருக்கும் இடத்தின் முகவரியை இந்த ஆப் மூலம் நமது நண்பா்களுக்கு எளிதில் பகிர்ந்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆப் மூலம் ஒரு தகவலை அனுப்புபவரும், பெறுபவரும் மட்டுமே அந்த தகவலை பார்க்க முடியும். மூன்றாவது நபரால் அந்த தகவலை பார்க்க முடியாது என்று தெரிவித்துள்ளனா்.
கிம்போ ஆப்பில் ஒரு தகவல் பறிமாறப்பட்ட பின்னா் அந்த தகவல் குறிப்பிட்ட காலத்திற்கு பின்னா் தானாகவே அழிந்து விடும் தன்மை கொண்டது.
கிம்போ ஆப்பில் வாட்ஸ் அப்பில் இருப்பது போன்று போட்டோ அனுப்புதல், தொலைபேசி எண், வீடியோ உள்ளிட்ட பதிவுகளை எளிதில் பரிமாறிக்கொள்ள முடியும்.
கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஆப் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 24 மணி நேரத்திற்குள் திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் மீண்டும் வருகிற 27ம் தேதி கிம்போ ஆப் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
கரு: பழைய பெருமையில் வாழும் இறந்த கால தாதாவுக்கும், கஞ்சா கடத்தல்… என சிட்டியை கைக்குள் வைத்திருக்கும் நிகழ்கால தாதாவுக்கும், அண்ணன் விட்டத...
ஓடு ராஜா ஓடு மினி விமர்சனம்
கரு: பழைய பெருமையில் வாழும் இறந்த கால தாதாவுக்கும், கஞ்சா கடத்தல்… என சிட்டியை கைக்குள் வைத்திருக்கும் நிகழ்கால தாதாவுக்கும், அண்ணன் விட்டதை பிடிக்க நினைக்கும் வருங்கால தாதாவான தம்பி, இவர்கள் மூவருக்கும் இடையிலான ஈகோ மோதலில் சிக்கித் தவிக்கும் நாயகர் மற்றும் நண்பர்களே ஓடு ராஜா ஓடு படக்கரு.
கதை: சென்னையில் சினிமா கதாசிரியராக வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கிறார் நாயகன் குருசோமசுந்தரம். இவரது மனைவி லட்சுமி பிரியா மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். தங்கள் திருமண நாளில் வீட்டில் செட்-அப் பாக்ஸ் வாங்கி வைத்து புருஷனுடன் படம் பார்க்க ஆசைப்படுகிறார் லட்சுமிபிரியா. இதற்காக குருசோம சுந்தரத்திடம் பணம் கொடுத்து செட்-அப் பாக்ஸ் வாங்கி வரச் சொல்லுகிறார்.
அந்த பகுதியில் கஞ்சா விற்று வரும் தனது நண்பருடன் சேர்ந்து செட்-அப் பாக்ஸ் வாங்க செல்லுகிறார் குரு சோமசுந்தரம். அங்கு எதிர்பாராத விதமாக மனைவி கொடுத்த பணத்தை இழக்கிறார். மேலும் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். இது ஒரு பக்கம் நடக்க, மற்றொரு பக்கம் அந்தப் பகுதியில் பெரிய தாதாவாக இருக்கும் சாருஹாசன், கவலைக்கிடமான நிலையில், இனிமேல் ரவுடி தொழில் செய்யக் கூடாது என்று அவரது மகன் நாசரிடம் சத்தியம் வாங்கி விட்டு இறந்து போகிறார். ஆனால், நாசரின் தம்பி ரவீந்திர விஜய்யோ நாசரை கொன்று விட்டு, தாதாவாக முயற்சி செய்கிறார். இச்சூழலில் நாசரால் ஏமாற்றப்பட்ட மற்றொரு நாயகர் ஆனந்தசாமி 5 வருடம் சிறை தண்டனை பெற்று வெளியில் வருகிறார். நாசரை கடத்தி அவரிடம் பணம் பறிக்க முயற்சி செய்கிறார்.
அதே பகுதியில் ஆதரவற்ற சிறுவர்கள், சிறு சிறு திருட்டு தொழில்கள் செய்து வருகிறார்கள். இவர்கள் எல்லோரும் ஒரு அசாதாரண சூழலில் சந்திக்கிறார்கள். இறுதியில் என்ன ஆனது? குருசோம சுந்தரம் செட்-அப் பாக்ஸ் வாங்கினாரா? நாசர் ஆனந்தசாமி, ரவீந்திர விஜயால் கொல்லப்பட்டாரா? இல்லையா...? இப்படத்தில், சிம்ரன் அவரது கணவர் திபக்பாஹா ஆகியோரின் ரோல் என்ன...? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விடை சொல்கிறது... "ஓடு ராஜா ஓடு" படத்தின் மீதிக்கதையும், களமும்!
காட்சிப்படுத்தல்: விஜய் மூலன் டாக்கிஸ் வழங்கும் கேன்டல் லைட் புரொடக்சன்ஸின் தயாரிப்பில் "ஜோக்கர்" குருசோமசுந்தரம், ஆனந்தசாமி, ப்ரியா சந்திரமெளலி, ஆஷிகா செல்வம், நாசர், சிம்ரன்,தீபக் பாஹா, சோனா ஹைடன், ரவீந்திர விஜய், மெல்வின் எம்.ரஞ்சன், அபிஷேக் கே.எஸ் வெங்கடேஷ், ஹரிநாத், வினுஜான், அருண்மொழி சிவப்பிரகாசம், அமுதன், பேபி ஆர். ஹரணி, மாஸ்டர் ஏ.ராகுல் உள்ளிட்ட ரசிகர்களுக்கு நன்கு தெரிந்த தெரியாத, ரசிகர்கள் அறிந்த அறியாத ஒரு பெரும் நட்சத்திர பட்டாளம் நடிக்க டோஷ் நந்தாவின் இசையில், நிஷாந்த் ரவீந்திரன் மற்றும் ஜத்தின் ஷங்கர் ராஜ் இருவரது இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் "ஒடு ராஜா ஓடு." படத்தில், "எவ்ளோ பெரிய வாயி...", " 500 ரூபாக்கு உன் வாயில தான் வைப்பேன்... துப்பாக்கிய...", "காலையில நான் டெய்லி எழுந்ததும் பயப்படுற விஷயம் ஒண்ணே ஒன்னு தான் வேற யார் கூடயும் என் பொண்டாட்டி ஒடிப்போயிடுவாளோங்கற பயம் தான், அது..." , "இம்ரான் நீ எங்க வந்த? இதுல ப்ரண்ட்லியா பண்ண என்ன இருக்கு?"ரொம்ப நாள் ஆச்சு இப்படி நடந்து இன்னொரு ரவுண்ட் போலாமா? "என் ஜாவ உடைச்சுட்டான்...." "ஹெல்ப் தானடா பண்ண சொன்னேன்... " , "நீங்க 2 பேரும் எனக்கு ஒண்னு தான் ... " என்பது உள்ளிட்ட டபுள், ட்ரிபிள் மீனிங் வசனங்களை நடிகைசோனா உள்ளிட்ட இப்படப் பாத்திரங்கள் ஆங்காங்கே பேசியிருக்கும் காட்சிகளை விரசமில்லாமல் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் இப்படத்திற்கு கூடுதல் பலம்.
கதாநாயகர்: படத்தின் முதல் நாயகனாக நடித்திருக்கும் குருசோம சுந்தரம் யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். கதாசிரியராக கிளைமாக்ஸ் கிடைக்காமல் தவிப்பது, நண்பருடன் சேர்ந்து செட்-அப் பாக்ஸ் பணத்தை இழந்து தவிப்பது. அதை மீட்க போராடுவது, மனைவிக்கு பயப்படுவது என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
மொத்தத்தில், சினிமா டைரக்ஷன் லட்சியத்தில், மனைவி சம்பாத்யத்தில்வீட்டோட புருஷனாக இருக்கும் மனோகராக "ஜோக்கர்" குருசோமசுந்தரம், அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
அவரை மாதிரியே அண்ணன் நாசர் கைவிட்ட, தாதாயிஸத்தை கையிலெடுக்கத் துடிக்கும் நாசரின் தம்பி செல்லமுத்து - ரவீந்திர விஜய்யும். ரவீந்திர விஜய் செய்த கொலைக்காக, தான் செய்யாத கொலைக்கு சிறை சென்று, காதலியை நண்பனிடம் பங்கு வைத்த ஆனந்தசாமியும்.... கூட அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
கதாநாயகியர் ப்ரியா சந்திரமெளலி, ஆஷிகா செல்வம், இருவரில் குருசோமசுந்தரத்திற்கு மனைவியாக வரும் பிரியா சந்திரமெளலி, புருஷனை அதிகம் கடிந்து கொள்ளும் பாசக்கார மனைவியாக அசத்தியிருக்கிறார் என்றால், ஆஷிகா செல்வம் காதலர் ஜெயிலுக்கு போனதால் அவரது நண்பருடன் சல்லாபிக்கும் நாயகியாக நன்றாகவே நடித்திருக்கிறார்.
பிற நட்சத்திரங்கள்: கஞ்சா கஜபதியாக வரும் மெல்வின் எம்ரஞ்சன், மெல்வினின் பாஸ் நிகழ்கால தாதா தீபக் பாஹா (நிஜத்தில் மாஜி நாயகி சிம்ரனின் வீட்டுக்காரர்...) இவர்கள் எல்லோருக்கும் முன்னாள் தாதா இறந்த கால தாதா காளிமுத்து - நாசர். குருவின் கஞ்சா பொட்டல நண்பர் பீட்டர், பீட்டருக்கு பொட்டலம் சப்ளை செய்யும் கஞ்சா ஹோல்சேல் கஜபதி - மெல்வின் எம் .ரஞ்சன் மற்றும் அபிஷேக் கே.எஸ் வெங்கடேஷ், ஹரிநாத், வினுஜான், அருண்மொழி சிவப்பிரகாசம், துப்பாக்கி சப்ளை செய்யும் மாற்றுத்திறனாளி அமுதன், குப்பத்து பிக்பாக்கெட் பொடிசுகள்...சிறுமி மலர் - பேபி ஆர். ஹரணி, சிறுவன் சத்யா - மாஸ்டர் ஏ. ராகுல்… அவர்களுக்கு உதவும் லயன் - கால பைரவியாக வரும் சிம்ரன், நாசரின் ஆசை மனைவி சோனா ஹைடன், உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர்.
தொழில் நுட்பகலைஞர்கள்: இப்பட இரட்டை இயக்குனர்களில் ஒருவரான நிஷாந்த் ரவீந்திரனின் திரைக்கதை மற்றும் படத்தொகுப்பாகட்டும், மற்றொரு இயக்குனரான ஜித்தின் ஷங்கர் ராஜ் மற்றும், சுனில் சி.கே.வின் ஒளிப்பதிவாகட்டும் இவை மூன்றிலும் பெரிய குறையேதுமில்லை. டோஷ் நந்தாவின் இசையில், "ம்பளக்கடி ஜும்பா... ஹேப்பி லைப்பு செம ஹேப்பி....","தமாசு தமாசு வேடிக்கை நீ பாரடா. "உள்ளிட்ட பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பெரும் பலம்.
பலம்: டார்க் காமெடி ஸ்டைலில் இப் படத்தை இயக்கி இருக்கிறார்கள் இரட்டை இயக்குனர்கள் ஜத்தின் மற்றும் நிஷாந்த். படம் ஆரம்பத்தில் வெவ்வேறு கதைகளுடன் அங்கும் இங்குமாக அலை பாயும் திரைக்கதையாகஅமைந்தாலும், பிற்பாதியில் சரியாக ஒன்று சேர்த்திருக்கிறார்கள். பல இடங்களில் டார்க் காமெடி செமயாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. ஒரு செட்-அப் பாக்சில் ஆரம்பித்து அதை வாங்குவதற்கு இடையே நடக்கும் பல சிக்கல்களை ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்கள்....என்பது பெரும் பலம்.
பலவீனம்: பல இடங்களில் ‘ஓடு ராஜா ஓடு படத்தில் சில இடங்களில்தேவையில்லாத ஓட்டம் சற்றே இழுவையாக ஜாஸ்தியாக தெரிவது பெரும் பலவீனம்.
இயக்கம்: நிஷாந்த் ரவீந்திரன் மற்றும் ஜித்தின் ஷங்கர் ராஜ் இருவரதுஇயக்கத்தில், ஒரு டயலாக் ஒரு இடத்தில் முடியும் சொல்லில் அடுத்த காட்சி வேறொரு இடத்தில் ஆரம்பமாகும் புதுமை மற்றும் , "அடுப்புக்கு பயந்து நெருப்பில் விழுந்த கதை... " பழமொழிகள் ,ஜப்பான் காரன் டொயாட்டோ கார் மொக்க ஜோக் கு, "எங்க கிட்டேயும் இருக்குபெருசு பெருசா .. கன்னு" , என்பது உள்ளிட்ட காம நெடி டயலாக்குகள் எல்லாவற்றிலும் இப்படம் திரும்பி பார்க்க வைக்கிறது.
இவை எல்லாவற்றுக்கும் மேல், "ஒப்புக்கு சப்பான்ஸ் கொசுறு" , "அன்புள்ள அரிப்பு" , "ஏ 2 இசட் கல பொறுக்கி" , "நகுல் - கட்டத்துல சனி" , "மேரி ஆசை நாயகி" , "இம்ரான் துணை காதலன்" , "இறந்த கால தாதா" ,"நிகழ்கால தாதா", "வருங்கால தாதா, "கீழ்பாக்கம் அங்கம்மாள் போதை மாமி மேரி" , " பேன்ட் சட்டை கேங்கு" , "மொரட்டு பீஸ் பேன்ட் சர்ட் கேங்” , "கொலைகாரன் பேட்டையின் வேறிடத்தில்...."உள்ளிட்ட ஒவ்வொரு பாத்திர அறிமுகத்திற்காக திரையில் மிளிரும் சப்-டைட்டில்கள் இந்த இரட்டையர்களின் இயக்கத்தில் செம புதுசாக இருக்கிறது. வாவ்!
பைனல் "பன்ச்": ஆக மொத்தத்தில், ஒரு சில, லாஜிக் மீறல்கள், தேவையில்லாத ஓட்டங்கள் உள்ளிட்டவற்றை இன்னும் சற்றே குறைத்திருக்கலாம்... என்றாலும், நவீன காமெடி, சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் படமாகவந்திருக்கும் "ஒடு ராஜா ஓடு' - நிச்சயம், 'தியேட்டரில் சக்கை போடு போடுகிறதோ, இல்லையோ., ஓரளவிற்கு ஓடும்... என நம்பலாம்!"
சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக கிட்டத்தட்ட கேரள மாநிலமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. லட்சக்கணக்கானோர் அடிப்படை தேவையான உணவு, உடை கூட இல்லாமல்...
வாயை கொடுத்து மாட்டிக் கொண்ட டிடி.... இப்ப இது தேவையா? வருத்தெடுக்கும் மக்கள்!
சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக கிட்டத்தட்ட கேரள மாநிலமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. லட்சக்கணக்கானோர் அடிப்படை தேவையான உணவு, உடை கூட இல்லாமல் முகாம்களில் அகதிபோல் தங்கியுள்ளனர். கேரள அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகளை செய்து வருகின்றது.
மக்கள் பலர் கேரளா மக்களுக்கு உதவ முன்வந்துள்ளனர். தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பொது மக்கள், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் நிதியுதவி அளித்துள்ளனர்.
இந்நிலையில், துபாயில் வேலை பார்க்கும் பாகிஸ்தானியர்கள் தங்களின் ஒரு நாள் சம்பளத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர். இது குறித்த செய்தியை பார்த்த டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான டிடி ட்விட்டரில் வாவ் என்று கூறி அவர்களை பாராட்டியுள்ளார்.
இதனால், அவரை நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர். முப்படைகள் செய்யும் வேலையை பாராட்டாமல் பாகிஸ்தானியர்களை பாராட்டுவதா? கேரளாவுக்கு நீங்கள் என்ன உதவி செய்தீர்கள்? என கேட்டு டிடியை திட்டி வருகின்றனர்.
கேரள மக்கள் கடும் மழை மற்றும் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதத்தில் முதலமைச்சர் நிவாரண நி...
கேரளாவுக்கு தோனி பட நடிகர் கொடுத்த பிரம்மாண்ட தொகை! விஜய்யை விட மிக அதிகம்
கேரள மக்கள் கடும் மழை மற்றும் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதத்தில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பல்வேறு பிரபலங்கள் நிதி அளித்து வருகின்றனர்.
தற்போது தோனி படத்தில் ஹீரோவக நடித்திருந்த சுஷாந்த் சிங் ராஜ்புட் கேரளவுக்காக 1 கோடி ரூபாய் அளித்துள்ளார்.
ரசிகர் ஒருவர் ட்விட்டரில் கேட்ட கேள்வியை பார்த்த அவர், ரசிகரின் பெயரிலேயே அந்த நிதியினை அளித்துள்ளார்.
நடிகரின் இந்த செயல் ரசிகருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பா.ரஞ்சித் அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர். அதை தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா என தரமான படங்களாக தந்தவர...
பா.ரஞ்சிதின் அடுத்தப்படம் திரையில் இல்லை, புதிய முயற்சி, சர்ச்சையான களம்
பா.ரஞ்சித் அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர். அதை தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா என தரமான படங்களாக தந்தவர்.
இவர் அடுத்து ஹிந்தி படம் எடுக்கப்போவதாகவும், ரஜினியுடன் மீண்டும் இணைவதாகவும் பல செய்திகள் வந்துக்கொண்டே இருக்கின்றது.
ஆனால், நமக்கு கிடைத்த தகவலின்படி ரஞ்சித் அடுத்து வெப் சீரியஸ் ஒன்றை எடுக்கப்போகின்றாராம், அவை பிரபல நடிகையாக இருந்து தனக்கு ஏற்பட்ட சில பிரச்சனைகளால் தற்கொலை செய்துக்கொண்ட சில்க் ஸ்மிதா வாழ்க்கையை வெப் சீரியஸாக எடுக்கவுள்ளாராம்.
‘இவரு மட்டும் மாட்டேன்னு சொல்லியிருந்தா இந்தப்படத்தையே எடுத்திருக்க மாட்டேன்’ என்று ஒவ்வொரு பிரஸ்மீட்டிலும் யாராவது ஒரு நடிகரை புகழ்ந்து வை...
பசுபதி இல்லேன்னா இந்தப்படமே இல்ல! -டைரக்டர் சரண்டர்!
‘இவரு மட்டும் மாட்டேன்னு சொல்லியிருந்தா இந்தப்படத்தையே எடுத்திருக்க மாட்டேன்’ என்று ஒவ்வொரு பிரஸ்மீட்டிலும் யாராவது ஒரு நடிகரை புகழ்ந்து வைப்பார்கள் இயக்குனர்கள். கடைசியில் படத்தை பார்த்தால், அந்த நடிகர் நடிக்காமலிருந்தால் கூட இன்னும் சிறப்பாக இருந்திருக்குமே என்று தோன்றும். ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ படத்திலும் அப்படியொரு புகழ்ச்சி.
தன்னை நோக்கிய அந்த புகழ்ச்சியை தக்க வைத்துக் கொள்வாரா பசுபதி?
‘ஒரு பேச்சுக்கெல்லாம் சொல்லல. நிஜமாகவே இந்தப்படத்தில் பசுபதியின் பர்பாமென்ஸ் பிரமாதம்’ என்று பேச ஆரம்பித்தார் அ.இ.சா படத்தின் இயக்குனர் அவினாஷ் ஹரிகரன். அதிலும் கொஞ்சம் உண்மை இருக்கதான் செய்கிறது. வதவதவென படங்களில் நடித்துத் தள்ளுபவரல்ல பசுபதி. அவர் மனசுக்கு ஒட்டாத படங்களை, இடது கையால் புறம் தள்ளிவிட்டு குப்புறடித்து தூங்கக் கூட செய்கிற ஆள்தான்.
இதுவரைக்கும் 30 படங்களுக்கு மேல் விநியோகம் செய்திருக்கும் ஆரா சினிமாஸ் நிறுவனம்தான் இந்தப்படத்தை முதன் முறையாக தயாரித்திருக்கிறது. இந்த 30 படத்திலும் ஆரா நிறுவனம் கற்றுக் கொண்டது என்ன தெரியுமா? ஆடியன்ஸ் எதை சொன்னா ரசிப்பான். எதை சொன்னா ரசிக்க மாட்டான் என்பதை. “இந்தப்படத்தை நான் தயாரிக்க காரணமே அந்த கணக்குதான்” என்றார் ஆரா சினிமாஸ் மகேஷ் கோவிந்தராஜ்.
‘சரி… இது முழு நீள அரசியல் படமா?’ என்றால், “ஐயய்யோ. அதெல்லாம் இல்ல” என்கிறார் இயக்குனர் அவினாஷ். மூன்று பேரின் வாழ்வில் ஒரு அரசியல்வாதி ஏற்படுத்துகிற திருப்பம் என்னவாக முடிகிறது என்பதுதானாம்.
படம் மட்டும் நல்லாயில்லேன்னா, வீட்டுக்கு ஆட்டோவ அனுப்பிர வேண்டியதுதான்!
சமயங்களில், பூட்டிய அறைக்குள் இருப்பது கன்னுக்குட்டி என்று நினைத்திருப்போம். கதவை திறந்தால் காட்டு யானை பிளிரும்! அப்படியொரு முரட்டுப்படம்த...
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன / விமர்சனம் - பளபளப்பை பாராட்டி விடுவோம்!
சமயங்களில், பூட்டிய அறைக்குள் இருப்பது கன்னுக்குட்டி என்று நினைத்திருப்போம். கதவை திறந்தால் காட்டு யானை பிளிரும்! அப்படியொரு முரட்டுப்படம்தான் ம.பா.ம.எ! துருவா, ஐஸ்வர்யா தத்தா, அஞ்சனா, சரண்யா பொன்வண்ணன் என்று சல்லி விலையில் கிடைக்கும் திருவிழா ரிப்பன்கள்தான் இப்படத்தின் தாம்பு கயிறுகள். பார்த்தால்… தியேட்டரை விட்டு எழுந்து ஓட விடாமல் இறுக்கிக் கட்டுகிறார்கள். ஆஹா…!
வயதான மற்றும் திருமணமான பெண்களிடம் தாலியறுக்கும் தடியன்கள் சிலர். இந்த துயரத்தில் சிக்குகிற ஹீரோ அந்த கும்பலை கண்டறிந்து எப்படி வேரறுக்கிறான் என்பதுதான் கதை. பின்புலத்தில் தங்க மாஃபியா பற்றிய ஏராளமான டீட்டெயில்கள். கடைசியில் தங்கம் யார் கைக்கு போகிறது என்பதை அறியும்போது, ‘அடப்பாவிகளா, எவனைதான் நம்ப சொல்றீங்க?’ என்று அதிர்ச்சியாகிறோம்.
சுமார் நான்கு படங்களிலாவது நடித்திருப்பார் இப்படத்தின் ஹீரோ துருவா. இன்னமும் மனசுக்குள் ஒட்டாத முகம். அழுத்தமான காட்சிகளில் நடிக்க அநியாயத்துக்கு முக்குகிறார். பேஸ்கட்டு கவுத்தாலும், ஓங்குதாங்கான அவரது உடற்கட்டு ஆக்ஷன் காட்சிகளில் துவம்சம் பண்ணுகிறது. படத்தில் இவர் குறித்த சஸ்பென்சை முன்பே யூகிக்க முடிவதும் கூட சற்றே சப்!
படத்தின் முதுகெலும்பே சரண்யா பொன்வண்ணனின் நடிப்புதான். எந்த அழகான பெண்ணை பார்த்தாலும், ‘என் புள்ளைய கட்டிக்கிறீயா?’ என்று அப்பாவியாக கேட்டு அலற விடுகிறார் அவர்களை. வெகு தூர கோவில்களை இலவச தரிசனம் செய்ய அவர் போடும் தந்திரத் திட்டங்கள், ஜாலியாக்குகிறது தியேட்டரை. அவ்வளவு சந்தோஷமும் புறாக் கூட்டுக்குள் பூகம்பம் வந்தது போல நொறுங்கும் போது, தியேட்டரும் சப்தநாடியை அடக்கிக் கொள்கிறது.
பிக்பாஸ்2 ல் கலக்கிக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா தத்தா இதில் ஒரு ஹீரோயின். அழகு இருக்கிறதே ஒழிய, நடிப்பு நாலு பைசாவுக்கு கூட நம்பும்படி இல்லை. அதுவும் திடீரென இவர் போலீஸ் ஆகி, ஃபுல் சல்யூட் அடிப்பதெல்லாம் ட்ராமா!
மற்றொரு ஹீரோயின் அஞ்சனாவுக்கு சற்றே வெயிட் ரோல். நம்பியவர்களை நட்டாற்றில் விடவில்லை இவர்! அந்த வில்லன் கூட்டத்தில் அறம் படத்தில் நடித்த ராமச்சந்திரனின் நடிப்பு தனி கவனம் பெறுகிறது. ராதாரவிக்கு ஒரு நாள் கால்ஷீட்தான் போல. வந்தவரைக்கும் பெடல் மிதித்துவிட்டு போகிறார்.
பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு மனசை ரம்மியமாக்குகிறது. சண்டைக்காட்சிகளில் ஸ்பெஷல் மெனகெடல். பலே. இசை அச்சு. இன்னும் நாலைந்து முறை கேட்டால் பாடல்கள் மனசில் நிற்குமோ என்னவோ?
செயின் பறிப்பு திருடர்கள் பற்றிய டிக்ஷனரியாகவே ஒரு படம் வந்தது. ‘மெட்ரோ’! அப்படத்தின் ‘கவரிங்’தான் இப்படம் என்றாலும், பெண்களுக்கு விழிப்புணர்வை தந்திருக்கிறதே!
வேறு வழியேயில்லை… இயக்குனர் ராகேஷின் முயற்சியால் கிடைத்த இந்த இமிடேஷன் பளபளப்பை பாராட்டி விடுவோம்!
கமல்ஹாசன் நடித்து இயக்கிய படம் விஸ்வரூபம்-2. இப்படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் அடைந்த வெற்றியை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. ...
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல் மார்க்கெட் இப்படியானதே!
கமல்ஹாசன் நடித்து இயக்கிய படம் விஸ்வரூபம்-2. இப்படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் அடைந்த வெற்றியை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.
இந்நிலையில் விஸ்வரூபம்-2 படத்திற்கு பெரியளவில் எதிர்ப்பார்ப்பு இல்லை, ஆனால், கமல் இந்தியா முழுவதும் இப்படத்தை ப்ரோமோட் செய்தார்.
அப்படியிருந்தும் இப்படம் தற்போது வரை மொத்தம் ரூ 50 கோடி தான் வசூல் செய்துள்ளதாம், இதில் தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ 30 கோடி வசூல் செய்துள்ளது.
இதனால், பல இடங்களில் விஸ்வரூபம்-2 கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளது, சமீபத்தில் வந்த கடைக்குட்டி சிங்கமே ரூ 50 கோடியை தாண்டி தமிழகத்தில் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
இப்படி கமல் மார்க்கெட் அதளபாதளத்திற்கு செல்ல அவரின் அரசியல் எண்ட்ரீ ஒரு காரணமா என்றும் சிலர் கூறி வருகின்றனர்.
மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்தோனேஷியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, பயங்கர நிலநடுக்கம் ...
இந்தோனேஷியாவில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம்; பீதியில் பொதுமக்கள்!
மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
இந்தோனேஷியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இரண்டு முறை நிலநடுக்கத்தால் தொடர் நில அதிர்வுகள் ஏற்பட்டு, மக்களை அச்சுறுத்தின.
ஆயிரக்கணக்கான வீடுகள், கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இந்த சூழலில் இன்று காலை சும்பவா பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5ஆக பதிவானது.
இந்நிலையில் இன்று இரவு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9ஆக பதிவாகியுள்ளது. இதனால் ஏராளமான கட்டடங்கள் குலுங்கின.
நடிகர் ரஜினிகாந்த் இன்று நடிகர் சங்க நினைவேந்தல் கூட்டத்தில் கலைஞர் கருணாநிதி பற்றி உருக்கமாக பேசினார். அதுமட்டுமின்றி கலைஞருக்கு உரிய மரிய...
நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன்! தமிழக முதல்வருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினி
நடிகர் ரஜினிகாந்த் இன்று நடிகர் சங்க நினைவேந்தல் கூட்டத்தில் கலைஞர் கருணாநிதி பற்றி உருக்கமாக பேசினார். அதுமட்டுமின்றி கலைஞருக்கு உரிய மரியாதை அளிக்காத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
"மெரினாவில் அடக்கம் செய்யலாம் என கோர்ட் தீர்ப்புக்கு பிறகு மேல் முறையீடு செய்யவில்லை, நீங்கள் செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன்" என ரஜினி கூறினார்.
மேலும் "தேசிய தலைவர்கள், மற்ற மாநில முதல்வரகள், ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் இங்கு கலைஞரை அடக்கம் செய்யும்போது இருந்தனர். நீங்கள் எங்கே போனீர்கள்" என தமிழக முதல்வரை பார்த்து ரஜினி காட்டமாக கேட்டுள்ளார்.
கர்நாடகத்தில் காதல் ஜோடி பேஸ் புக் லைவில் திருமணம் செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் கிரண்குமார். அவரும்...
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்... இதுவரை யாரும் செய்திராத சுவாரசியமான திருமணம்
கர்நாடகத்தில் காதல் ஜோடி பேஸ் புக் லைவில் திருமணம் செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் கிரண்குமார். அவரும் அஞ்சனா என்ற பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த விஷயத்தை அஞ்சனா தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதற்கு அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதற்கு காரணம் கிரண்குமார் ஆதிவாசி சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் தான்.ஆகவே வீட்டிலிருந்து வெளியேறினார் அஞ்சனா.
இதனிடையே தனது மகளை கிரண் கடத்திவிட்டதாக அஞ்சனாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் கிரண்குமார்-அஞ்சனா தங்களது திருமணத்தை பேஸ்புக் லைவ் வீடியோவாக வெளியிட்டனர். மேலும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பொதுவாக கருணாநிதி தான் இருக்கும் இடத்தை கலகலப்பாக வைத்துக் கொள்வார். நகைச்சுவை மற்றும் சிலேடையாக பேசுவது போன்ற அவரது பேச்சின் வெளிப்பாடு ...
காவேரி மருத்துவமனையில் நடந்த சுவாரசியம்! நர்சுகளை அசர வைத்த கருணாநிதி
பொதுவாக கருணாநிதி தான் இருக்கும் இடத்தை கலகலப்பாக வைத்துக் கொள்வார்.
நகைச்சுவை மற்றும் சிலேடையாக பேசுவது போன்ற அவரது பேச்சின் வெளிப்பாடு அவரது அருகில் இருப்பவர்களை சிரிக்கச் செய்துவிடும்.
இந்நிலையில் தான் 2016 ஆம் ஆண்டு காவேரி மருத்துவமனையில் அனுமதித்திருந்தபோது அங்கிருந்த செவிலியர்களிடம் நகைச்சுவையாக பேசியுள்ளார்.
தீவிர சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு தண்ணீர் அதிகம் கொடுக்கக் கூடாது என்று அவரை கவனித்துக் கொண்டிருந்த நர்சுகளுக்கு டாக்டர்கள் உத்தரவிட்டிருந்தனர்.
அதனால் தொடர்ந்து கருணாநிதி குடிப்பதற்கு தண்ணீர் கேட்டும் பணியில் இருந்த செவிலியர் தண்ணீர் கொடுக்கவில்லை.
ஒரு கட்டத்தில் அந்தசெவிலியரை அழைத்த கருணநிதி , இத்தனை தடவை தண்ணீர் கேட்டும் நீ கொடுக்கவில்லையே ! உன் பேரென்ன காவேரியா ? என கேட்டு தனது நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் கமல்ஹாசன் நேற்று நடிகர் பொன்னம்பலத்துடன் நீண்ட நேரம் உரையாடினார். பல குறும்படங்களை போட்டு அது பற்றி விளக்கம் கேட்டார். ...
மன்னிப்பு கேட்ட பொன்னம்பலம்! கழுத்தை பிடித்த கமல்.. அதிர்ச்சியான ரசிகர்கள்
பிக்பாஸ் வீட்டில் கமல்ஹாசன் நேற்று நடிகர் பொன்னம்பலத்துடன் நீண்ட நேரம் உரையாடினார். பல குறும்படங்களை போட்டு அது பற்றி விளக்கம் கேட்டார்.
ஐஸ்வர்யா சர்வாதிகாரியாக இருந்தபோது அவரை கழுத்தை பிடித்து தண்ணீரில் தள்ளியது பற்றி பேசிய பொன்னம்பலம், "அவர் அவராகவே இல்லை, வேறு வழி இல்லை என தெரியும்.. அதனால் தான் அப்படி செய்தேன். அது தவறாக இருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்" என கூறினார்.
மேலும் தான் ஸ்டண்ட்மேன் என்றும், அடிபடாமல் எப்படி சண்டை போடவேண்டும் என்பது தெரியும் என கூறி ஒரு பெண்ணை அழைத்து ஐஸ்வர்யாவுக்கு செய்தது போலவே மேடையில் செய்துகாட்டினார்.
அதன்பின் கமல் பொன்னம்பலத்தின் கழுத்தை பிடித்து அழுத்துவது போல செய்தார், ஆனால் வலிக்கவே இல்லை என பொன்னம்பலம் கூறிய பிறகு தான் புரிந்தது இருவரும் நடித்தார்கள் என்று.
இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என பல வேலைகளை செய்து கமல்ஹாசன் வெளியிட்டிருக்கும் படம் விஸ்வரூபம் 2. இப்படத்தின் முதல் பாகத்திற்கு மக்களிடம் ...
பக்கா மாஸ் வசூல் செய்யும் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2- மூன்று நாள் அதிரடி வசூல் விவரம்
இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என பல வேலைகளை செய்து கமல்ஹாசன் வெளியிட்டிருக்கும் படம் விஸ்வரூபம் 2.
இப்படத்தின் முதல் பாகத்திற்கு மக்களிடம் எப்படிபட்ட வரவேற்பு கிடைத்தது என்பது நமக்கே தெரியும். இரண்டாம் பாகத்திற்காக ஆவலாக காத்துக் கொண்டிருந்த மக்கள் இப்போது நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
விஸ்வரூபம் 2 படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கிதான் வருகிறது. இப்போது படம் மூன்று நாள் முடிவில் சென்னையில் மட்டும் ரூ. 3.02 கோடி வரை வசூலித்துள்ளதாம்.
முதல் நாள்- ரூ. 0.92
இரண்டாம் நாள்- ரூ. 1.03
மூன்றாம் நாள்- ரூ. 1.07
தன் மகளை சில விசயங்களுக்காக அடிக்கடி கடிந்து கொள்வதால் அவள் அப்பாவிடம் கேட்டாள்… ஏம்பா என்னை இப்படி கண்டிப்புடன் நடத்துகிறீர்கள்…??? என்னை ...
தன் மகளை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் ஒரு தகப்பனின் உணர்வுப் பூர்வமான எச்சரிக்கை!
தன் மகளை சில விசயங்களுக்காக அடிக்கடி கடிந்து கொள்வதால் அவள் அப்பாவிடம் கேட்டாள்… ஏம்பா என்னை இப்படி கண்டிப்புடன் நடத்துகிறீர்கள்…??? என்னை கொஞ்சம் சுதந்திரமாக விடலாமே என்று..
ஆனால் அதை அப்பா சற்று கஷ்டமாகவே உணர்ந்தார்… இதை எப்படி இவளுக்கு சொல்லிக்கொடுப்பது என யோசித்தார்..
ஒரு நாள் மகள் தன் தகப்பனிடம் வந்து கேட்டாள்.. அப்பா நான் பட்டம் விட்டு விளையாடபோகிறேன், நீங்களும் வாங்க.., என அழைத்துக்கொண்டு வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றாள்..
பட்டத்தை நூலில் கட்டி பறக்கவிட்டு மகிழ்ந்தாள்… அப்படி மகிழ்திருக்கும் வேளையில் அப்பா கேட்டார்… பட்டம் மேலே பறக்க, பறக்க அழகாய் இருக்கிறது…. ஆனால் அதன் விருப்பம்போல பறக்க முடியவில்லை.. அதற்கு தடையாய் இருப்பது என்னம்மா?? என கேட்டார்..
மகள் பட்டென பதில் சொன்னாள் இந்த நூல் தான் அப்பா அதை தன் இஷ்டத்திற்கு விடாமல் கட்டி வைத்திருக்கிறது என்று சொன்னாள்..
அப்படியா என கேட்டுவிட்டு அந்த நூலை அப்படியே அறுத்து விட்டார்… பட்டமும் தன் இஷ்டபடி பறந்தது. ஆனால் சற்று நேரத்திலேயே கிழிந்த காகிதமாய் கீழே விழுந்தது…
அப்பா சொன்னார்.. மகளே.. இந்த பட்டத்தை தன் இஷ்டபடி பறக்கவிடாமல் தடுக்கவில்லை… நேரான வழியில் இந்த பட்டம் பறந்து உயரங்களை கீழடக்க இந்த நூல் உதவியாய் இருக்கிறது…
இதேபோலத்தான் மகளே உன் அப்பாவாகிய நானும் ஒரு நூல்தான்… நீதான் அந்த பட்டம்… நீ என்னுடைய பேச்சை கேட்டு அதன்படி நடப்பாயெனில் என் பாதுகாவலுடன் உயர பறக்கலாம்… உன் இஷ்டப்படி வாழ நினைத்தால் அந்த பட்டம் கிழிந்து காகிதம் ஆனதுபோல உன் வாழ்க்கையும் சீரழிந்துவிடும்…
இப்போது புரிந்திருப்பாய் ஏன் உன்னை கண்டித்தேன் என்பதனை… நூலாகிய என்னை அறுத்துவிடாதே என்று சொல்லும்போதே மகள் தன் அப்பாவை கட்டி அணைத்துக் கொண்டாள்…!!!
ஆம் அன்பான பிள்ளைகளே… உங்களுக்கு இனிமையாய் தோன்றுகின்ற வழிகள் ஏராளம் இருக்கலாம்.. ஆனால் அவற்றின் முடிவு பயங்கரமானது…
எனவே பெற்றோருக்கு கீழ் படிந்து வாழ கற்றுக் கொள்ளுங்கள் உங்கள் இனிய வாழ்வு உங்களை வரவேற்கும்…!!!
அப்பா அம்மாவின் அன்பும், கண்டிப்பும் இருந்தால் மகள், மகனின் வாழ்வு இனிமையாக அமையும்.
அனைவருக்கும் பகிருங்கள்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தான் பங்கேற்பது குறித்து நடிகை கஸ்தூரி விளக்கமளித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 17-ஆம் தேதி முதல் பிக்பா...
பிக்பாஸ் வீட்டில் நானா? வீடியோ வெளியிட்ட கஸ்தூரி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தான் பங்கேற்பது குறித்து நடிகை கஸ்தூரி விளக்கமளித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 17-ஆம் தேதி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பொன்னம்பலம், யாஷிகா, மஹத் உள்ளிட்ட 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். கடந்த முறை போன்றே இம்முறையும் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 50 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் இதுவரை நித்யா, ரம்யா, ஷாரிக், மமதி, அனந்த் வைத்தியநாதன் ஆகிய 5 பேர் வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியானது . இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருக்கும் நடிகை கஸ்தூரி, தான் அமெரிக்காவில் இருப்பதாகவும் , புற்றுநோய் குறித்த ஆய்வில் ஈடுபட்டு இருப்பதாகவும், சுவாரஸ்யத்திற்காக இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
பிரபல சின்னத்திரை நட்சத்திர தொகுப்பாளினி டிடி என்று செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. காபி வித் டிடி மூலம் புகழ்பெற்றவர். பிரமாண்ட நட்...
உடைந்து போன திருமண வாழ்வின் பின்னர் டிடிக்கு சிக்கிய ரகசிய காதலன்! மனம் திறந்த நடிகர்? அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிரபல சின்னத்திரை நட்சத்திர தொகுப்பாளினி டிடி என்று செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. காபி வித் டிடி மூலம் புகழ்பெற்றவர்.
பிரமாண்ட நட்சத்திர கலை விழாக்கள், விருது வழங்கும் விழாக்களை தொகுத்து வழங்கியவர். முன்னணி திரை நட்சத்திரங்களுக்கு தோழியாக இருப்பவர்.
சமீபகாலமாக திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இந்நிலையில் இவரது ரகசிய காதலன் என்று ஒரு தகவல் இணையத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அந்த ரகசிய காதலன் யார் என்றால் பகல்நிலவு தொடரில் நடித்து வருகிற மிதுன்ராஜ் தானாம்.
ஆனால் அதை மறுத்துள்ள மிதுன், ‘நான் அவரை அக்கா என்று தான் கூப்பிடுவேன், அவருடன் நான் எடுத்து கொண்ட ஒரு செல்ஃபியை ஃபேஸ்புக்கில் போட்டேன். அதை எடுத்து ஒரு யூடியுப் சேனல் இவ்வாறு பரவ விட்டுள்ளது’ என தனது பேட்டியில் விளக்கியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 7 ஆம் தேதி மரணம் அடைந்தார். அவர் ஏற்கனவே, வயது காரணமாகவும், உடல்நலக் குறைவு காரணமாக கடந...
கருணாநிதி இறுதி சடங்கில் சிரித்துக்கொண்டிருந்து இந்த குட்டி பையன் யார்?
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 7 ஆம் தேதி மரணம் அடைந்தார். அவர் ஏற்கனவே, வயது காரணமாகவும், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் வீடிலேயே இருந்தார்.
அவ்வப்போது வீட்டிற்கு வெளியே வந்து தனது தொண்டர்களை பார்த்து கையசைப்பார். அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் சில நேரங்களில் வெளியாகும். ஓய்வில்லாமல் உழைத்த ஒருவர் ஒன்றரை ஆண்டுகள் வீட்டில் இருந்தபோது அவருக்கு பொழுதுபோக்காக இருந்த ஒருவன் இந்த மகிழன்.
மகிழன் கருணாநிதியின் கொள்ளுப்பேரன். அதாவது நடிகர் அருள்நிதியின் மகன். உடல் நலக்குறைவுக்கு சிகிச்சை எடுத்து வந்தபோதும் மகிழனுடன் எப்படியும் ஒரு மணி நேரமாவது செலவிடுவாராம் கருணாநிதி.
சமீபத்தில், கருணாநிதியின் சமாதிக்கு அவரது குடும்பத்தார் சென்று அஞ்சலி செலுத்தினர். அப்பொழுது மகிழனை கூட்டி வந்தார். அவனை கீழே இறக்கிவிட்டதும் மகிழன் கருணாநிதியின் புகைப்படத்தை பார்த்து சிரித்தபடி அவரை அழைத்துள்ளான்.
கருணாநிதி இறந்தது தெரியாமல் எப்போதும் போல அவரை பார்த்ததும் அவன் மகிழ்ச்சிகொண்டு, அவரை அழைத்தது அங்கிருந்தவர்களை கண் கலங்க வைத்துவிட்டதாம். வீட்டில் இருக்கும் போது கருணாநிதி நிறைய சிரித்ததர்கு மகிழந்தான் காரணம் என கோபாலபுர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொழிலதிபர் விஜய் மல்லையாவின் லண்டன் மேன்சனில் தங்க கழிப்பறை இருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான விஜய் மல்லையா இந...
லண்டனில் உள்ள விஜய் மல்லையா வீட்டில் இருக்கும் தங்க கழிப்பறை: என்ன விலை தெரியுமா?
தொழிலதிபர் விஜய் மல்லையாவின் லண்டன் மேன்சனில் தங்க கழிப்பறை இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான விஜய் மல்லையா இந்திய வங்கிகள் பலவற்றில் ரூ.9000 கோடிகள் அளவுக்கு கடன் வாங்கிவிட்டு பிரித்தானியாவுக்கு தப்பிசென்றார்.
இந்தியாவில் உள்ள மல்லையாவின் சொத்துக்களை அமலாக்க துறையினர் கைப்பற்றி வருகிறார்கள்.
இதோடு நீதிமன்றத்திலும் அவர் மீதான வழக்குகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் லண்டனில் உள்ள மல்லையாவின் மேன்சனில் தங்கத்தால் ஆன கழிப்பறை இருப்பது தெரியவந்துள்ளது.
பிரபல எழுத்தாளரான ஜேம்ஸ் கிராப்ட்ரீ மல்லையா மேன்சனுக்கு சென்ற நிலையில் இதை பார்த்துள்ளார், இந்த தகவலை அவரே வெளியிட்டுள்ளார்.
இந்த கழிப்பறையின் சரியான விலை குறித்த விபரம் வெளியாகவில்லை என்றாலும் இதன் விலை கோடிகளில் இருக்கும் என தெரியவந்துள்ளது
கருணாநிதி அவர்களுக்கு செல்லப் பிராணிகள் என்றால் அலாதி பிரியம், தினமும் தான் வளர்க்கும் நாய்களுடன் நேரம் செலவழிப்பார். அவர் அசைவ பிரியரும்...
நாய் இறந்ததால் சைவத்துக்கு மாறிய கருணாநிதி: நெகிழ்ச்சி சம்பவம்
கருணாநிதி அவர்களுக்கு செல்லப் பிராணிகள் என்றால் அலாதி பிரியம், தினமும் தான் வளர்க்கும் நாய்களுடன் நேரம் செலவழிப்பார்.
அவர் அசைவ பிரியரும் கூட, தினமும் அவரது உணவில் அசைவம் இருக்கும், தனது உணவையே நாய்களுக்கும் கொடுத்து உண்ணும் வழக்கம் உடையவர்.
ஆனால் திடீரென தான் பாசமாக வளர்த்த கருப்பு நாய் இறந்து விடவே, சைவத்துக்கு மாறினாராம்.
இதுகுறித்து கனிமொழி கூறுகையில், கருப்பு நாய் இறந்ததால் கலைஞர் சோகம் அடைந்தார், அதன் உடலை ஆலிவர் சாலையில் இருந்த வீட்டின் பின்புறம் புதைத்தோம்.
இதனால் கலைஞர் இரண்டு ஆண்டுகளாக அசைவம் சாப்பிடுவதையே நிறுத்தி விட்டார், ஆனால் மருத்துவ காரணங்களுக்காக அசைவம் சாப்பிட மருத்துவர்கள் அறிவுரை வழங்கினார்கள் என தெரிவித்துள்ளார்.
எதிரியைத் தேடிப் போய் திருப்பி அடிக்கும் இந்திய உளவுத்துறை அதிகாரியின் கதையே ’விஸ்வரூபம் 2’. அமெரிக்காவிலிருந்து தப்பித்துச் செல்லும் தீவ...
முதல் பார்வை: விஸ்வரூபம் 2
எதிரியைத் தேடிப் போய் திருப்பி அடிக்கும் இந்திய உளவுத்துறை அதிகாரியின் கதையே ’விஸ்வரூபம் 2’.
அமெரிக்காவிலிருந்து தப்பித்துச் செல்லும் தீவிரவாதிகள் குழுத் தலைவன் ராகுல் போஸைத் தேடும் பயணத்தை மேற்கொள்கிறார் கமல். உடன் சேகர் கபூர், ஆண்ட்ரியா, பூஜாகுமார் ஆகியோர் பயணிக்கின்றனர். லண்டனில் கமல் அண்ட் கோவைப் பழிதீர்க்க ராகுல் போஸ் சதித் தீட்டம் தீட்ட, அதை வெற்றிகரமாக முறியடிக்கிறார் கமல். 1500 டன் எடை கொண்ட வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்யும் சவாலை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயமும் அவருக்கு ஏற்படுகிறது. டபுள் கேம் ஆடும் உயர் அதிகாரி ஒருவரால் தன் உயிருக்கே ஆபத்து நேர்கிறது. ராகுல் போஸாலும் பேராபத்து தொடர்கிறது. இவற்றை கமல் எப்படி சந்திக்கிறார், அதனால் ஏற்படும் இழப்புகள் என்ன என்பதற்கு ’விஸ்வரூபம் 2’ விடை சொல்கிறது.
இயக்குநராகவும், நடிகராகவும் கமல் தன்னை மிகச் சரியாக நிறுவியிருக்கும் படம் என்று சொல்லலாம். நளினம் மிகுந்த கதக் நடன ஆசிரியராக இருக்கும் விஸ்வநாத்தின் நதிமூலம், ரிஷிமூலம் இதில் சரியாக வெளிப்படுகிறது. ராணுவ அதிகாரியாக இருந்து தீவிரவாதியாகக் கட்டமைக்கப்பட்டு சாவின் விளிம்பு வரை சென்று மீண்டு வந்து இந்திய உளவுத்துறை அதிகாரியாகும் பரிமாணம் அடையும் காட்சிகள் திரைக்கதை நகர்த்தலுக்கு வினையூக்கியாக வேகமுகம் காட்டுகிறது.
கமல் அசரடிக்கிறார். வார்த்தைக்கு வார்த்தை பதிலடி கொடுத்து நகைச்சுவைத் தரன்மையிலும் தெறிக்க விடுகிறார். நாட்டின் மீதான பற்று, சக பணியாளர் மீதான அன்பு, மனைவி மீதான அக்கறை, தொழில் மீதான பக்தி என்று எல்லா முகங்களிலும் மிகச் சரியாகப் பொருந்துகிறார். எதிரிக்கும் நல்லது செய்கிற அந்தப் பண்பிலும் கமலின் கதாபாத்திரம் உயர்ந்து நிற்கிறது.
கமல் மீதான காதலில் கிறங்குவதிலும், கணவனுக்காக ரிஸ்க் எடுத்து 1500 எடை கொண்ட வெடிகுண்டின் தன்மையைப் பரிசோதிப்பதிலும் பூஜாகுமார் கவனிக்க வைக்கிறார். பூஜாகுமார் மீதான பொறாமையை லேசுபாசாக வெளிப்படுத்துவது, கமல் மீதான அன்பை திடமாக உணர்த்துவது, ஆக்ஷன் காட்சிகளில் அசத்துவது என ஆண்ட்ரியா ஆச்சர்யப்படுத்துகிறார்.
கமலின் மிகச் சிறந்த வழிகாட்டியாக தன்னை வடிவமைத்துக்கொண்ட சேகர் கபூர் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குண்டுகள் பாய்ந்த நிலையில் கமலுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் அக்காட்சி செம்ம.
நின்று நிதானித்து ஸ்கோர் செய்கிறார் ராகுல் போஸ். எதற்கும் அலட்டிக்கொள்ளாமல் கச்சிதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். சூழ்ச்சியில் சிக்கவைத்து நாடகமாடும் ஆனந்த மகாதேவனும், கமலின் அம்மாவாக அழுத்தமான நடிப்பைத் தந்த வகீதா ரஹ்மானும் கவன ஈர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
ஷாம்தத் சைனுதீன் லண்டன், ஆப்கானிஸ்தான், டெல்லியின் பரப்பைக் கண்களுக்குள் கடத்துகிறார். லால்குடி என்.இளையராஜாவின் ஆப்கானிஸ்தான் தீவிரவாதக் கும்பல் குறித்த செட், தண்ணீருக்குள் நிகழும் சண்டைக்காட்சி ஆகியவை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜிப்ரானின் இசையில் நானாகிய நதிமூலமே ரசிக்க வைக்கிறது. நான் யாரென்று தெரிகிறதா பாடலை உல்டாவாக்கிய ஞாபகம் வருகிறதா பாடல் மெதுவான பீட்டாக இருப்பதால் வெறுமனே கடந்துபோகிறது. பின்னணி இசையில் ஜிப்ரானின் உழைப்பு பளிச்சிடுகிறது. இந்தக் காட்சி தேவையே இல்லை என்று சொல்லாத அளவுக்கு நறுக்கென்று காட்சிகளைக் கோத்த விதத்தில் மகேஷ் நாராயணனும், விஜய் சங்கரும் வியக்க வைக்கிறார்கள்.
முதல் பாகத்தை நினைவூட்டுவதற்காக இரண்டாம் பாகத்தில் கூறியது கூறல் இருக்கும். ஆனால், இப்படத்தில் அப்படி எந்த அம்சமும் இல்லை. திரைக்கதை எந்தக் குழப்பமும் இல்லாமல் நேர்த்தியாகச் செல்கிறது. ஆனால், படத்தில் சவால்கள் குறைவாக உள்ளதால் அதை எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தமும் நாயகனுக்கு குறைவாகவே உள்ளது. இதனால் இரண்டாம் பாதி பெரிதாக ஈர்க்கவில்லை. அதை முட்டுக்கொடுப்பதற்காக கமல் அம்மா போர்ஷன் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், அது போதுமானதாக இல்லை. நாயகன் எந்த சாகசத்தையும் செய்யாமல், புத்திசாலித்தனத்தையும் வெளிப்படுத்தாமல் எதிரிகளை சாதாரணமாகவே அணுகுவது எடுபடவில்லை. 64 வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்வது காட்சியாக இல்லாமல் வசனமாக நகர்வதால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. அதுவும் அந்த கிளைமாக்ஸ் பலவீனம்.
இவற்றைத் தவிர்த்துப் பார்த்தால், தீவிரவாதம், வன்முறை ஆகியவற்றை எதிர்த்துக் களமாடுவதோடு நில்லாமல், அஹிம்சை, அன்பை மட்டும் முன்னிறுத்தும் கமலின் நோக்கம் ராகுல் போஸ் வாரிசுகள் வழியாக இப்படத்தில் சரியாக நிறைவேறி இருக்கிறது.
மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள மெரினா கடற்கரையில் இன்று காலை கவிஞர் வைரமுத்து அஞ்சலி செலுத்தினார். வயது மூப்ப...
மறைந்த கலைஞர் எழுதிவைத்துச் சென்ற 3 உயில்கள்: வைரமுத்து மேல் கொந்தளிப்பில் ஸ்டாலின் குடும்பம்!
மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள மெரினா கடற்கரையில் இன்று காலை கவிஞர் வைரமுத்து அஞ்சலி செலுத்தினார்.
வயது மூப்பின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த 7-ம் தேதியன்று மாலை அவர் அனுமதிக்கப்பட்டிருந்த காவேரி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இவரின் மரணம் அவரின் குடும்பத்தார் மற்றும் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், தொண்டர்கள் என பல்வேறு தரப்பினரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
அப்போது அங்கு வந்திருந்த கவிஞர் வைரமுத்து கருணாநிதியின் உடலுக்கு அருகில் நின்று கதறி அழுதபடி அஞ்சலி செலுத்தினார். அவரின் தாங்கமுடியாத துக்கத்தை அழுகையின் மூலம் வெளிப்படுத்தினார். இந்தக் காட்சியைப் பார்த்த அனைவரும் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இதற்கு முன்னதாக கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு கோபாலபுரம் வீட்டில் இருந்தபோதும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதும் வைரமுத்து அடிக்கடி வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு அருகில் கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு இன்று காலையிலேயே தன் மகன்களுடன் வந்த வைரமுத்து, கருணாநிதியின் சமாதியில் மலர் தூவி பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சூரியன் இல்லாமல் ஒரு விடியல் வருமா. அதேபோன்று கருணாநிதி இல்லாத தமிழகத்தை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. என் தந்தைக்குச் செய்யவேண்டிய இறுதி மரியாதையை செய்யவே நான் இங்கு வந்தேன். தமிழக மக்கள் நன்றியுள்ளவர்கள் என நான் நம்புகிறேன்.
கருணாநிதியின் லட்சியங்கள், கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வது நம் கடமை. அவர் இலக்கியங்கள், சொற்பொழிவு, செயல் ஆகியவற்றில் என்றும் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார். அவரின் போர் குணத்தை இந்த கால இளைஞர் கற்றுக்கொள்ள வேண்டும்.
கருணாநிதியை எதிரி என நினைத்தவர்கள் கூட அவரின் போர்குணத்தைக் கண்டு வியந்துள்ளனர். கருணாநிதி நம் சமூகத்துக்கு எழுதி வைத்துச் சென்றுள்ள மிகப்பெரிய உயில் சுயமரியாதை, தமிழ், இன அடையாளம் ஆகியவை. இவற்றைக் கட்டிக்காப்பாற்ற வேண்டியது தமிழர்களின் பெரும் கடமை எனக் கூறினார்.
மேலும், இன்று அதிகாலை முதல் கருணாநிதி அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்துக்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.
இது ஒரு புறமிருக்க, வைரமுத்து கலைஞர் சமாதிக்கு பாலூற்றி வழிபட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது, பொதுவாக ஒருவர் இறந்து விட்டால் மூன்றாம் நாள் காலையில் இறந்தவரின் குடும்பத்தினர் மட்டுமே சமாதியில் பாலூற்றி வழிபடுவார்கள்.
ஆனால் ஸ்டாலின், அழகிரி என கருணாநிதியின் மகன்களை கலந்தாலோசிக்காமல் வைரமுத்து பாலூற்றி வணங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்காக கவிஞர் வைரமுத்து மேல் கருணாநிதி குடும்பத்தினர் அதிருப்தியிலும், கோபத்திலும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக தலைவராக இருந்த மு.கருணாநிதி காலமானதை அடுத்து அக்கட்சியின் செயல் தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் விரைவில் திமுக தலைவராக பதவியேற்க உள்ள...
அடுத்த தலைவர் யார்? முதல்வர் பதவிக்கு போட்டி... ஸ்டாலினின் திட்டம் இதுதானாம்!
திமுக தலைவராக இருந்த மு.கருணாநிதி காலமானதை அடுத்து அக்கட்சியின் செயல் தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் விரைவில் திமுக தலைவராக பதவியேற்க உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில் கனிமொழி மற்றும் அழகிரியை சமாளிக்க இருவருக்கும் திமுகவில் முக்கிய பதவிகள் வழங்கவும் ஸ்டாலின் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திமுகவில் இருந்து விலக்கப்பட்ட அழகிரி, மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார் என்றும், அவருக்கு கட்சியில் முக்கிய பதவி கொடுப்பதோடு வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
ஒருவேளை ஸ்டாலின் கொடுக்கும் பதவியை அழகிரி விரும்பாவிட்டால் அவருக்கு பதிலாக அவருடைய மகன் தயாநிதி அழகிரிக்கு கட்சியில் முக்கியத்துவம் தரும் வகையில் ஒரு பதவியும், முரசொலி அறக்கட்டளையில் ஒரு பதவியும் வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
அதேபோல் கனிமொழிக்கும் கட்சியில் மேலும் முக்கியத்துவம் கிடைக்கும் என்றும், அவர் வழக்கம்போல் ராஜ்யசபா எம்பி பதவியில் தொடர்ந்து இருப்பார் என்றும் கூறப்படுகிறது. அழகிரி, கனிமொழி ஆகிய இருவரையும் டெல்லி பக்கம் அனுப்பிவிட்டால்தான், முதலமைச்சர் பதவிக்கு போட்டி இருக்காது என்பதே ஸ்டாலின் எண்ணமாக இருப்பதாக திமுகவினர் கூறி வருகின்றனர்.
திமுக தலைவராக இருந்த மு.கருணாநிதி காலமானதை அடுத்து அக்கட்சியின் செயல் தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் விரைவில் திமுக தலைவராக பதவியேற்க உள்ள...
அடுத்த தலைவர் யார்? முதல்வர் பதவிக்கு போட்டி... ஸ்டாலினின் திட்டம் இதுதானாம்!
திமுக தலைவராக இருந்த மு.கருணாநிதி காலமானதை அடுத்து அக்கட்சியின் செயல் தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் விரைவில் திமுக தலைவராக பதவியேற்க உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில் கனிமொழி மற்றும் அழகிரியை சமாளிக்க இருவருக்கும் திமுகவில் முக்கிய பதவிகள் வழங்கவும் ஸ்டாலின் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திமுகவில் இருந்து விலக்கப்பட்ட அழகிரி, மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார் என்றும், அவருக்கு கட்சியில் முக்கிய பதவி கொடுப்பதோடு வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
ஒருவேளை ஸ்டாலின் கொடுக்கும் பதவியை அழகிரி விரும்பாவிட்டால் அவருக்கு பதிலாக அவருடைய மகன் தயாநிதி அழகிரிக்கு கட்சியில் முக்கியத்துவம் தரும் வகையில் ஒரு பதவியும், முரசொலி அறக்கட்டளையில் ஒரு பதவியும் வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
அதேபோல் கனிமொழிக்கும் கட்சியில் மேலும் முக்கியத்துவம் கிடைக்கும் என்றும், அவர் வழக்கம்போல் ராஜ்யசபா எம்பி பதவியில் தொடர்ந்து இருப்பார் என்றும் கூறப்படுகிறது. அழகிரி, கனிமொழி ஆகிய இருவரையும் டெல்லி பக்கம் அனுப்பிவிட்டால்தான், முதலமைச்சர் பதவிக்கு போட்டி இருக்காது என்பதே ஸ்டாலின் எண்ணமாக இருப்பதாக திமுகவினர் கூறி வருகின்றனர்.
இந்திய மாநிலம் ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக திருமணம் நடைபெறாததை கண்டு, அந்த கிராமத்தின் பெயரை அங்குள்ள மக்கள் ம...
திருமணம் நடப்பதில் சிக்கல்: கிராமத்தின் பெயரை மாற்றிய மக்கள்
இந்திய மாநிலம் ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக திருமணம் நடைபெறாததை கண்டு, அந்த கிராமத்தின் பெயரை அங்குள்ள மக்கள் மாற்றியுள்ள சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மெர் மாவட்டத்தின் மியான் கா பாரா கிராமத்தின் பெயர், மகேஷ் நகர் என மாற்றப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களின் வீடு எனப் பொருள்படும் மியான் கா பாரா கிராமத்தில் உள்ள 2000 குடும்பத்தில், வெகு சிலரே இஸ்லாமியர்கள்.
ஆனால், இந்தப் பெயரைப் பார்த்ததுமே இங்குள்ளவர்களைத் திருமணம் செய்ய யாருமே முன்வருவதில்லை.
இதனால் கடும் அதிருப்தியடைந்த இப்பகுதி மக்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கை முன்வைத்தனர். இதனையடுத்து தற்போது இந்த கிராமத்திற்கு மகேஷ் நகர் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
ஆனால், ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் வரவிருப்பதால் மக்களை பிளவுப்படுத்தும் நோக்கில் அங்கு ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி செயல்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அந்த மாநிலத்தில் இஸ்லாமியப் பெயர்களைப்போல உள்ள கிராமங்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுவருகின்றன. அந்த வகையில், ஜூஞ்ஹூனா மாவட்டத்தின் இஸ்மாயில்பூர் கிராமம் தற்போது, பிச்சான்வா குர்த் என மாற்றப்பட்டது.
அத்துடன், ஜலோர் மாவட்டத்தின் நார்பாரா என்ற கிராமத்தின் பெயர், நார்புரா என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டும் நாடு முழுவதும் உள்ள 27 கிராமங்களின் பெயர்களை மாற்ற மத்திய உள்விவகார அமைச்சகம் பரிசீலித்துவருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விஸ்வரூபம் 2 படத்தின் முத்தக்காட்சிகளை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக நாயகனும் நாயகியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும்காட்சிகள் மட்டும் பட...
விஸ்வரூபம்-2 திரைப்படத்தின் வெட்டப்பட்ட காட்சிகள் ஓரு பார்வை !
விஸ்வரூபம் 2 படத்தின் முத்தக்காட்சிகளை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக நாயகனும் நாயகியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும்காட்சிகள் மட்டும் படத்தில் இடம் பிடித்துள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் விஸ்வ ரூபம் திரைப்படத்தின் முதல் பாகம்வெளியானது. அப்போது விஷ்வரூபம் முதல் பாகத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் போல் சித்தரித்து உள்ளதாகவும், அது இஸ்லாமியர்களை இழிவுபடுத்துவதால் படத்தை வெளியிடக் கூடாது என்று பல எதிர்ப்புகள் எழுந்தன.
இந்த நிலையில் விஸ்வரூபம் திரைப்படத்தின் 2-ம் பாகம்இன்று வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தின் இந்தி வெர்ஷனில் 14 இடங்களில்வரும் காட்சிகளை சென்சார் போர்டு வெட்டியுள்ளது. படுக்கை அறையில்கமல் பூஜாகுமாருக்கு கொடுக்கும் உதட்டு முத்த காட்சியை சென்சார்போர்டுவெட்டியுள்ளது. அதற்கு பதிலாகஇருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொளும் காட்சிகள்இடம் பெற்றுள்ளது,
மேலும் தமிழ் வெர்ஷனில் மொத்தம் 22 இடங்களில் வரும் காட்சிகளை வெட்டியுள்ளது சென்சார் போர்டு .
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. தனது தந்தை மிகப்பெரிய நடிகராக இருந்தாலும் அவரிடம் எந்தவொரு உதவியையும் நாடாமல் தனது சொந்...
நடிகர் சூர்யா எம்.எல்.ஏ ஆகிறாராம்! அரசியல் எண்டிரி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. தனது தந்தை மிகப்பெரிய நடிகராக இருந்தாலும் அவரிடம் எந்தவொரு உதவியையும் நாடாமல் தனது சொந்த முயற்சியாலயே இந்த இடத்தை அடைந்துள்ளார்.
இவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். பிரபல போராளி சேக்குவாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் உருவாகுவதாக செய்திகள் வரும் நிலையில் இப்படத்தில் என்.ஜி.குமரன் என்கிற எம்.எல்.ஏ.வாக சூர்யா நடித்துள்ளாராம்.
மேலும் காக்கும் முன்னேற்ற கழகம் என்கிற கட்சியின் இளைஞர் அணி தலைவராகவும் நடித்துள்ளாராம். அயுத எழுத்து படத்திற்கு பிறகு சூர்யா நடிக்கும் இந்த NGK அரசியல் படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கருப்பட்டி என்னும் பனைவெல்லத்தின் மருத்துவ பயன்கள் *சீனி நமக்கு எவ்வளவு பகையோ அதற்கு நேர் மாறாக கருப்பட்டி நம் நெருங்கிய நண்பன். பனங்கருப...
கருப்பட்டி என்னும் பனைவெல்லத்தின் மருத்துவ பயன்கள்
கருப்பட்டி என்னும் பனைவெல்லத்தின் மருத்துவ பயன்கள்
*சீனி நமக்கு எவ்வளவு பகையோ அதற்கு நேர் மாறாக கருப்பட்டி நம் நெருங்கிய நண்பன். பனங்கருப்பட்டி யின் மருத்துவ பயன்கள் அளவில்லாதது*
*இப்படி சர்க்கரை மற்றும் பல நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபட நமக்கு கிடைத்த அருமருந்து தான் கருப்பட்டி*
*சர்க்கரைக்கு மாற்றாக சரியாக கருப்பட்டியை பயன்படுத்தினாலே இன்று உள்ள பெரும்பாலான நோய்கள் இல்லாமலும் அதற்கான மருத்துவ செலவுகள் மற்றும் மருந்துகள் அவசியமில்லாமலே போகும்*
*“உணவே மருந்து” என்னும் நியதிப்படி, கால சூழலுக்கு ஏற்றார்போல உடலுக்கு தேவையானதை தேவைப் படும் நேரத்தில் வழங்குகிறது*
*பனங்கருப்பட்டியின் மருத்துவ பயன்கள்:-*
*1.பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது*
*2.விட்டமின்-பி, மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது*
*3.பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத் தால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். நார்ச்சத்தும் இதில் அதிகம்*
*4.குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித் தொல்லை நீங்கும்*
*5.கருப்பட்டி மற்றும் பனங்கல்கண்டில் எண்ணற்ற விட்டமின்களும், மினரல் சத்துக்களும் உள்ளன*
*6.கருப் பட்டி இயற்கையாகவே உடலை குளிர்ச்சியடையச் செய்யும். அதில் உள்ள ‘கிளைசீமி இன்டெக்ஸ்’ உடலில் கலக்கும் சர்க்கரை அளவை, வெள்ளை சர்க்கரையை விட பாதிக்கும் கீழாக குறைக்கிறது*
*7.சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதி கமாக இருக்கிறது. மேலும் இதை சர்க்கரை நோயாளிகளும் குடிக்கலாம்*
*8.கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது. கருப்பட்டியை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்புகின்றனர்*
*9.கருப்பட்டிஇரத்தத்தை சுத்திகரித்துஉடலுக்கு சுறுசுறுப்பை கொடுக்கும்*
*10. மேனிபளபளப்பை பெறும்*
*11.கருப்பட்டியில் சுண்ணாம்பு கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தமடையும்*
*12.சீரகத்தை வறுத்து கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்*
*13.ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் வாயு தொல்லை நீங்கும்*
*14.கரும்புசக்கரைக்கு பதிலாக கருப்பட்டியை பயன்படுத்தினால் பற்களும்எலும்புகளும் உறுதியாகும்*
*15.நீரிழிவு நோயாளிகள் (சக்கரை நோயாளிகள்) கைகுத்தல்அரிசிசாதத்துடன் கருப்பட்டி கலந்து சாப்பிட்டுவந்தால் சக்கரையின் அளவு கட்டுபாட்டில் இருப்பதுடன் அடிக்கடி சிறுநீர் போவது குறையும்*
*16.குழந்தைகள் முதல்பெரியவர்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம்உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்கிறது*
*17.சுக்குகருப்பட்டி பெண்களின் கர்ப்பப பைக்கு மிகவும் ஏற்றது*
.
*18.சுக்கு,மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாகசுரக்கும்*
*19.அந்ததாய் பாலை குடிக்கும் குழந்தைக்கு நல்ல ஊட்டசத்துக்கள் கிடைக்கபெறும்*.
*20.உடல்இயக்கத்தையும் சீரான சக்தியையும் சமநிலையில் செய்கிறது*
கருணாநிதி தனது கண்ணின் கருவிழி என்று அழைத்தது ஒருவரைத்தான். அவர் வேற யாருமில்லை கருணாநிதியின் மருமகான முரசொலி மாறன். கருணாநிதியின் மறு வட...
கருணாநிதியை உலுக்கிய மரணம்: அவரின் மனசாட்சி யார் தெரியுமா?
கருணாநிதி தனது கண்ணின் கருவிழி என்று அழைத்தது ஒருவரைத்தான். அவர் வேற யாருமில்லை கருணாநிதியின் மருமகான முரசொலி மாறன்.
கருணாநிதியின் மறு வடிவம் என்று திமுக தொண்டர்களால் அழைக்கப்பட்டவர் முரசொலி மாறன்.
அரசியலில் தொடங்கி கட்சி, கூட்டணி என அனைத்திலும் கருணாநிதி அடுத்து என்ன முடிவு எடுப்பார் என்பது முரசொலி மாறனுக்கு தெரியும். அந்த அளவுக்கு கருணாநிதியின் எண்ணமாகவும், நிழலாகவும் திகழ்ந்தார் முரசொலி மாறன்.
திமுக நிர்வாகிகள் பலரும் முரசொலி மாறனை செல்லமாக கருணாநிதியின் மனசாட்சி என்று தான் அழைப்பார்கள்.
திமுகவின் அரசியல் தேசிய அளவிலும், சர்வதேச அரங்கிலும் உயர்ந்திட மிக முக்கிய காரணமாக இருந்துள்ளார் முரசொலி மாறன்.
ஒருமுறை தோஹா மாநாட்டில் முரசொலி மாறன் நீண்ட உரை ஒன்றை நிகழ்த்தினார். அவரின் உரையை கேட்டு மெய் மறந்த கருணாநிதி, முரசொலி மாறனை கட்டி அணைத்து பாராட்டினார். அதன் பின்பு தான் கருணாநிதி வாழ்க்கையில் தவிர்க்க முடியாத நிழலாக முரசொலி மாறன் உருவெடுத்தார்.
கடந்த 2003 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக முரசொலி மாறன் காலமானர். மாறனின் மரணத்தின் போது கருணாநிதி அவருடன் இருந்தார்.
மாறனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்ற செய்தி தெரிந்ததும் கலைஞர் அடுத்தக்கணமே மருத்துவமனைக்கு விரைந்தார்.
மாறன் மரணமடைந்ததும், கருணாநிதி மருத்துவமனையிலியே கண்ணீர் விட்டு அழுதார். முதலில் முரசொலி மாறனின் உடல் அவரின் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அதன் பின்பு இரவு 9 மணிக்கு மேல் தான் கருணாநிதியின் இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டது. அதுவரை மாறனின் உடலுக்கு அருகில் கருணாநிதி அமர்ந்திருந்தார்.
முரசொலி மாறனின் பிரிவுக்கு பிறகு கருணாநிதி மனதளவிலும், உடல் அளவிலும் பலவீனம் ஆனார். கருணாநிதியின் உடல்நிலை சற்று மோசமானது.
முரசொலி மாறனின் பிரிவு தான் கருணாநிதியை இந்த நிலையில் தள்ளிவிட்டது என்று திமுக தொண்டர்கள் பலர் வருத்தப்பட்டனர். மாறனின் மறைவு கருணாநிதியின் நெஞ்சில் இடி போல் விழுந்தது.
அதன் பின்பு கருணாநிதி அளித்த பல பேட்டியில் அவரால் மறக்க முடியாத மரணம் என்று முரசொலி மாறனின் மரணத்தை தான் குறிப்பிடுவார்
ஆப்பிளிள் சத்துக்கள் நிறைந்து காணப்பட்டாலும் அதன் விதைகளில் விஷத்தன்மை வாய்ந்த ஒரு சயனைடு உள்ளது. ஒரு கிராம் ஆப்பிள் விதையில் 0.06-0.24 கிர...
ஆப்பிள் விதையில் விஷம்! சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
ஆப்பிளிள் சத்துக்கள் நிறைந்து காணப்பட்டாலும் அதன் விதைகளில் விஷத்தன்மை வாய்ந்த ஒரு சயனைடு உள்ளது. ஒரு கிராம் ஆப்பிள் விதையில் 0.06-0.24 கிராம் அளவிற்கு சயனைடு எனும் நச்சுக்கள் உள்ளது.
அத்தகைய ஆப்பிள் பழத்தின் விதைகளையும் நாம் சேர்த்து சாப்பிட்டால் பலவிதமான பக்கவிளைவுகள் ஏற்படுத்தும்.
ஆப்பிள் விதையை சாப்பிட்டால் என்ன நடக்கும்?
ஆப்பிள் விதைகளில் இருக்கும் அமிக்டாலின் என்ற சயனைடு மிகவும் நச்சு தன்மை கொண்டது. அத்தகைய ஆப்பிள் விதைகளை நாம் உண்ணும் போது அவை முதலில் செரிமான மண்டலத்தை சென்றடைந்து அந்த சயனைடு நச்சாக மாறி, உடலின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
ஆப்பிள் விதைகளை நாம் சாப்பிடும் போது அவை முதலில் நம் உடலில் உள்ள சுவாச உறுப்புகளுக்கு செல்லும் ஆக்ஸிஜனை தடுத்து, இதயம், மூளை மற்றும் ரத்த அழுத்தத்தை அதிகரித்து, உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடியதாக அமைகிறது.
தெரியாமல் ஆப்பிள் விதைகளை உண்டால் அவை அவர்களின் நோய் எதிர்ப்பு திறனை பொறுத்தே பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் அவர்களுக்கு சில நேரங்களில் வாந்தி, மயக்கம், தலை சுத்தல், வயிற்றில் வலி போன்றவை ஏற்படும்.
ஆப்பிள் விதையில் 0.3-0.35 மிகி வரையிலான சயனைடு ஆபத்தை விளைவிக்கும். மேலும் ஆப்பிள் விதையில் உள்ள சயனைடின் அளவு ஒவ்வொருவரின் உடல் எடைக்கு ஏற்றது போல வேறுபடும்.
ஆப்பிள் விதைகளை ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொண்டால் கோமா நிலை ஏற்பட்டு இறப்புகள் கூட நடைபெற வாய்ப்பு உள்ளது.
எச்சரிக்கை!
ஆப்பிள் சாப்பிடும் முன்னர் அதன் விதைகளை முற்றிலும் அகற்றிவிட்டு சாப்பிடுவது நல்லது.
அதன் விதைகளை அப்படியே சாப்பிட்டுவிட்டால் அதை வெளியில் உடனடியாக உமிழ்ந்துவிடுவது நல்லது.
மேலும் செரிமான மண்டலத்தை சென்றடைந்தால் தான் சயனைடாக மாறும் என்பதால், அதனை உமிழ்ந்துவிடுவதால் எதுவும் ஆகாது.
கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள ’விஸ்வரூபம் 2’ படத்திற்கு பிரபல சினிமா பத்திரிக்கையாளர் உமைர் சந்து அளித்துள்ள ரேட்டிங் விபரங்கள் சமூகவலைதளங்கள...
Vishwaroopam 2: ரேட்டிங் இதுதான்- விமர்சகர் உமைர் சந்து சினிமா விமர்சனம்
கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள ’விஸ்வரூபம் 2’ படத்திற்கு பிரபல சினிமா பத்திரிக்கையாளர் உமைர் சந்து அளித்துள்ள ரேட்டிங் விபரங்கள் சமூகவலைதளங்களில் டிரென்டிங்கில் உள்ளன.
2013ம் ஆண்டில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியான திரைப்படம் ’விஸ்வரூபம்’. கமல்ஹாசன் இயக்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படம், இந்திய உளவாளியின் அதிரடி சாகசங்களை பற்றிய படமாக தயாராகியிருந்தது.
தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் ‘விஸ்வரூபம்- 2’ என்ற பெயரில் தயாராகியுள்ளது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இந்த படத்தை கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ளார்.
முதல் பாகத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா, பூஜா குமார், சேகர் கபூர், ராகுல் போஸ் போன்றோர் விஸ்வரூபம்- 2விலும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் பல புதிய கதாபாத்திரங்களும் இந்த படத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது.
குறிப்பாக விஸ்வரூபம்- 2வில் கமல்ஹாசனின் தாயார் கதாபாத்திரம் முக்கிய இடம் பிடித்துள்ளது. அந்த கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் முன்னாள் கதாநாயகியும் தமிழகத்தை சேர்ந்தவருமான வகீதா ரஹ்மான் நடித்துள்ளார்.
EXCLUSIVE First Review #Vishwaroopam2 from #UAE ! A Well Made Thriller in all Respects ! @ikamalhaasan Stole the Sh… https://t.co/M0p7PYNmRO
— Umair Sandhu (@sandhumerry) 1533802594000
இந்தியாவில் நாளை அதிகாரப்பூர்வமாக வெளிவரவுள்ள ’விஸ்வரூபம்- ’படம், முன்னதாக மத்திய கிழக்கு பகுதியின் சில நாடுகளில் வெளியானது. அதை பார்த்த பிரபல சினிமா பத்திரிக்கையாளர் உமைர் சந்து ’விஸ்வரூபம்- 2’ படத்திற்கு தனது ரேட்டிங்கை அளித்துள்ளார்.
”விஸ்வரூபம் - 2 அதிரடியாகவும், ரசிக்கும்படியான த்ரில்லிங் அனுபவம் தரும் விதத்தில் தயாராகியுள்ளது. கமலின் நடிப்பு மற்றும் இயக்கம் அருமை. படத்தில் இடம்பெற்றுள்ள அதிரடி காட்சிகள் பிரமிப்பை தருகின்றன”. என தனது ட்விட்டரில் உமைர் சந்து பதிவிட்டுள்ளார்.
அத்துடன் 5 / 3.5 என தனது ரேட்டிங்கை விஸ்வரூபம்- 2 படத்திற்கு அவர் வழங்கியுள்ளார். இவரது இந்த பதிவு, சமூக வலைதளங்களில் டிரென்டிங்கில் உள்ளன. இது இந்திய ரசிகர்கள் மத்தியிலும் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் நாளை ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. நடிகர் கமல்ஹாசன...
'விஸ்வரூபம்' முதல் ‘விஸ்வரூபம் 2’ வரை- ரசிகனையும் தொண்டனையும் திருப்திபடுத்துவாரா கமல்ஹாசன்?
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் நாளை ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், அவரே இயக்கி, தயாரித்து கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘விஸ்வரூபம்’. சர்வதேச தீவிரவாதத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம், வெளியீட்டிற்கு முன் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது.
தடைகளை உடைத்து சரித்திரம் படைத்தவன்:
படத்தில் முஸ்லீம் மதத்தவர்களை தவறாக சித்தரித்ததாக தெரிவித்து, சில முஸ்லீம் அமைப்பினர் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் சில நாட்களுக்கு பின்னரே விஸ்வரூபம் வெளியிடப்பட்டது. இருப்பினும், படம் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களின் பேராதரவை பெற்று, மிகப்பெரிய அளவில் வெற்றிப் பெற்றது. படத்தின் இறுதியில் அதன் இரண்டாம் பாகத்தில் சில காட்சிகள் டிரைலராக காட்டப்பட்டு, விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.
2015 இல் கலக்கிய கமல்:
ஆனால், நிதிப் பிரச்சனையால் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அடிக்கடி தடைப்பட்டது. இதனிடையில், நடிகர் கமல்ஹாசன் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உத்தமவில்லன் (2015), ஜித்து ஜோசப் இயக்கத்தில் பாபநாசம் (2015), சி.கே.திவாகர் இயக்கத்தில் தூங்கா வனம் (2015) உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதில் பாபநாசம் திரைப்படம் மட்டும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றியைப் பெற்றது.
சபாஷ் நாயுடு:
இந்தப் படங்களைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தசாவதாரம் படத்தில் வந்த காமெடி கதாபாத்திரமான நாயுடுவை வைத்து சபாஷ் நாயுடு படத்தை இயக்க முயற்சித்தார். ஆனால், அந்தப் படமும் நிதிப்பிரச்சனையால் பாதியிலேயே தடைப்பட்டது.
பிக்பாஸும் பிரச்சனைகளும்:
பிக்பாஸ் கமல்ஹாசன்
இதற்கிடையில்தான் வெளியானது பிக்பாஸ் என்ற ரியாலிட்டு ஷோ. ஏற்கனவே பல மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த இந்த ஷோவை, தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார், அவரின் பேச்சுப் புலமை இந்த நிகழ்ச்சி வெற்றிப் பெற மிகப்பெரிய அளவில் உதவியது.
அதுவரையில், சமூகப் பிரச்சனைகளுக்கு நடிகனாக குரல் கொடுத்து வந்த கமல்ஹாசன். அந்த சமூகத்தில் உள்ளவர்களில் ஒருவராக, அரசாங்கத்திற்கு எதிரான கருத்துகளை வைக்கத் தொடங்கியது இந்த நிகழ்ச்சியில்தான்.
முதலில், தமிழ் கலாச்சாராத்திற்கு எதிராக உள்ளது என ஆரம்பித்த பிக்பாஸ் பிரச்சனை, படிப்படியாக உருவெடுத்து, கமலுக்கும் மற்றும் அரசாங்கத்திற்கும் இடையேயான பிரச்சனையாக மாறியது. இதனால், கமலுக்கும் தமிழக அமைச்சர்களுக்கும் இடையே கருத்துப் போர் உண்டானது. இதன் விளைவாக, நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டார்.
விஸ்வரூபத்துடன் விஸ்வரூபம் எடுத்த மக்கள் நீதி மய்யம்:
இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் பாதியில் நிறுத்தப்பட்ட ‘விஸ்வரூபம் 2’ படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கினார். அதே வேளையில் பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி, மதுரையில் நடந்த மாநாட்டில், சொன்னபடி ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற கட்சியைத் தொடங்கி, அதன் கொடியையும் அறிமுகப்படுத்தினார். ஒருபுறம் ‘விஸ்வரூபம் 2’ மறுபுறம் மக்கள் நீதி மய்யம் இரண்டையும் ஒருசேர கட்டமைத்தார் கமல்ஹாசன்.
தற்போது, ‘விஸ்வரூபம் 2’ படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், ஆகஸ்ட் 10 ஆம் தேதி(நாளை) வெளியாகிறது. கடந்த முறையை போல் இல்லாமல், இம்முறை படத்திற்கு பிரச்சனைகள் அந்த அளவிற்கு இல்லை என்றாலும், படம் வெளியான பின் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்தியுள்ள நடிகர் கமல்ஹாசன், அரசியலுக்கு வந்த பின் வெளியாகும் முதல் திரைப்படம் ‘விஸ்வரூபம் 2’. தற்போது கமல்ஹாசனுக்கு நடிகனாக தனது ரசிகனை மட்டுமில்லாமல், ஒரு தலைவனாக தனது தொண்டனையும் இப்படத்தில் திருப்தி படுத்த வேண்டியுள்ளது. அதை அவர் எந்த அளவிற்கு செய்கிறார் என்பதை படம் வெளியான பின்னரே அறிய முடியும்.
கடிகார மனிதர்கள் தலைப்பை பார்த்ததும் புரிந்திருக்கும் படத்தின் கதை காலத்தின் பின்னால் ஓடும் ஏழை மனிதர்களை பற்றியது என்று. நடிகர் கிஷோர், ...
கடிகார மனிதர்கள் திரைவிமர்சனம் - அதிக பொறுமை இருப்பவர்கள் கண்டிப்பாக பார்க்கலாம்
கடிகார மனிதர்கள் தலைப்பை பார்த்ததும் புரிந்திருக்கும் படத்தின் கதை காலத்தின் பின்னால் ஓடும் ஏழை மனிதர்களை பற்றியது என்று.
நடிகர் கிஷோர், கருணாகரன் மற்றும் லதா ராவ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வாடகை வீட்டில் உள்ளவர்கள் படும் இன்னல்களை காட்டியுள்ளது.
கதை:
வறுமை காரணமாக சென்னையை தேடி வருகிறது கிஷோர் மற்றும் லதா ராவ் குடும்பம். அவர்களுக்கு மூன்று குழந்தைகள். வண்டியில் வீட்டு சாமான்களை ஏற்றிக்கொண்டு புரோக்கர் உதவியுடன் தெருத்தெருவாக வீடு தேடுகின்றனர்.
5 பேர் கொண்ட குடும்பம் என்பதால் எந்த வீட்டு ஓனரும் இவர்களுக்கு வீடு தர முன்வரவில்லை. 3500 ரூபாய்க்கு மேல் இவராலும் வாடகை கொடுக்க முடியாது.பின்னர் இறுதியாக இவர்களுக்கு ஒருவர் மட்டும் வீடு தர முன்வருகிறார். ஆனால் 4 பேர் மட்டுமே இருக்க வேண்டும் என அவர் கூற புரோக்கர் இவருக்கு இரண்டு குழந்தைகள் மட்டும் தான் இருக்கிறார்கள் என பொய் கூறிவிடுகிறார்.
இந்த பொய்யை மறைக்க கிஷோர் அவரின் கடைசி பையனை ஒரு பெட்டியில் போட்டு தினமும் வீட்டுக்குள் கொண்டுவந்து மீண்டும் காலையில் அதே பெட்டியில் ஸ்கூலுக்கு கொண்டு சென்று விடுவார்.
அதே காம்பவுன்டுக்குள் குடிவரும் கருணாகரனுக்கும் ஹவுஸ் ஓனர் மகளுக்கும் காதல் - அது தனி ட்ராக்கில் செல்கிறது.
இப்படியே தொடரும் வாடகை வீடு வாழ்க்கையில் காலம் கடக்க கடக்க அவர்கள் சொன்ன பொய்யால் அதிக பிரச்சனைகள் வருகிறது.
அதையெல்லாம் எப்படி சமாளித்தார்கள், அவர்களால் சொந்த வீடு வாங்கமுடிந்ததா என்பது தான் மீதி கதை
க்ளாப்ஸ்:
வாடகை வீடு கஷ்டங்களையும், வீடு உரிமையாளர்களின் அராஜகத்தையும் வெட்ட வெளிச்சமாக காட்டியதற்கும், பொய் சொல்லாமல் பலருக்கும் வீடு கிடைக்காது என தற்போதைய சமூக பிரச்சனையை காட்டியதற்கும் அறிமுக இயக்குனர் வைகறை பாலன் அவர்களை பாராட்டலாம். கிஷோர், லதா ராவ் நடிப்பு பர்ப்பெக்ட். கருணாகரனின் காதல் சீன்களை சாம்.C.S மியூசிக் தூக்கி நிறுத்துகிறது.
பல்ப்ஸ்:
ஆனால் மெதுவாக செல்லும் திரைக்கதை பார்ப்பவர்களை கொஞ்சம் அதிகமே சோதிக்கிறது. ஒரு சைக்கிள் ரேசை எதோ F1 ரேஸ் அளவுக்கு பில்டப் கொடுத்ததெல்லாம் டூமச்.
மொத்தத்தில் கடிகார மனிதர்கள் எதார்த்த சினிமாவை ரசிப்பவர்கள், அதிக பொறுமை இருப்பவர்கள் கண்டிப்பாக பார்க்கலாம்.
உலக சினிமாவில் மிகப்பெரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கார் விருதுகள் தான். இதை இந்தியாவில் இருந்து ஏ.ஆர்.ரகுமான் மட்டுமே இதுவரை வென்றுள்ளார். ...
ஆஸ்கார் விருதுகளில் சேர்க்கப்பட்டுள்ள புதிய விருது - கடும் விமர்சனம்!
உலக சினிமாவில் மிகப்பெரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கார் விருதுகள் தான். இதை இந்தியாவில் இருந்து ஏ.ஆர்.ரகுமான் மட்டுமே இதுவரை வென்றுள்ளார்.
இதுவரை இல்லாத அளவில் அடுத்த வருடம் நடக்கவுள்ள விருது விழாவில் பல்வேறு மாற்றங்கள் தற்போது கொண்டுவரவுள்ளன.
2020ல் பிப்ரவரி 9ம் தேதி விழா நடக்கும் எனவும், விழாவில் புதிதாக "Most Popular Film" என்ற விருது சேர்க்கப்பட்டுள்ளது எனவும் அறிவிப்பு வந்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் அதிகம் ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் 3 மணி நேரம் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பு தற்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இதுவரை கொடுக்கப்பட்டு வரும் Best picture விருதை இந்த புதிய விருது குறைத்து மதிப்பிடும்படி புதிய விருது உள்ளது என பலரும் கூறி வருகின்றனர்.
திமுக தலைவர் கருணாநிதி உடல் வைக்கப்பட்டு இருக்கும் ராஜாஜி அரங்கில் இருந்து மெரினா வரை லட்சக்கணக்கில் மக்கள் இருப்பது கூகுள் மூலம் தெரிய வந்...
ராஜாஜி அரங்கில் இருந்து மெரினா வரை... கூகுளின் மலைக்க வைக்கும் புகைப்படம்!
திமுக தலைவர் கருணாநிதி உடல் வைக்கப்பட்டு இருக்கும் ராஜாஜி அரங்கில் இருந்து மெரினா வரை லட்சக்கணக்கில் மக்கள் இருப்பது கூகுள் மூலம் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தின் முதுபெரும் அரசியல்வாதியான திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை இந்த உலகை விட்டு பிரிந்து சென்றார். திமுக தொண்டர்கள் இதனால் பெரிய சோகத்தில் ஆழ்ந்து இருக்கிறார்கள்.
தமிழகம் முழுக்க இதற்காக துக்கம் அனுசரிக்கப்படுகிறது. தற்போது அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடந்து வருகிறது. காலையில் இருந்து வரிசையாக தலைவர்கள் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
அங்கு லட்சக்கணக்கில் மக்கள் கூடி வருகிறார்கள். இதனால் அங்கு பெரிய அளவில் கூட்டம் நொடிக்கு நொடி அதிகரித்து வருகிறது. அண்ணாவிற்கு கூடிய கூட்டத்திற்கு நிகரான கூட்டம் தற்போது அங்கு கூடி வருகிறது.
திமுக தலைவர் கருணாநிதி உடல் வைக்கப்பட்டு இருக்கும் ராஜாஜி அரங்கில் இருந்து அடக்கம் நடைபெற இருக்கும் மெரினா வரை லட்சக்கணக்கில் மக்கள் இருப்பது கூகுள் மூலம் தெரிய வந்துள்ளது.
கூகுள் மேப்பின் இந்த புகைப்படத்தில், சிவப்பாக இருக்கும் பகுதியில் எல்லாமும் லட்சக்கணக்கில் மக்கள் இருக்கிறார்கள். ராஜாஜி ஹாலை சுற்றி உள்ள எல்லா இடத்திலும் மக்கள் இருப்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.
அதேபோல், மைனஸ் கொடுக்கப்பட்டு இருக்கும், இடங்களில் எல்லாம் சாலைகள் அடைக்கப்பட்டு இருக்கிறது. ராஜாஜி ஹாலில் இருந்து மெரீனாவிற்கு ஒரு சாலையை தவிர மற்ற அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு உள்ளது. கருணாநிதியின் இறுதி சடங்கிற்கு தமிழகம் முழுக்க பல்வேறு பகுதியில் இருந்து மக்கள் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கருணாநிதியின் உயிர்பிரிந்தும் கூட அண்ணா அவருக்கு பரிசளித்த மோதிரத்தை அவர் கழட்ட வில்லை. அந்த அன்பு பரிசுடன் அவருக்கு அருகில் இன்று சென்றடைந...
இறுதி நிமிடத்திலும் கருணாநிதியின் கையில் இருந்த சாதாரண மோதிரம் யார் கொடுத்த பரிசு தெரியுமா?
கருணாநிதியின் உயிர்பிரிந்தும் கூட அண்ணா அவருக்கு பரிசளித்த மோதிரத்தை அவர் கழட்ட வில்லை. அந்த அன்பு பரிசுடன் அவருக்கு அருகில் இன்று சென்றடைந்துள்ளார்.
ஒரு காலகட்டத்தில் தி.மு.க. தேர்தல் நெருங்கி விட்டது. அறிஞர் அண்ணா கையில் பணம் இல்லாமல் தவித்தார். ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் ரூ.11இலட்சத்தை வசூலித்துத் தந்தார் கருணாநிதி.
இதனை பாராட்டி, அண்ணா, கருணாநிதிக்கு ஒரு மோதிரத்தை அணிவித்தார். இந்த மோதிரத்தை கருணாநிதி பெரிதும் மதித்தார். தன் வாழ்நாளில் அந்த மோதிரத்தை மட்டும் அவர் கழட்டியதே இல்லையாம்.
இதுகுறித்து பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றிற்கு தயாளு அம்மாள் கடந்த 2000-ஆம் ஆண்டு ஒரு பேட்டி அளித்தபோது கூறுகையில், "அறிஞர் அண்ணா போட்ட மோதிரம் தான் இப்போது வரை அவரது விரலில் இருக்கு, இது தவிர வேறு யாரோ ஒரு சமயம் கொடுத்த பரிசான ஒரேயொரு பவள மோதிரம் மட்டும் போட்டிருக்கிறார்.
அவருக்கு நிறைய பேர் மோதித்தை பரிசாக கொடுத்துள்ளனர். ஆனால் அவர் எதையுமே போட்டதில்லையாம்.
தாயின் தலைமுறையிலும், தந்தையின் தலைமுறையிலும் உயிருடன் இருப்பவர்களுக்கு மேலே மூன்று தலைமுறைப் பிதுர்க்களின் பிண்டத்தோடு இறந்தவனின் பிண்டத்த...
இறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை கண்டிப்பாக செய்யக்கூடாது..!
தாயின் தலைமுறையிலும், தந்தையின் தலைமுறையிலும் உயிருடன் இருப்பவர்களுக்கு மேலே மூன்று தலைமுறைப் பிதுர்க்களின் பிண்டத்தோடு இறந்தவனின் பிண்டத்தையும் சேர்க்க வேண்டும்.
பிண்டம் உண்ணும் பிதுரர் மூவர், தியாசகர் மூவர், லோபகர் மூன்று பேர் பிண்டம் போடும் பந்தியில் வருவான். ஒருவன் இவ்வாறு தந்தையின் மரபிற்குப் பத்துப் பேர்களும் உள்ளார்கள். ஒருவன் மரித்தும் பிதுரர்களோடு சேர்த்தும் நான்காம் பாட்டன் முதல் தியாசகன் ஆகிறான். மூன்றாம் லேபகன் பந்தியில் வருவோனாகிறான். புத்திரன் சிரார்த்தம் செய்தால் மாண்டுபோன தந்தை மகிழ்ந்து அந்தப் புத்திரனுக்கு ஒரு புத்திரனை தருகிறான். சிரார்த்தம் செய்வதில் பிதுரர்களுக்குத் திருப்தியுண்டாலதன்றி செய்பவனுக்கு மிக்க பயன் உண்டு. உயிர் நீங்கிய பிறகு தேகத்தை வைத்திருக்க கூடாது. அதனால் உடனே சம்ஸ்காரம் செய்ய வேண்டும்.
தனிஷ்டா பஞ்சகத்தில் இறந்த தோஷ நிவர்த்தியின் பொருட்டுச் சாஸ்திரத்தில் கூறியுள்ளபடி சில கருமங்களை அதிகமாக செய்தல் வேண்டும். எள்ளும் கோவும் ஹிரண்யமும் நெய்யும் தானம் கொடுக்க வேண்டும். தனிஷ்டா பஞ்சகத்தில் மாய்ந்தவருக்கு சாஸ்திரத்தில் சொல்கிரபடிச் செய்யாவிட்டால் கருமஞ் செய்யும் கர்த்தா துன்பம் அடைவான்.
கருடா! ஒருவன் மரித்தவுடன் அவனது கால்களையும் கைகளையும் கட்ட வேண்டும். உறவினரெல்லாம் சவத்தின் அருகிலேயே இருக்க வேண்டும். ஒரு கிராமத்தில் ஒரு சவம் கிடந்தால் யாரும் சோறும் நீரும் உண்ணலாகாது. அப்படி உண்டால் மாமிசம் உண்ட தோஷமும் இரத்தம் பருகிய தோஷமும் அடைவார்கள். தந்த சுத்தியும் செய்யலாகாது. இரவில் பிணம் கிடக்கும் பொது ஆண் பெண் கூடியின்புறுதல் கூடாது என்றார் திருமால்.
மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு, இந்தியாவில் இதுவரை யாருக்கு கிடைக்காத அளவிற்கு பெருமை கிடைத்துள்ளது. வயது முதிர்ச்சி மற்றும் உட...
இந்தியாவில் கருணாநிதிக்கு மட்டுமே கிடைத்த பெருமை! அப்படி என்ன தெரியுமா?
மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு, இந்தியாவில் இதுவரை யாருக்கு கிடைக்காத அளவிற்கு பெருமை கிடைத்துள்ளது.
வயது முதிர்ச்சி மற்றும் உடல்நிலை குறைபாடு காரணமாக கடந்த 11 நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தை ஆழ்த்தியுள்ள கருணாநிதியின் மறைவுக்கு இந்தியா முழுவதிலிருந்தும் பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அவரது மறைவினால் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதேபோல நாட்டின் முக்கியமான இடங்கள் அனைத்திலும் தேசிய கோடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு , மத்திய அரசால் துக்கநாள் அனுசரிக்கப்பட்டது வருகிறது. அதன்படி மத்திய அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
கருணாநிதியின் மறைவுக்கு அரசு விடுமுறை அறிவித்து தமிழக அரசு மரியாதை செலுத்தியிருக்கும் வேளையில், கர்நாடக, ஆந்திர, கேரளா, தெலுங்கானா மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் பதவியில் இல்லாத ஒரு தலைவருக்கு இதுபோன்ற பெருமை இதுவரையிலும் கிடைத்ததே இல்லை. அந்த வகையில் மறைந்தும் இத்தகைய பெருமையினை கலைஞர் பெற்றுள்ளார்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி சென்னையில் இன்று, செவ்வாய்க்கிழமை, மாலை 6.10 மணியளவில் காலமான...
”உடன்பிறப்பே” என்ற வார்த்தையால்...அகிலத்தையே வியக்க வைத்த கலைஞர் கருணாநிதி தண்டவாளத்தில் தலைவைத்து படுத்தது ஏன்?
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி சென்னையில் இன்று, செவ்வாய்க்கிழமை, மாலை 6.10 மணியளவில் காலமானார். அவர் குறித்த 95 தகவல்களை இங்கே பகிர்கிறோம்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன் 3 ம் தேதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார்.
கருணாநிதி தம் பெற்றோருக்கு மூன்றாவது குழந்தை. அவருக்கு முன்பாக பெரியநாயகம், சண்முகசுந்தரம் என இரு சகோதரிகள் உண்டு. சண்முகசுந்தரம் அம்மாளின் மகன்கள்தான் முரசொலி மாறனும் முரசொலி செல்வமும். பெரியநாயகம் அம்மாளின் மகன் அமிர்தம்.
கிரிக்கெட் காதலர் கருணாநிதி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், சிறு வயதில் அவருக்கு பிடித்தமான விளையாட்டாக இருந்தது ஹாக்கி. போர்ட் ஸ்கூல் ஹாக்கி டீமிற்காக விளையாடி இருக்கிறார் கருணாநிதி.
கருணாநிதியின் முதல் மேடை பேச்சு 'நட்பு' குறித்து. எட்டாம் வகுப்பு மாணவராக இருந்த போது (1939) பள்ளியில் நடந்த பேச்சுப் போட்டியில் 'நட்பு' என்ற தலைப்பில் பேசினார்.
கருணாநிதி முதன்முதலில் துவங்கிய பத்திரிகையின் பெயர் மாணவ நேசன். 1941ல் வெளியான மாணவ நேசன் ஒரு மாத இதழ்.
முதன் முதலில் கருணாநிதி தொடங்கிய அமைப்பு தமிழ் மாணவர் மன்றம்.
நீதிக்கட்சியை சேர்ந்த அழகிரிசாமியால் தன் சிறுவயதில் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர் கருணாநிதி. அதன் காரணமாகவே தம் மகனுக்கு அழகிரி என்று பெயர் சூட்டினார்.
தான் திராவிட சிந்தனையால் ஈர்க்கப்படாமல் இருந்தால் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திருப்பேன் என்று ஒரு முறை கருணாநிதி கூறினார்.
எம்.ஜி.ஆருக்கும் கருணாநிதிக்கும் நட்பு ஏற்பட்டது சேலம் மாடர்ன் தியேட்டரில்தான்.
மூன்று முறை திருமணம் செய்துகொண்டவர் கருணாநிதி . முதல் மனைவி பத்மாவதி. அவகுப் பிறந்தவர், மு.க.முத்து. திருமணமான சில ஆண்டுகளிலேயே மரணமடைந்தார் பத்மாவதி. கலைஞரின் இரண்டாவது மனைவியான தயாளு அம்மாளுக்கு பிறந்தவர்கள் அழகிரி, ஸ்டாலின், செல்வி மற்றும் தமிழரசு. அவரது மூன்றாவது மனைவியான ராஜாத்தியம்மாளுக்குப் பிறந்தவர் கனிமொழி.
கருணாநிதி எழுதி முதன் முதலில் அரங்கேற்றப்பட்ட நாடகம், 'பழனியப்பன்'. திருவாரூர் பேபி டாக்கீஸில் 1944ல் அரங்கற்றப்பட்டது.
50களிலிருந்து 70கள் வரை தமிழ்த் திரையுலகில் கோலோச்சிய சிவாஜி கணேசன், எம்.ஜி. ராமச்சந்திரன் ஆகிய இருவருக்கும் மிகப் பெரிய வெற்றிப்படங்களை அளித்தவர் கருணாநிதி. சிவாஜிக்கு பராசக்தி, மனோகரா. எம்.ஜி.ஆருக்கு மந்திரி குமாரி, மலைக்கள்ளன்.
கருணாநிதி முதன் முதலில் வசனம் எழுதிய திரைப்படம் 1947ல் வெளியான ராஜகுமாரி. இந்தப் படம்தான் முதன் முதலில் எம்.ஜி.ஆர் முன்னணி வேடத்தில் நடித்த படம்.
1947ல் வெளியான ராஜகுமாரி தொடங்கி, 2011ல் வெளியான பொன்னர் - சங்கர் வரை சுமார் 64 வருடங்கள் திரையுலகில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் என பல்வேறு துறைகளிலும் பணியாற்றியிருக்கிறார் கருணாநிதி.
பராசக்தி படம் வெளிவந்தபோது, அந்தப் படத்தை கிண்டல் செய்து ஒரு இதழில் பரப்பிரம்மம் என்ற பெயரில் கார்ட்டூன் வெளியிடவே, அதே பெயரில் ஒரு நாடகத்தை எழுதி மாநிலம் முழுவதும் நடத்தினார் கருணாநிதி.
கருணாநிதி கடைசியாக வசனம் எழுதிய தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான ஸ்ரீ ராமானுஜர் - மதத்தில் புரட்சி செய்த மகான். அந்தத் தொடருக்கு அவர் எழுத ஆரம்பித்தபோது அவரது வயது 92. எழுதிவந்தபோதே அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது.
கருணாநிதி 10 சமூக நாவல்களையும் 6 சரித்திர நாவல்களையும் எழுதியிருக்கிறார்.
21 நாடகங்களை கருணாநிதி எழுதியிருக்கிறார். 1957ல் தி.மு.கவுக்குக் கிடைத்த உதயசூரியன் சின்னத்தைப் பிரபலபடுத்துவதற்காக உதயசூரியன் என்ற நாடகத்தை எழுதினார்.
இனியவை 20 என்ற பெயரில் பயண நூல் ஒன்றையும் கருணாநிதி எழுதியிருக்கிறார்.
கருணாநிதி பணியாற்றிய படங்களின் எண்ணிக்கை 69.
கருணாநிதி கதை - வசனம் எழுதி எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் எண்ணிக்கை 9.
கருணாநிதியை ஆரம்பகாலத்தில் எம்.ஜி.ஆர் 'ஆண்டவரே' என்று அழைத்திருக்கிறார்.
கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன், 1969ல் கருணாதியிடம் பணியில் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக உதவியாளராக இருந்துவருகிறார். இரண்டு முறை கோபித்துக்கொண்டு வெளியேறி, மீண்டும் கருணாநிதியிடம் சேர்ந்திருக்கிறார்.
கருணாநிதிக்கு 'கலைஞர்' என்ற அடைமொழியை வழங்கியது நடிகவேள் எம்.ஆர்.ராதா தான். கருணாநிதி எழுதிய, 'தூக்குமேடை' என்ற நாடகத்தை பார்த்து இந்த பட்டத்தை வழங்கினார்.
இதுவரை 13 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டிருக்கும் கருணாநிதி, இதுவரை ஒரு தேர்தலில்கூட தோல்வியடைந்ததில்லை.
சென்னை சேப்பாக்கம் தொகுதியில்தான் அதிகபட்சமாக மூன்று முறை தேர்வுசெய்யப்பட்டுள்ளார் கருணாநிதி. சைதாப்பேட்டை, அண்ணாநகர், திருவாரூர், துறைமுகம் ஆகிய பகுதிகளில் தலா இரண்டு முறை தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
1957லிருந்து தற்போதுவரை 60 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துவரும் கருணாநிதி மிகக் குறுகிய காலத்திற்கு சட்ட மேலவை உறுப்பினராக இருந்திருக்கிறார்.
33 வயதில் முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினரானார் கருணாநிதி.
கருணாநிதி 45 வயதில் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
கருணாநிதி சட்டமன்றக் கன்னிப் பேச்சே மிகவும் கவனிக்கப்பட்டது. அதில் நங்கவரம் பண்ணை விவசாயிகளுக்காகப் பேசினார் கருணாநிதி. பிறகு இதற்காக 20 நாட்கள் போராட்டமும் நடத்தி, பிரச்சனைக்குத் தீர்வு கண்டார்.
கருணாநிதி முதன்முறையா சட்டமன்றத்தில் பேசிவிட்டு அமர்ந்ததும், அப்போது சட்டப்பேரவை தலைவராக இருந்த யு. கிருஷ்ணாராவ் ஒரு காகிதத்தில், 'Very Good Speech' என்று எழுதி கொடுத்தார்.
மனிதர்களை மனிதர்களே இழுத்துச் செல்லும் கை ரிக்ஷா வழக்கம் இந்தியாவின் சில மாநிலங்களி்ல் இன்னும் உள்ள நிலையில், 1973லேயே தமிழகத்தில் அதைத் தடை செய்தார்.
அண்ணா மறைவுக்குப் பிறகு முதல்வரான போதுதான் "உடன்பிறப்பே" என முரசொலியில் கடிதம் எழுதத் துவங்கினார் கருணாநிதி. 1971 முதல் "உயிரினும் மேலான உடன்பிறப்பே" என்று பேசவும் துவங்கினார்.
கல்லக்குடி போராட்டம்தான் அவரை அரசியல் தளத்தில் முக்கிய தலைவராக பரிணமிக்க செய்தது. இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கல்லக்குடியில் ரயில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து, ரயில் மறியலில் இறங்கினார்.
எம்.ஜி.ஆருக்கு புரட்சி நடிகர் என்ற பட்டத்தைக் கொடுத்தது கருணாநிதிதான்.
கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்! 1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி ...
கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!
கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!
1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும்.
2. மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆகும்.
3. எழுதி கொடுப்பவரின் பெயரும் & இன்சியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா . மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும்.
4. எழுதி கொடுப்பவர், ஏற்கனவே முன் வாங்கிய கிரயப்பத்திரத்தில் உள்ள அவரின் முகவரியும், தற்போது இருக்கும் முகவரியும் ஒன்றா என்று பார்க்க வேண்டும். இரண்டும் வேறு வேறு முகவரி என்றால் இரண்டு முகவரியும் இப்போது எழுதுகிற கிரைய பத்திரத்தில் காட்ட வேண்டும்.
5. கிரயம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர் , இன்சியல், முகவரி ஆகியவை அடையாள அட்டையுடன் பொருந்தும்படி பிழையில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
6. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு சொத்து எப்படி வந்தது,
• அவர் வேறு நபரிடம் கிரயம் வாங்கி இருக்கலாம்.
• அவருடைய பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தாரிடம், இருந்து செட்டில்மெண்ட், பாகபிரிவினை, விடுதலைப் பத்திரம் மூலம் அடைந்து இருக்கலாம்.
• உயில் , தானம் மூலம் கிடைத்து இருக்கலாம்.
• பொது ஏலம், நீதிமன்ற தீர்வுகள் மூலம் கிடைத்து இருக்கலாம்.
• பூர்வீகமாக பட்டா படி பாத்தியப்பட்டு வந்து இருக்கலாம். அதனை கிரயம் எழுதி கொடுப்பவர் தெளிவாக ஆவண எண் விவரத்துடன் மேற்படி சொத்து எனக்கு கிடைத்தது என்று சொல்லி இருக்க வேண்டும்.
7. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு, யார் மூலம் சொத்து வந்தது என எழுதுவது மட்டும் இல்லாமல் அவருக்கு முன் கிரயம் பெற்றவருக்கு யார் மூலம் சொத்து வந்தது என்று நதிமூலம் ரிஷிமூலம், பார்த்து அணைத்து லிங்க் டாகுமென்ட்யையும் வாரலாறாக தற்போதைய கிரைய பத்திரத்தில் எழுதுவது மிக சிறப்பானது ஆகும்.
8. கிரயம் நிச்சயித்த உண்மை தொகை எழுத வாய்ப்பு இருந்தால் தெளிவாக எழுதுங்கள் (அல்லது) வழிகாட்டி மதிப்பு தொகை எழுதினாலும் எழுதுங்கள். எவ்வளவு பணம் அக்ரிமெண்ட் போடும்போது கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் காசோலையாக கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் வங்கி கணக்கில் கட்டப்பட்டது, எவ்வளவு பணம் ரொக்கமாக கொடுக்கப்படுகிறது, என தெளிவாக குறிப்பிட வேண்டும்.
9. கிரயம் எழுதி கொடுப்பவர், எழுதி வாங்குபவருக்கு கீழ்க்கண்ட உறுதி மொழிகளை கட்டாயம் கொடுத்து இருக்க வேண்டும்.
1.தானம்
2. அடமானம்
3. முன் கிரயம்
4. முன் அக்ரிமெண்ட்,
5. உயில்
6. செட்டில்மெண்ட்,
7. கோர்ட் அல்லது கொலாட்ரல் செக்யூரிட்டி,
8. ரெவின்யூ அட்டாச்மெண்ட்
9. வாரிசு பின் தொடர்ச்சி,
1௦. மைனர் வியாஜ்ஜியங்கள்.
11. பதிவு பெறாத பத்திரங்கள் மூலம் எழுதும் பாத்திய கோரல்கள்,
12.சொத்து ஜப்தி,
13.சொத்து ஜாமீன்,
14.பைசலுக்காக சர்க்கார் கடன்கள்,
15.வங்கி கடன்கள்,
16.தனியார் கடன்கள்,
17.சொத்து சம்மந்தமான வாரிசு உரிமை ,
18.சிவில், கிரிமினல் வழக்குகள்,
19.சர்க்கார் நில ஆர்ஜிதம்,
20.நிலகட்டுப்பாடு ,
21.அரசு நில எடுப்பு முன் மொழிவு நோட்டீஸ்,
22.நில உச்ச வரம்பு கட்டுப்பாடு,
23.பத்திரப்பதிவு சட்டம் 47(a) சட்டத்தின் கீழ் சொத்து இல்லை
24. இதில் சொல்லாத பிற வில்லங்கங்கள் இல்லை
போன்ற உறுதி மொழிகளை வில்லங்கம் இல்லை என்று கண்டிப்பாக உறுதி அளித்து இருக்க வேண்டும்.
1௦. சர்க்கார் வரி வகைகள் முழுவதும் கட்டியாயிற்று, சொத்து சம்மந்தமான அசல் நகல் ஆவணங்களை ஒப்படைத்து விட்டேன். எதிர்காலத்தில் பிழை இருந்தால் அல்லது வேறு ஏதாவது பத்திரம் இந்த சொத்து பற்றி எழுதி கொடுக்க சொன்னால் கைமாறு எதிர்பார்க்காமல் எழுதி கொடுக்கின்றேன் என்று கிரைய பத்திரத்தில் உறுதி அளித்து இருக்க வேண்டும்.
11. சொத்து விவரத்தில் மிக தெளிவாக மாவட்டம், வட்டம், கிராமம் புல எண், உட்பட அனைத்தையும் தெளிவாக குறிப்பிட்டு இருக்க வேண்டும். தெருவோ, கதவு எண்ணோ இருந்தால் நிச்சயம் குறிப்பிட்டு இருக்க வேண்டும். மின் இணைப்பு இருந்தால் மின் இணைப்பு எண், நிலத்தின் பட்டா எண், புதிய சர்வே எண், பழைய சர்வே எண், பட்டா படி சர்வே எண். தெளிவாக எழுதிருக்க வேண்டும்.
12. இடத்தின் அளவு நாட்டு வழக்கு முறையிலும் , பிரிட்டிஸ் அளவு முறையிலும், மெட்ரிக் அளவு முறையிலும் தெளிவுடன் எழுதி இருக்க வேண்டும். மெட்ரிக் அளவு முறையில் எழுதி இருந்தால் பட்டா மாற்றத்திற்கு உதவியாக இருக்கும் .
13. கிரைய சொத்தை சுற்றி இருக்கும் நான்கு பக்கங்களில் இருக்கின்ற சொத்துக்களை சிறு அளவு பிழை இல்லாமல் அடையாள படுத்த வேண்டும். நான்கு பக்கங்களில் இருக்கின்ற நீள அகல அளவுகளை தெளிவுடன் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
14. பத்திரத்தின் எல்லா பக்கங்களிலும் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சோதனையிட வேண்டும். எழுதி கொடுப்பவர் தரப்பின் சாட்சிகள், பெயர் & முகவரியுடன் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சரிபார்க்க வேண்டும்.
15. தேவையான பட்டா, வரைபடம், அடையாள அட்டை நகல்கள் பத்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா , அதில் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.
16. முத்திரைத்தாள்கள் சரியாக வாங்கி இருக்கிறோமோ, பதிவுக்கட்டணம் DD சரியாக எடுத்துள்ளதா, ஆவண எழுத்தர் அல்லது வக்கீல் , ஆவணம் தயாரித்தவர் என்று கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.
தற்காலத்தில் அனைவருக்கும் பெரிய பிரச்சினையாக காணப்படும் தொப்பையை வீட்டிலேயே சில எளிய உடற்பயிற்சிகளை செய்து குறைப்பது எப்படி என பார்ப்போம். ...
தொப்பையை குறைக்கும் எளிய உடற்பயிற்சிகள்
தற்காலத்தில் அனைவருக்கும் பெரிய பிரச்சினையாக காணப்படும் தொப்பையை வீட்டிலேயே சில எளிய உடற்பயிற்சிகளை செய்து குறைப்பது எப்படி என பார்ப்போம்.
plank walks exercise: இரண்டு கைகளையும் நிலத்தில் ஊன்றி, பக்கவாட்டில் உடலை இயக்க வேண்டும். வலது கை, வலது காலை வலதுபக்கமாக சற்று கீழே இறக்கி, ஏற்ற வேண்டும். அதேபோல் இடது கால், இடது கையை இடதுபக்கமாக கீழே இறக்கி, பின் ஏற்ற வேண்டும். இவ்வாறு 20 முறை செய்ய வேண்டும். படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ள வேண்டும்.
Squats: கால்கள் எந்த அளவிற்கு வலுவாக உள்ளதோ, அந்தளவுக்கு உடலும் வலுவடையும். கைகளை நேரே நீட்டியவாறு, உடலை பாதியளவிற்கு கீழே இறக்கி, பின் மேலே ஏற்ற வேண்டும். சேரில் அமருவதை போல் அமர்ந்து செய்யும் உடற்பயிற்சி இது. இந்த பயிற்சியை செய்யும் போது உங்களின் கால் தொடைகளில் மாற்றம் தெரிவதை உணரலாம்.
Mountain Climbers: தண்டால் எடுப்பது போன்ற நிலையில் இருக்க வேண்டும். அப்போது மலை ஏறுவது போல் கால்களை ஒவ்வொன்றாக கொண்டு சென்று, பின் பழைய நிலைக்கு வரவேண்டும். தசைகள் எவ்வளவு வேலை செய்கிறதோ, அந்தளவிற்கு உடல் கொழுப்பு கரைக்கப்படும்.
toe To Bar: தொங்கக்கூடிய கம்பி வீட்டில் இருந்தால் போதும். அதில் தொங்கிக் கொண்டு, கால் விரல்களால் அந்த கம்பியை தொட வேண்டும். தொடக்கத்தில் கடினமாக இருந்தாலும், படிப்படியாக செய்ய முயற்சிக்க வேண்டும்.
மறைந்த கலைஞர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் இடம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துவருகிறது. திமுகவி...
கருணாநிதி-மெரினா சர்ச்சை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் புதிய வேண்டுகோள்
மறைந்த கலைஞர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் இடம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துவருகிறது. திமுகவினர் பல இடங்களில் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சர்ச்சை பற்றி ரஜினி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
"மதிப்பிற்குரிய அமரர் கலைஞர் அவர்களுக்கு, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய, தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அது தான், நாம் அந்த மாமனிதருக்கு கொடுக்கும் தகுந்த மரியாதை" என ரஜினி ட்விட்டரில் கூறியுள்ளார்.
சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். சகாப்தம் முடிந்துவிட்டது, சூரியன்...
மரணப்படுக்கையில் நர்சிடம் நக்கலடித்த கருணாநிதி! விழுந்து விழுந்து சிரித்த பலர்? அப்படி என்ன சொன்னார் தெரியுமா?
சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார்.
சகாப்தம் முடிந்துவிட்டது, சூரியன் அஸ்தமனமாகிவிட்டது என்று அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், அவர் மருத்துவமனையில் இருக்கும் போது நடைபெற்ற சுவாரஷ்ய சம்பவம் ஒன்று ஊடகங்களில் தீயாய் பரவி வருகின்றது.
மருத்துவமனையில் தாதியர் ஒருவர் உடல்நிலை குறித்து பார்வையிட்டு கொண்டிருக்கும் போது , உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள முச்சை இழுத்து விடுமாறு கூறியுள்ளார்.
அப்போது, கருணாநிதி மூச்சு நின்று விடக் கூடாதுனுதான் இங்க வந்தேன். நீங்களே எடுத்து விட சொல்லுறீங்கனு புன்னகையுடன் தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு அங்கிருந்த அனைவரும் புன்னகைத்துள்ளனர். இன்று மாலை அவரின் மரண செய்தி வெளியான பின்னர் அவரின் வரலாற்று சுவாரஷ்யங்களும் வெளிவரத்துடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் செல்போன் பயன்பாடுகள் அதிகரித்த பின் அனைத்து ஃபோன் நெட்வொர்க் நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு ஹை ஸ்பீடு டேட்டாக்களை வழங்கி ...
பார்ன் வெப்சைட் தொடர்ச்சியாக பார்ப்பவரா? - இதைப் படிங்க முதல்ல!
இந்தியாவில் செல்போன் பயன்பாடுகள் அதிகரித்த பின் அனைத்து ஃபோன் நெட்வொர்க் நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு ஹை ஸ்பீடு டேட்டாக்களை வழங்கி வருகிறதுது. தினமும் பல வீடியோக்கள் பார்த்தாலும் தீராமல் இருக்கிறது ஜிபிகள்.
தினமும் சினிமா, பாடல்கள் என எல்லாவற்றையும் பார்த்து போரடித்துப் பின் தனிமையை போக்கிக் கொள்ள பலரும் பார்க்கத் தொடங்குவது பார்ன் வீடியோக்களைத்தான். ஆரம்பத்தில் விளையாட்டாக பார்க்கத் தொடங்குவபர்கள் பின் தினமும் பார்த்தே ஆக வேண்டும் என்கிற அளவிற்கு பார்ன் வீடியோ பார்க்கும் பழக்கத்திற்கு அடிமைப்பட்டு விடுகின்றனர்.
பார்ன் சைட் பார்ப்பதில் ஆண்களின் எண்ணிக்கையை போல் பெண்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. பார்ன் சைட் பார்ப்பதால் ஏற்படும் உளவியல் சிக்கல்கள் என்னென்ன என்பதை உளவியல் மருத்துவர் வந்தனாவிடம் கலந்துரையாடிய போது:-
பார்ன் சைட்டை அதிகமாக பார்க்க மூன்று முக்கியக் காரணம் உண்டு. எல்லோருக்கும் ஈஸியாக கிடைப்பது, மேலும் இதைப் பார்க்க எந்தவொரு செலவும் செய்யத் தேவையில்லை. மற்றொரு முக்கியமான காரணம் பார்ன் சைட்டை பார்க்கும் போது நம் முகம் யாருக்கும் தெரியாது’ என்கிற தைரியம்.
நம் அந்தரங்க ஆசைகள் யாருக்கும் தெரியாதென எண்ணிக்கொண்டுதான் பலரும் பார்க்கிறார்கள். போதைமருந்து எடுத்துக் கொண்டால் அனைவருக்கும் தெரியும். ஆனால் பார்ன் சைட் பார்ப்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாதென எண்ணிக்கொண்டு பார்க்கிறார்கள்.
பார்ன் சைட்டை பெரும்பாலும் மொபைல் ஃபோன்களில் மட்டும்தான் பார்க்கிறார்கள். லேப்டாப்பிலோ அல்லது டேப்களிலோ பார்ப்பதில்லை. இதனால் பலரும் மன அழுத்தத்துடன் தனிமையாக இருக்கும் நேரங்களில் பார்ன் சைட்டை பார்க்கிறார்கள். பெண்களுக்கு ஆர்கஸம் சீக்கிரமே கிடைப்பதால் தொடர்ந்து பார்க்கிறார்கள். மன அழுத்தம் மற்றும் தனிமையில் இருப்பவர்கள் பலரும் இதை பார்க்கிறார்கள் என்று சொல்லமுடியாது நல்ல வேலையில் இருக்கிற நன்றாக படிக்கிற கல்லூரி இளம் பெண்கள் கூட இதை பார்க்கின்றனர்.
இன்றைய காலத்தில் இளைஞர்கள் பலருக்கும் பாலியல் அறிவு எதுமின்றி வெற்று சுவாரஸ்யத்திற்கு பார்க்கத் தொடங்கி பின் பார்ன் சைட் பார்ப்பதற்கு அடிமையாகி விடுகிறார்கள். இதனால் தனியாக இருக்கும் நேரங்களில் சுய இன்பத்தில் ஈடுபடத் தொடங்கிவிடுவார்கள். சிலருக்கு பார்க்கும் போது கிடைக்கும் மிகையுணர்ச்சிக்காக இதில் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள்.
பார்ன் சைட் பார்த்ததிலே ஆண்களின் எனர்ஜி முழுவதும் போய்விடும். பின், செயலாக எதுவுமே செய்ய முடியாது. சிலருக்கு உடலுறவில் விந்து விரைவாக வெளியேறிவிடும். இதனால் மனைவியுடன் செயல்பட முடியாமல் உறவில் சிக்கல் ஏற்படலாம்.
பார்ன் சைட் பார்ப்பதில் அடிமையானவர்கள் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போகும். அவர்களின் மூளை செக்ஸை நிகழ்த்தி பார்த்துக் கொண்டே இருக்கும். இன்னும் சிலர் தன்னுடைய துணையிடம் அந்த வீடியோக்களில் பார்த்தது போன்றே செய்ய வேண்டுமென வற்புறுத்தலாம். இந்த அறிகுறிகளை வைத்தே அவர்களின் மனநிலையை அறிந்து கொள்ளலாம். இவர்கள் நிச்சயமாக உளவியல் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று அதிலிருந்து மீளலாம்.
தீவிரமாக செக்ஸுவல் அடிக்ஸன் இருப்பவர்கள்தான் பெண்கள், குழந்தைகள் மீது ஏன் விலங்குகளை கூட வன்புணர்வை செய்கிறார்கள்.
டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு பாலியல் குறித்த விழிப்புணர்வை பள்ளியிலிருந்தே கொடுக்கவேண்டும்.முதலில் அவர்களுக்கு ‘குட் டஜ்’, ‘பேட் டஜ்’ பற்றிய ஆலோசனையும், அந்தரங்க உறுப்புகள் என்னென்ன என்பதை பற்றிய புரிதலையும் கொடுக்க வேண்டும். பின் அந்தரங்க உறுப்பை சுத்தமாக வைத்திருப்பது பற்றிய அறிவையும் கொடுக்க வேண்டும். பெண் பிள்ளைகள் மட்டுமல்ல ஆண் பிள்ளைகளும் உடலளவில் முதிர்ச்சி அடையும் பருவம் உண்டு என்பதை சொல்ல வேண்டும் என்கிறார் மருத்துவர் வந்தனா.
பார்ன் சைட் பார்ப்பதால் நன்மைகளும் இருக்கிறது, சிலருக்கு உடலுறவு குறித்த சந்தேகங்களை பிறரிடம் கேட்கத் தயங்கி பலரும் இதைப்பார்த்து தெரிந்து கொள்கிறார்கள். சில தம்பதியர்களுக்கு உடலுறவு குறித்த புரிதலுக்காக சிலர் பார்க்கலாம். கட்டுப்பாடு எல்லாமே உங்களின் கையில்தான் உள்ளது என்கிறார் மருத்துவர்.
ஒரு காலத்தில் கெட்ட பழக்கமென ஒதுக்கி வைக்கப்பட்ட மது குடிக்கும் பழக்கத்தை இன்றைய நவீன காலத்தில் சோஸியல் டிரிங், எனச் சொல்லி பலரும் மதுவை அருந்தவே செய்கிறார்கள். ஒரு காலத்தில் மனக்கஷ்டம் என்றால் சாப்பிடாமல் தூங்காமல் இருப்பார்கள். இன்றைய காலத்தில் மன அழுத்தம் ஏற்பட்டால் தங்களின் இயல்பான அளவை விட கூடுதலாக சாப்பிடவும் தூங்கவும் செய்கிறார்கள். எந்தவொரு செயலையும் அவரவர் இயல்பை மீறி தீவிரமாக தொடர்ந்து செய்யும் போது அதற்கு நாம் அடிக்ட் ஆகிவிட்டோம் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
காலத்தை வென்று நிற்பார் கலைஞர் என திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு கவிப்பேரரசு வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். உடல்நலக் குறைவால் பாதி...
காலத்தை வென்று நிற்பார் கலைஞர்” - கவிப்பேரரசு வைரமுத்து
காலத்தை வென்று நிற்பார் கலைஞர் என திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு கவிப்பேரரசு வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதி இன்று மாலை காலமானார். அவருக்கு கவிப்பேரரசு வைரமுத்து இரங்கல் குறிப்பை வெளியிட்டுள்ளார்.
அந்தக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கலைஞர் என்பது ஒரே சொல்லில் ஒரு சரித்திரம். நான்கே எழுத்துக்களில் ஒரு நூற்றாண்டை அடக்கமுடியுமென்றால் அதன்பேர் கலைஞர். ஒரு புலவனே போராளியாகவும், போராளியே புலவனாகவும் திகழ்ந்த பெருஞ் சரித்திரம் இந்தியப் பெரும்பரப்பில் கலைஞருக்கே வாய்த்திருந்தது. இந்திய தேசப்படம் யோசித்து ஏற்றுக்கொள்ளும் ஒரு குக்கிராமத்தில் பிறந்து இந்தியாவை ஆளும் குடியரசுத் தலைவர்களையும், பிரதமர்களையும் தேர்ந்தெடுக்கும் ஆற்றலாக வளர்ந்த அதிசயம் அவர். மெய்யான திராவிட இயக்கக் கொள்கைகளை 80 ஆண்டுகள் ஏந்தி நடந்தவர்.
அவர் கல்லூரிக் கல்வி காணவில்லை; ஆனால் பல்கலைக்கழகங்களைப் படைத்தளித்தார். மின்சாரம் இல்லாத ஊரில் பிறந்தார்; தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் பரிசளித்தார். இசைத்தமிழ் வளர்க்கும் குடும்பத்தில் பிறந்தார்; ஆனால் முத்தமிழுக்கும் பங்களிப்புச் செய்தார். பேராசிரியரையும் நாவலரையும் அழைத்துக் கூட்டம் போடுவதற்கு வீட்டு வெள்ளிக் கிண்ணத்தை அடமானம் வைத்தார்; ஆனால் ஆண்டாண்டு காலமாக அடமானம் கிடந்த தமிழர்களின் மானத்தை மீட்டெடுத்தார். வீழ்த்தப்பட்டவர்களுக்காகவும் தாழ்த்தப்பட்டவர்களுக்காகவும் இவர் போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டை இந்தியாவின் எல்லாத் திசைகளுக்கும் நீட்டித்தார்.
எழுத்தாளர் – கவிஞர் – நாடக ஆசிரியர் – பத்திரிகையாளர் – கட்சித் தலைவர் – ஆட்சித் தலைவர் – உறங்காத படைப்பாளி – ஓயாத போராளி என்று எத்துறை தொட்டாலும் அத்துறையில் வித்தகம் காட்டிய வித்தகர் இந்திய அளவில் இவர் மட்டும்தான். கட்சித் தலைவன் போய்விட்டான் என்று தொண்டர்கள் கதறுகிறார்கள். எங்கள் கவியரங்கத் தலைவன் போய்விட்டான் என்று கவிஞர்கள் கதறுகிறோம்.
பெரியார் ஆட்சிப் பொறுப்பை மறுத்திருந்தார். காலம் அண்ணாவுக்கு ஆயுளை மறுத்திருந்தது. ஆனால் இந்த இரண்டையும் ஒருங்கே பெற்று இத்தனை ஆண்டுகள் கலைஞர் இயங்கியதால்தான் பெரியார், அண்ணா என்ற தத்துவங்கள் கணிப்பொறித் தலைமுறைக்குக் கடத்தப்பட்டன. இந்த ஒரு பெரும்பணிக்காகவே காலம் கலைஞரை நினைவு கூரும்.
தொல்காப்பியப் பூங்கா – குறளோவியம் – சங்கத்தமிழ் – சிலப்பதிகார நாடகம் – ரோமபுரிப் பாண்டியன் – தென்பாண்டிச் சிங்கம் – திருக்குறள் உரை போன்ற படைப்புகளால் கலைஞர் காலத்தை வென்று நிற்பார்.
மகாகவி தாகூர் மரித்த நாளில் கலைஞர் மறைந்திருக்கிறார். ஓ! கலைஞரின் மரணம்கூட கம்பீரமானது. மரணத்தால் கலைஞர் மரிப்பதில்லை. அவர் வாழ்ந்த ஒவ்வொரு நாளும் அவர் புரிந்த ஒவ்வொரு செயலும் மரணத்தை முறியடிக்கும் ஏற்பாடுதான். என் ஒவ்வோர் எழுத்தையும் வாசித்து நேசித்து உரையாடுவார். இதோ இந்த இரங்கல் செய்தி படிக்க அவரில்லையே என்று அழுகிறேன். அவர் புகழுடம்பு வாழும் திசை நோக்கித் தொழுகிறேன். இவ்வாறு அந்த இரங்கல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரித்திர படம் இயக்குவதற்காக பாகுபலி பட இயக்குநர் ராஜமௌலியிடம் சசிகுமார் ஆலோசனை பெற்றுள்ளார். நாடோடிகள் 2 படத்தில் நடித்து முடித்துள்ள சச...
ராஜமௌலி - சசிக்குமார் சந்தித்தன் பின்னணி
சரித்திர படம் இயக்குவதற்காக பாகுபலி பட இயக்குநர் ராஜமௌலியிடம் சசிகுமார் ஆலோசனை பெற்றுள்ளார்.
நாடோடிகள் 2 படத்தில் நடித்து முடித்துள்ள சசிக்குமார், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் `என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் தனுஷுக்கு அண்ணனாக நடித்துள்ளார். இப்படத்தை அடுத்து இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கிறார். நடிப்பில் கவனம் செலுத்தி வரும் சசிக்குமார் அடுத்ததாக சரித்திர படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளார்.
இப்படத்திற்காக இயக்குநர் ராஜலியை சந்தித்து அவரிடம் ஆலோசனை பெற்றுள்ளார். சமீபத்தில் இயக்குநர் ராஜமௌலி - சசிக்குமார் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து ராஜமௌலி இயக்கும் படத்தில் சசிக்குமார் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அது உண்மையில்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
ராஜமௌலி 'பாகுபலி 2' திரைப்படத்திற்குப் பிறகு ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஹீரோக்களாக நடிக்கும் படத்தை இயக்குகிறார். இப்படத்தின் கதை விவாதம் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே சசிக்குமார் கேட்டதன் பேரில் அவர் இயக்க இருக்கும் சரித்திர படத்திற்கான ஆலோசனைகளை ராஜமௌலி வழங்கியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குன்றி இன்று 11 நாளாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்ற...
கருணாநிதிக்கு நிகழ்ந்த மிகப்பெரிய அவமானம்... இன்றும் மக்களை கண்ணீர் சிந்த வைக்கும் காட்சி
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குன்றி இன்று 11 நாளாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை காவேரி மருத்துவமனை செயல் இயக்குநர் அரவிந்தன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ”கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. வயது மூப்பின் மூலம் வரும் பிரச்சினைகளை கணக்கிடும்போது, முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டைப் பராமரிப்பதில் சவாலான நிலையே தொடர்கிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, மிகச் சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுமா என்பது 24 மணி நேரத்துக்கு பிறகே தெரியும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து இரவு முதலே ஆயிரகணக்கான தொண்டர்கள் மருத்துவமனை வாசலில் கூடி அவருக்கு அதரவாக முழக்கமிட்டு வருகின்றனர்.
அதுமட்டுமின்றி கடந்த 2001ம் ஆண்டில் நள்ளிரவில் மேம்பாலங்கள் கட்டுமான சர்ச்சைகளுக்காக முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி மற்றும் அவருடன் அப்போதைய மத்திய அமைச்சர்களான முரசொலி மாறன் மற்றும் த. ரா. பாலு ஆகியோர் கைது செய்யப்பட்டபோது எடுத்த காணொளி தற்போது நெட்டிசன்கள் கையில் எடுத்து வைரலாக்கி வருகின்றனர்.
தற்போது மிகப் பரவலாக காணப்படும் பிரச்சனை தான் சிறுநீர் குழாய் தொற்று. பெண்களின் இந்த பிரச்சனைக்கு காரணம், சிறுநீர் பையை முழுமையாக காலியாக...
சிறுநீர் குழாய் தொற்றை தடுக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்
தற்போது மிகப் பரவலாக காணப்படும் பிரச்சனை தான் சிறுநீர் குழாய் தொற்று.
பெண்களின் இந்த பிரச்சனைக்கு காரணம், சிறுநீர் பையை முழுமையாக காலியாகாமை, உடல் வறட்சி, மலச்சிக்கல், சர்க்கரை நோய் போன்றவை.
இது தவிர மாதவிடாய் நாட்களில் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் உள்ளாடைகளில் சிறுநீர் தங்குவதாலும் சிறுநீர் குழாய் தொற்று ஏற்படுகிறது.
இதன் அறிகுறிகள்
சிறுநீர் கழிக்கும் பொழுது வலித்தல்
அடிக்கடி சிறுநீர் கழிக்கும் எண்ணம் வருதல்
சிறுநீர் கழிக்கும் பொழுது எரிதல்
சிறுநீரில் சளி அல்லது ரத்தம் கசிதல்
உடலுறவின் போது வலித்தல்
கடும் நாற்றத்துடன் சிறுநீர் கழித்தல்
கழிவறைக்கு அடிக்கடி செல்லுதல்
சிறுநீர் பை அருகே வலித்தல்
குளிர் மற்றும் காய்ச்சல்
இப்பிரச்சனை இருக்கும் பட்சத்தில் மருந்து, மாத்திரைகளுக்கு பதிலாக கீழுள்ள குறிப்புகளின் மூலம் தொற்றை தவிர்க்கலாம்.
நாள் ஒன்றுக்கு 6 முதல் 8 குவளை நீரை அருந்த வேண்டும்.
நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை உட்பட விட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் அதிகம் நிறைந்துள்ள பழங்களை உண்ண வேண்டும்.
தயிர் போன்ற ப்ரோபயாட்டிக் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.
வெள்ளரியில் உள்ள நீர்ச்சத்து நச்சுப்பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.
பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சிறுநீர் குழாய் தொற்றை குணப்படுத்துகின்றன.
சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தால் உடனடியாக கழித்து விடவும், அடக்கி வைக்க வேண்டாம்.
குறிப்பாக இப்பிரச்சனையால் அவதிப்படும் போது காபி, மது மற்றும் கார்பன் உள்ள குளிர்பானங்களை அருந்த வேண்டாம்.
கரு: அப்பாவும், தாத்தாவும் தங்களது தாதா தனத்தால் இழந்த தனது பூர்வீக சொத்தான ஒரு தியேட்டரை மீட்க, காமெடியாகதாதா தனத்தை கையிலெடுக்கும் ஹீரோவே...
ஜுங்கா சினிமா விமர்சனம் - அப்படி, இப்படி , எப்படி கூட்டிக் கழித்தாலும்., 'ஜுங்கா' - 'கிங்கா'க நினைத்த விஜய் சேதுபதியை 'தொங்க' லிலேயே விட்டிருக்கிறது!
கரு: அப்பாவும், தாத்தாவும் தங்களது தாதா தனத்தால் இழந்த தனது பூர்வீக சொத்தான ஒரு தியேட்டரை மீட்க, காமெடியாகதாதா தனத்தை கையிலெடுக்கும் ஹீரோவே "ஜுங்கா" படக்கரு.
கதை: "டான் " எனும் கெத்தில் பந்தா தாதாக்களாகவாழ்ந்த டான் லிங்கா வின் பேரனும், டான் ரங்காவின் மகனுமாகிய ஜுங்காவிற்கு. தன் அப்பா தாத்தா, தங்களது டம்மி டான் தனத்தால் ஒரு வசதியான செட்டியாரிடம் விற்று இழந்த தங்களது பூர்வீக சொத்தான "சினிமா பாரடைஸ் "தியேட்டரை மீட்டெடுக்க., தன் தந்தையும் தாத்தாவும் செய்யாத டான் தனத்தை எல்லாம் செய்து ஒரு கோடி ரூபாய்சம்பாதித்தும் தியேட்டரை மீட்க முடியாது தவிக்கிறார் ஜுங்கா - விஜய் சேதுபதி ஒரு கட்டத்தில் பாரீஸில் வசிக்கும் செட்டியாரின் செல்ல மகள் யாழினி எனும் சாயிஷாவை கடத்தி தியேட்டரை மீட்க நண்பன் யோகி பாபுவுடன்பாரீஸ் போய் இறங்குகிறார். அங்கு இவர் சாயிஷாவை கடத்துவதற்கு முன்பே., இத்தாலிய போதை மருந்து கடத்தல் கும்பல் சாயிஷாவை கடத்த அவர்களிடமிருந்து யாழினி - சாயிஷாவை ஜுங்கா - விஜய் சேதுபதி காப்பாற்றி கடத்தி, செட்டியாரை தன் வழிக்கு கொண்டு வந்து, தன் லட்சியமான தியேட் டரை கைப்பற்றினாரா? இல்லையா...? என்பது தான் ஜுங்கா. படத்தின் கதை யும் களமும்.
காட்சிப்படுத்தல்: டாக்டர் ஐசரி வி.கணேஷ், அருண்பாண்டியன், ஆர.எம். ராஜேஷ்குமார் ஆகிய மூவருடன் இணைந்து நடிகர் விஜய் சேதுபதியேதயாரித்து நடித்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் சாயிஷா, மடோனா செபாஸ்டின், ராதாரவி, சரண்யா, "நான் கடவுள் "ராஜேந்திரன், சுரேஷ் மேனன்உள்ளிட்ட பலரும் நடிக்க., :"இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா "நாயகர்விஜய் சேதுபதியும், இயக்குனர் கோகுலும் மீண்டும் இணைந்திருக்கும் "ஜுங்கா". படத்தில் இயக்குனர் சாமான்யரசிகர்களுக்கு அவ்வளவு எளிதில் புரியாத வகையில் பல காமெடி காட்சிகளை காட்சிப்படுத்தியிருப்பதும், ஆரம்ப காட்சிகளில்., "தமிழ் படம் -1 & 2" சாயலில் பிறபடங்களைநக்கல், நையாண்டி செய்யத்துணிந்து, அதில்ஒரு தெளிவு இல்லாமல் பல காட்சிகளை காட்சிப்படுத்தியிருப்பதும்., பிறகு அப்பாணியில் இருந்து விலகி, படம் முழுக்க விஜய் சேதுபதி கத்தும்படியாக காட்சிகள் அமைத்திருப்பதும் பெரும் பலவீனம்.
கதாநாயகர்: பேரன் ஜுங்காவாக முக்கால்வாசிப் படத்திலும், தாத்தா லிங்கா, தந்தை ரங்காவாக இரண்டொரு சீன்களிலும் வெவ்வேறு கெட்-அப்களில் வரும் விஜய்சேதுபதி படம் முழுக்க பேசிக் கொண்டேயிருக்கிறார்.
"யாதும் ஊரே யாவரும் கேளீர்", "புதிய இந்தியா பிறந்துடுச்சு" என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் "பன்ச் " அடித்தபடி ,தன்னை என்கவுண்டருக்கு தான் போலீஸ் அழைத்து செல்கிறது எனத் தெரிந்தும் அலட்டிக் கொள்ளாமல் அவர்களுடன் செல்வதில் தொடங்கி., அவர்களுக்கு சொல்வது மாதிரி தன் ப்ளாஷ்பேக் "டான்" தனம் மொத்தத்துடன், கூடவே தன் கண்ணாமூச்சி காதல் மற்றும் ,கஞ்சத்தனத்தையும்ரசிகர்களுக்கும்காட்சிகளாக சொல்ல ஆரம்பித்து, இறுதியில் போலீஸிடமிருந்து தப்பிப்பது வரை விஜய்சேதுபதி, வழக்கம் போல வெளுத்துகட்டியிருக்கிறார். அதிலும், "என்னை தேடி வர்றவங்களுக்கு நான் எவ்ளோ வேணும்னு இறங்கி வருவேன்...", "ஹேய் நண்பனை சாப்பிட்டே சாகடிக்காதே...." என்றெல்லாம் அவர் அடிக்கும் டயலாக் "பன்ச் " கள்பர்ஸ்னலாய் யாரையோ குறிவைத்து குத்துவது போன்றே தெரிவது படத்திற்கு பலமா? பலவீனமா சேதுபதிக்கே வெளிச்சம்!
கதாநாயகியர்: யாழினியாக, நாயகியாக 2547 கோடி சொத்துக்கு சொந்தக்காரியாகசாயிஷா பாரீஸ் வாழ் இந்திய பெண்ணாகசெம சாய்ஸ்.
சாயிஷா மாதிரியே., ஆரம்ப காட்சிகளில் கோவை பஸ் கண்டக்டர்சேதுபதியின் மற்றொரு நாயகியாக வரும்
மடோனா செபாஸ்டின், தெலுங்கு பேசும் பெண்ணாக மிரட்டியிருக்கிறார்.
காமெடியன்: "நாங்க ராயபுரம், நீங்க ஆர்ஏ புரம்... நடுவுல ஒய் ஏ மட்டும் தான் மேடம் மிஸ்ஸிங்... சாரி மேடம்... என நாயகியையும், பல காட்சிகளில் நாயகரையும் ஓட்டும் யோகி பாபு செம கிளாஸ் அப்பு!
பிற நட்சத்திரங்கள்: மாஜி தாதா சோப்ராஜாகராதாரவி, சேதுபதியின் 'தொணதொண' தாயாக சரண்யா, அந்த கெத்து காட்டும் பாட்டியம்மா ,
சேதுபதியிடம் ஜீப்பிலேயே ப்ளாஷ்பேக் கேட்கும் போலீஸ் "நான் கடவுள் "ராஜேந்திரன், காஸ்ட்லி செட்டியார் சுரேஷ் மேனன் உள்ளிட்டோரில் எல்லோரும் மிரட்டல் என்றாலும், அந்த பாட்டியம்மா செம மிரட்டல்.
டட்லியின் ஒளிப்பதிவு பனி படர்ந்த பாரீஸ் அழகை பக்காவாக படம் பிடித்து வந்திருப்பது ஆறுதல்!.
சித்தார்த் விபினின் இசையில்., "ஏய் இப்படி சூடண்டி", "ஜொலிக்கிறியா கலாய்க்கிறாயா.", "ஜுங்கா ஜுங்கா...", "நீ யாரோ யாரோ ...." உள்ளிட்ட பாடல்களும். பின்னணி இசையும் ஒஹோ இல்லை... ஒகே!
பலம்: சாயிஷாவும், யோகி பாபுவும் அந்த பாட்டியம்மாவும் மட்டுமே..
பெரும் பலம்.
பலவீனம்: "ஜுங்கா" எனும் டைட்டிலும்., விஜய் சேதுபதியின் நடை, உடை, பாவனை மற்றும் பேச்சு, வீச்சு உள்ளி ட்டவை ஒவர் அலட்டலாக தெரிவது பெரும் பலவீனம்!
இயக்கம்: கோகுலின் எழுத்து, இயக்கத்தில்., "நமக்கு சொந்தமான ஒண்ணு ஒருத்தன் கையில இருக்குன்னா, அவனுக்கு சொந்தமான ஒண்ணு நம்ம கையில இருக்கணும்.", "இதுலேயிருந்து என்ன தெரியுதுன்னா, ஒரு ' டான், ' டாவடிக்கக் கூடாதுன்னு தெரியுது....", "எங்க தமிழ் சினிமாவுல ,நாங்க புரடக்ஷன் மேனேஜருக்குதான்ரொம்ப முக்கியத்துவம் கொடுப்போம்... " ஆகிய வசனங்களும் செம காமெடி டச்சிங் ... என்பது இப்படத்திற்குகொஞ்சம் வலு சேர்க்கிறது!
ஆனாலும், பாரீஸ் போலீஸ் ஹெட்- குவாட்டர்ஸில் அத்தனை போலீஸுக்கும் போக்கு காட்டி விட்டுநாயகி சாயிஷாவுடன் நாயகர் விஜய் சேதுபதி காரில் தப்புவதும், மைனஸ் ஐந்து டிகிரி நதி நீரில் (தேம்ஸ்?) காசு மிச்சம் என்பதற்காக ஹீரோநீ ந்தி சென்றே ஹீரோயினை காப்பாற்ற முற்படுவதும் உ ள்ளிட்ட நம்ப முடியாதகாட்சிகள்... படம் முழுக்க நிரம்பியிருப்பது ரசிகனை பெரிதாய் படுத்துகின்றன.
அதே நேரம், விஜய் சேதுபதியின் "சினிமா பாரடைஸ்" தியேட்டரில் அன்று, "பாட்சா" படம் தோல்வியை தழுவியதற்குசொல்லப்பட்ட காரணம், "ஜுங்கா" பெயர் காரணம் .... உள்ளிட்ட கிண்டல், கேலி வசனங்களிலும், சம்பந்தப்பட்ட காட்சிகளிலும்... தூக்கலாகத் தெரியும்காமெடி சென்ஸ் சற்றே ஆறுதல்!
பைனல் பன்ச்: "அப்படி, இப்படி , எப்படி கூட்டிக் கழித்தாலும்., 'ஜுங்கா' - 'கிங்கா'க நினைத்த விஜய் சேதுபதியை 'தொங்க' லிலேயே விட்டிருக்கிறது!
1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் \"\"நெல்லிக்கனி.\"\" 2) இதயத்தை வலுப்படுத்த \"\"செம்பருத்திப் பூ\...
என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர்
1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் \"\"நெல்லிக்கனி.\"\"
2) இதயத்தை வலுப்படுத்த \"\"செம்பருத்திப் பூ\"\".
3) மூட்டு வலியை போக்கும் \"\"முடக்கத்தான் கீரை.\"\"
4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் \"\"கற்பூரவல்லி\"\" (ஓமவல்லி).
5) நீரழிவு நோய் குணமாக்கும் \"\"அரைக்கீரை.\"\"
6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் \"\"மணத்தக்காளி கீரை\"\".
7) உடலை பொன்னிறமாக மாற்றும் \"\"பொன்னாங்கண்ணி கீரை.\"\"
8) மாரடைப்பு நீங்கும் \"\"மாதுளம் பழம்.\"\"
9) ரத்தத்தை சுத்தமாகும் \"\"அருகம்புல்.\"\"
10) கேன்சர் நோயை குணமாக்கும் \"\" சீதா பழம்.\"\"
11) மூளை வலிமைக்கு ஓர் \"\"பப்பாளி பழம்.\"\"
12) நீரிழிவு நோயை குணமாக்கும் \"\" முள்ளங்கி.\"\"
13) வாயு தொல்லையிலிருந்து விடுபட \"\"வெந்தயக் கீரை.\"\"
14) நீரிழிவு நோயை குணமாக்க \"\" வில்வம்.\"\"
15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் \"\"துளசி.\"\"
16) மார்பு சளி நீங்கும் \"\"சுண்டைக்காய்.\"\"
17) சளி, ஆஸ்துமாவுக்கு \"\"ஆடாதொடை.\"\"
18) ஞாபகசக்தியை கொடுக்கும் \"\"வல்லாரை கீரை.\"\"
19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் \"\"பசலைக்கீரை.\"\"
20) ரத்த சோகையை நீக்கும் \"\" பீட்ரூட்.\"\"
21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் \"\" அன்னாசி பழம்.\"\"
22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை)
23) கேரட் மல்லிகீரை தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.
24) மார்புசளி, இருமலை குணமாக்கும் \"\"தூதுவளை\"\"
25) முகம் அழகுபெற \"\"திராட்சை பழம்.\"\"
26) அஜீரணத்தை போக்கும் \"\" புதினா.\"\"
27) மஞ்சள் காமாலை விரட்டும் “கீழாநெல்லி”
28) சிறுநீரக கற்களno ை தூள் தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”.
வீட்டில் �� தனியாக இருக்கும் போது மாரடைப்பு ��
�� வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ❓
�� வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில �� பிரச்சனைகள் காரணமாக உங்கள் �� மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,
�� நீங்கள் மிகவும் �� படபடப்பாகவும், �� தொய்வாகவும் உள்ளீர்கள்.
�� திடீரென்று உங்கள் �� இதயத்தில் அதிக "வலி" ஏற்படுவதை உணர்கிறீர்கள்.
�� அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள்.
�� உங்கள் வீட்டில் இருந்து �� மருத்துவமனை ஒரு ஐந்து
மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.
�� ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் �� மூளை உங்களுக்கு சொல்கிறது
�� இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்...??
�� துரதிஷ்ட வசமாக �� மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்..!
✊ உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..
�� நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது.
�� இப்போது நீங்கள் செய்ய வேண்டியது:
"தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக �� இரும்ப வேண்டும்,
�� ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் �� மூச்சை இழுத்து விட வேண்டும்,
�� இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்,
�� இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில அல்லது �� வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ
�� ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்பிக்கொண்டே இருக்க வேண்டும்.
�� மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது,
�� இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும்,
���� இதனால் ரத்த ஓட்டம் சீரடையும்.
�� இரும்புவதால் ஏற்படும்
அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்"..
�� பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள �� மருத்துவமனைக்கு செல்லலாம்..
1. சாப்பிடும் அரை மணி நேரம் முன் தண்ணீர் குடிக்க கூடாது. 2. சாப்பிடும் போது நேராக தரையில் உட்கார்ந்து சாப்பிட வேணும் . 3. டிவி பார்த்து...
சாப்பிடும் போது கடைப்பிடிக்க வேண்டியவை..
1. சாப்பிடும் அரை மணி நேரம் முன் தண்ணீர் குடிக்க கூடாது.
2. சாப்பிடும் போது நேராக தரையில் உட்கார்ந்து சாப்பிட வேணும் .
3. டிவி பார்த்து கொண்டு சாப்பிட கூடாது. முடிந்த வரை பற்களால் மென்று தின்ன வேண்டும்.
நாம் மென்று சாப்பிடும் போது நம் வாயீன் உமிழ்நீர் உடன் செல்வதால் நன்கு செரித்து விடும்
4. காலை உணவு 7 – 9 மணிக்குள் சாப்பிட வேண்டும். காலை வயிறு செரிமானம் செய்வதால் கல்லை தின்றாலும் செரித்து விடும்.
5.மதியம் உணவு 1-3 மணிக்குள் சாப்பிட வேண்டும். சிறுகுடல் செரிமானம் செய்வதால் லைட் ஆனா உணவு சாப்பிட வேண்டும்.சிருகுடலை பொருத்த வரை கூழ் ஆனா உணவை விரைவில் செரிக்கும்.
6. இரவு உணவு 7-9 மணிக்குள் சாப்பிட வேண்டும். இந்த நேரத்தில் இதயமேலுறை நேரம் என்பதால் எண்ணை பொருட்கள் சாப்பிட கூடாது. லைட் ஆனா உணவு சாப்பிட வேண்டும்.
7.சாப்பிடும் போது தாகம் எடுத்தல் ஒரு சிறிய மூடி அளவு தண்ணீர் குடிக்கலாம். சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து தான், தண்ணீர் நிறைய குடிக்கலாம். நாம் சாப்பிடும் போது உடலில் ஒரு வித அமிலம் சுரக்கும் தண்ணீர் குடித்தால் அது சுரப்பது நின்று விடும்.
8. இந்த அமிலம் இல்லை என்றாலும் உணவு செரிக்கும் ஆனால் சத்துகள் பிரியாமல் அனைத்தும் தங்கி விடும்.
9. இவை தான் உடலி பெரிய நோயிகளை ஏற்படுத்தும். இந்த நோய்களின் முதல் காரணம் நாம் சாப்பிடும் முறைகள் தான்..
10. முறையான நேரத்திலும், முறையான முறையிலும் சாப்பிட்டு மருந்து இல்ல உலகை படைப்போம். இயற்கை யை நோக்கி பயணிப்போம்…
*மலர்களை ரசிக்க மட்டும் தெரிந்த நமக்கு அதன் மருத்துவ குணங்கள்* * தெரிவதில்லை தெரிந்தாலும் அதை எப்படி உபயோகிப்பது என்ற சந்தேகத்திலேயே* *அ...
*மலர்களை ரசிக்க மட்டும் தெரிந்த நமக்கு அதன் மருத்துவ குணங்கள்* *
*மலர்களை ரசிக்க மட்டும் தெரிந்த நமக்கு அதன் மருத்துவ குணங்கள்* *
தெரிவதில்லை
தெரிந்தாலும் அதை எப்படி உபயோகிப்பது என்ற சந்தேகத்திலேயே* *அதனை பயன்படுத்தாமல் விட்டுவிடுகிறோம்.* *அப்படிப்பட்ட மலர்களின் குணங்களும் பயன்களும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.*
*ஆவாரம் பூ*
ரத்தத்துக்கு மிகவும் பயன் தரும் ஆவாரம் பூவை உலர்த்தி வேளை ஒன்றுக்கு 15 கிராம் நீரில் போட்டு கசாயமாக்கி பால், சர்க்கரை கலந்து காப்பியாக பருகிவர உடல் சூடு, நீரிழிவு, நீர்கடுப்பு போன்ற நோய் தீரும். ஆவாரம்பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் கூட்டி, உடலில் தேய்த்து குளிக்க கற்றாழை நாற்றம் நீங்கும். தோல் வியாதிகளும் குணமாகும்.
*அத்திப்பூ*
அத்திப்பூவை சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக்கி பாலில் காய்ச்சி சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வர சில நாட்களிலேயே உடல் சூடு, பித்த சூடு நீங்கும்.
*நெல்லிப்பூ*
உடலுக்கு குளிர்ச்சி, இதனுடன் விழுதி இலை, வாத நாராயணா இலை சேர்த்து கசாயம் வைத்து இரவில் சாப்பிட காலையில் சுகபேதி உண்டாகும். மலச் சிக்கலுக்கும் இது உகந்தது.
*செம்பருத்திப்பூ*
இருதய பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் அடிக்கடி மார்பு வலியால் அவதிப்படுபவர்கள் இந்தப் பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி காலையும், மாலையும் குடித்து வந்தால் இருதயம் பலமடையும்.
*ரோஜாப்பூ*
இந்த மலரின் மணம் மனதிற்கு மட்டுமின்றி, இருதயத்திற்கும் வலிமை தரக்கூடியது. பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி நீங்கும். இரத்த விருத்திக்கும் துணை செய்யும் மலர் இது.
*வேப்பம்பூ*
சிறந்த கிருமி நாசினி இது. இந்தப் பூ வீட்டில் இருந்தால் சின்னஞ்சிறு கிருமிகள் ஓடிவிடும். உடல் குளிர்ச்சிக்கு ஏற்றது இது.
*முருங்கைப்பூ*
ஆண்களுக்கு ஆண்மையை அதிகரித்து தாது பெருக்கம் செய்யும் தன்மையுடையது. வயிற்றில் உள்ள கிருமியை ஒழிக்க கூடியது.
*மல்லிகைப்பூ*
கண் பார்வையை கூர்மையாக்கும் சக்தி இதற்கு உண்டு. காம உணர்ச்சிகளை தூண்டும் தன்மை உண்டு. கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.
*குங்குமப்பூ*
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஒருவேளைக்கு 5 முதல் 10 இதழ்களை இரவு பசும் பாலில் போட்டு காய்ச்சி குடித்துவர சீதள சம்பந்தமான நோய்கள் நீங்கும். பிறக்கின்ற குழந்தை நல்ல திடகாத்திரமாக இருக்கவும் குங்குமப்பூ உபயோகப்படுகிறது.
கார்த்தி நடிப்பில் கடைக்குட்டி சிங்கம் படம் செம்ம வரவேற்பை பெற்றது. இப்படம் வெளிவந்து 3 வாரம் ஆகிய நிலையிலும் பல இடங்களில் ஹவுஸ்புல் காட்சி...
கடைக்குட்டி சிங்கம் இத்தனை கோடி வசூலை தொட்டதா? கார்த்தியின் அடுத்தக்கட்டம்
கார்த்தி நடிப்பில் கடைக்குட்டி சிங்கம் படம் செம்ம வரவேற்பை பெற்றது. இப்படம் வெளிவந்து 3 வாரம் ஆகிய நிலையிலும் பல இடங்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக வெற்றி நடைப்போடுகின்றது.
இந்நிலையில் கடைக்குட்டி சிங்கம் உலகம் முழுவதும் ரூ 63 கோடி வசூல் செய்து விட்டதாம், கார்த்தியின் திரைப்பயணத்தில் பெஸ்ட் இது தான்.
மேலும், இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ 45 கோடியை எட்டிவிட்டதாம், இந்த வருடத்தில் அதிக லாபம் கொடுத்தது கடைக்குட்டி சிங்கம் தானாம்.
விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம். இவர் கையில் தற்போது குறைந்தது அரை டஜன் படங்கள் இருக்கும். அந்த அளவிற்கு பல படங்களில...
சிம்புவை மாட்டிவிட்டு எஸ்கேப் ஆன விஜய் சேதுபதி- சுவாரஸ்ய நிகழ்வு
விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம். இவர் கையில் தற்போது குறைந்தது அரை டஜன் படங்கள் இருக்கும்.
அந்த அளவிற்கு பல படங்களில் கமிட் ஆகி வரும் இவர் சமீபத்தில் யுவன் தயாரித்த பியார் பிரேமா காதல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியை ’நீங்க தற்போது ஒரு ப்ரோபோஸ் செய்ய வேண்டும்!’ என்று தொகுப்பாளர் கேட்க, விஜய் சேதுபதி சில நொடி சங்கடமானார்.
அதை தொடர்ந்து உடனே ‘இதற்கெல்லாம் என் தலைவன் சிம்பு தான் சரியான ஆள், அவர் செய்வார்’ என்று கூறி எஸ்கேப் ஆகிவிட்டார்.
1 coment�rios: